படித்ததில் பிடித்தது
தோழி என்கிற பெண்கள் இதழ், குங்குமம் நிறுவனத்திலிருந்து வருகிறது. இதில் பிரபலங்கள் தங்கள் மனைவி பற்றி எழுதி வருகிறார்கள். எஸ். ராமகிருஷ்ணன், பாக்யராஜ் போன்றோர் எழுதியதை வாசித்தேன். இதில் பாக்யராஜ் எழுதியது செம நெகிழ்ச்சி.
பாக்யராஜ் பிரவீனாவை திருமணம் செய்து அவர் மரணம் அடைந்தது தெரியும் அல்லவா? அதன் பின் பாக்யராஜ் இலக்கின்றி சுற்றி வந்திருக்கிறார். அவருக்கு தாய், தந்தையும் இல்லை. பிரவீனாவின் தோழி தான் பூர்ணிமா. அவர் வீடு இருக்கும் பம்பாய்க்கு ஒரு முறை பாக்யராஜ் சென்ற போது, பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டால் என்ன என தோன்றியிருக்கிறது. வெளிநாட்டுக்கு ஷூட்டிங் செல்லும் பூர்ணிமாவிடம் " நீ அங்கு போயிட்டு எனக்கு போன் செய்" என்று கூற, பூர்ணிமா போன் செய்தபோதெல்லாம் பாக்யராஜ் இல்லாமல் (அப்போ மொபைல் இல்லை) விஷயம் தள்ளி போனது. கடைசியாய் அவர் போனில் பேசியபோதும் பாக்யராஜ் காதலை சொல்லலை.
பூர்ணிமா இந்தியா வந்த பின் நேரில் பார்த்து காதல் சொல்லி அப்புறம் ஒரு வழியாய் திருமணம் நடந்துள்ளது.
பல வருடங்கள் கழித்து அதே வெளிநாட்டுக்கு பூர்ணிமா மற்றும் பாக்யராஜ் சென்றபோது ஒரு கோவிலுக்கு அழைத்து சென்ற பூர்ணிமா, " நீங்கள் அப்போது வெளிநாடு போயிட்டு போன் செய் என்றபோதே உங்கள் காதலை சொல்லத்தான் என்று நினைதேன்; அப்படி நடந்தால் உங்களுடன் சேர்ந்து இங்கு வருவதாக பிரார்த்தனை " என கூற நெகிழ்ந்து போனாராம் பாக்யராஜ்.
கேட்க சினிமா சீன் மாதிரியே இருக்கு இல்ல?
ஆனந்த் கார்னர்
We can save many relations, if we understand the fact that people are not difficult, they are different.
விஸ்வரூபம் - பூஜா குமார் : சிறு குறிப்பு
பெரும் போராட்டத்துக்கு பின் தமிழகத்தில் ரிலீஸ் ஆகுது விஸ்வரூபம் ! வழக்குகள் இருக்கட்டும் பாஸ் நாம வேற விஷயம் பேசுவோம் !
நாயகி பூஜா குமார் - இந்த படத்தில் அறிமுகம் என்று நினைக்கிறீர்களா? இல்லை... இதற்கு முன் நடித்திருக்கிறார். எப்போதா? அதிகமில்லை ஜென்டில் மேன் ! சுமார் 13 வருஷத்துக்கு முன் கேயார் இயக்கிய காதல் ரோஜாவே பட ஹீரோயின் தான் இந்த அம்மணி.
அதன் பின் ஹிந்தி, அமெரிக்கா என பல இடம் சுற்றி விட்டு இப்போது கமல் படத்தில் ரீ என்ட்ரி. வயது.. 36 ! இன்னும் கல்யாணம் ஆகலை (ரொம்ப முக்கியம்!)
போஸ்டர் கார்னர்
பதிவர் பக்கம் - இருவர் உள்ளம்
மருத்துவ தகவல்கள் குவிந்து கிடக்கும் ஒரு தளம் - இருவர் உள்ளம்.
பல இடங்களில் இருந்து தகவல் சேகரித்து தருகிறார் கடைசியில் எங்கிருந்து திருடியது என்று மறக்காமல் சொல்கிறார் :) உடல் நலம் குறித்து அக்கறை கொண்டோருக்கான வலைப்பூ இது !
காந்தி நினைவு நாள்
இன்று காந்தி நினைவு நாள். காந்தி பட இறுதி ஊர்வல காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் குரல் இவ்வாறு சொல்லும் :
"என் வாழ்க்கைதான் நான் உங்களுக்கு விட்டு செல்லும் செய்தி என்றவர். வரலாற்றை படிக்கும் போது இப்படியும் ஒருவர் வாழ முடியுமா என அதிசயிக்கும் வாழ்க்கை வாழ்ந்தவர். "
" ஒரு தனி மனிதர் ; எந்த செல்வமும் சொத்தும் இல்லாதவர். எந்த நாட்டையும் ஆளவில்லை. இடுப்பு கச்சையுடன் இருந்த சாதாரண மனிதர். சுதந்திரம் வாங்க தன் நாட்டுக்கே தலைமை வகித்தவர். தனது சத்தியத்தாலும் பணிவினாலும் மாமன்னர்களை விட வலிமையானவர்.
இதோ......எந்த பதவியிலும் இல்லாத, எந்த நாட்டையும் ஆளாத இம்மனிதரின் இறுதி ஊர்வலத்தில் அனைத்து உலக தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் "
பொறுமையும், எடுத்த காரியத்தில் உறுதியாய் நிற்கும் பிடிவாத குணமும் உம்மிடம் வியக்கும், பின்பற்ற நினைக்கும் குணங்கள் ! வணங்குகிறோம் மகாத்மா !
அய்யாசாமி கார்னர்
நண்பர்கள் நந்து மற்றும் மோகன் அழைத்த மீட்டிங்குக்கு நந்துவோடு சென்றார் அய்யாசாமி. வடக்கு உஸ்மான் சாலை விவேக் சிக்னல் அருகே காத்திருக்கையில் அந்த மனிதரை பார்த்தனர். எம். ஜி ஆர் போல உடை அணிந்து கொண்டு தொப்பி, கூலிங் கிளாஸ் சகிதம் ஆடிக்கொண்டிருந்தார். விவேக்ஸ் வாகன பார்க்கிங்கில் தான் அந்த டான்ஸ் நடந்து கொண்டிருந்தது. அய்யாசாமி முதலில் எதோ டிவி சீரியல் ஷூட்டிங் என்றே நினைத்தார் அப்படி ஏதும் இல்லை. அந்த மனிதர் பாட்டுக்கு புல் மேக் அப்புடன் டான்ஸ் ஆடுவது, சிக்னலில் நிற்கும் மற்றவர்களை பார்த்து கையசைப்பது என இருந்தார்.
அய்யாசாமிக்கு சுவாரஸ்யம் தாங்கலை. நண்பன் நந்துவிடம் "" டேய் அவர் ஏன் இப்படி ஆடுறாருன்னு போய் கேட்கலாம் வாடா " என்றதும் நந்து டென்ஷன் ஆகிட்டார். " டேய் ஒருத்தராவது அந்த ஆளு பக்கத்திலே போறாங்களா பாரு. நீ மட்டும் எண்டா இப்டி இருக்கே? " என்று சொல்லும்போதே, மேற்படி நபர் ஆடியது போதும் என தனது பைக்கை எடுத்து கொண்டு கிளம்பி விட்டார். எம். ஜி ஆர் படம் உள்ளிட்ட பல சமாசாரம் அந்த வண்டியில் இருந்தது . கூடவே ஒரு விளக்குமாறும் சொருகப்பட்டிருக்க, அதை பார்த்த அய்யாசாமி " நல்லவேளை அவர் கிட்டே போகலை " என பெருமூச்சுடன் வண்டியை கிளப்பினார்.
அன்றிரவு, போதையில் இதை சொல்லி சொல்லி நண்பர்கள் குமுறியதை முழுசாய் சொன்னால், அய்யாசாமி இமேஜ் டோட்டல் டேமேஜ் ஆகிடும் :)

நன்றாக இருக்கிறது...
ReplyDeleteநன்றிங்கோ கோவை நேரம்
Deleteவயசை விடுங்க...இப்பவும் பூஜா குமார் அழகாத்தானே இருக்காங்க. ஹாலிவுட்ல பெரும்பாலும் 40 வயசுக்கு மேல சாதிச்ச நடிகைகள் ரொம்ப அதிகம்.
ReplyDelete//" டேய் ஒருத்தராவது அந்த ஆளு பக்கத்திலே போறாங்களா பாரு. நீ மட்டும் எண்டா இப்டி இருக்கே? "//
அது சரி.....போயிருந்தா எம்ஜிஆர் பேட்டி வாங்கியிருக்க மாட்டீங்க? :))
//இப்பவும் பூஜா குமார் அழகாத்தானே இருக்காங்க.//
Deleteஎங்கே போனாலும் பின்னாடியே வந்துடுவாருப்பா ரகு
அய்யய்ய :))
பாக்யராஜ் பூர்ணிமா விஷயம் இப்போதான் தெரியும்...
ReplyDeleteவாங்க ஸ்கூல் பையன் நன்றி
Deleteசுவாரஸ்யமான அறியாத தக்வல்களுடன் கூடிய்
ReplyDeleteபதிவு மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி ரமணி சார் நன்றி
Deleteவானவில்..அனைத்தும் அருமையாக இருக்கு. பாகியராஜ் பற்றிய தகவல் சுவாரசியம்.தொடருங்கள்.
ReplyDeleteநன்றி ராம்வி
Deleteபதிவர் பக்கம் சென்றேன்.
ReplyDeleteஇருவர் உள்ளம் கண்டேன்.
ஒருவரை ஒருவர் திருடா என்பதும் திருடி என்பதும்
ஒன்று சேர்ந்ததற்கு மறு பொருள் தானே !!
அங்கே நான் பதித்த பின் மொழி இதுவே>
உங்கள் வலைக்கு மோஹன் அவர்கள் வலைமூலம் வழி தெரிந்தது.
திருடுவதற்கும் திருடியதற்கும் வழி என்ன என்று சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன !!
தாய் தந்தையரிடமிருந்து அவர்கள் ஜீனைத் திருடினோம். ஏன் அவர்கள் ஜீனைத் திருடினோம் என்று
எண்ணும்படி அவர்கள் வியாதிகள் டயாபெடிஸ், ப்ள்ட் ப்ளெஷர் எல்லாவற்றையுமே ஒரு பேக்கேஜ்
ஆக பெற்றுக்கொண்டோம்.
பள்ளியிலே பக்கத்து நண்பனின் டிஃபன் பாக்ஸில் இருக்கும் உப்புமாவையும் திருடினோம்.
பருவ காலத்திலே பல பார்வைகளைத் திருடினோம்.
தொழிற்துறையிலே நம்மைப்போல் இருப்பவர்கள் செய்யும் தந்திரங்கள் எல்லாம் என்ன என்று
அவர்கள் எல்லாரையுமே தெரிந்துகொண்டோம். திருடினோம் என்று சொல்லாவிடினும்.
இல்லாள் உறங்கும்போதும் அவள் அழகை அவள் அறியாது திருடினோம். ( ரசித்தோம் என்று நாகரீகமாக சொல்லவும்)
ஆண்டவன் கோவிலிலும் அருகில் காண்பவர்களை அளந்தோம். ( மனதால் திருடினோம் என்பது உண்மை )
அவ்வப்போது எங்கோ என்றோ படித்த இலக்கியத்திலிருந்து ஈரேழு வாக்கியங்களைத் திருடி
எதிர் இருக்கும் மாணவர்களிடம் ஏதோ இது நம் சரக்கு என நினைக்க வைத்தோம்.
ஆக, திருடினோம் என்று சொல்லாதீர்கள். நாமும் இணைந்தோம். மனம் மகிழ்ந்தோம் எனச்சொல்லுங்கள்.
ஆசிகள் பல.
// People indeed are not difficult but different. //
True, they are different but yet difficult for us to digest how and why they are so.
சுப்பு தாத்தா.
அடடா.. நன்றி சுப்பு தாத்தா.
Deleteவானவில் வண்ணங்களில் மின்னுகிறது..த.ம5
ReplyDeleteநன்றி ஆட்டோமொபைல்
Deleteபாக்கியராஜ் கதை??? அப்படியா!!!
ReplyDeleteநிறைய அற்புதமான விஷயங்கள் மோகன். நன்றி வாழ்த்துகள்
ReplyDeleteமகிழ்ச்சி நன்றி ஸ்ரீவிஜி
Deleteபாக்யராஜ் விசயம் ஆச்சர்யப்பட வைத்தது! சுவையான பதிவு! நன்றி!
ReplyDeleteவாங்க சுரேஷ் நன்றி
Delete
ReplyDeleteஇன்னும் கல்யாணம் ஆகலை (ரொம்ப முக்கியம்!) - இங்கதான் நம்ம நாட்டோட பண்பாடும், கலாச்சாரமும் நமக்கே தெரியாம நம்ம ரத்தத்துல ஊறி இருக்குறதை தெரிஞ்சுக்க முடியும். ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகிட்டாலே அவள் தாய் ஸ்தானத்துக்கு வந்துடுறா. அதான் சினிமாவில் கூட பொண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க ஆண்கள் மனசு ஒத்துக்கலை. சில விதிவிலக்கான ஆண்கள் இருக்கலாம்.
ரைட்டு ராஜி !
Deleteவழக்கம் போல் அருமை.
ReplyDeleteமகிழ்ச்சி ரோஷினி அம்மா
Deleteவானவில் பல தகவல்களுடன்..
ReplyDelete