Friday, December 11, 2009

கனவு கன்னிகள்

மீசை முளைக்க ஆரம்பித்த காலம்.பெண்கள் மீது ஈர்ப்பு வந்த பொழுது.. அப்போ ஆரம்பிச்சுது இந்த " கனவு கன்னி" சமாசாரம்!! அப்போ முதல் இப்போ வரை இது ஒரு flash back.

மாஜி தலைவிகள்

நதியா

9 அல்லது 10-ஆவது படித்து கொண்டிருந்தேன். அப்போது பூவே பூச்சுடவா என்ற படம் வெளியாகி பட்டையை கிளப்பியது. ஹீரோ என்று யாரும் இல்லாமல் பத்மினி மற்றும் நதியா என்ற புது முகம் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழுக்கு பாசில் என்ற புது இயக்குனர்.



நதியாவின் குறும்பு, நடை, ஸ்டைல் எல்லாமே அசத்தியது. நான் பல முறை பார்த்த படங்களில் இது ஒன்று. அதற்கு பாசிலின் கதை மற்றும் இயக்கம் ஒரு முக்கிய காரணம் என்றால்.. ஹி ஹி நதியாவும் இன்னொரு காரணம்.

அப்போது நதியா டைப் Haristyle , உடை என எல்லாம் ரொம்ப famous-ஆனது.

இவர் எந்த நடிகருடனும் நெருக்கமாக நடிக்க மாட்டார். அன்புள்ள அப்பா படத்தில் சிவாஜியுடன் நடித்த போது, இவரை அதிகம் கட்டி பிடித்து நடித்த ஒரே நடிகர் சிவாஜி என ஒரு பத்திரிக்கை விமர்சனம் எழுதியது!!

எல்லாம் இருக்கட்டும். இத்தனை வருஷம் கழிச்சு வந்தாலும் M. குமரன், சண்டை போன்ற படங்களில் என்னமா அசத்துறார் சாமி. பார்க்க நாற்பத்தி சொச்ச வயசுன்னு சொல்ல முடியுமா? ம்....

ரேவதி



துடுக்கு தனமாக அல்லது அப்பாவியாக கொஞ்சி கொஞ்சி சொந்த குரலில் பேசி 80-களில் பலர் உள்ளத்தில் இடம் பிடித்தார் ரேவதி. ஒரு கைதியின் டைரி, புன்னகை மன்னன் போன்ற படங்களில் இவரது நடிப்பு ரசிக்கும் படி இருந்தது. ஏனோ எனக்கு அவரது second innings -அவ்வளவு திருப்தி கரமாக இல்லை.

குஷ்பூ

தமிழகமே இவரை கொண்டாடிய நேரம் அது. 90-களின் துவக்கம். ரஜினி, கமல், விஜய காந்த், சத்ய ராஜ் என ஹீரோ யாராக இருந்தாலும் ஹீரோயின் மட்டும் குஷ்பூவாக இருப்பார்.



குறிப்பிட்டு சொல்லும் படி features இல்லா விடினும் ஏதோ ஒரு attraction இருந்தது அவர் மேல். அவரது நடிப்பில் (சாரி அழகில்) அசத்திய படம் வருஷம் 16.


மீரா ஜாஸ்மின்



ரன் படம் பார்த்து கொஞ்ச நாள் ரசித்து கொண்டிருந்தேன். மூக்கும் முழியுமா லட்சணமா இருப்பார். திடிரென குண்டாகி விடுவார். பின் இளைப்பார். சண்ட கோழியிலும் அசதி இருந்தார் அழகிலும் குறும்பிலும்.

ஸ்நேகா



அழகு, நடிப்பு எல்லாம் இருந்தும் கிடைக்க வேண்டிய அளவு recognition-கிடைக்காதவர். தமிழகத்தை சேர்ந்த ஒரு அழகிய நடிகை. முகமும் சிரிப்பும்.. வாவ் !!

அசின்:

நல்ல அழகு; நடிப்பு; சொந்த குரலில் எந்த மொழியானாலும் பேசும் உறுதி. ஹிந்தியில் சென்று அங்குள்ள politics-லும் கலக்கி கொண்டிருக்கிறார்.



எனக்கு ரொம்ப பிடித்தது கஜினி (தமிழ்) தான். காமெடிக்கு ஹீரோயின் மட்டுமே முழு பொறுப்பு ஏற்று அசத்தலாய் செய்தது இந்த படம் தான் என நினைக்கிறேன்.

தற்போதைய தலைவிகள்:

கேட்ரினா கைப்:

இந்த அழகு தேவதையை பற்றி என்னான்னு சொல்ல? ஆங்கிலோ இந்தியன் பியூட்டி.



இவர் உள்ள stills பார்த்தால் நகரவே மனசு வர மாட்டேங்குது. சல்மான் கான் பேஸ்து அடிச்சா மாதிரி அலைஞ்சார்ணா சும்மாவா?

தமன்னா

கல்லூரியில் பார்த்து மயங்கியது. அயனில் தலைவி என உறுதி செய்ய பட்டது. சமீபத்தில் குமுதம் அரசு பதில்களில் ஒரு கேள்வி: "தமன்னாவிடம் அப்படி என்ன இருக்கு எல்லோரையும் கவர?" என்று. அதற்கு அரசு சொன்ன பதில் இருக்கட்டும். நானாக இருந்தால் " தமன்னாவிடம் அப்படி என்ன இல்லை.. யாருக்கும் பிடிக்காமல் போக?" என கேட்பேன்.



சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் பல பெண்களுடன் வருவார் பாருங்கள். (அநேகமாய் மற்ற அனைவருமே ஹீரோயின்கள் தான்) வேறு யாரையாவது பார்க்க தோன்றுகிறதா? அதிலும் எப்போதும் விளம்பரத்தில் மையமாக இவரே இருப்பார்.. பாருங்கள்.

இன்னும் சில வருஷம் தமிழில் கோலோச்சுவார் என உறுதியாக நம்புகிறேன்.

************
தலைவிகள் மாறுவது மிக இயல்பாய் நடக்கும் ஒன்று. ஒரு நேரத்தில் ஒரே தலைவியும் இருக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்டும் இருக்கலாம். இப்படியாக வாழ்க்கை போயிட்டு இருக்கு.

கனவு கன்னிகள் பிடிச்சிருந்தா தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்க பாஸ்!!

20 comments:

  1. தானைத்தலைவி நமீதாவிற்கு பட்டியலில் இடம் கொடாத உங்களுக்கு எனது கண்டனங்கள்....

    ReplyDelete
  2. நதியா,குஷ்பூ,அசின்,...........ம்ம்ம்ம் ஏன்தான் இந்த பதிவர் எல்லாம்,சும்மா இருகிறவங்கள இப்படி உசுபேத்தி விடுறாங்களோ .....

    ReplyDelete
  3. என்ன நண்பா உங்க கனவு கன்னிங்க எண்ணிக்கை ரொம்ப கம்மியா இருக்கு...........

    ReplyDelete
  4. அந்தக் காலத்து கனவுக் கன்னி அம்பிகா பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? (ஹிஹி.....என் கனவுக் கன்னி லிஸ்ட்ல அவங்களும் உண்டு. - செகண்ட் இன்னிங்க்ஸ் அம்பிகா ஒட்டவில்லை என்பதும் உண்மை)

    ReplyDelete
  5. //தமிழகமே இவரை கொண்டாடிய நேரம் அது. 90-களின் துவக்கம். ரஜினி, கமல், விஜய காந்த், சத்ய ராஜ் என ஹீரோ யாராக இருந்தாலும் ஹீரோயின் மட்டும் குஷ்பூவாக இருப்பார்.//

    கோயில் கட்டினத மறந்திட்டீங்களே....

    ReplyDelete
  6. கேத்ரினா கைஃப் - நானும் உங்களை வழிமொழிகிறேன் (வழிகிறேன் என்றும் எடுத்துக்கொள்ளுங்கள் ஹீ ஹீ )

    ReplyDelete
  7. டவுசர் பாண்டி : (உங்க பேர் superங்கோ) : Tastes always differ. என்ன செய்ய?

    Kasbaby: ஏதோ நம்மால் ஆன சமூக சேவை

    சங்கவி: ஆமாங்கோ. அன்றைய மாதுரி தீட்சிட் முதல் இன்றைய பாவனா வரை கொஞ்சம் பேர் விடு பட்டு தான் போய்ட்டாங்க

    பெயர் சொல்ல: நம்ம பள்ளி காலத்தில் அம்பிகா கனவு கன்னிதான்

    பாலாசி: வாங்க.கோயில் கட்டியது எல்லாருக்கும் தெரியுமேன்னு சொள்ளலீங்கன்னா

    வரதராஜலு சார்: வாங்க. நம்ம கத்ரினா உங்களுக்கும் பிடிக்குமா? Same pinch:))

    ReplyDelete
  8. அப்படியே என் டேஸ்ட் உங்களுக்கு!

    ReplyDelete
  9. heroines pathi matum than eluthuvingala heroes pathila eutha matingala?

    ReplyDelete
  10. //(அநேகமாய் மற்ற அனைவருமே ஹீரோயின்கள் தான்) வேறு யாரையாவது பார்க்க தோன்றுகிறதா? //

    ரொம்ப டீப்பா வாட்ச் பண்றீங்க போல...
    நடக்கட்டும் நடக்கட்டும் ....

    ReplyDelete
  11. ஜொள்ளு விடுறதை ஒரு பெரிய அளவில் உக்கார்ந்து கதை மாதிரி சொல்றீங்க...... சார், சார், இங்க பேசிக்கிட்டு இருக்கொமுல. அதுக்குள்ள தூங்கியாச்சா......இப்படி, தமனாவை பத்தி கனவு கண்டு கொண்டு......... சரி, என்ஜாய்...........

    ReplyDelete
  12. வால் பையன்.. அப்படிங்களா? ரொம்ப சந்தோசம். அடிக்கடி நம்ம பக்கமும் வாங்க.

    Angel : நாங்க பாய்ஸ் - Girls பத்தி எழுதுறோம். ஹீரோஸ் பத்தி நீங்க (Girls) தான் எழுதணும்

    ஜெட் லி: என்னமோ நான் மட்டும் அப்படி பாக்கிற மாதிரியும், நீங்க அப்படி பாக்காத மாதிரியும் கேக்குறீங்க?? பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா

    வாங்க சித்ரா மேடம். உங்க டைமுக்கு பேசுனதால் தூங்கி இருக்கலாம். ஜொள்ளு விடுறதை கதை மாறி பேசுறோமா? ஆண்களுக்கு இதானுங்க முக்கிய வேலை.

    ReplyDelete
  13. நீங்க சொன்ன ஆளுங்க எல்லாம் சரிதான். இது போக இன்னமும் நம்ம லிஸ்ட் பெருசு தல... :-)

    ReplyDelete
  14. லிஸ்டு எல்லாம் வேலைக்காவாது நமக்கு.. நேத்து வந்த பொண்ணுங்க வரைக்கும்..ம் ஹும்..

    ReplyDelete
  15. /செகண்ட் இன்னிங்க்ஸ் அம்பிகா ஒட்டவில்லை //

    பெயர் சொல்லாதவரே.. இதெல்லாம் ஞாயமா.. செகண்ட் இன்னிங்ஸ் அம்பிகா ஒரு டரியல் குண்டு.

    ReplyDelete
  16. ரோச்விக் நன்றி.. நமக்கும் கூட மிஸ் ஆன ஆட்கள் உண்டு. எங்கே இதுக்கே US-லிருந்து சித்ரா மேடம் "என்னாப்பா ஜொள்ளு அதிகம்" கிறாங்க.

    கேபில்ஜி: நன்றி. நீங்க யூத்து.. அப்படி தான் இருப்பீங்க.

    ReplyDelete
  17. Anonymous11:17:00 AM

    ஸ்கூல் படிக்கும்போது எல்லாம் நதியா பொட்டு, நதியா வளையல் நதியா கம்மல் நதியா பைத்தியமா இல்ல இருந்தோம்.

    ReplyDelete
  18. Anonymous11:16:00 AM

    i like shalani but neenga avangala vaikala ... athuthavadi avangalaiyum vaiga .........

    ReplyDelete
  19. சின்ன அம்மணி ஆமாங்க; நீங்க சொல்றது சரி தான்

    ஆமாங்க திவ்யா அட.. எப்படிங்க மறந்தேன்? நிஜமாவே ஷாலினி எனது கனவு கன்னி..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...