Saturday, December 26, 2009

2009 - Blogger விருதுகள் + இந்த வருடத்தின் சில சிறந்த பதிவுகள்

இந்த வருடத்தின் பிற் பகுதியிலிருந்து தான் அதிகம் வாசிக்கவம், எழுதவும் துவங்கினேன். எனினும் வலை உலகில் இந்த வருடத்தின் சில குறிப்பிடத்தக்க பதிவர்களும், நான் ரசித்த சில பதிவுகளும் உங்களுடன் பகிர்கிறேன்.

இதற்கான பல்வேறு பரிந்துரை செய்த விக்கி, கேபிள், பா. ரா, சித்ரா உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

முதலில் சில விருதுகள். சில காமெடியாக இருக்கும் சில சீரியசாக இருக்கும். எது காமெடி, எது சீரியஸ் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

2009 BLOGGER AWARDS:

சிறந்த ஹீரோ : நரசிம் (இந்த மனுஷனை ஆம்பளைங்களே சைட் அடிக்கிறாங்க.. நற.. நற..)

சிறந்த பின்னணி பாடகர்: அப்துல்லா (வேற பிளாக்கர் யாரும் சினிமால இந்த வருஷம் பாடலை.. )

சிறந்த கலை இயக்குனர் : அதி பிரதாபன் (நிறைய பேருக்கு ப்ளாக் வடிவமைச்சு குடுத்திருக்கார்)

சிறந்த தொடர் : சினிமா வியாபாரம் (என்டர் கவிஞர், சினிமா பதிவர், யூத்து என அழைக்கப்படும் கேபிள் சங்கர்)

சிறந்த சிரிப்பு பாத்திரம்: "ஏழு " (கார்க்கி)

சிறந்த வில்லன்: ஜெட் லி (குறிப்பா சினிமா காரங்களுக்கு வில்லன்.. முத நாளே படம் பாத்துட்டு விமர்சனத்தில் கிழிப்பதால்)

சிறந்த இரட்டையர் : சிவ ராமன் மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர் (கதை பட்டறை, கவிதை போட்டி என கை காசு செலவழித்து ப்ளாக்கர்களை ஊக்குவிப்பதால்)

சிறந்த ஒளி ஓவியர்: ஆதி @ தாமிரா & முரளி குமார் பத்மநாபன்

சிறந்த ஆராய்ச்சியாளர்: முரளி கண்ணன் ( சினிமா கிரிக்கட் இவற்றோடு கொஞ்சமா மெக்கானிக்கல் ஆராய்ச்சியும் செய்றார்)

சிறந்த புது முகம் : பா. ரா @பா. ராஜா ராம் (ஆறு மாதத்தில் கவிதை உலகை கலக்கியவர்)

பின்னூட்ட புயல்கள்: 1. ஜெகன் நாதன் (சில blog-ல் மிக நீ..ண்ட பின்னூட்டம் போடுவார்)

2. ராஜு (எதிர் கவுஜ ஸ்பெசளிஸ்ட்)

3. நையாண்டி நைனா

சிறந்த பெண் பதிவர் : வித்யா - Scribblings ( Variety-ஆக எழுதுவதால்) (பிற தோழிகள் கோபிக்க வேண்டாம். இந்த தேர்வு கேபிள் சங்கருடையது)

சிறந்த பப்ளிஷர் : அகநாழிகை வாசுதேவன் (நம்ம பிளாக்கர்களை நம்ம்பி புக் போடுறவர்)

சிறந்த யூத்: அனுஜன்யா (சார் உங்களுக்கு 48 வயசுன்னு சொல்லவே முடியாது:))))

********************

இந்த வருடத்தில் வெளி வந்த சில குறிபிடத்தக்க பதிவுகள்:

தமயந்தியின் இந்த கட்டுரை:(இதற்கு தலைப்பே இல்லை!!)

அக்கா (நரசிம்)

ஷோபா என்னும் அழியாத கோலம் - மாதவராஜ்

சிறுகதை (தேர்வு செய்தது பா. ரா)

1. காமராஜின்"மருதோன்றி நினைவுகள்"

2. அமித்தம்மாவின்,"சாமிவேலுவின் மகன்"

கவிதைகள்

1. கரையேறாத கனவொன்று.. நிலா ரசிகன்

2. தகப்பனாக இருப்பது - பா. ரா

3. யாருமற்ற கருவறை - நேசமித்திரன்
*******

மேலே குறிப்பிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள், உங்கள் எழுத்தின் மூலம் பலரை நீங்கள் மகிழ்விக்கிறீர்கள். தொடருங்கள்..

இந்த பதிவு பிடித்திருந்தால் தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் ஓட்டும், பின்னூட்டமும் இடுங்கள்! நன்றி..

31 comments:

  1. விருதுகள் எல்லாம் டாப்பு.
    அருமையான பதிவுகளை தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறீர்கள்.

    வித்யா அவர்களின் காமெடி எழுத்து நல்லாயிருக்கும். அதுனால கரெக்ட் சாய்ஸ்தான்.

    அடுத்த வருஷம் உங்க பேர போட்டு நான் விருது கொடுத்திடுறேன்.

    ReplyDelete
  2. ண்ணா..தேங்க்ஸ்ங்ண்ணா..!

    தங்கள் சித்தம் என் பாக்கியம்.

    ReplyDelete
  3. //குறிப்பா சினிமா காரங்களுக்கு வில்லன்//

    அப்போ இன்னும் வேற யாருக்கெல்லாம் நான் வில்லன்???...


    ஏன் உங்களுக்கு இந்த கொலை வெறி....

    இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு....

    ReplyDelete
  4. ஒரு பானை சோறுக்கு..

    வித்யா அவர்களின்
    http://vidhyascribbles.blogspot.com/2009/09/blog-post_17.html

    பதிவில்,
    ஒரு முறை வேகமாக வருகையில் குறுக்கே பாய்ந்த கோழியைக் காப்பாற்ற திருப்பியதில் வண்டி பார்க் ஆன இடம் மழைநீர் குட்டை. அப்படியே வீட்டுக்குப் போக மனமில்லாமல், பக்கத்திலிருந்த கல்லின் மேல் உட்கார்ந்துவிட்டேன். ரொம்ப நேரமாய் ஆளே காணோமே எனத் தேடிக்கொண்டு வந்த அண்ணாவைப் பார்த்ததும் ஒரே அழுகை.
    "அழாதடா குட்டி. கீழே விழுந்தியா? ரொம்ப அடியா?"
    "ம்ம்ம்ம்"
    "சரி வா. வண்டி எங்க?"
    "ம்ம்ம்ம். இங்கதான்"
    "இங்க எங்கடி? காணோமே?"
    "இந்தா இந்தக் குட்டைக்குள்ள"
    "அறிவிருக்காடி உனக்கு. குட்டி சாத்தான். இவ்ளோ நேரமாய் வண்டி உள்ளாற கிடக்குதே. விழுந்தபோதே வந்து சொல்லித்தொலைய வேண்டியதுதானே?"

    ----

    ஆனந்த தாண்டவம் படத்திலிருந்த கனா காண்கிறேன் பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தோம். தீடிரென்று அப்பா "ஏய் இந்தப் பாட்டுல ராமாயணத்தை உல்டா பண்ணிருக்காண்டி" என்றார்.
    "உல்டா பண்ணலப்பா. அதே கான்சப்ட் தான்ப்பா"
    "இல்லடி அதுல ராமர் தான் வில்லை உடைப்பார். இந்தப் பாட்டுல அனுமார் இல்ல வில்லை உடைக்கிறார்".

    -------
    அம்மா வீட்டிற்கு சென்றிருந்தபோது அம்மா சொன்னார். "வித்யா உனக்கு ஏழரை சனி விட்ருச்சுடி". கேட்டுக்கொண்டிருந்த என் தம்பி சொன்னது. "மாத்தி சொல்லுமா. அவ தான் சனிய விட்ருக்கா". அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

    --------
    சில வாரங்களுக்கு முன்னால் பைக்கில் சென்ற தம்பி சில்லறை பொறுக்கிவிட்டு வந்தான்.
    "ஏண்டா சில்லறை பொறுக்கின?"
    "ரெண்டு எருமைமாடுங்க ராங் சைடுல வந்திடுச்சுடி".
    "எருமைமாடுக்கு எப்படிடா ரைட்டு ராங்குன்னு தெரியும்?"
    "காலேஜ் போற எருமைங்களுக்கு அதுகூட தெரியலன்னா எப்படி?"

    ---------
    அண்ணன் குழந்தைகளோடு கோயிலுக்குப் போயிருந்தோம். பிரசாதமாய் கொடுத்த சர்க்கரைப் பொங்கலைப் பார்த்த அண்ணன் மகள் கேட்டாள். "ஏன் அத்த எப்பபாரு சாமிக்கு ரைஸே சாப்பிட தர்றாங்களே. போரடிக்காதா? சாமி பிட்ஸா சாப்பிடாதா?"
    -----
    தீடிரென்று கர்ணனின் மனைவி பெயர் அறியும் ஆவல் ஏற்படவே
    "அப்பா கர்ணனின் மனைவி பேரென்ன?"
    "தேவிகா"
    "அய்யோ. நான் நடிகை பேரை கேக்கலை. நிஜமா கர்ணன் மனைவி பேரக் கேட்டேன்."
    "Mrs. கர்ணன்"
    "கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"
    -----


    இரண்டு நாளைக்கு முன்னாடி நண்பன் ஒருவன் sms பண்ணிருந்தான்.
    "Vidhya, I lost ur mobile no. Let me know ur no asap"
    டேய் எப்படிடா இவ்ளோ தெளிவா இருக்கீங்க?


    ----

    இன்னமும் நிறைய இருக்கு. அவங் புத்தகமா போடலாம்.

    ReplyDelete
  5. தேர்வு அருமை.:)

    ReplyDelete
  6. நர்சிம், பா.ரா எழுதியதுல பெஸ்ட் எதுன்னு தேர்ந்தெடுக்குறது மிகவும் கஷ்டமான விஷயம்.

    ReplyDelete
  7. நன்றி..

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  8. சிறப்பா விருது வழங்கிய உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நன்றி மகன்!

    கடனை கூட்டிக் கொண்டே போகிறீர்கள்..

    :-)

    ReplyDelete
  10. மிக நல்லத் துவக்கம்

    முன்னெடுக்க யாராவது வேணும் தானே

    எனது கவிதைக்கான உங்களின் ரசனை ஆச்சர்யமாய் இருக்கிறது
    மகிழ்வும் நன்றியும்

    சக உதிரர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  11. Dear MK,

    The best of your work in 2009 was 'Husband and wife' fight.

    First I thought I was reading my own story, later understood that this is the common story with every loving couple.

    Keep going. I see an anxiety in all you creations. Anxiety that 'your creation has to be appreciated by all'. This anxiety will make 2010 a better year for you.

    All the best.

    Regards,

    Bala.

    ReplyDelete
  12. ஹைய்யா.. லிஸ்ட்ல நானும் இருக்கேனா? தாங்ஸுங்க..

    அப்புறம் ஏற்கனவே படித்திருந்தாலும் பின்னோக்கி தந்த வித்யாவின் சாம்பிள்ஸ் அருமை. அதுவும் அரைமணி நேரம் வெடிச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்த விஷயம்..

    "இல்லடி அதுல ராமர் தான் வில்லை உடைப்பார். இந்தப் பாட்டுல அனுமார் இல்ல வில்லை உடைக்கிறார்".

    ReplyDelete
  13. மிக்க நன்றி நண்பா.

    அக்கா பதிவு எனக்குப் பிடித்த ஒன்று. மீண்டும் நன்றி.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. தேர்வும், அதற்கான காரணமும்,அருமை.
    இதில் பலரின் படைப்புகளை
    இனி தான் படிக்க வேண்டும்; எனவே
    நல்ல அறிமுகமும் கூட.

    ReplyDelete
  15. //சிறந்த ஹீரோ : நரசிம் (இந்த மனுஷனை ஆம்பளைங்களே சைட் அடிக்கிறாங்க.. நற.. நற..)
    //
    சத்தியமா... :-)


    //சிறந்த ஒளி ஓவியர்: ஆதி @ தாமிரா & முரளி குமார் பத்மநாபன் //

    நன்றி தலைவரே! ஆதியும் நானுமா? அவ்வ்வ்வ்....

    ReplyDelete
  16. நன்றி பின்னோக்கி. நீங்கள் தந்த வித்யாவின் எழுத்து அருமை.

    ராசு: நீங்களும் விஜய் ரசிகரா? :))சொல்லவே இல்ல?

    ஜெட் லி: எல்லா படமும் நாசம் பண்ட்ரீங்கப்பு. கொஞ்சம் பாத்து பண்ணுங்க.

    கார்க்கி. ஏழு படித்து சிரிக்காதவர்கள் டாக்டரை தான் பார்க்கணும் :))

    வானம்பாடிகள் சார், கேபிள், சுசி நன்றி

    ReplyDelete
  17. பா. ரா இந்தியா வரும் போது வசூலிச்சிடலாம்.

    நேசமித்திரன்.. இதனை தேர்வு செய்த பலரும் உங்கள் எழுத்தை நேசித்தனர். ஒவ்வொருவர் ஒன்று சொன்னாலும் எனக்கு பிடித்த கவிதை நான் தேர்ந்தேடுதேன். வாழ்த்துக்கள்

    நன்றி புண்ணாக்கு மூட்டை. நீங்கள் சென்னை வந்த அன்று என்னால் வேலை பளுவால் தொலை பேச முடியாமல் போய் விட்டது. மன்னிக்க. நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். குறைத்து கொள்கிறேன்

    ReplyDelete
  18. ஆதி நன்றி. சென்னையிலேயே இருக்கிறோம். இனியாவது அடிக்கடி சந்திப்போம் என எண்ணுகிறேன்

    நரசிம்.. அக்கா ஒரு சிறந்த படைப்பு. அதில் உங்கள் வழக்கமான ஸ்டைல் இருந்தது,. நெகிழ வைத்தது

    அம்பிகா முதல் வருகையோ? நன்றி

    முரளி: தங்களுக்கு இன்னும் நிறைய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என எண்ணுகிறேன்

    ReplyDelete
  19. மிக நல்ல தெரிவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  20. மிக்க நன்றி மோகன். பெருமையாக இருக்கிறது. மற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. நல்ல முயற்சி மோகன் குமார் வாழ்த்துக்கள்
    மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  23. அருமையான தேர்வு. உங்கள் முயற்சிக்கும் விருது பெற்றவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. விருது வழங்கிய உங்களுக்கும்... அதை பெற்ற சக பதிவர்களுக்கும் எனது
    வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  26. anna many thanksna. i am out of station and call u after reach chennai.

    thank u again.

    :)

    ReplyDelete
  27. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி:

    வசந்த் (பிரியமுடன் எனது நன்றி ..)
    வித்யா (நிறைய எழுதுங்க வித்யா)
    தேனம்மை (உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்)
    நிலா ரசிகன் (கவிதை மற்றும் கதையில் கலக்குறீங்க நண்பா)
    ராம லக்ஷ்மி (தொடர்ந்த ஊக்குவிப்பிற்கு நன்றி)
    தியா (நலமா இருக்கீங்களா?)
    சங்கவி (என்னடா கொஞ்ச நாளா உங்களை காணலேயேன்னு நினைச்சேன்)
    அப்துல்லா (விடுமுறை பயணமா? வாழ்த்துக்கள்)

    ReplyDelete
  28. ai....award ah ...thool kilappunga...


    enakku ethaachu oru award thangappaa .....

    ReplyDelete
  29. நன்றி மோகன்குமார்..........

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...