தஞ்சையில் இருக்கும் அருமையான ஹோட்டல்களில் ஒன்று தேவர்ஸ் ! எதனால் அந்த பெயர்; வைத்து நடத்துபவர்கள் அந்த சாதியினரா என்ற விஷயமெல்லாம் தெரியாது ! அந்த அரசியலுக்கு போகாமல், வாங்க ஹோட்டலுக்கு போவோம் !
தஞ்சையிலேயே ரெண்டு மூணு பிராஞ்ச் இருந்தாலும் ராஜப்பா நகர் பிராஞ்ச் தான் சிறந்தது ! காலை 8 மணி முதல் 11 வரை அல்லது மாலை 8 டு 10 சென்று பாருங்கள். நூறு பேர் அமர்ந்து சாப்பிட கூடிய இந்த ஹோட்டலில் அமர இடம் இருக்காது. காத்திருந்து தான் அமரணும் !
அண்ணன் வீட்டுக்கு செல்லும்போது குடும்பத்துடன் கோவில் அல்லது வேறு இடம் சென்று விட்டு வந்தால், இங்கு வந்து தான் குடும்பத்துடன் சாப்பிடுவோம்.
டிபன் வகைகளில் பொங்கல் தான் இங்கு ஸ்பெஷல் (விலை: ரூ. 35); சமீபத்தில் காலை ஆறு மணிக்கு இங்கு சாப்பிட சென்றோம். சுட சுட தந்த பொங்கல் "வாரே வா" என்று இருந்தது. அதிகம் நெய் இன்றியும் கூட தொடும்போதும், சாப்பிடும் போதும் ...வழு வழு என வழுக்கி கொண்டு ஓடும் ! முந்திரி நிறைய போட்டு இருந்தாலும் கூட சாப்பிட்டு முடித்து வயிறு ரொம்ப full ஆன மாதிரி இருக்காது. இங்கு பொங்கல் சாப்பிட்டும் மதியம் சரியான நேரத்தில் பசி எடுப்பது ஆச்சரியம் !

சாம்பார் சின்ன வெங்காயம் நிறைய உரித்து முழுசாய் போட்டு அசத்துவார்கள். தேங்காய் சட்னி பல இடங்களில் சற்று புளித்து போன மாதிரி ஆகிடும். இங்கு கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு முறை அரைப்பார்கள் போலும் ! எப்போதும் பிரெஷ் - ஆய் மட்டுமின்றி அட்டகாசமாயும் இருக்கும் தேங்காய் சட்னி !
பூரி சுட சுட எடுத்து வந்து மிக ஹைஜினிக் ஆக போர் ஸ்டெப்ஸ் மூலம் பரிமாறுவார்கள். As usual... அருமை !
"எக்சல் அடை" என சொல்லி இரண்டு அடை தருவார்கள். இந்த இரு அடையும் ஒன்றாய் சாப்பிட்டால் வேறு ஏதும் சாப்பிட முடியாது. வயிறு நிரம்பி விடும் !
மதிய சாப்பாடு - பல நேரம் இங்கு பார்சல் வாங்கி சாப்பிட்டுள்ளோம். ஒரு பார்சல் சாப்பாடு வாங்கினால் மிக தாராளமாய் இரண்டு பேரால் சாப்பிட முடியும் ! தஞ்சை அண்ணன் வீட்டில் தான் எங்க குடும்பத்தினர் கெட் டுகெதர் (மூன்று சகோதரர், ஒரு சகோதரி குடும்பங்கள்) எப்போதும் நடக்கும். வீட்டில் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுத்து வரும் எண்ணை இரண்டால் வகுத்து தான் பார்சல் சாப்பாடு வாங்குவது வழக்கம்.
வார இறுதியில் இங்கு கிடைக்கும் பருப்பு உருண்டை குழம்பு மிக பிரசித்தம். வீடுகளில் மட்டுமே செய்கிற இந்த பருப்பு உருண்டை குழம்பு மிக அருமையாய் இருக்கும் என்றார் அண்ணன். ஒருமுறை அதையும் ஒரு கை பாக்கணும் !
தஞ்சை செல்லும்போது அவசியம் சாப்பிட்டு பாருங்கள் !
கடை: தேவர் ஹோட்டல்
வகை: சைவம்
முகவரி: ராஜப்பா நகர், மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர்
***
அண்மை பதிவு
தொல்லை காட்சி: சிவகார்த்தி- லொள்ளு சபா- சூப்பர் சிங்கர் T -20 பைனல்

மிக்க நன்றி. தஞ்சை செல்லும்போது ஒரு வெட்டு வெட்டிவிடுவோம் :)
ReplyDeleteரைட்டு புது மாப்பிள்ளை
Deleteமிக்க நன்றி. தஞ்சை செல்லும்போது ஒரு வெட்டு வெட்டிவிடுவோம் :)
ReplyDeleteஇது வரைக்கும் தஞ்சாவூர் போனதே இல்லை... போகும்போது (போனால்) பார்க்கலாம்... ஹிஹி...
ReplyDeleteஓகே ஸ்கூல் பையன் .வாய்ப்பு வரும் வரும் ! நம்புங்க
Deleteதஞ்சையில் தேவர்'ஸ் மட்டன் பிரியாணி உண்ட அனுபவம் உண்டு. அதுவும் இவர்களின் கிளையோ?
ReplyDeleteஇல்லைன்னு நினைக்கிறேன். செக் பண்ணி தவறா இருந்தால் மறுபடி சொல்றேன்
Deleteமுதலில் “தேவர்ஸ் பிரியாணி”-ஆக தான் இருந்தது நான் பிறப்பதற்க்கு முன்பிருந்தே கடை ரொம்ப பிரசித்தம். முதலில் பிரியாணி மட்டும் கொடுத்து கொண்டு இருந்தனர் அப்புறம் அசைவ ஹோட்டலாகி அது பல கிளைகளாகியது. அதன் பின்னர் தான் சைவ ஹோட்டல்கள் ஆரம்பிக்க தொடங்கினார்கள். இன்றளவும் தஞ்சையில் நல்ல அசைவ உணவு வேண்டுமெனில் தேவர்ஸ் அல்லது சத்தார்ஸ் தான் சாய்ஸ். சொந்த ஊர் விஷயங்களை இணையத்தில் படிக்கவும் சந்தோஷமாக தான் இருக்கிறது. தேங்ஸ் சார் :)
Deleteமிக நன்றி ஆனந்த். தஞ்சையை சேர்ந்தவர் உறுதி செய்கிறீர்கள். சரியாய் தான் இருக்கும்
Delete//தஞ்சை செல்லும்போது அவசியம் சாப்பிட்டு பாருங்கள் !//
ReplyDeleteதஞ்சைக்குச் செல்லும்போதெல்லாம் சாப்பிடுங்கள் என்று சொல்லுங்கள்.
நீங்கள் இட்டிருக்கும் நிழற்படத்தில் ஒருவர் கிச்சன் பக்கம் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் இல்லயா..
அவர் உட்கார்ந்திருக்கும் சீட் தான் எனது ஃபேவரிட் சீட்.
காலையில் இட்லி வடை, பொங்கல்.
மதியம் சாப்பிடவேண்டியது எலுமிச்சை சாதம், தயிர் சாதம், மாங்காய் ஊறுகாய்
மாலையில் நெய் ரவா. டிகிரி காஃபி.
இரவில் சூடான இட்லி, சப்பாத்தி.
தேவர் கஃபே
தேவாம்ருத கஃபே..
சுப்பு தாத்தா.
அடடா அப்படியா சார்? மிக மகிழ்ச்சி
Deleteஎன் தஞ்சை நாட்களில் ஆனந்த பவன், நியூ பத்மா ஹோட்டல், [இரண்டும் இரயில் நிலையம் அருகில்] அப்புறம் ராஜா கலையரங்கம் திரும்பும் வழியில் ஒரு ஹோட்டல் [பெயர் சாந்தி என்று நினைவு], அப்புறம் மங்களாம்பிகா இவைதான் பிரசித்தம்.
ReplyDeleteமலரும் நினைவுகளுக்கு நன்றி ஸ்ரீராம் சார்
Deleteஅதென்ன போர்டுல சுத்தமான சைவம்ன்னு போட்டிருக்கு?
ReplyDeleteஹீ ஹீ. அடுத்த தடவை ஏன்னு கேட்குறேன் . புடிச்சு வச்சு அடிச்சா காப்பாத்த வந்துடனும் :)
Deleteஅருகில்தான் வீடு என்றாலும், இங்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை.
ReplyDeleteஅப்படியா? உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருத்தராவது சென்றிருப்பார்கள். ஒரு முறை சென்று பாருங்கள் I am sure you will like it
Deleteவேளச்சேரி தரமணி சாலையில் TCSக்கு அடுத்து தேவர்ஸ் பிரியாணின்னு ஒரு ஹோட்டல் இருக்கே. அவங்களும் தஞ்சாவூர்ன்னுச் சொன்னமாதிரி நியாபகம். ஆனால் அசைவம். டேஸ்ட் நல்லா இருக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க. உங்க ஆபீஸ்ல இருந்துச் சாப்பிட வருவாங்களே. நீங்க கேள்விப் பட்டதில்லையா ?
ReplyDeleteஅப்படியா? நிச்சயம் ஒரு முறை விசிட் அடிச்சிட்டு இங்கு எழுதுறேன். நன்றி ees.
Deleteஇப்போ சென்னையில் தான் இருக்கீங்களா?
இல்ல சார். இப்போ சிங்கப்பூரில் :)
Deleteஅப்புறம் “லெக்ஷ்மி சீவல்” பதிவுல ஒரு கமெண்ட் போட்டிருக்கேன் :))
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
வாழ்த்துகள்.
அருமையான பதிவு. அப்படியே திண்டுக்கல் பக்கமும் வாங்களேன்....சைவத்துல கோமு மெஸ்., பாலாஜி பவன், மீனாட்சி பவன்...இப்படி நிறைய இருக்கு. ஸ்நாக்ஸ் ஐட்டத்துக்கு ஜிலேபி கிருஷ்ணய்யர் மற்றும் ஜிலேபி சேஷய்யர் கடைகள் மற்றும் நெல்லை முருகவிலாஸ் மற்றும் ஆழ்வார்கடை இப்படி நிறைய இருக்கு. அசைவத்துக்கு...? எனக்கு பழக்கமில்லை.ஆனாலும் ஊரறிந்த திண்டுக்கல் தலைப்பாகட்டு பிரியாணி கடை இருக்கு...வாங்க சார்...
ReplyDelete