இந்த வருடம் ஒன்றல்ல இரண்டல்ல, இத்தனை வருடங்களாக விட்டதற்கும் சேர்த்து ஆறு TV நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டேன்!! அது பற்றிய சிறு தொகுப்பே இது.
ஆறில் மூன்று மட்டும் இப்போது:
1. இமயம் டிவி - புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி
இந்த Talk show நிகழ்ச்சி 2009 ஜனவரி ஒன்றாம் தேதி இமயம் டிவியில் ஒளி பரப்பானது.( என்னது இமயம் டிவி ன்னு ஒன்னு இருக்கான்னா கேக்குறீங்க? நோ நோ அப்டியெல்லாம் கேக்க படாது!!)
இது வரை கலந்து கொண்டதில் மிகவும் மன நிறைவுடன் பேசிய ஒரு நிகழ்ச்சி. தலைப்பு: இந்தியா வல்லரசாக வேண்டுமா? நல்லரசாக வேண்டுமா? இந்தியா நல்லரசாக வேண்டும் என பேசினேன். இன்னும் கல்வி, Infrastructure,Healthcare போன்றவற்றில் நாம் எந்த அளவு பின் தங்கியுள்ளோம் என்றும், முதலில் இதில் முன்னேற வேண்டிய அவசியம் பற்றியும் பேசினேன்.
குறிப்பாக வல்லரசு என்றால் அதற்கான defintion , என்னென்ன இருந்தால் வல்லரசாக முடியும்; இதில் பல ingredients இருந்தாலும் முக்கியமாக நாம் இன்னும் 65% தான் கல்வி அறிவு (அதாவது எழுத படிக்க) பெற்றுள்ளோம், வல்லரசுகள் அனைத்தும் கிட்டத்தட்ட கல்வி அறிவு பெற்றவை. கல்வி அறிவு அனைவரும் பெற்றால் பின் அவர்கள் ஏதாவது வேலை - தானாகவோ, நிறுவனத்திலோ பெற முடியும்.
பேசுவதோடு இல்லாமல், நானும் நண்பர்களும் கடந்த ஏழெட்டு வருடங்களாக கிட்டத்தட்ட 10 ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதையும், இதனையே முக்கிய நோக்கமாக கொண்டு நண்பர்கள் நடத்தும் "துணை" என்ற அமைப்பு பற்றியும் கூறினேன்.
புத்தாண்டின் முதல் வேலை நாள் ஜனவரி 2. எங்கள் நிறுவனத்தின் Finance Head வெங்கடரமணி (SVR) department-ல் எல்லோரையும் கூப்பிட்டு ( 20 பேர்) ஒரு மீட்டிங் நடத்துவார். இதில் நான் கலந்து கொண்டு பேசிய டிவி நிகழ்ச்சி பற்றி மட்டும் 15 நிமிடம் பாராட்டி பேசினார். மகிழ்ச்சியாய் இருந்தாலும் வெட்கத்தில் நாணி கோணி விட்டேன்.
2. நீயா நானாவில் திரு & திருமதி மோகன் குமார்
நீயா நானாவில் பங்கேற்க ரொம்ப காலமாகவே எண்ணம். இந்த வருடம் அது கை கூடியது. என்னுடைய House boss-ம், நானும் கலந்து கொண்ட show - சென்ற July 26th -அன்று ஒளி பரப்பானது.
முதலில் TV-க்கெல்லாம் வர மாட்டேன் என்று முரண்டு பிடித்த house boss-ஐ, நீயா நானா co-orinator என்னமோ பேசி சம்மதிக்க வைத்தது செம ஆச்சர்யம்.
என்னிடம் பேசும் போதே, அந்த பெண்ணிடம் நான் " எங்க madam-வர மாட்டாங்க; நான் மட்டும் தான் வருவேன் " என்றேன்.
"இது Husband- wife நிகழ்ச்சி. வந்தால் ரெண்டு பெரும் வரணும்; நான் அவங்க கிட்டே பேசி ஒத்துக்க வைக்கிறேன்".
அந்த பெண் அசராமல் House boss - எண் வாங்கி, " உங்க வீட்டு காரர் ரெண்டு பேரும் வர்றதா ஒத்துக்கிட்டார். நாளை மறு நாள் shooting. நீங்க வரலைன்னா cancel-ஆகிடும்" னு அடிச்சு விட, நம்ம House boss ஷூட்டிங் வர ஒத்து கிட்டார்.
தலைப்பு சிக்கனம் Vs தாராளம்... கணவன் மனைவியில் யார் சிக்கனம், யார் தாராளம் என்பது பற்றி. நாங்கள் இருவருமே சிக்கனம் என சொன்னால், இருவரில் ஒருவராவது கொஞ்சம் தாராளமா இருப்பீங்க யோசிங்கன்னுட்டங்க. ஹவுஸ் பாஸ் தான் சிக்கனம் என பேசுவதாகவும் என்னை தாராளம் என பேசும் படியும் பணித்தார். (என்னுடைய சிக்கனம் பற்றி பேசினால் நம்ம இமேஜ் - damage ஆகிடும்னு நல்ல எண்ணம் தான் இதுக்கு காரணம். வாழ்க ஹவுஸ் பாஸ்!!)
கோபி நாத் நிகழ்ச்சியை சிறப்பாகவே நடத்துகிறார். நல்ல மெமரி பவர். தமிழும் அழகு. என்ன சில நேரம் நம்மை பேச விடாமல் சற்று dominate செய்கிறார். நாங்கள் பேசியதன் ஒரு பகுதி மட்டும் இந்த லிங்க் உங்கள் browser-ல் பொருத்தி காணுங்கள்.
இதில் முதல் ஜோடியாக பேசுவதுதான் நானும் என் வீட்டம்மாவும்.(கிரெடிட் கார்ட் மேட்டர்)
நீயா நானாவுக்கு இருக்கும் reach அதிசயிக்க வைக்கிறது . நிகழ்ச்சி நடக்கும் போதே பல நண்பர்களிடமிருந்து SMS மற்றும் தொலை பேசி அழைப்புகள்; மறு நாள் காலை நான் வாக்கிங் செல்லும் போது சிலர் பார்த்து நேத்து டிவியில் வந்தீங்களே என கேட்டது ஆச்சரியம் !!
3. சினி குவிஸ் நிகழ்ச்சி - இமயம் தொலை காட்சி
எனது colleague கோவியுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி இது.நிகழ்ச்சிக்கு செல்லும் முன் ஒரு பார்க் சென்று இருவரும் கையில் எடுத்து வந்த பேப்பர்கள் வைத்து நிறைய prepare-செய்தோம். குறிப்பாய் Dumb sherad-க்கு எப்படி நடிப்பது என நிறைய discussion.(இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது )
நிகழ்சியின் முதல் இரு ரவுண்ட் வரை எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லி முன்னணியில் இருந்தோம். கடைசி ரவுண்டான Dumb sherad-ல் ரெண்டு படங்களும் கண்டு பிடிக்காமல் சொதப்பி ரெண்டாம் இடம் வந்தோம். முதல் பரிசு பெற்றவர்க்கு என்ன பரிசு தெரியுமா? வெறும் கை தட்டல் தான் !!
இதில் ஆன்டி க்ளைமாக்ஸ் என்னவென்றால் நிகழ்ச்சி ஒளி பரப்பானதை நாங்கள் இருவருமே பார்க்க வில்லை. நிகழ்ச்சியின் விளம்பரம் மற்றும் டைட்டில் போது மட்டும் இருவரையும் காட்டுவது கண்டு நிம்மதி அடைய வேண்டியாதாயிற்று!!
நிற்க. ஆறு நிகழ்ச்சியும் ஓன்றாய் சொன்னால் உங்களுக்கு போர் அடிச்சிடும். எனவே அடுத்த மூணு நிகழ்ச்சி பற்றி தனியே எழுதுகிறேன் . இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இமயம் மாதிரி இன்னொரு முன்னணி (!!!!) சேனலில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சி வரும் ஜனவரி ஒன்று ஒளி பரப்பாகிறது. முடிந்தால் ஒளி பரப்பாகும் சரியான நேரத்துடன் அடுத்த பதிவில் கூறுகிறேன்....

2009 உங்களுக்கு சிறப்பான ஆண்டு தான்.
ReplyDeleteவாழ்த்துகள் !
வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅப்படி முன்னடியே சொல்லுங்க நண்பா,
ReplyDeleteடி.வி ஸ்டார் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்க குடுத்த நீயா நானா லிங்க்ல நீங்க இருக்கீங்களா ?. பார்த்தேன். ஒரு டாக்டர், பைனான்ஸ் கன்ஸல்டண்ட் மட்டுமே பேசினார்கள்.
valthukkal ...app neenga or pirabalamaa???
ReplyDeleteautograph pottu thaanganna
ennoda puthu blog kku vanga thala....
ReplyDeleteநன்றி கோவி. கண்ணன்
ReplyDeleteஅருணா
பின்னோக்கி
டம்பி மேவி
முதலில் பேசுவது தான் நாங்க. பின் பலர் பேசுகிறார்கள்
வாழ்த்துகள்.
ReplyDeleteநான் இன்னும் நீங்க அனுப்புன லின்கை பாரக்கலை...ஆனா அந்த தலைப்பில் வந்த நீயா நானா-வை விஜய்டிவியில் பார்த்திருக்கிறேன்.
ReplyDelete7 ஸ்டார் ஹோட்டல்ல தங்கிட்டு பில்லை கேஷா பே பண்ண அண்ணாச்சி நீங்கதானா??? ரைட்டு நல்லா நினைவு இருக்கு...
இப்பவாச்சம் கிரடிட்கார்ட் வாங்க வீட்டுக்காரம்மா அனுமதி கொடுத்தாங்களா???
வாழ்த்துக்கள் மோகன் குமார்.
ReplyDelete2010 ல் ஒரு 10 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாழ்த்துக்கள்.
கிராமத்து நினைவலைகள்---புகைப்படங்கள்
ReplyDeletehttp://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_29.html
வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇப்பத்தான் பார்த்தேன். கொஞ்சம் இளைச்சா மாதிரி தெரியறே போலிருக்கு.
ReplyDeleteகிரெடிட் கார்டு அப்ரூவ் ஆயாச்சா?
ReplyDelete:)
;-)))
ReplyDeleteஅன்பின் மோகன் குமார்
ReplyDeleteதொலைக்காட்சியில் ஒளிர்ந்தமை நன்று. அதுவும் ஹவுஸ் பாஸூடன் - தைரியம் தான். காணொளி பார்க்க இயலவில்லை.
நன்று நன்று - நல்வாழ்த்துகள் மோகன் குமார்
நட்புடன் சீனா