Thursday, December 3, 2009

வாரம் ஒரு பதிவர்: இந்த வாரம் - விக்னேஷ்வரி




தென் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் பிறந்து இன்று தில்லியையும் வலை உலகையும் கலக்கி கொண்டிருக்கிறார் விக்னேஷ்வரி. அவரை பற்றி....

விகடன் மட்டும் தான் 25 பாயின்ட்டா எழுதணுமா.... நாங்களும் எழுதுவோம்ல :)

பிறந்த ஊர் - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே ஒரு கிராமம். பெயர் குன்னூர். ஆனால் வளர்ந்ததெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.

டிப்பு - ஃபேஷன் டிசைனில் இளங்கலை. Home Textile Management முதுகலை. இன்னும் படிப்புத் தேடல் குறையாமல் அடுத்து என்ன படிக்கலாம் என ஆராய்ந்து கொண்டிருக்கிறார். கூடிய சீக்கிரமே மீண்டும் மாணவராகும் வாய்ப்பு உள்ளது.

தொழில் - மென் பொருள் நிறுவனத்தில் வேலை. ERP Project Consultant. சீக்கிரமே துறை சார்ந்த தொழில் தொடங்க ஆவல் உண்டாம்.

பெயர் காரணம் : அம்மா, அப்பாவிற்கு 11 வருடங்கள் குழந்தையில்லாமல்
இருந்து, பிள்ளையாரிடம் வேண்டிபிறந்ததால் விக்னேஷ்வரனின் பெயரிலிருந்து 'விக்னேஷ்வரி' வந்தது. அழைக்கப்படும் பிற பெயர்கள் : தன்வி மற்றும் விக்கி

ற்சமயம் மட்டுமல்லாது நிரந்தர டில்லி வாசம். தெரிஞ்ச பதிவர்கள் யாராவது டில்லி போனால், தங்க ஒரு இடம் ரெடி.

டன் பணி புரியும் யோகேஷுடன் 2008-ல் காதல் திருமணம். கணவர் பஞ்சாபை சேர்ந்தவர். எனவே வரலட்சுமி விரதத்தை கை விட்டு கரவா சோத் கொண்டாட ஆரம்பித்து விட்டார். கணவர் பற்றியகவிதை என் கண் அவன் - என் கணவன் இவர்களின் அன்பையும், காதலையும் காட்டுகிறது

வரது திருமணம் எப்படி நடந்தது என்பது இவருக்கே தெரியாதாம்.(எந்த உலகத்தில் இருந்தீங்க மேடம்?) திருமண நேரங்களில் திரு திருவென முழித்துக் கொண்டிருந்தாராம். திருமணம் பஞ்சாபிய முறை படி மூன்று நாள் நடந்ததை சுவராஸ்யமாக திருமண நிகழ்வு - பதிவு செய்துள்ளார்.தமிழில் தனது திருமணம் பற்றி ஒரு பெண் எழுதிய விரிவான பதிவு இது.

வரின் பிடித்தமான பொழுதுபோக்கு இவரது கணவருக்கு தமிழ் கற்றுத் தருவது தானாம். தனது பதிவுகளில் காதல் கணவன் யோகி தமிழ் கற்று வரும் அனுபவங்களை " யோகி டைம்ஸ்" என காமெடி ஆகஎழுதி வருகிறார்.
யோகி தற்போது தமிழ் நாட்டிலிருந்து யாராவது தொலைபேசினால், "வணக்கம், நல்லாஇருக்கீங்களா?" என அன்பாக கேட்கிறாராம் !!

ள்ளி காலத்தில் சிறந்த பேச்சாளராய் இருந்திருக்கிறார். பள்ளியின் அனைத்து விழா, நிகழ்ச்சிகளிலும் இவர் குரல் ஒலித்திருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்தும் வழங்கியிருக்கிறார். அப்போது எழுதிய அனுபவம் மிகக் குறைவாம். ஆனால் பெயிண்டிங், ஓவியம், கைவேலைப்பாடுகள் என ஆல் ரவுண்டர் ஆக இருந்திருக்கிறார் .
ண்பர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் அக்கறை அதிகம். பழைய பள்ளி நண்பனை சந்தித்த போது எவ்வளவோ பேச நினைக்க எதுவும் பேசாமல் வந்த நினைவை அழகாய் பதிவு செய்துள்ளார் "தொலைத்த நாட்கள்" என. அவரது பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவு அது

ழுத ஆரம்பித்த குறுகிய காலத்தில் 110 followers. (எப்புடிங்க அது? எங்களுக்கெல்லாம் சொல்லி குடுங்க )

ன் வாசிப்பிற்குக் காரணமே அம்மா தான் என்கிறார். அம்மாவின் கவிதைகள் சில வாரப் பத்திரிக்கைகளிலும் வந்துள்ளதாம். இப்போது அவர் அம்மா எழுதுவதில்லை. ஆனால், எழுத்து குறித்தும், புத்தகங்கள் குறித்தும் இருவரும்நிறைய பேசுவார்களாம். " அம்மாவின் எழுத்தை அபகரிக்க முடியவில்லை" என்கிறார் ஏக்கமாய்.

திருமணத்திற்கு பின் பெண்கள் தம் தோழிகளுடன் பேசும் போது ஏற்படும்
வலியை அவரது வார்த்தைகளில் கேளுங்கள்:
".................இப்போதும் எப்போதாவது தொலை பேச நேர்ந்தாலோ, நேரில் சந்தித்தாலோ அதே அன்பு மாறாமல்,எங்கள் கதை பேச நேரங்கள் போதவில்லை. "அவர் வந்திடுவாரு நான் கிளம்பறேன்", "குழந்தை எழுந்திருச்சிருப்பா","மாமியாரை கோவிலுக்குக் கூட்டிட்டுப் போகணும்" என்று ஏதோ ஒரு பொறுப்பு நினைவிற்கு வர சொல்லா நட்பின் இதத்தை ஒரு கட்டியணைத்தலில் பரிமாறி விடை பெறுகிறோம்".

காதல் பிரிவின் வலி பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் எழுதி உள்ளார். பின்னூட்டங்களிலேயே அந்த நேர்மையான பதிவு எத்தனை பேரை எந்த அளவு பாதித்திருக்கிறது என உணர முடிகிறது

ம்மையாருக்கு இன்ஜினியரிங் படிப்பில் துளியும் விருப்பமில்லாமல் அம்மாவுடன் சண்டை போட்டு தப்பித்தாராம். இதில் அப்பாவின் சப்போர்ட் இருந்ததால் வெற்றி கிடைத்தது. சட்டம் படிக்கணும் என்ற ஆவலும் இருந்ததாம் (ஏனுங்க எனக்கு போட்டியா?)

மாமியார், நாத்தனார் என எல்லோரும் பாசமழை பொழிகிறார்களாம்!! இது பற்றியே ஒரு தனி பதிவு !! இது இவர் அவர்கள் மீது கொள்ளும் அன்பின் பிரதிபலிப்பே.

மைப்பதில் ஆர்வம் அதிகம். சாப்பிடுவதிலும் தான். தெற்கும் வடக்கும் திருமணம் செய்தாலும், வீட்டில், தமிழ் நாடு, ஆந்திரா, பஞ்சாபி, ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி, தில்லி என தினம் ஒரு விதசமையலை முயற்சி செய்து (!!!) பார்க்கிறார். (யோகி கல்யாணத்திற்கு பிறகு எடை கூடினாரா குறைந்தாரா என்றுகேட்டால், சமையல் எப்படி என்று அறியலாம். யோகி நம்பர் ப்ளீஸ். )

திவுலகில் ஏகப்பட்ட நண்பர்கள். எல்லோர் எழுதுவதையும்படித்து சின்சியர்
சிகாமணியாக comment-போடுவார்.
ழுத்திலும் பேச்சிலும் ஒரு சிநேகம் தெரிகிறது. கூடவே கிண்டலும் பெரும்பாலான பதிவுகளில் தெரிகிறது. Hit counter-க்கு "இதுக்கு சூடு வைக்க முடியலையே!!!" என தலைப்பு வைக்கிறார். Followers -க்கு தலைப்பு " நம்மளையுமா?"

ண்களுக்கு சப்போர்ட் செய்யும் பெண்ணிவர். தவறு பெண்களிடம், குற்றம் ஆண்கள் மீதா... தலைப்பே இதன் கரு சொல்லும். ஆண்கள் படித்து மகிழவேண்டிய பதிவு

விதைகள் எழுத பழுகுகிறார் (கோபிக்காதீங்க விக்கி) . அவர் கவிதைகளில்
என்னை கவர்ந்தது தைரியமான எழுத்து...
வருக்குப் பிடிக்காதவர்கள், கெட்டவர்கள் என்று எவரும் இல்லை. "ஒருவரின் சில செயல்கள் அல்லது எண்ணங்கள் தவறாக இருக்கலாம். ஆனால், அதற்காக அந்த மனிதரே தவறென சொல்வதை என்னால் ஏற்க முடியாது" என்கிறார்.
Blog உலகம்பற்றி அவரிடம் நான் கேட்ட போது அவரது பதில் :

"சாதாரண உலகம் போலவே நல்லவர்கள், கெட்டவர்கள், நண்பர்கள், கயவர்கள் என அனைவரும் கலந்து இயங்கும் உலகம். ஆனால் இவையனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் வரை யாருக்கும் பிரச்சனையில்லை.

கற்றது பெற்றதும் மிக அதிகம். முதலில் பெற்றது என் தாய் மொழியை என்னுடனே வைத்திருக்கும் பாக்கியம். ஒரு பஞ்சாபியை மணந்து தலைநகரில் வாழப் போகிறோம் எனும் போது தமிழை இழக்கும் பயம் அதிகம் இருந்தது. ஆனால், இந்தப் பதிவுலகம் தான் என்னை என் மொழியுடன் இணைத்து வைத்திருக்கிறது. தவிர நிறைய நண்பர்கள், நிறைய விஷயங்கள், வித்தியாசமான மொழி நடைகள், சுவாரசியமான புது வார்த்தைகள், நண்பர்களின் ஆரோக்கியமான, நேர்மையான விமர்சனங்கள் என இங்கிருந்து கற்றவை பல. இன்னும் கற்றுக் கொண்டேயிருக்கிறேன்."
வரைப் பற்றி அவரது நண்பர் செல்வேந்திரனின் கருத்து.

விக்னேஷ்வரி என்றதும் நினைவில் ஆடுவது அவளது நிபந்தனையற்ற தூய பேரன்பு மட்டுமே. சூடிக்கொடுத்தசுடர்க்கொடி ஆண்டாள் நடைபழகிய அக்கிஹாரத்தில் பிறந்த பெண் இன்றைக்கு காதலின் அன்புக் கற்றையினால் சுற்றப்பட்டு முழு பஞ்சாபிப் பெண்ணாக மாறி லோஹ்ரி பண்டிகைக்கு பலகாரம் சுட்டுக்கொண்டிருக்கிறாள். நல்ல கவிஞராகும் துடிப்பும், ஆர்வமும் அவளிடத்தில் எப்போதும் உண்டு. தொடர்ந்த உழைப்பின் மூலம் ஒரு நாள் நல்ல கவிதாயிணியாக அவள் வருவாள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

டிஸ்கி 1 :
பெண் பதிவர்கள் உங்கள் அனுமதி இன்றி உங்களை பற்றி எழுதுவேனோ என்ற பயம் கொள்ள தேவை இல்லை. பெண்கள் பற்றி எழுதும் போது அறிவிப்பிற்கு முன்பும், பிரசுரிக்கும் முன்பும் தங்கள் அனுமதி பெற்ற பின்பே வெளியிடுவேன் என்பதை கவனத்தில் கொள்க.

டிஸ்கி 2:
ஒரு வழியாய் followers எண்ணிக்கை ஐம்பதை தொட்டு விட்டது. ஒரு மாதம் முன்பு வரை அது 12 -ஆகவே இருந்தது. தமிழ் மணம் மற்றும் தமிழிஷில் இணைந்த பிறகே எண்ணிக்கை கூடியது. அந்த 50 நண்பர்களுக்கும் நன்றிங்கோ !!

அடுத்த வாரம் : சென்னையின் eternal youth : கேபிள் சங்கர்

24 comments:

  1. Anonymous1:21:00 PM

    விக்னேஷ்வரி எனக்கும் பிடித்த பதிவர். விக்னேஷ்வரிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்கள் பதிவு எனக்கு விக்னேஷ்வரியை அறிமுகப்படுத்துகிறது. நன்றி நண்பரே! அருமையாக இருகிறது இந்த வாரம் ஒரு பதிவர்.

    டிஸ்கி 1, நிச்சயம் இது அவசியமான ஒன்று..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. என்ன சொல்ல,.....ஆங்......பதிவு நல்லா இருக்கு. சக பதிவரை அறிமுகம் செய்யும் உன் சேவை மனப்பான்மைக்கு என் வாழ்த்துகள், நண்பா!

    விக்னேஸ்வரியின் கணவர் பஞ்சாபியா....."அபியும் நானும்" திரைப்படம் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  4. நன்றி சின்ன அம்மிணி பற்றி எழுதியதால் குஷி ஆகிருப்பீங்க.

    வாங்க . முதல் முறை வந்திருக்கீங்க. உங்க பார்த்தேன். நல்லா எழுதுறீங்க.

    நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை. அட.. அபியும் நானும் மேட்டர் எனக்கு நினைவே வரலை பாரேன்

    ReplyDelete
  5. //நன்றி சின்ன அம்மிணி Friend பற்றி எழுதியதால் குஷி ஆகிருப்பீங்க//.

    போன -ல் "Friend" miss ஆகிடுச்சு

    ReplyDelete
  6. விக்னேஷ்-இன் நேர்மையான,எழுத்தின் பெரிய ரசிகன் நான்.எழுத்தும் வாழ்வும் வேறு வேறு அல்ல என்பதை உணர தரும் மற்றொரு அற்புதமான மனுஷி!வாழ்த்துக்கள் விக்னேஷ்!

    நண்பர்களை, எழுதுவதன் மூலமாக உங்களை நீங்கள் எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள் மோகன்!தீரா அன்பு உங்களுக்கும் மக்கா!

    ReplyDelete
  7. good post...
    //....."அபியும் நானும்" திரைப்படம் நினைவுக்கு வருகிறது.//


    ini 2 states book kooda niyabagam varanume

    ReplyDelete
  8. குன்றின் மீதேறி காதலை உரக்கச் சொல்லும் குரல் .தனதே ஆன வாழ்வை தேர்ந்து வாழும் தீரம் . கல்வி காதல் வாழ்வு என அனைத்தையும் சுயம் சார்ந்த தேடலுடன் அணுகும் பெண் மீதான பார்வை .

    விக்கினேஷ்வரிக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. அன்பின் மோகன் குமார்

    அருமையான அறிமுகம் - அத்தனை சுட்டிகளையும் சுட்டிச் சென்று படித்து ரசித்து மறுமொழியும் இட்டு விட்டேன்.

    நல்லதொரு சேவை வாழ்க

    செல்வேந்திரனின் அறிமுகமும் அருமை

    நல்வாழ்த்துகள் மோகன்

    ReplyDelete
  10. நன்றி பா. ரா இது எனக்கு மனிதர்களின் பல முகங்களை, நிறைய புது நண்பர்களை அறிமுகபடுதுகிறது. மகிழ்வாக உள்ளது.

    நன்றி ராஜ லக்ஷ்மி மேடம்

    கவிதையாய் comment சொன்ன நேச மித்திரன் நன்றி

    மகிழ்ச்சி சீனா

    ReplyDelete
  11. கொஞ்சம் புகழ்ச்சியாகவே இருந்தாலும், தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி மோகன். மேலும் பின்னூட்டத்தில் வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  12. விக்னேஷ்வரி பற்றி ரொம்ப interestinga சொல்லியிருக்கும் விதம் எனக்கு பிடித்து இருந்தது. அருமை.

    ReplyDelete
  13. விக்னெஷ்வரி பற்றி அருமையா சொன்ன உங்களைப்பாராட்டணும் அதிகம் வலைப்பூக்கள் பக்கம் செல்ல நேரமில்லாதஎன்போன்றோருக்கு தனிமடலில் நீஙக்ள் அளித்த தகவலின்படி இங்கே வந்தேன் பார்த்தேன் மகிழ்ந்தேன்!

    ReplyDelete
  14. மோகன் அண்ணனால் அறிமுகம் செய்யும் வாய்ப்பைப் பெற்ற விக்கி ரியலி லக்கி :)

    ReplyDelete
  15. விக்கி: நன்றி சொல்லி தப்பிச்சுக்க முடியுமா? பேசின படி 2 C அனுப்புங்க. :))(அதுக்கு மேலயே எழுதியாச்சில்ல)

    சித்ரா : பேரை கேட்டோன சும்மா அதிருதில்ல?? பின்னே ஏன் ஹவுஸ் பாஸ் பேர் ஆச்சே அது!! பாராட்டுக்கு நன்றிங்க மேடம் (உங்க பேர் சொல்ல எனக்கு தைரியம் இல்ல)

    ஷைலஜா: நன்றி.. பல சிறு கதை, நாவல் எழுதியவங்க நீங்க. Youth விகடனில் போட்ட comment-களுக்கும் நன்றி.

    புதுகையாரே.. வாங்க. இன்னிக்கு தான் வழி தெரிஞ்சுதா? அடிக்(கடி) வாங்க. நன்றி

    ReplyDelete
  16. திருமதி விக்னேஸ்வரி அவர்களைப் பற்றி மிக அழகாக எழுதி அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

    டெல்லி யில் ஒரு தோழி வீடு நமக்கு உண்டு என்பது எத்தனை மகிழ்வு?

    ReplyDelete
  17. நான் விக்னாவின் எழுத்துக்களுக்கு ரசிகனாயிட்டேன்.

    நீங்களும் அருமையா எழுதீருக்கீங்க தல விக்னா என்ற தன்வி-ஐப் பற்றி...வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. நன்றி நாளும் நலமே; தொடர்ந்து வந்து வாசிப்பதற்கும் , கருதிடுவதர்க்கும் நன்றி.

    ரோச்விக் நன்றி; விக்கி என்கிற சின்ன பெண்ணின் எழுத்து எத்தனை பேரை சென்று சேர்ந்துள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது.

    ReplyDelete
  19. அழகான பகிர்வுக்கு மிகவும் நன்றி மோகன்குமார்!

    ReplyDelete
  20. விக்னேஷ்வரியை முன்னமே படித்திருக்கிறேன். ஆனாலும் உங்கள் அறிமுகம் அருமை. வாழ்த்துக்கள் மோகன் குமார்

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  21. vikki -> simple and casual
    and that's great

    ReplyDelete
  22. தாங்களின் இப்பணி சூப்பர்.. அழகிய நடை எழுத்தில். வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களால் வாழ்த்தப்பட்ட விக்னேஷ்வரிக்கும்..

    ReplyDelete
  23. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க மோகன்குமார்.

    விக்னேஷ்வரி இன்னும் எழுத்துலகில் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. சிறப்பாக எழுதி இருக்கீங்க . வாழ்த்துக்கள் !

    விக்னேஷ்வரி எனக்கும் பிடித்த பதிவர். விக்னேஷ்வரிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...