வீடு திரும்பலுக்கு விருது!! கேக்கவே ரைமிங்கா நல்லா இருக்குல்ல?
முதல் முறையா நம்மளை மதிச்சு விருது குடுத்திருக்கார் குறும்பன்.
என்ன விஷேஷம்னா அவர் இத்தனை நாளா நம்ம ப்ளாகுக்கு சைலண்டா வந்து போயிருக்கார். ..கமெண்ட் கூட போடாம. இப்ப தான் ஒன்னு ரெண்டு கமெண்ட் போட்டார். அவர் ப்ளாகில் இப்படி எழுதி இருக்கார்:
"மோகன் - கொஞ்ச நாளா இவரோட பதிவுகளை ஒரு சைலண்ட் ரீடராகத்தான் படிச்சிட்டு வந்தேன். இப்போதான் பின்னூட்ட ஆரம்பிச்சிருக்கேன். இவரோட எளிமையான நடை ரொம்பவும் அருமையா இருக்கும். பதிவுலகத்துல நீங்க எனக்கு சீனியர்தான், இருந்தாலும் பரவால்லைன்னு (விஜய் கையால சிறந்த நடிகர் விருதை கமல் வாங்கின மாதிரி) கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வாங்கிக்கோங்க சார்."
நன்றி குறும்பன். தங்கள் அன்புக்கும் விருதுக்கும். இது வலை உலகில் முதல் அங்கீகாரம் என்பதாலும், தங்கள் அன்பிலும் மகிழ்கிறேன்.
நான் விருது தர விரும்புபவர்கள்:
அதி பிரதாபன் : சின்ன வயசு; பய புள்ளைக்கு அதுக்குள்ள கல்யாண ஆச வந்துடுச்சு. நமக்கு technical consultant. நல்லா கதை எழுதுறார். உலக சினிமா மேல் நிறைய ஆர்வம். (விருதெல்லாம் குடுத்தாச்சு; இனி மேலாவது போன் பண்ணா எடுக்கணும்; சொல்லி புட்டேன்)
வரதராஜலு : எப்போதாவது தான் பதிவிடுகிறார். அவரே தன்னை " ஒரு காமன் மேன்தான்" என்கிறார். பலரின் பதிவுகளை படித்து பின்னூட்டம் இடுகிறார். சார் உங்க மாதிரி உசுப்பேத்துற நண்பர்களால் தான் என்னை மாதிரி ஆட்கள் தொடர்ந்து எழுதுறோம். தொடருங்க சார்.
சீனா : மூத்த பதிவர். மதுரையை சேர்ந்தவர்.
வடலூரான்: செம கிண்டலா எழுதுறார்.
சங்கவி: - Health consciousஆ சில நல்ல பதிவு செய்துள்ளார்
*******
இன்னும் பலருக்கும் குடுக்க நினைக்கிறேன். பலர் ஏற்கனவே வாங்கிட்டாங்க.. இவர்கள் மற்றவர்களுக்கு குடுக்கட்டுமே என எண்ணி எஸ்ஸாகிரேன்.
*******
கடந்த ஒரு வாரத்தில் வியாழன் தொடங்கி இன்று புதன் வரை தினம் ஒரு பதிவு போட்டுள்ளேன். ப்ளாக் ஆரம்பித்து இவ்வாறு நிகழ்வது முதல் முறை.
பதிவு எத்தனை நாளுக்கு ஒரு முறை போடலாம்? தினம் போட்டால் 3 நாட்கள் முன் போட்ட பதிவு யாரும் படிக்காமல் போகவும் வாய்ப்பு உண்டல்லாவா? (தினம் பதிவு போட விஷயம் & நேரம் இருக்குமா என்பது ஒரு தனி கேள்வி) எனக்கென்னவோ 2 நாளைக்கு ஒரு பதிவு போட முயலாலாம்னு தோணுது. உங்க மேலான அறிவுரையை பின்னூட்டத்தில் சொல்லுங்க.
*******
புத்தாண்டுக்காக சிறப்பு பதிவுகள் கேபிள், அப்துல்லா, விக்னேஸ்வரி, அதி ப்ராதபன் போன்ற பலரிடம் discuss செய்து தயாராகுது.. விரைவில் a series of பதிவுகள்... புத்தாண்டு ஸ்பெஷல்.. எதிர் பாருங்கள்..
*******
வாரா வாரம் எழுதும் மேட்டருக்கு . நான் நினைக்கும் தலைப்பு " வானவில்" ; கலவையான விஷயங்கள் எழுத போவதாலும், தலைப்பு சாப்பாடு மேட்டர் தவிர்த்து யோசிப்பதாலும் இதனை consider செய்கிறேன். இன்னும் இறுதி முடிவாகலை. இது பற்றியும் .. உங்க கிட்டேருந்து இன்னும் நிறையா எதிர் பார்க்கிறேன்...
//புத்தாண்டுக்காக சிறப்பு பதிவுகள் கேபிள், அப்துல்லா, விக்னேஸ்வரி, அதி ப்ராதபன் போன்ற பலரிடம் discuss செய்து //
ReplyDeleteநம்பளயும் மதிச்சு...
கண்ணுல ஜலம் வைக்குதுண்ணா
:)
விருதுவாங்கிய உங்களுக்கும் வாங்கியவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவானவில் ரொம்ப அழகான தலைப்பு தொடருங்கள்...!
விருது பெற்றமைக்கு என் வாழ்த்துகள்! (நீ கலக்கு சித்தப்பு!)
ReplyDelete//வாரா வாரம் எழுதும் மேட்டருக்கு . நான் நினைக்கும் தலைப்பு " வானவில்"//
"வானவில்"லின் வர்ண ஜாலங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
//Blogger எம்.எம்.அப்துல்லா said...
ReplyDelete//புத்தாண்டுக்காக சிறப்பு பதிவுகள் கேபிள், அப்துல்லா, விக்னேஸ்வரி, அதி ப்ராதபன் போன்ற பலரிடம் discuss செய்து //
நம்பளயும் மதிச்சு...
கண்ணுல ஜலம் வைக்குதுண்ணா
:)//
அப்துல்லா அண்ணே, எல்லாரையும் அண்ணேன்னு கூப்பிடணும்னு கண்டிஷன் போட்டாச்சா மோகன்குமாருக்கு :)
அன்பின் மோகன்
ReplyDeleteநட்பிற்கு நன்றி விருதுக்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நண்பர் மோகனுக்கு நன்றி......
ReplyDeleteஎனக்கு ஆச்சர்யமாக இருக்கு......
என்னையும் ஒரு வலைப்பதிவாளராக ஏற்று எனக்கு
விருது கொடுத்தமைக்கு..... நன்றி நன்றி...........
விருதுக்கு வாழ்த்துக்கள், வானவில் சிறக்கவும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாரத்துக்கு ரெண்டு அல்லது மூணு போடுங்க தலைவரே...
ReplyDeleteநாங்களும் கம்மி
பண்ண ட்ரை பண்றோம்
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனக்கு(மா) விருது. ரொம்ம நன்றி மோகன் சார். நானும் வாரம் ஒரு பதிவாவது போடவேண்டும் என்று நினைக்கிறேன். ஆஃபிஸ்ல ஆணி ரொம்பப அதிகமாக இருக்கிறது. அது எனது பதிவிடுதலை ரொம்பவே பாதிக்கிறது. :(
//பலரின் பதிவுகளை படித்து பின்னூட்டம் இடுகிறார். சார் உங்க மாதிரி உசுப்பேத்துற நண்பர்களால் தான் என்னை மாதிரி ஆட்கள் தொடர்ந்து எழுதுறோம். தொடருங்க சார்.//
:-))
வானவில் - சரியான சாய்ஸ்தான். விரைவில் எதிர்பார்க்கிறேன்.
இரண்டு விருதுகள் உங்களுக்கு கிடைத்தற்கு எனது வாழ்த்துக்கள் மோகன். மேலும் பல பதிவுகள் எழுத உங்களுக்கு இவை தூண்டுகோலாக இருக்கட்டும்.
ReplyDeleteவெங்கட் நாகராஜ்
புது தில்லி
விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கு எல்லா suggestions உம் மெயிலில் தரேன்.
இதோ வருது, விருதுக்கான என் வாழ்த்து!
ReplyDeleteவிருதுக்கு நன்றி.
ReplyDelete(யாராவது) கலவைத் தலைப்பு வைக்கிறதுக்கு முன்னாடி என்னோட இந்த ரெண்டு பதிவையும் பாத்துடுங்க... கொஞ்சம் உபயோகமா இருக்கும்...
http://www.yetho.com/2009/10/20091012.html
http://www.yetho.com/2009/10/blog-post_21.html
அப்துல்லா: என்னா ஸ்பீடு. பதிவு போட்டு வெளியே வரத்துக்குள் comment போட்டீங்க. Danks.
ReplyDeleteநன்றி வசந்த் (போட்டோ - சட்டையில் அந்த மேல் பட்டன்களை கொஞ்சம் போடுறது:))))
பெயர் சொல்ல விருப்பமில்லை...நான் உனக்கு சித்தப்புவா? ரெண்டு பேரும் ஒரே class-னா கூட நீ ஒரு வருஷம் என்னை விட பெரியாவன்டா
சின்ன அம்மணி: நல்ல பிள்ளைய ஏன் கலாய்கிறீங்க? மெட்ராஸ் வந்தும் நல்ல பாஷை பேசுறாரேன்னு சந்தோஷ படுங்க.
ஜெட் லி said : //நாங்களும் கம்மி
ReplyDeleteபண்ண ட்ரை பண்றோம்// ஹா ஹா ரசித்தேன். உண்மை தான் . வாரம் 3 எழுதினாலே போதும்
Cable Sankar said...
//வானவில் சிறக்கவும் வாழ்த்துக்கள்//.
அப்ப தலைப்பு ok-ங்குறீங்க? நம்ம அதி ப்ராதபன் வேற ஏதோ சொல்றாரே? பேசுவோம்
சீனா சார் நன்றி
சங்கவி: நோ நோ கடமையிலே பாசத்துக்கு இடம் கொடுக்க கூடாது
வரதராஜலு சார் : ஆமாம் வாரம் ஒன்னாவது போட பாருங்க
விக்னேஷ்வரி said...
ReplyDelete//உங்களுக்கு எல்லா suggestions உம் மெயிலில் தரேன்.// ரைட்டு; நன்னி.
வி. நா. வெங்கடராமன். said...
//மேலும் பல பதிவுகள் எழுத உங்களுக்கு இவை தூண்டுகோலாக இருக்கட்டும்.//
அதான் பயமா இருக்கு Venkat.
ஜனா சார் நன்றி.
அதி ப்ராதாபன்: ஏம்பா புலியை கரைக்கிரே? இந்த பேரே இருந்துட்டு போகுது. கொத்து பரோட்டானே ஒரு பதிவு இருக்கு ஆனா தலையோட வாரந்திர பதிவு அதோட famous ஆகலையா? நம்ம மக்களுக்கு இந்த பேர் பிடிச்சிருக்கு இப்படியே ஓட்டுவோம்
நா சொல்றத சொல்லிப்புட்டேன்... சிந்தனைக்கா பஞ்சம். நானெல்லாம் ஒரு வாரத்துக்கு மேல எடுத்துக்கிட்டேன்... யூத்துகிட்ட கேளுங்க, அள்ளி வீசுவாரு.
ReplyDeleteவிருதுகளுக்கு வாழ்த்துக்கள் சார்:)
ReplyDelete//தலைப்பு சாப்பாடு மேட்டர் தவிர்த்து யோசிப்பதாலும்//
என்னாதிது, "பிரியாணி"ன்னு சஜஸ்ட் பண்ணதுக்கு என்னை இப்படி பப்ளிக்கா போட்டு தாக்கறீங்க!
நன்றி தலைவா...
ReplyDeleteஎன்னையும் மதிச்சு விருது குடுத்த உங்களுக்கு பெபபபபபரிய மனசு!!
வருது வருது விருது விருது.. இன்னும் மேல மேல போங்க.. அசத்துங்க..
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteAnna,simply super your mannai school get together.
ReplyDeleteவீடு திரும்பலுக்கு விருது - Very well deserved...
ReplyDelete