Saturday, December 19, 2009

பிரபல பதிவர்களின் மாபெரும் தவறுகள்.. படங்களுடன்

எத்தனை நாளைக்கு தான் "Blog மாதிரி அற்புதமான உலகம் எங்கும் கிடையாது; எல்லாரும் நட்பா இருக்காங்க; நல்லவங்களா இருக்காங்க" அப்படின்னே எழுதுறது? இப்படியே போனா நாம எப்ப ரவுடி ஆறது? அதான் துணிஞ்சு இறங்கிட்டேன். (ஆனாலும் மாபெரும் தவறுகள் என்பதெல்லாம் உங்களை உள்ளே இழுக்க செய்த ஐடியா தான் ..ஹிஹி)

இதோ பிரபல பதிவர்களின் தவறுகள் பட்டியல்:

நரசிம்: எல்லா பதிவர் சந்திப்புக்கும் பல blog-ல் போன் நம்பர் மட்டும் போட்டு வச்சிருக்கார். ஆனா மனுஷன் போன் பண்ணா எடுக்கவே மாட்டார்.இதுக்கும் மேல அநியாயத்துக்கு அழகா இருக்கார். இதெல்லாம் நல்லா இல்ல ஆமா..

கேபிள் சங்கர்: நரசிம் போன் பண்ணா எடுக்கிரதில்லன்னா, இவர் வேற மாதிரி. எப்போ பண்ணாலும் வெயிட்டிங்கில் இருக்கும்!!(கண்ணாடி அணிந்த யூத்து தான் நம்ம கேபிள்)

இது தவிர கொஞ்ச நாளாவே கவிதை கவிதைன்னு ஒரு ஆசை வந்திருக்கு. விட்டுருங்க தல பாவம் அது பொழச்சு போகட்டும்

குசும்பன்:
அவரோட தோஸ்துங்க பதிவுக்கு மட்டும் தான் பின்னோட்டம் போடுறார். என்ன மாதிரி சாதாரண ஆட்களை மதிப்பதேயில்லை.

கார்க்கி:


இவர் மேல உள்ள குற்ற சாட்டு என்னான்னா தொடர்ந்து விடாம எழுதுறார் அப்படிங்கறது தான் ( Happy-ஆ அப்துல்லா?)

பா. ராஜாராம்: மனுஷன் வெளி நாட்டில் இருந்து கிட்டு எல்லோருக்கும் காசு செலவு பண்ணி போன் போட்டு பேசுறார். ஏன் தல.. மெயில், பின்னூட்டம் பத்தாதா? அந்த பணம் மகாவுக்காக சேக்கலாமே (மக்கா கோபிக்காதீங்க. உங்க தம்பி மாதிரி ஒரு உரிமையில் சொல்றேன்)

ராம லக்ஷ்மி: எப்பவும் எல்லாரையும் பாராட்டி மட்டுமே எழுதுறார். பின்னூட்டம் போடுறார்.


"உலகமே நல்லவர்களால் ஆனது" ன்னு நம்பிட்டுருக்கார் போல

அப்துல்லா: பின்னூட்டம் போட சொன்னா புள்ளி, அரை புள்ளி, கமா இப்படி போடுறார் !


மெயில் அனுப்புனா கூட இப்படி symbol-லேயே பதில் அனுப்புறார். நமக்கு விளங்க மாட்டேங்குது

** **

இவ்ளோ தாங்க நமக்கு தெரிஞ்சது. ஓரளவு பழகிய நபர்கள் என உரிமையா கிண்டல் பண்ணிருக்கேன். கோச்சுகாதீங்க பெருந் தலைகளே.. காய்ச்ச மரம் கல்லடி படவே செய்யும்!! இருந்தாலும் நான் சொன்னது பத்தி கொஞ்சம் யோசிங்க :))))

ஹலோ.. இவர்களிடமோ மற்றவர்களிடமோ இப்படி (காமெடி) தவறு இருந்தால் பின்னூட்டத்தில் கும்மிடுங்க. சம்பந்த பட்ட நபர் மனம் hurt-ஆகாம செய்யுங்க ப்ளீஸ்

இந்த பதிவு பிடிச்சா தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் ஒட்டு போடணும்.. ஆமா!!

40 comments:

 1. எங்கள் அமீரகத்தின் விடிவெள்ளி, பி.ப. அண்ணாத்த குசும்பனை கலாயத்தற்கு கண்டனங்களை தெரிவிக்கிறோம்...
  குசம்பன் சொல்ல சொன்னதை சொல்லிட்டேன்..அவ்ளோதான்..

  ReplyDelete
 2. ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்தாங்க....பெரிய தலைங்களையே கலாக்கறீங்க...

  ReplyDelete
 3. கேபிள் சங்கர் இல்ல

  வெயிட்டிங் சங்கர்

  ReplyDelete
 4. அட பாவிகளா..நான் போன் பண்ணினால் கூட கட் பண்ணிட்டு"ஆபீஸ் போன்தான் பரவால்லை நான் பேசலாம்"என்கிற மோகனா இது?

  இப்ப இப்படி கிளம்பிட்டீகளா?... :-)

  ஏற்கனவே வீட்ல "வாடி"ன்னு இருக்கா..நீங்க ஒரு ஆள் போதும்போல...

  உங்களுக்கு நியாயமுன்னு தோணுறது எனக்கு அநியாயமாய் இருக்கு மோகன்.

  பிரபலங்களோடு என்னை இணைத்திருப்பது..

  மற்றபடி,ஜாலி..

  ReplyDelete
 5. நாஞ்சில் பிரதாப் said...
  //குசம்பன் சொல்ல சொன்னதை சொல்லிட்டேன்//

  செல்லாது ..செல்லாது ..அவரை வந்து சொல்ல சொல்லுங்க (அப்படியாவது வர்ரர்ரா பாக்கலாம்)

  //KaveriGanesh said...
  கேபிள் சங்கர் இல்ல
  வெயிட்டிங் சங்கர்//

  ஹா ஹா.. போட்டிருக்கும் படங்கள் பல உங்க கிட்டேயிருந்து சுட்டது தான் நன்றி கணேஷ்.
  **
  உமா said...

  //பெரிய தலைங்களையே கலாக்கறீங்க...//

  குசும்பன் தவிர மத்த எல்லோரோடும் பேசிருக்கேன். தப்பா நினைச்சிக்க மாட்டங்கன்னு நம்பிக்கை தான்; தனியே டூ விட்டுடாதீங்கன்னு மெயில் அனுப்பிட்டேன் :))
  ***
  பா.ராஜாராம் said...
  //ஆபீஸ் போன்தான் பரவால்லை நான் பேசலாம்"என்கிற மோகனா இது?//

  அவங்க குடுத்திருக்க eligibility-ல் பாதி கூட நான் use செய்வதில்லை; அதான் திருப்பி நான் பேசினேன். எனக்கு உங்க மேல் இருக்க அக்கறை உங்களுக்கு உங்க மேல இல்லையே மக்கா??

  ஆறு மாசத்தில் 150 + Followers பெற்றவர், ஆறு மாசத்தில் புக்கு போட்டவர் பிரபலம் தான்; இல்லையா ராஜாராம்?

  ReplyDelete
 6. ராமலக்ஷ்மி said...
  :)!

  என்னங்க அப்துல்லா ஸ்டைல்ல இறங்கிட்டீங்க. நமக்கு மட்டுமாவது வழக்கம் போல (சும்மானாச்சுமாவது) பாராட்டி எழுதுங்க. :))சந்தோஷமா இருக்கு பொய்யா இருந்தா கூட பரவாயில்ல.

  ReplyDelete
 7. கொலை வெறிதானா தலைவா? ரைட்ட்டு..

  //உமா said...
  ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்தாங்க....பெரிய தலைங்களையே கலாக்கறீங்க...
  //

  இது வேறயா.. மொக்க மண்டைங்கன்னு இவங்க தான் கலாய்ச்சுட்டாங்க ஹஹஹா.

  மோகன் ..இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.. கலக்கல்.

  ReplyDelete
 8. நல்லாயிருக்குன்னுதானே ஓட்டுப் போட்டிருக்கேன்:)!

  //(சும்மானாச்சுமாவது) பாராட்டி எழுதுங்க.//

  சும்மாவா நிஜமாவான்னு இப்போ உட்கார்ந்து யோசிங்க:))!

  ReplyDelete
 9. நன்றி நரசிம்.. At last.. நீங்க கமெண்ட் போட்டுட்டீங்க. உங்களை பத்தி எழுதினா தான் வருவீங்களா? :)) அடிக்கடி வரணும் ஆமா!!

  ReplyDelete
 10. //நாஞ்சில் பிரதாப் said...
  எங்கள் அமீரகத்தின் விடிவெள்ளி, பி.ப. அண்ணாத்த குசும்பனை கலாயத்தற்கு//
  இதுக்கு மோகன்குமாரே பரவாயில்ல...

  //KaveriGanesh said...
  வெயிட்டிங் சங்கர்//
  நல்லவேள, வெயிட்டான சங்கர்னு சொல்லல...

  //ராமலக்ஷ்மி said...
  :)!//
  அண்ணன் அப்துல்லா பேரோட இவங்க பேரையும் சேத்துக்கலாம் போல இருக்கு...

  //ராமலக்ஷ்மி said...
  நல்லாயிருக்குன்னுதானே ஓட்டுப் போட்டிருக்கேன்:)! //
  ஓ... அந்த - ஓட்டு நீங்கதானா?

  ---

  அவ்வளவுதானா? நல்லாயிருக்கு.

  ReplyDelete
 11. கலக்கல்தான் போங்க.

  நல்லா எழுதி இருக்கீங்க.

  ReplyDelete
 12. //மாபெரும் தவறுகள் என்பதெல்லாம் உங்களை உள்ளே இழுக்க செய்த ஐடியா தான் //

  நல்ல ஐடியாவா இருக்கே...ரூம் போட்டு யோசிச்சிங்களா?
  நான் வரும் காலங்களில் ட்ரை பண்றேன்....

  ReplyDelete
 13. சரியான கலக்கல் மோகன்
  இன்னும் பிச்சு விளாசுங்க அவங்க மனசு நோகாதபடி..
  பின்னூட்டங்களே வலைப்பதிவில் இன்னுமின்னும் நம்மள எழுதத் தூண்டும் என்பதை பழம் தின்று கொட்டை போட்டவர்கள் மறந்து போகிறார்கள் அவர்களது அவசரத்தில் ....

  ReplyDelete
 14. வருங்கால பதிவுலக ரவுடி தாதா, மோகன் குமார் .......... பராக்........... பராக்.......... வாழ்க!

  ReplyDelete
 15. அது சரி.. நடத்துங்க

  ReplyDelete
 16. இதுல எல்லாருமே நெருங்கிய நண்பர்கள் தான். அதனால் நீங்க தைரியமா குத்துங்க எசமான் குத்துங்க :)


  அனுஜன்யா

  ReplyDelete
 17. Anonymous2:02:00 AM

  நீங்களும் ரவுடிதான், நம்பிட்டோம். :)

  ReplyDelete
 18. பதிவா்கள் முகம் பாா்த்ததில் மகிழ்ச்சி,,

  ReplyDelete
 19. ஆஹா அதி பிரதாபன் என்ஜாய் பண்ணி கலாய்ச்சிருக்கீங்க. அடிக்கடி இப்படி நடத்துங்க

  முரளிகுமார் பத்மநாபன் said...
  nanbaa kalakkal, innum ethirpaarkirom. :-)

  நன்றி முரளி குமார் இப்படி உசுபேத்தி உசுபேத்தியே....

  நன்றி சுசி.

  ReplyDelete
 20. ஜெட்லி said...

  //நல்ல ஐடியாவா இருக்கே...ரூம் போட்டு யோசிச்சிங்களா?
  நான் வரும் காலங்களில் ட்ரை பண்றேன்....//

  ஜெட் லி நன்றி ஆஹா உனக்கு ஒரு ஐடியா சொல்லி தந்துட்டேனா?

  சுரேஷ் நன்றி

  ரமேஷ் நன்றி நீங்க சொல்வது சில நேரம் நடக்கவே செய்கிறது

  அனுஜன்யா @ யூத்தன்னா நன்றி. உங்க நண்பர்கள் பத்தி எழுதினதால நம்ம பக்கம் வந்திங்களா? அடிக்கடி வாங்க தல

  ReplyDelete
 21. சித்ரா: நீங்க சொன்னது சந்தோசம் தான் மேடம் என்ன ஒன்னு.. வருங்கால அப்படின்னு சொல்லாம இருந்தா இன்னும் happy-ஆ இருக்கும்

  கார்க்கி: நன்றி இன்னும் சில பேரை கலாய்க்க சொன்னா பதில் மெயிலே காணும்!

  அப்பன் ஐயா: நன்றி. பதிவின் நோக்கங்களுள் ஒன்று நீங்க சொன்னது தான்

  நன்றி சின்ன அம்மணி

  ReplyDelete
 22. இப்படி உரிமையா கலாய்க்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு..

  ReplyDelete
 23. //இப்படியே போனா நாம எப்ப ரவுடி ஆறது?//

  ஆயிட்டீங்க‌

  இன்னும் ப‌ல‌ பிர‌ப‌ல‌ ர‌வுடிக‌ளை சாரி ப‌திவ‌ர்க‌ளை க‌லாய்த்து மாபெரும் பிர‌ப‌ல‌ ர‌வுடி ஆக வாழ்த்துக்க‌ள்

  ReplyDelete
 24. சித்தூர் முருகேசன் :( ஹி ஹி நான் தாங்க) அப்புறம் விரிவா எழுதறேனு புசுக்குனு முடிச்சுருவாரு. அப்பாறம் பார்த்தா அதை சுருக்கமா கூட எழுத‌மாட்டாரு. நல்ல விசயமா நாலு எழுதுவாரு , படக்குனு பலான ஜோக்குக்கு தாவிருவார்

  ஓம்கார் ஸ்வாமிகள்: மறுமொழி போட்டா உடனே நீக்கிருவாரு. வாங்கி கட்டிக்குவாரு

  தமிழ் ஓவியா: ஆணித்தரமா எழுதுவாங்க. (ஹார்ட் வேர் வச்சிருக்கிங்களா மேடம்)

  கோ.வி.கண்ணன்: மயில் மேலேறி மூவுலகத்தையும் வலம் வந்த முருகன் மாதிரி எல்லா விசயத்தை பத்தியும் நச்சுனு எழுதுவார். என்ன மாதிரி அகராதி பிடிச்ச பார்ட்டி கூட விமர்சிக்கவே முடியாது

  ReplyDelete
 25. இப்போதானே முதல் "அடி" வச்சிருக்கீங்க. இன்னும் "போட்டு" தள்ளுங்க. அப்புறம் சொல்றேன்.

  ReplyDelete
 26. ரிஷபன் said...
  இப்படி உரிமையா கலாய்க்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு..
  ஆமாங்க சார். நன்றி
  *****
  க‌ரிச‌ல்கார‌ன் said...
  //இப்படியே போனா நாம எப்ப ரவுடி ஆறது?//

  ஆயிட்டீங்க‌

  நன்றி கரிசல் காரன்
  **

  சித்தூர் முருகேசன் சார்; முதல் வருகைக்கும் பிற நண்பர்களை கலாய்தமைக்கும் நன்றி
  **
  சித்ரா மேடம்: ரைட்டுங்கோ. நன்றி

  ReplyDelete
 27. ஆகா இப்பல்ல புரியுது. அப்பாடா நான் தப்பிச்சேன். அதுக்காக கல்லடி படுற அளவுக்கு நா பெரிய ஆளு இல்ல. இருந்தாலும் இனி பின்னூட்டம் போடறதுக்கு முன்ன உங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும் போல!
  வீட்டுக்கு ஆட்டோ எதுனாச்சும் வந்துச்சா?


  // Mohan Kumar said... என்ன தல வர வர நம்ம ப்ளாக் பக்கம் உங்களை காணவே இல்ல??//

  வோட்டும் போட்டாச்சு!

  ReplyDelete
 28. //இப்படியே போனா நாம எப்ப ரவுடி ஆறது?//

  ஆஹா, இப்பிடிதான் ரவுடி ஆவறதா? ரைட்டு, நீங்களும் பெரிய ரவுடிதான்.

  அப்பிடியே மெய்ன்டெய்ன் பண்ணுங்க

  ReplyDelete
 29. நன்றி ஆதி மனிதன் & வரதராஜலு சார்

  ReplyDelete
 30. ரவுடியாகீட்டீங்க..! அடுத்த அட்டாக் என்ன..?

  ReplyDelete
 31. நன்றி ஸ்ரீ மதி;

  ராஜு; Danks. நீங்க கொஞ்சம் ஐடியா தந்தா கலக்கலாம்

  ReplyDelete
 32. அண்ணாச்சி என்மேல நீங்க சொன்ன குற்றச்சாட்டு உண்மைதான், ஒத்துக்கிறேன்.

  அதற்கான விளக்கம் விரைவில் கொடுக்கிறேன்!

  அப்துல்லா ஒரு சைன்டிஸ்ட் அவர் புது மொழியை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.

  ReplyDelete
 33. சரிதான், பின்னூட்டம் வாங்க இப்படியும் ஒரு வழியா??? :P:P:P

  ReplyDelete
 34. குறும்பன் said:
  //அப்துல்லா ஒரு சைன்டிஸ்ட் அவர் புது மொழியை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.//
  நன்றி குறும்பன். இது மாதிரி கமெண்டுகள் தர அவ்வபோதாவது வாங்க.

  கீதா மேடம் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க நன்றி. தொழில் ரகசியம்!! சரியா சொல்றீங்க

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...