Tuesday, January 8, 2013

ஓட ஓட ஓட தூரம் குறையல!

ஓட ஓட ஓட தூரம் குறையல!-                                           BY : தேவகுமார்.

டந்த சில வருடங்களின் எந்த நிகழ்வும் குறிப்பை எனக்கு ஞாபகத்தில் இல்லை. நமக்கு மகிழ்ச்சியான நிகழ்ச்சியாகவே அது இருந்தாலும் அது நிகழ்ந்தது 2011 - ஆ, இல்லை 2012 - ஆ என்ற சந்தேகம் வருகிறது. வாழ்க்கை அவ்வளவு வேகத்தில் போகிறது. வருடங்கள், நாம் பார்த்தவுடன் சரேலென மறைந்து விடும் சாரை பாம்பு மாதிரி, வந்த வேகத்தில் ஓடி மறைகிறது. 'நாளைய' பதற்றங்கள் 'இன்றை' நம்மிடம் இருந்து களவாடுகின்றன. இது இந்த சந்ததி சந்திக்கிற மிக முக்கிய பிரச்சனை.

இதற்கு காரணங்கள் என்ன - உங்களின் கால்களை (கைகளை!) சுற்றிய பாம்பாய் இருக்கும் PDA, அலுவலகத்தை வீட்டுக்கு கொண்டு வந்து எந்த நேரமும் அலுவலகத்தை பற்றியே நினைக்க வைக்கிறது. உறவுகளையும் நண்பர்களையும் நாம் பார்த்து கொள்கிற தருணங்கள் குறைந்துகொண்டே போகிறது (நான் மும்பை-க்கு மாறிய போது, எனது நீண்ட கால நண்பர் சொன்னார் - நீ மும்பைக்கு வருவது சந்தோஷமாய் இருக்கிறது. நீ இருக்க போகிற இடம் ஈஸ்ட் நான் இருப்பது வெஸ்ட், பார்த்து கொள்ள முடியுமான்னு தெரியலை. நீ வெஸ்ட்-கோ நான் ஈஸ்ட்-இக்கோ வந்தா பார்த்துக்கலாம்).

ஒரு நாடகத்துக்கோ ஒரு இசை நிகழ்ச்சிக்கோ நாம் போய் எவ்வளவு நாட்கள் ஆகிறது ! ஒரு வருடம் நம் நினைவில் நிற்க வேண்டுமானால், நிறைய நிகழ்வுகளை அதற்குள் நாம் இட்டு நிரப்பவேண்டும். பாயசத்தின் சுவை பாயசத்தில் இல்லை, அதில் நமக்கு கிடைக்கிற முந்திரியிலும் திராட்சையிலும் இருக்கிறது.

சமீபத்தில் Aakar Patel - இன் கட்டுரையை படித்த போது அதில் இருந்த சுவையை மீறி என் கண்ணுக்கு தெரிந்தது ஒரு வருடத்தில் இத்தனை சுவையான விஷயங்களை செய்ய முடியுமா என்பதுதான்.



Aakar Patel

Please read it at: 


நான் புரிந்து கொண்டது இதுதான், வருடத்தின் இனிப்பு பிரதேசங்களை விரிவாக்குவதுதான் அந்த வருடத்தை நினைவில் நிற்கும் வருடமாக மாற்றுவதற்கான வழி. 

நிறைய பேர் இப்பொழுது பேச ஆரம்பித்து இருக்கும் விஷயம் - slow down; இது economic slow down - இல்லை, வாழ்க்கையை மெதுவாக்குவது. Harry R. Lewis, Dean of Harvard College, அவரது மாணவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தலைப்பே "slow down", 



நீங்கள் தேர்ந்தெடுத்த படிப்பில் சிறப்புற வேண்டுமெனில் உங்கள் நண்பர்களோடு நேரத்தை செலவிடுவதும், ஒவ்வொரு நாளிலும் திட்டமிடாத நேரங்களை (unstructured time) வைத்துகொள்வதும் அவசியம் என்பது அவர் சொன்ன பல விஷயங்களில் ஒன்று.
பள்ளியில் படிக்கும் போது play while play, study when study, என்று சொல்வார்கள். இப்பொழுது நிறுவனங்கள் work when work, vacation when at vacation என்று சொல்ல ஆரம்பித்து இருக்கின்றன. Daimler ஒரு படி மேலே போய், நீங்கள் vacation - இல் இருக்கும் போது ஏதாவது mail வந்தால் அதை automatic - காக delete செய்து விட்டு, mail அனுப்பியவருக்கு நீங்கள் இல்லாத நேரத்தில் உங்களின் வேலையை கவனிபவரின் முகவரியை கொடுத்து விடும். நீங்கள் vacation - இல் இருந்து வரும் போது, உங்கள் inbox நிரம்பி வழிந்து உங்களுக்கு ulcer கொடுக்காது.

வாழ்க்கையை மெதுவாக்குவது என்பது, வேலைகளை தள்ளி போடுவதில்லை, மாறாக சரியான நேரத்தில் முடிப்பது. ஒரே நேரத்தில் பல வேலைகளை இழுத்து போட்டு கொள்ளாமல், ஒரு வேலையை எடுத்து அதை மட்டும் மிக சரியாக முடிப்பது, அதுவும் முதல் தடவையிலேயே. நான் வேலை பார்த்த ஒரு கம்பெனியில் "getting it right at the first time" என்ற ஒரு project - ஐ கொண்டு வந்தார்கள், அது எவ்வளவு productivity - ஐ கூட்டியது என்பது அதிசயம். மேஜிக் !

நிதானமாய் மார்கழி மாதத்தில் பெண்கள் கோலம் போடுவது மாதிரி, புள்ளிகளாய், கோடுகளாய், இலைகளாய் கோலத்தை உருவாக்குவது. கோலம் போட்ட பின், பெண் இடுப்பில் கைவைத்து கொண்டு கோலம் போட்ட பெண்ணை அந்த கோலத்தை ஒரு நிமிடம் ரசிப்பாரே, அது மாதிரி நம் வேலையை நாமே ரசிப்பது.

முடிவில் (outcome) அதிக கவனம் செலுத்தாமல், வேலையின் செய்முறையில் கவனம் செலுத்துவது. உதாரணமாக, இனிமேல் யாருக்கும் காட்டமான மெயில் அனுப்பமாட்டேன் என முடிவு செய்வதை விட, இனி ஒவ்வொரு மெயிலையும் இரு முறை முழுதாய் படித்து விட்டுதான் அனுப்புவேன் என முடிவுசெய்வது. இந்த வருடம் இவ்வளவு sales target - ஐ எட்டுவேன் என்பதை விட ஒவ்வொரு நாளும் இத்தனை பேரிடம் என் product-ஐ பற்றி பேசுவேன் என முடிவு செய்வது.

சரி, வருடத்தின் ஆரம்பத்தில் ஏன் இந்த புலம்பல். இரண்டு காரணங்கள் முக்கியமானவை. ஒன்று மிகவும் ஆபத்தானது, அது - வாகனம் ஓட்டி கொண்டே மொபைலில் பேசுபவர்களை பார்க்கும் போது, இவ்வளவு விபத்து நடந்தும் ஏன் இவர்கள் திருந்தவில்லை என எனக்கு தோன்றிய எண்ணம். இரண்டாவது மொபைலில் பேசி கொண்டே சிறுநீர் கழிக்கிறவர்களை பார்க்கும் போது இதற்கு கூடவா நமக்கு நேரமில்லாமல் போய்விட்டது என தோன்றியது. இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணமாய் நான் நினைப்பது, "ஒன்றே செய் நன்றே செய்" என்பதை எங்கோ நாம் சவுகரியமாக மறந்தது தான்.

வாழ்க்கையை மெதுவாக்குவோம். புத்தாண்டு வாழ்த்துக்கள் !

11 comments:

  1. "ஒன்றே செய் நன்றே செய்" என்பதை எங்கோ நாம் சவுகரியமாக மறந்தது தான்.

    கன்னாபின்னா ரிப்பீட்டுங்க. :(

    ReplyDelete
  2. உங்களின் ஆதங்கம் புரிகிறது ,காரணம் கண்டுபிடிக்கத்தான் ஆளுண்டு ஆனால் நேர்மையாய் சிந்திப்பதில்லை நேரமின்மை அல்ல

    ReplyDelete
  3. மிகச்சிறந்த மற்றும் மிக அவசியமான புத்தாண்டு செய்தி...

    ReplyDelete
  4. Slowdown கடிதம் நல்லாருக்கு.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  5. //மொபைலில் பேசி கொண்டே சிறுநீர் கழிக்கிறவர்களை//

    வருங்காலத்தில் இன்னும் பலதை இந்த ரகத்தில் சேர்த்த வேண்டி வரும்!

    ReplyDelete
  6. நல்ல கருத்து.சிந்தனையை தூண்டும்விதமான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  7. //இதற்கு கூடவா நமக்கு நேரமில்லாமல் போய்விட்டது என தோன்றியது. இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணமாய் நான் நினைப்பது, "ஒன்றே செய் நன்றே செய்" என்பதை எங்கோ நாம் சவுகரியமாக மறந்தது தான்.//

    மிகச்சரியாகச் சொன்னீர்கள்.. அருமை.

    ReplyDelete
  8. புதுவருடத்தில் நிறைவான சிந்திக்க வைக்கும் பதிவு.

    //ஒவ்வொரு நாளிலும் திட்டமிடாத நேரங்களை (unstructured time) வைத்துகொள்வதும் அவசியம்//

    A different view/approach. I like it.

    //work when work, vacation when at vacation//

    இந்தியர்கள் அதிலும் குறிப்பாக IT மக்கள் இதை முழுதுமாக பின்பற்ற வேண்டும். வெக்கேஷனா - அப்படினா என்னான்னு தான் நிறைய பேர் வேலை செய்கிறார்கள். மேலை நாடுகளில் ஒரு வருடத்திற்கு முன்பே அடுத்த வருட வெக்கேஷனை திட்டமிட்டு காலண்டரில் பதிந்து விடுவார்கள்.

    //கோலம் போட்ட பின், பெண் இடுப்பில் கைவைத்து கொண்டு கோலம் போட்ட பெண்ணை அந்த கோலத்தை ஒரு நிமிடம் ரசிப்பாரே//

    A good example for job satisfaction!

    //"getting it right at the first time//

    எங்கள் கம்பெனியின் தாரக மந்திரமே அதுதான். ஒரு வேளை தேவகுமார் எங்கள் கம்பெனியோ?

    //இரண்டாவது மொபைலில் பேசி கொண்டே சிறுநீர் கழிக்கிறவர்களை பார்க்கும் போது இதற்கு கூடவா நமக்கு நேரமில்லாமல் போய்விட்டது என தோன்றியது//

    சிலர் சிறுநீர் கழிக்கும் போதும் அப்படிதான். குடும்பத்துடன் சரவணா பவனில் உட்கார்ந்து சாப்பிடும் போதும் அப்படிதான். என்னத்த சொல்ல?

    ReplyDelete
  9. உண்மையை சொல்லனும்னா நம்மில் பலபேருக்கு இப்படி படிக்க கூட நேரம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அவசரம் தான்..
    அலுவலக டென்ஷன் நம்மை விடுமுறையிலும் விட்டுவைப்பதில்லை. பல நிறுவனகள் தங்கள் அலுவலக மொபைல்-ஐ விடுமுறையில் கூட ஆப் செய்ய அலுவலர்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை.. அப்புறம் எப்படி சார்.. நிம்மதியா இருப்பது....

    ReplyDelete
  10. அருமையான புத்தாண்டு கருத்து...

    ReplyDelete
  11. Slow down Concept சிந்திக்க வேண்டிய விஷயம்தான். நல்ல பதிவு

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...