Tuesday, December 1, 2009

திருமண பதிவு கட்டாயம் - ஏன்?எப்படி?


தமிழக அரசு திருமணங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆர்டர் போட்டிருக்கிறது. பழைய திருமணமும் பதிவு செய்ய வேண்டுமா, பிற மதத்தவருக்கும் இது apply ஆகுமா என கேள்விகள் பலர் மனதில் இருக்கலாம். லாயர் ஆக இருந்து இது பற்றி கூட எழுதாட்டி எப்புடி என மனசாட்சி கேட்க (லாயர்க்கு மனசாட்சி உண்டான்னெல்லாம் கேக்க படாது) இந்த சட்டம் பற்றிய சிறு விபரம் இதோ:

எப்படி ??

1. இந்த சட்டம் நவம்பர் 24, 2009 முதல் திருமணம் செய்தவருக்கு மட்டுமே apply ஆகும். அதற்கு முன் திருமணம் செய்தவர்க்கு "Compulsory Registration " இல்லை. Optional registration தான். (சில வெளி நாடுகளுக்கு செல்லும் போது திருமண பதிவு சான்றிதழ் கேட்கிறார்கள். இது வரை பலர் அதற்காகவே marriage registration செய்து கொண்டிருந்தனர்).

2. திருமணம் முடிந்த 90 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். இதை தவற விட்டால் அடுத்த 60 நாட்களுக்குள் சிறு பெனால்டி உடன் பதிவு செய்யலாம்.

3. பதிவு செய்யும் போது ஒரு மெமோரண்டம் மற்றும் இதற்கான சில குறிப்பிட்ட forms fill செய்து, திருமணம் நடத்தி வைத்த ப்ரோஹிதர் மற்றும் இரு விட்ன்ஸ்கள் கையெழுத்துடன் ருபாய் நூறு ( 90 நாட்களுக்குள் என்றால்), அல்லது ருபாய் 150௦ (91 to 150௦ நாட்களுக்குள் என்றால்) சேர்த்து apply செய்ய வேண்டும். (ப்ரோஹிதர் மற்றும் Registration officers-க்கு எவ்வளவு தரனும் என்பதெல்லாம் அவரவர் விருப்பம். திறமை சார்ந்தது. அந்த கேள்வியை நான் Choice-ல் விடுகிறேன். )

4. இந்து முஸ்லிம் கிறித்துவர்கள் இவர்களுக்கு திருமண முறை மற்றும் திருமண சட்டங்கள் வெவ்வேறாக இருந்தாலும் பதிவு பொறுத்த வரை எல்லா மதத்திற்கும் இது பொருந்தும். Procedure-ம் ஒரே விதம் தான்.

5. திருமணம் பதிவு செய்யப்படாவிடில் " Penalty" உண்டு என்கிறது சட்டம். Registration certificate -ல் தவறான மாறுதல்கள் செய்தால் தான் " சிறை தண்டனை"

ஏன்?

சீமா Vs அஸ்வனி குமார் என்ற வழக்கில் 2006 -லேயே சுப்ரீம் கோர்ட் அனைத்து மாநிலங்களும் திருமணம் பதிவு செய்வதை கட்டாயமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறி விட்டது. அதன் படி பல மாநிலங்களிலும் தற்போது இந்த சட்டமும், நடை முறையும் வந்து கொண்டிருக்கிறது. நமக்கு அண்டை மாநிலமான பாண்டிசேரியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இது நடை முறையில் உள்ளது.

முக்கியமாக இந்த சட்டம் வருவதன் பின்னணி ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான இந்திய பெண்கள் திருமணம் என்ற பொய் சொல்லி ஆண்களால் ஏமாற்றப்பட்டு சில நேரம் குழந்தையுடன் நிற்கிறார்கள். இது போன்ற வழக்குகள் பல முறை நீதி மன்றங்களில் ஒலித்தததன் விளைவு தான் இந்த சட்டம்.

எந்த புது முயற்சிக்கும் இருக்கும் எதிர்ப்பு போல் இதற்கும் துவக்கத்தில் சில தயக்கம், எதிர்ப்பு இருக்கலாம். ஆனாலும் இது காலத்தின் கட்டாயம். பலரும் இது பணம் செய்ய அரசு செய்து தரும் ஒரு வழி என பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். ஆனால் முன்பே எழுதிய படி இது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். மாநில அரசுக்கு அதன் படி நடப்பதை தவிர வேறு வழி இல்லை.

சட்டத்தை நாம் பயன் படுத்த ஆரம்பிக்கும் போது சில பிரச்சனைகள் வரவே செய்யும். உதாரணமாக சில நேரம் திருமணம் நடந்த இடம் வேறு, நீங்கள் வசிக்கும் ஊர் வேறு என்றால் வெவ்வேறு Registrars -வேறு விதமான interpretation செய்து, மற்ற இடத்தில் தான் register செய்ய வேண்டுமென stand எடுக்க வாய்ப்பு உண்டு. இதெல்லாம் நாள் ஆக ஆக சரி ஆகி விடும்

இந்த புது சட்டம் மூலம் Registration office-ஆட்கள் சம்பாதிப்பார்கள் என்றாலும் அது ஒரு offshoot -தான். பிறப்பு - இறப்பு பதிவு செய்வது கட்டாயமானது போல் திருமணம் பதிவு செய்வதும் விரைவில் நமக்கு பழகி விடும்.

*********
புகைப்படம்: நன்றி: தின மலர்

இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்தால் தமிழ் மணம் மற்றும் தமிழிஷில் வாக்களியுங்கள்!!

17 comments:

  1. வெங்கட் நாகராஜ்3:06:00 PM

    எல்லோருக்கும் உபயோகப்படக்கூடிய பதிவு! இன்று தான் நாளிதழில் பார்த்தேன். உடனே உங்களது பதிவும் வந்து விட்டது. பாராட்டுக்கள்.

    வெங்கட் நாகராஜ்
    புது தில்லி

    ReplyDelete
  2. செய்தியை மட்டும் போடாம, அதன் சட்டபூர்வமான பின்னணியையும் உணர்த்தி, உங்கள் வக்கீல் தொழில் தர்மத்தை நிலைநாட்டி விட்டீர்கள். அசத்தலுக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. திரைப் படங்களில் பதிவு அலுவலரே திருமணம் செய்து வைப்பாரே?

    அப்பொழுதும் இத்தனை சான்றுகள் வேண்டுமா?

    காவல் நிலைய, சுய மரியாதை திருமணங்கள் பற்றி சற்று சொல்லுங்கள்.

    ReplyDelete
  4. திரைப் படங்களில் பதிவு அலுவலரே திருமணம் செய்து வைப்பாரே?

    அப்பொழுதும் இத்தனை சான்றுகள் வேண்டுமா?

    காவல் நிலைய, சுய மரியாதை திருமணங்கள் பற்றி சற்று சொல்லுங்கள்.

    ReplyDelete
  5. ரொம்ப நல்ல தகவல். உங்கள் நக்கலுடன் வாசிக்க நல்லா இருந்தது

    ReplyDelete
  6. சில வெளி நாடுகளுக்கு செல்லும் போது திருமண பதிவு சான்றிதழ் கேட்கிறார்கள். இது வரை பலர் அதற்காகவே marriage registration செய்து கொண்டிருந்தனர்).
    நானும் பல வருடங்களாக அலைந்து அலைந்து கடைசியாக சமீபத்தில் தான் அபிடவிட் வாங்கினேன் அதுவும் நான் இருக்கும் நாட்டில் செல்லுபடியாகுமா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  7. நன்றி வெங்கட் நம்ம துறை பற்றியது என்றதும் கை பர பரத்து விட்டது.

    வாடா பெயர் சொல்ல விருப்பமில்லை..உன்னுடன் இன்று பேசியதில் ரொம்ப மகிழ்ச்சி ..அடிக்கடி வா..

    நாளும் நலமே ஐயா எந்த விதத்தில் திருமணம் செய்தாலும் (கோவில், போலீஸ் ஸ்டேஷன்) அதனை பதிவு செய்தல் அவசியம்

    நன்றி விக்கி மேடம்.

    வாங்க வடுவூர் குமார்; இந்தியாவிலிருந்து பிற நாடு செல்லும் போது இங்கு வாங்கிய சான்றிதழ் உதவும்; மற்ற படி அந்தந்த நாட்டு சட்டம் மாறும்; மஸ்கட் பற்றி எனக்கு தெரியாது. மன்னிக்க

    ReplyDelete
  8. நல்ல தகவலுக்கு நன்றி

    நல்வாழ்த்துகள் மோகன் குமார்

    ReplyDelete
  9. //வாடா பெயர் சொல்ல விருப்பமில்லை..உன்னுடன் இன்று பேசியதில் ரொம்ப மகிழ்ச்சி ..அடிக்கடி வா.
    //
    நீ சொன்னதுபோலவே "வாடா(த) பெயர் சொல்லவிருப்பமில்லை"யாக இருக்கவேண்டுமென்று நானும் விரும்புகிறேன். எனக்கும் உன்னிடம் பேசியதில் மிக்க மகிழ்ச்சிதான். அடிக்கடி வருகிறேன், நீயும் நம்ம வலைப்பக்கம் வா(டா)

    ReplyDelete
  10. //இது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். மாநில அரசுக்கு அதன் படி நடப்பதை தவிர வேறு வழி இல்லை//.

    இதெல்லாம் பின்பற்றுங்க முல்லை பெரியார் பிரச்சினைல மட்டும் பின்பற்றதிங்க

    ReplyDelete
  11. கொஞ்சம் வேலைகள் மோகன்.வெள்ளி இரவுக்கு பிறகு ஆசுவாசமாவேன் என தோனுகிறது.விடுபட்டதெல்லாம் வந்து வாசித்து பின்னூட்டமிடுகிறேன்.இப்போதைக்கு ஓட்டு மட்டும்.மன்னியுங்கள்.

    ReplyDelete
  12. நன்றி சீனா தொடர்ந்து வந்து ஊக்குவிக்குறீங்க .

    பெயர் சொல்ல விருப்பமில்லை: //நீ சொன்னதுபோலவே "வாடா(த) பெயர் சொல்லவிருப்பமில்லை"யாக இருக்கவேண்டுமென்று நானும் விரும்புகிறேன்// Try பண்றேன் :)

    வாசிக்க மட்டும் : நன்றி. உங்க கருத்துக்கு பதில் சொல்லும் அளவு நான் பெரிய ஆள் இல்லை.

    ராஜாராம்: பரவாயில்லை. பிரியாணி நல்லா சாபிட்டீங்கலா?

    ReplyDelete
  13. கொஞ்சம் மலரும் நினைவுகள்
    http://ulagamahauthamar.blogspot.com/2009/12/blog-post.html

    ReplyDelete
  14. நல்ல சமூக நோக்குள்ள பதிவு.

    ReplyDelete
  15. நல்ல பதிவு.. நிறைய சட்ட கருத்துக்களை தெரியப்படுத்தவும்... நன்றி.

    ReplyDelete
  16. It is very useful and informative with legal background.
    Regards
    Pragaspathy Anand G

    ReplyDelete
  17. என் சந்தேகம்:
    அபிடவிட் திருமணத்தை (நோட்டரி மூலம் செய்த திருமணம்) பதிவு செய்ய முடியுமா?.. மேலும் பதிவுக்கு பெற்றோர்கள் அவசியமா?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...