Friday, April 26, 2013

உணவகம் அறிமுகம் - புதுகை தலப்பாகட்டி பிரியாணி

கீழ்கட்டளை பெட்ரோல் பேங்க் அருகில் உள்ளது புதுகை தலப்பாகட்டி பிரியாணி கடை. தலப்பாகட்டி பெயரை பலரும் வைத்து கொண்டாலும், நிஜ திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி போல வராது என்பது உண்மை தான்.

ஆனால் இங்கு சாப்பிட்ட பிரியாணி பெரிதும் கவர்ந்ததால் அவசியம் இந்த கடையை அறிமுகம் செய்ய நினைக்கிறேன்.

மதியமும் இரவும் மட்டும் தான் கடை உண்டு. மதிய வேளைகளில் பிரியாணி மட்டுமே கிடைக்கும். (பரோட்டா, தோசை உள்ளிட்டவை இரவில் மட்டுமே )

பிரியாணி விலை :

மட்டன் பிரியாணி - 1/2 - ரூ. 120
சிக்கன் பிரியாணி - 1/2 - ரூ. 80

சிக்கன் குஸ்கா - ரூ. 60
மட்டன் குஸ்கா - ரூ. 80

அதென்ன சிக்கன் குஸ்கா மற்றும் மட்டன் குஸ்கா ? குஸ்கா என்பது ஒன்று தானே என்றால், மட்டன் பிரியாணியில் பீஸ் இல்லாமல் தருவது மட்டன் குஸ்கா - அது சற்று விலை அதிகம்; சிக்கன் பிரியாணியில் இருந்து தரும் குஸ்கா 60 ரூபாய் தான் என்று விளக்கம் தருகிறார்கள்

இருந்தாலும் சிக்கன் பிரியாணி விலையும், மட்டன் குஸ்கா விளையும் ஒன்றாய் இருப்பது சற்று உறுத்த தான் செய்கிறது



சரி பிரியாணிக்கு வருவோம்.

வீட்டம்மா மற்றும் பெண் சிக்கன் பிரியாணி சூடு என்று சாப்பிடவே மாட்டார்கள். மட்டன் பிரியாணி அல்லது குஸ்கா தான் !

எனக்கோ மட்டன் பிரியாணி அதிகம் பிடிக்காது. மட்டன் பீஸ்கள் பல நேரம் சக்கை மாதிரி இருக்கும் என்பது என் அனுபவம்.

ஆனால் இங்கு மட்டன் பிரியாணி அட்டகாசமாய் இருந்தது. குறிப்பாய் பீஸ் ஒவ்வொன்றும் நன்றாக வெந்து, அல்வா மாதிரி சுவையாய் ரசித்து சாப்பிட முடிந்தது.

மசாலா மற்றும் காரம் சற்று அதிகம் என்றாலும் எப்பவோ ஒரு முறை காரம் சாப்பிடுவது ஓகே (சாப்பிட முடியாத அளவு அதிக காரம் இல்லை), பிரியாணிக்கு சைட் டிஷ் ஆன கத்திரிக்காய் கொத்சும் அருமை.

இந்த பிரியாணி சுவை புதுகை பக்கத்து ஸ்பெஷலா என்று தெரியவில்லை. புதுகை நண்பர்கள் டேஸ்ட் செய்து சொன்னால் தான் உண்டு .

மேலதிக தகவல்கள்

கடை பெயர்: புதுகை தலப்பாக்கட்டு பிரியாணி கடை

முகவரி: கீழ்கட்டளை HP பெட்ரோல் பேங்க் அருகில் (மேடவாக்கம்- பல்லாவரம் நாற்சந்தி அருகே)

நேரம்: மதியம் 12 முதல் இரவு 10 வரை

13 comments:

  1. இதுவரை ஒரு தலப்பாகட்டு பிரியாணியும் நான் சாப்ட்டது கிடையாது. சாப்பிடனும்ய்யா பார்ப்போம்.

    ReplyDelete
  2. அடுத்த முறை அவ்வழி கடக்கும் பொழுது நிச்சயம் செல்கிறேன் சார், பிரியாணி நமக்கு நல்ல இருந்தா மட்டும் போதும், தேடி போய் சாப்பிடுவோம்ல

    ReplyDelete
  3. Anonymous11:23:00 AM

    //மட்டன் பிரியாணியில் பீஸ் இல்லாமல் தருவது மட்டன் குஸ்கா //

    அறியாத தகவல்.

    ReplyDelete
  4. ஊருக்கு வந்திடுங்க... ஜாமாய்ச்சிடலாம்...!

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. Neenga eppo thaan jamaaikala? In comments

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. சிவா : பீஸ் இல்லாமல் இருப்பது குஸ்கா என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும், இப்படி சிக்கன் குஸ்கா, மட்டன் குஸ்கா என்ற பெயரில் 20 ரூபா அதிகம் வாங்குவது சற்று ஆச்சரியமாய் இருந்தது. குறிப்பாய் சிக்கன் பிரியாணி விலைக்கே , எந்த பீசும் இல்லாத குஸ்காவை - மட்டன் குஸ்கா என்று சொல்லி வாங்கிய போது சற்று வலித்தது :)

    ReplyDelete
  7. Anonymous12:30:00 PM

    வீட்டில் அசைவம் செய்வது மிக அரிது சார். ஹோட்டலில் கூட நான் வெஜ் ஐட்டங்களை பெரும்பாலும் நண்பர்கள் சொல்லியே ஆர்டர் செய்கிறேன். அதைத்தான் குறிப்பிட்டேன்.

    திண்டுக்கல் தலப்பாகட்டி(சென்னை) பிரியாணி ருசி சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பது அனுபவத்தில் உணர்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. Nallaa vayirikka kalaaichuttu, reason vaeraya?

      Delete
  8. மதிய நேரம் செம்ம பசி இந்த பதிவ படிக்கிறேன் அநேகமா அண்ணனுக்கு வயித வலி வர போகுது ஒழுங்கா எனக்கு பார்சல் அனுபிருங்க

    ReplyDelete
  9. Anonymous11:33:00 PM

    எங்க பாண்டிச்சேரி சைட்ல நிறைய பஞ்சாபி தாபாக்கள் திறந்திருக்கிறார்கள்..நன்றாகத்தான் இருக்கிறது..எங்க ஊர் பக்கம் வந்தா வாங்க...

    ReplyDelete
  10. திண்டுக்கல் வேணு பிரியாணி கடையை தேடி பிடித்து சாப்பிட போனோம். மதியம் மூன்று மணியாகிவிட்டதால் அங்கு empty பிரியாணி என்று ஒன்றைக் கொடுத்தார்கள். சாப்பிட்டு பார்த்தால் தான் தெரிகிறது அதுதான் அங்குள்ள குஸ்கா என்று. அங்கு கொடுத்த சிக்கன் லாலிபாப்பும் ச்க்கன் மற்றும் மட்டன் சுக்காவிலும் பேருக்கு 2 அல்லது 3 துண்டுகளை வைத்தது போல் இருந்தது. empty பிரியாணியில் ஒரே பச்சை கற்பூரம் வாசனை வந்தது. சாப்பிட்டு முடித்தபின் ம்ட்டன் பிரியாணி இருக்கிறது தரவா என கேட்கிறார்கள். அநியாய விலை வேறு. சரவண பவன் சட்னி சாம்பார் கூட அளவு அதிகம் இருக்கும் போல் இருக்கிறது.

    ReplyDelete
  11. வாங்க மனோ நன்றி

    நன்றி சீனு முயற்சித்து பாருங்கள்
    நன்றி தனபாலன் சார்; நீங்கள் சொன்னால் தான் வலைச்சரத்தில் வந்துள்ளது தெரிகிறது நன்றி

    ரைட் டு சக்கர கட்டி நன்றி

    வாங்க கலியம் பெருமாள் நன்றி

    நாகராஜ் : தங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...