* கேபிள் சங்கர் - தமிழில் ப்ளாக் வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்த பதிவர். பதிவுகள் வரும் நாளில் சுமார் 2000 பேரும், பதிவுகள் வராத நாளில் கூட 500 முதல் 1000௦௦௦ வரையும் வாசகர்கள் தினசரி இவரது blog-ஐ வாசிக்கின்றனர் !!
* கேபிள்ஜிக்கு இரு மகன்கள். பெரியவர் ஐந்தாவதும் சின்னவர் ஒன்றாவதும் படிக்கின்றனர்..(தல.. உங்களோட யூத் இமேஜை உடைச்சிட்டோமோ? )
* இவரது தந்தை அரசு துறையில் (EB) இருந்து ஓய்வு பெற்றவர். திரை துறையிலும் பங்காற்றியிருக்கிறார். சமீபத்தில் இவர் மரணம் கேபிளை ரொம்பவே உலுக்கியது. வலை உலக நண்பர்கள் பெரும் ஆறுதலாகவும் துணை ஆகவும் இருந்தனர் அப்போது.
* சினிமா இயக்க வேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் கனவு. நான்கு கதைகள் கை வசம் வைத்துள்ளார். நல்ல தயாரிப்பாளர் கிடைத்து விட்டால் ஸ்டார்ட் காமெரா என சொல்ல ஆரம்பித்து விடுவார்.
* பல தொலை காட்சி தொடர்களிலும் (குறிப்பாக ஜெயா டிவி), சில சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். தற்போது ஏன் நடிப்பதில்லை என்றால், " நடிச்சுக்கிட்டு இருந்தா நடிகன்னே வச்சிடுவாங்க; டைரக்ட் பண்ண சான்ஸ் கிடைக்காது. அதனால தான் நடிக்கிறதில்லை" என்கிறார் !!
* சென்னை சைதாபேட்டையில் வசிக்கும் இவர் கேபிள் operator ஆக உள்ளார். (பெயர் காரணம் புரிந்திருக்குமே? )
* யூத் என விளிப்பது இவருக்கு ரொம்ப பிடிக்கும். இவருடன் பழகினால் உண்மையிலேயே இவர் யூத்துதான் என அறியலாம். ஒரு கல்லூரி மாணவன் கூட இவருடன் பழகினால் ஆச்சர்யப்பட்டுப்போவான். அந்த அளவுக்கு செயலிலும் எண்ணங்களிலும் பேச்சிலும் இளமை பொங்கி வழியும். இந்த யூத்தை வைத்து வலை உலகில் நிறைய கிசு கிசு உலாவியது. அந்த கட்டுரைகளுக்கு தானும் ஒரு வாசகனாக போய் யாரோ ஒருவர் பற்றி எழுதிய மாதிரி கமெண்ட் போட்டு விட்டு வருவார்.
* ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றால் சர்வரிடம் முதலில் பெயர் கேட்பார். அதன் பிறகு அவரை பெயரோடு சார் போட்டு அழைப்பார்.(உ.ம் - ரவி சார்)
* உட்கார்ந்து அரட்டை அடிப்பதைவிட நின்று கொண்டு அரட்டை அடிப்பது மிகவும் பிடிக்கும்.
* அப்பாவின் பூர்வீகம் தஞ்சாவூர் என்பதால் யாரேனும் தஞ்சைக்காரர்களைப் பார்த்தால் ரொம்ப happy ஆகி அளவளாவுவார் .
* சினிமா வியாபாரம் பற்றி இவர் எழுதியதன் தொகுப்பை கிழக்கு பதிப்பகம் மூலம் புத்தகமாக விரைவில் எதிர் பார்க்கலாம். Blog -ல் வந்ததை விட எக்ஸ்ட்ரா மேட்டர்கள் புத்தகத்தில் உண்டு.
* பல புது ப்ளாக்கர்களுக்கு இவர் ஊக்கமும், ஐடியா- க்களும் தருவார். " எல்லோரும் எழுதலாங்க; எழுத நிறைய மேட்டர்ஸ் இருக்கே" என்பார்.
* எழுத்தில் இருக்கும் கேலியும் கிண்டலும் நேரில் பேசும் போதும் இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும் !!
* போனில் பேசும் போது சில நேரம் பைக் ஓட்டி கொண்டிருப்பார். அப்புறம் பேசுறேன் என்றால், " போன் வந்துக்கிட்டே தான் இருக்கும். காதில ஹெட் போன் மாட்டிட்டு பேசிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தான்; இல்லாட்டி முடியாது" என்பார். ( தல பார்த்து.. ஜாக்கிரதை தல.. )
* கவிதைக்கும் இவருக்கும் ஆகாது. "கவிதையா? என்டெர் தட்டி, என்டெர் தட்டி எழுதுறது தானே?" என்பார் கிண்டலாய். இவர் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான பெரும் சத்தம் எழுப்பும் பெயர் கொண்டவர், " அவருக்கு கவிதை வராதுங்க. அதான் இப்படி சொல்றார்" என்கிறார்.. (ஏதோ நம்மால முடிஞ்சது).
* ஒவ்வொரு திங்களன்றும் இவர் எழுதும் கொத்து பரோட்டா ரொம்ப பேமஸ் !! இதில் ரொம்ப நாளாய் வாரம் ஒரு புது ஹோட்டல் பற்றி எழுதி வருகிறார். இப்போது அதிகம் அறிய படாத ஒரு பதிவர் பற்றியும் எழுதுகிறார்.
* ஜெயா டிவி தமிழ் பதிவுலகம் பற்றி இவரை பேட்டி எடுத்து ஒலி பரப்பியது. அதில் blog ஆரம்பிப்பது எப்படி, அதன் மூலம் கிடைக்கும் பயன்கள் என்ன உள்ளிட்ட பல விஷயங்கள் இவர் பகிர்ந்து கொண்டார்.
* பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜன் இவருக்கு சித்தப்பா முறை.
* கேபிள் சினிமா படங்கள் பார்ப்பதில் அலாதி பிரியம் கொண்டவர். தெலுங்கு படம் சென்னையில் ரிலீஸ் ஆகா விடில் ஆந்திரா போய் பார்த்து வருவாராம்!! தெலுங்கு நன்கு பேசவும் தெரியும்.
* பழகுவதற்கு பெரியவன் சிறியவன் என்று பாகுபாடெல்லாம் பார்ப்பது கிடையாது . அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள ஏதேனும் மேட்டர் இருக்கும் இவரிடம். பேச ஆரம்பித்தால் சுவாரஸ்யமாக இருக்கும், நக்கல் கலந்து பல விசயங்களை அள்ளி வீசுவார். அதிலும் சினிமா பற்றி என்றால் நம் வயிறு வலிப்பது நிச்சயம்.
* கேபிளிடம் உள்ள இன்னொரு குணம், உரிமையை தட்டிக் கேட்பது. பொது இடங்களில் யாரை வேண்டுமானாலும் எதிர்த்து நிற்கும் தைரியம் அவரிடம் உண்டு. கடைக்காரர் சரியான சில்லரை கொடுக்கவில்லையென்றால் வாக்குவாதம்தான், அது எந்த ஷாப்பாக இருந்தாலும் சரி, வாதாடி மீதி 2 ரூபாயை வாங்கிவிட்டுத்தான் வருவார். கேட்டால், “என் பணம்யா இது, ஒரு ரூபாயா இருந்தா என்ன? நா சம்பாதிச்சது, அத எடுக்க இவனுக்கு என்ன உரிமை இருக்கு?”ன்னு கேப்பார்.
* மூட் இருந்தால் மற்றவர்களை இமிடேட் செய்து காண்பித்து நண்பர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்.
* Blogger-களை வரிசை படுத்தும் அலெக்ஸா ரேட்டிங்கில் தற்சமயம் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் வலைப்பூ நம்ப சங்கருடையதே. (இதற்கு அர்த்தம் ரேட்டிங்கில் இவர் நம்பர் 1 என்பதாக கொள்ளலாம்).
* பழக மிக இனிமையானவர். பலருக்கும் உதவுவது எப்போதும் இவரது வழக்கம்.
அவரது எண்ணப்படி நல்ல சினிமா ஒரு நாள் நிச்சயம் தருவார் என்பது அவரது நம்பிக்கை மட்டுமல்ல அவரது நண்பர்கள் அனைவரின் நம்பிக்கை.
டிஸ்கி 1 : கேபிளிடம் கொஞ்ச காலமே பழகிய நான், எழுத வேறு சில விஷயங்கள் இருந்த போதும், எழுதாமல் தவிர்த்து, வியாழன் வரை காத்திருந்து 50 -வது பதிவு - கேபிள் பற்றி தான் இருக்க வேண்டும் என எண்ணினேன். இது கேபிள் குறுகிய காலம் பழகிய நபர் மீது கூட செலுத்தும் ஆளுமையை காட்டுகிறது.
டிஸ்கி 2 : கேபிள் சங்கர் பற்றி என்றதும் தண்டோரா, அதிஷா, நரசிம், அப்துல்லா, அதி பிரதாபன், ஜெட் லி, அசோக் என பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதன் தொகுப்பே இந்த கட்டுரை. தகவல் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.
கேபிளைப் பற்றி தெரிந்த தெரியாத விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஏய், மீ தி பர்ஸ்ட்!
ReplyDeleteஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. மேலும் பல நூறுகளையும், ஆயிரங்களையும் பெற.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஐம்பதாவது பதிவுக்கு என் வாழ்த்துகள்!
ReplyDelete/கேபிள்ஜிக்கு இரு மகன்கள். பெரியவர் ஐந்தாவதும் சின்னவர் ஒன்றாவதும் படிக்கின்றனர்..(தல.. உங்களோட யூத் இமேஜை உடைச்சிட்டோமோ? )
ReplyDelete//
யார் சொன்னது.. இப்பலெல்லாம் இது ஆடட் அட்வாண்டேஜ்.. அதுனால இப்பவும் யூத்தான்..
/சினிமா இயக்க வேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் கனவு. நான்கு கதைகள் கை வசம் வைத்துள்ளார். நல்ல தயாரிப்பாளர் கிடைத்து விட்டால் ஸ்டார்ட் காமெரா என சொல்ல ஆரம்பித்து விடுவார். //
ReplyDeleteஎன் ஆசையாக மட்டுமில்லாமல், என் நண்பர்கள் வாசகர்கள் அனைவரது எண்ணத்தின் வலிமையில் அது நிச்சயம் சீக்கிரம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு..
இருக்கிறேன் தலைவரே
இதுவரை எழுதியவை மொத்தம் 49 தான் காட்டுது. 2008 - 19 and 2009 - 30 கொஞ்சம் சரிபாருப்பா.
ReplyDeleteஎனது Dash Board - 50 காட்டுது!!
ReplyDelete//வீடு திரும்பல்– 50 Posts, last published on Dec 10, 2009 – View Blog//
draft post ஏதாவது இருக்கா பாரு....
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteபெயர் சொல்ல விருப்பமில்லை சொல்வது சரிதான். Dashboard நாம் draft-ல் வைத்திருப்பவற்றையும் சேர்த்தே காட்டும். எப்படியானாலும் அரைசதத்துக்கு என் நல்வாழ்த்துக்கள்!
Cable Sankar said...
ReplyDelete//என் ஆசையாக மட்டுமில்லாமல், என் நண்பர்கள் வாசகர்கள் அனைவரது எண்ணத்தின் வலிமையில் அது நிச்சயம் சீக்கிரம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு..
இருக்கிறேன்//
நல்வாழ்த்துக்கள்!
//நண்பர்கள் வாசகர்கள் அனைவரது எண்ணத்தின் வலிமையில் அது நிச்சயம் சீக்கிரம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு//
ReplyDeleteAssociate Director நாந்தான் தலைவரே..ஒகேவா.. reserved
///சினிமா இயக்க வேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் கனவு. நான்கு கதைகள் கை வசம் வைத்துள்ளார். நல்ல தயாரிப்பாளர் கிடைத்து விட்டால் ஸ்டார்ட் காமெரா என சொல்ல ஆரம்பித்து விடுவார். //
ReplyDeleteஎன் ஆசையாக மட்டுமில்லாமல், என் நண்பர்கள் வாசகர்கள் அனைவரது எண்ணத்தின் வலிமையில் அது நிச்சயம் சீக்கிரம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு..
இருக்கிறேன் தலைவரே//
நிச்சயம் எடுப்பீங்க தல...
கேபிளாரை பற்றிய விபரங்களூக்கு நன்றி...
தலைவரே! 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள். ரொம்பவே யூத்தான பதிவு, இது :-)
ReplyDeleteகேபிள் பற்றிய அத்தனையும் நிசர்சனம், பதிவர்களிடம் பழகும் அவரது பாங்கு எவருக்கும் வராது, அவரிடம் கற்றுக்கொள்ள இன்னும் எவ்வளவோ இருக்கிறது...
//ஒரு கல்லூரி மாணவன் கூட இவருடன் பழகினால் ஆச்சர்யப்பட்டுப்போவான். அந்த அளவுக்கு செயலிலும் எண்ணங்களிலும் பேச்சிலும் இளமை பொங்கி வழியும்//
ReplyDeleteகரெக்ட்ஆ சொன்னிங்க அண்ணே....
அம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
அன்பின் மோகன் குமார்
ReplyDeleteஐம்பதாவது பதிவினிற்கு நல்வாழ்த்துகள்
அழகான அறிமுகம் - நல்லாருக்கு மோகன்
கேபில்ஜியின் தீர்க்கமான முகம் உள் வாங்க வாய்த்தது மோகன்.அவ்வளவு அருமையாய் நண்பரை பேசுகிறீர்கள்.சமீபமாய்,என் ஜீபூம்பா கவிதையில் அவரின் குறும்புக்கு,அல்லது குசும்புக்கு அவரின் பின்னூட்டம் ஒன்னு போதும் என இங்கு பதிய விரும்புகிறேன். (நானும் இடையில்தான் படுத்து தூங்குகிறேன்...) :-))
ReplyDeleteபார்த்தே ஆகவேணும் எனும் லிஸ்ட் பெருகிக்கொண்டே இருக்கு.இந்தா வந்து கொண்டே இருக்கேன்.ஒரு பத்து மாசம் பத்து நாள் போல் ஓடிவிட கடவது.
கேபில்ஜி,நம் குடும்பத்தின் மிக பெரிய நம்பிக்கை நீங்கள்!வாழ்த்துக்கள் மக்கா!
மோகன்,கலக்குறீங்க!keep going!
ஐம்பதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மக்கா!
ReplyDeleteசீக்கிரமே கேபிள் சங்கர் ஒரு நல்ல படம் இயக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteபெயர் சொல்ல விருப்பமில்லை & ராம லக்ஷ்மி: நன்றி. சரி பார்க்கிறேன்.
ReplyDeleteஅசோக்: தண்டோரா, நீங்க இப்படி எத்தனை பேர் reserve செய்து வைபீங்க? சரி சரி தல எதையும் தாங்கும் இதயம் தான் :))
நன்றி புலிகேசி!!
முரளி: மிக்க நன்றி. நீங்கள் சொல்வது ரொம்பவும் உண்மையே. சங்கரிடம் கத்து கொள்ள நிறைய இருக்கு.
ReplyDeleteஜெட் லி: நேத்து சங்கரிடம் பேசும் போது முதல் முறை உங்களை கடையில் தேடி வந்து பார்த்ததை சொல்லி கொண்டிருந்தார்.
நன்றி சீனா அவர்களே.
பா. ரா. இந்தியா வர்றீங்களா? ரொம்ப சந்தோசம். அனேகமா நீங்க வரும் போது ஒரு பதிவர் சந்திப்புக்கே ஏற்பாடு செய்துடுவாங்க. எனவே எல்லாரையும் நீங்க ஒண்ணா பார்த்துடலாம். உங்களை நேரில் பார்க்க நாங்களும் ஆவலா இருக்கோம்.
மீண்டும் ஒரு நல்ல பதிவு. ஐம்பதை எட்டியதற்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெங்கட் நாகராஜ்
புது தில்லி
யூத் பற்றி பல தகவல்களை தந்ததற்கு நன்றி
ReplyDelete50ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். விரைவில் 500-ஐ தொட வாழ்த்துக்கள்
நன்றாக செல்கிறது வாரம் ஒரு பதிவர் தொடர்
*// கவிதைக்கும் இவருக்கும் ஆகாது. "கவிதையா? என்டெர் தட்டி, என்டெர் தட்டி எழுதுறது தானே?" என்பார் கிண்டலாய். இவர் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான பெரும் சத்தம் எழுப்பும் பெயர் கொண்டவர், " அவருக்கு கவிதை வராதுங்க. அதான் இப்படி சொல்றார்" என்கிறார்.. (ஏதோ நம்மால முடிஞ்சது). //............இன்னும் சிரித்து கொண்டு இருக்குறேன்........
ReplyDeleteவாழ்த்துக்கள் ...
ReplyDeleteசின்ன அம்மணி, வெங்கட் வரதராஜலு, சித்ரா மேடம், மகா அனைவருக்கும் நன்றிகள் பல
ReplyDelete//சினிமா இயக்க வேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் கனவு. நான்கு கதைகள் கை வசம் வைத்துள்ளார். நல்ல தயாரிப்பாளர் கிடைத்து விட்டால் ஸ்டார்ட் காமெரா என சொல்ல ஆரம்பித்து விடுவார்.//
ReplyDelete//பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜன் இவருக்கு சித்தப்பா முறை.//
ஏனுங்ணா... பிரமிட்டாரே இவரை டைரக்டரா போட்டுப் படம் தயாரிக்கலாமேங்ணா? சட்டுப்புட்டுனு செய்யச் சொல்லுங்க!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅகநாழிகை- புத்தக வெளியீட்டுவிழா--புகைப்படங்கள்.
ReplyDeletehttp://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_12.html
அரை சதம் கடந்தவருக்கு
ReplyDeleteகாலம் கடந்த வாழ்த்துக்கள்
அரை சதம் கடந்தவருக்கு
ReplyDeleteகாலம் கடந்த வாழ்த்துக்கள்
கேபிள் சங்கர்
ReplyDeleteஅது ஒரு எல்லாம் தெரிஞ்ச குழந்தை.
மனசு ஒரு குழந்தை மாதிரிங்க அவருக்கு. எனக்கு வலையுலகம் மூலமா கிடைச்ச அருமையான சொந்தம் அவரு. அருமையான தொகுப்பு, சிறப்பா எழுதியிருக்கிங்க.
வாழ்த்துக்கள்.