Monday, December 14, 2009

கனவுகள்



எப்படியும் நம்மை நினைத்து கொள்ளலாம்
நமக்குள்...
நெடுந்தூர பிரயாணங்களில்
ரேஷனில் நிற்கும் நேரங்களில்
தூக்கம் வரா இரவுகளில் ..
எப்படியும் நினைத்து கொள்ளலாம் ...

வாழ்க்கை தராத இன்பத்தை
கனவுகள் தரலாம்
கேட்க எவருக்குண்டு உரிமை?

கனவுகள் இதமேயெனினும் ...

தந்தையின் வசவுகளும்
எதிர் வீட்டு பெண்ணின் பாரா முகமும்
நிற்காமல் சிரித்தவாறே செல்லும்
தபால் காரரும் ...

கனவுகள் பசியாற்றுவதில்லை ...

உரையாடல் அமைப்பின் கவிதை போட்டிக்காக

27 comments:

  1. ook..ரைட்டு.. எனக்கெனன்வோ என் கவிதைதான் ஜெயிக்கும்னு தோணுது..:((((((((

    ReplyDelete
  2. போட்டி பத்தி பார்க்கல.. ஆனா கவிதை மனசத் தொடுது..

    ReplyDelete
  3. //கனவுகள் பசியாற்றுவதில்லை ... //

    கடைசியில் இதுதானே நிஜம்.

    வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. கவிதை ரொம்பப் பிடிச்சிருக்குங்க, வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. மனதை அள்ளும் கவிதை...........

    வாழ்த்துக்கள்...........................

    ReplyDelete
  9. //கனவுகள் பசியாற்றுவதில்லை ... //
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    அருமை

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. நல்லாருக்குங்க போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    // Cable Sankar said...
    ook..ரைட்டு.. எனக்கெனன்வோ என் கவிதைதான் ஜெயிக்கும்னு தோணுது..:((((((((//

    இத இத இதத்தான் நாங்க எல்லாரும் எதிர்பார்க்கிறோம்...:))))

    ReplyDelete
  12. இறங்கிட்டீங்களா தலைவா?
    வாழ்த்துக்கள்.

    கேபில மாதிரி உசுப்பேத்த ஒரு ஆள் இருந்தா போதும்...

    ReplyDelete
  13. அருமையான கவிதை தொட்டுட்டுச் செல்கிறது.. கனவு....

    ReplyDelete
  14. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்!

    வாங்க‌ சார்! உங்க‌ளுக்கு ஒரு விருதும் காத்துகிட்டிருக்கு

    http://kurumbugal.blogspot.com

    ReplyDelete
  15. நல்லாருக்கு மோகன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. கனவுகள் பசியாற்றுவதில்லை ...கரீக்டுபா.......... ரொம்ப கரீக்டு.

    ReplyDelete
  17. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. கேபிள்: வாங்க சார்.. கவிதையாவது விட்டு வைங்க.. உங்க அபிமான சுஜாதா கவிதை எழுதலை. ஞாபகம் வச்சிகோங்க. உங்களுக்கு ஏன் கவிதை மேல் இப்படி ஒரு கொலவெறி? :))))

    ரிஷபன் சார்: நன்றி. நண்பர்கள் சிவராமன் & சுந்தர் நடத்தும் போட்டி. கை காசு செலவு செய்து நடத்துறாங்க. அவசியம் உங்க கவிதை அனுப்புங்க.

    ராம லக்ஷ்மி மேடம் & நவாசுதீன்: நன்றிகள் பல

    அட முரளி கண்ணன் சார்: ஆராய்ச்சி எல்லாம் எப்படி போகுது? :)))) நம்ம பதிவுகள் கூட படிக்கிறீங்களா? ரொம்ப சந்தோசம்.

    ReplyDelete
  19. ஜெட் லி: வாங்க. நம்ம தல கேபிள் அவர் தான் ஜெயிப்பேன்னுருக்கார். :))))

    யாத்ரா: நன்றிங்க.

    சங்கவி: தொடர்ந்து வந்து encourage செய்றீங்க. ரொம்ப தேங்க்ஸ்ங்க.

    முதல் வருகைக்கு நன்றி தேனம்மை. உங்க blog-கவிதைகளால் நிரம்பி வழியுது!!அசத்துங்க!!

    ReplyDelete
  20. இது ஒரு வேலை இல்லாத இளைஞனின் மன நிலையில் எழுதப்பட்ட கவிதை ( நான் அந்த நிலையில் இருந்த போது எழுதியது). உங்கள் அனைவருக்கும் பிடித்தது மகிழ்ச்சி

    ReplyDelete
  21. சூர்யா ரொம்ப நன்றி. நான் உங்கள் தொடர்ந்து வாசிக்கிறேன். உலக சினிமா குறித்த உங்கள் அறிவு அபாரம்.

    பலா பட்டறை வாங்க. கேபிளை எல்லாரும் ரௌண்டு கட்டி தாக்குறோம்

    வானம்பாடிகள் சார். & வரதராஜலு சார் நன்றி

    விக்கி எப்படி இருக்கீங்க? தமிழ் நாடு பக்கம் வர்றீங்க போல

    ReplyDelete
  22. அதி பிரதாபன்: விட மாடீங்களே.. என்னை மாதிரி ஒரு யூத்து இந்த நாட்டில் ஒரு கவிதை எழுத கூடாதா?

    ரமேஷ்: நன்றி போட்டோவில் ஹீரோ கணக்கா இருக்கீங்க

    குறும்பன்: நன்றி தங்கள் அன்புக்கும் விருதுக்கும்; இன்னும் நிறைய எழுத இது ஊக்கம் தரும் :))))))(OK; OK; யாரும் பயப்பட கூடாது)

    சித்ரா மேடம்; US-ல் இருந்துட்டு சென்னை தமிழில் வாழ்த்துறீங்க நன்றிங்கோ

    ReplyDelete
  23. ///Mohan Kumar said...ரமேஷ்: நன்றி போட்டோவில் ஹீரோ கணக்கா இருக்கீங்க ///
    மோகன் என்னதான் சொல்லுறீங்க..
    எனக்குன்னா...இது ரொம்ப ஓவர்....(தன்னடக்கம்)
    மனசுக்குள்ள நன்றி சொல்லுது உங்களுக்கு......... :)

    ReplyDelete
  24. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. தியாவின் பேனா...நன்றி.

    றமேஸ்-Ramesh- நிஜம் தாங்க

    ReplyDelete
  26. வெற்றிபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. நல்லாயிருக்குங்க.. வாழ்த்துகள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...