இதோ ரஜினியின் சிறந்த 10 படங்கள்
ஆறிலிருந்து அறுபது வரை
இன்றளவும் ரஜினியின் நடிப்பு திறமைக்கு பேர் சொல்லும் படம். சற்று சோகம் அதிகம் என்றாலும் தம்பி தங்கைக்காக வாழும் இத்தகைய அண்ணன்கள் அன்றைக்கு சற்று அதிகமாகவும் இன்றைக்கு சற்று குறைவாகவும் இருக்கவே செய்கின்றனர்.
இத்தகைய கேரக்டர்கள் நடிக்கும் போது ஓவர் ஆக்டிங் செய்ய நேரும். ஆனால் ரஜினி கொஞ்சம் கூட ஓவர் ஆக்டிங் இல்லாமல் நடித்திருந்தார். இளையராஜா இசையில் கண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடல் இன்னும் கேட்க மிக இனிமை.
முள்ளும் மலரும்
இது வரை வெளி வந்த தமிழ் படங்களில் விகடன் அறுபதுக்கும் மேல் மதிப்பெண் தந்த படங்கள் 10 கூட இருக்காது. அவற்றுள் இது ஒன்று. மகேந்திரனின் அற்புதமான இயக்கத்தில் வந்த படம்.
பாசமான அண்ணனாகவும் ஒரு சாதாரண தொழிலாளியாகவும் ரஜினி மிக அழகிய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். செந்தாழம் பூவில், ராமன் ஆண்டாலும் என இன்றைக்கும் கேட்க இனிய பாடல்கள். ரஜினியின் தேர்ந்த நடிப்புக்கு உதாரணமாய் என்றும் இந்த படம் இருக்கும்.
தர்ம யுத்தம்
சாதாரண பழி வாங்கும் கதை தான். இந்த படம் எடுக்கும் போது ரஜினி பெரிய stress-ல் இருந்தார். ஆனால் படத்து கேரக்டர் அதே போல் அமையவே அவர் நடிப்பு பிரகாசித்தது. இளைய ராஜா இசையில் ஆகாய கங்கை, ஒரு தங்க ரதத்தில் ஆகிய பாடல்களை மறக்க முடியுமா?
மூன்று முகம்
மூன்று முகம் என்று சொல்வதை விட ஒரு முகம் என சொல்லி விடலாம். அந்த ஒரு முகம் அலெக்ஸ் பாண்டியனுடயது. என்ன ஸ்டைல், ஸ்பீட்..
படத்தில் இந்த கேரக்டர் அரை மணிக்கும் குறைவாய் வந்தாலும் இன்றைக்கும் மனதில் நிற்கும் படி மாறி போனது. (ரஜினி இவ்வாறு கொஞ்ச நேரமே வந்தும் கலக்கிய கேரக்டர்கள் நிறையவே உண்டு. வேட்டையன் முதல் சிவாஜி மொட்டை வரை யோசித்து பாருங்கள்).
தில்லு முல்லு
ரஜினியின் சிறந்த காமெடிக்கு ஒரு உதாரணம். என் நண்பர்களில் சிலர் இன்றும் இந்த படம் டிவி யில் வந்தால் முழுதும் பார்க்க உட்கார்ந்து விடுவர். தேங்காய் சீனிவாசன் - ரஜினி என்ற அபூர்வ காம்பினேஷனில் அசத்திய படம்.
ஸ்ரீ ராகவேந்திரர்
இது ரஜினிக்கே மிக பிடித்த படம். பெரும்பாலும் ஜனங்களுக்காக படம் செய்யும் ரஜினி தன் திருப்திக்கு எடுத்த படம்.
தனது வழக்கமான பணியை விடுத்து மிக மெதுவாக பேசி நடித்திருந்தார். படம் பெரிதாக ஓட வில்லை என்றாலும் ரஜினியின் சிறந்த படங்களில் இது நிச்சயம் இடம் பெறும்.
பாஷா
தமிழின் மிக பெரிய வெற்றி படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் காமெடி almost இல்லை. ஆனால் எந்த தொய்வும் இல்லாமல் படம் அட்டகாசமாய் இருந்தது. ஒரு வெற்றி பெற்ற படத்தில் வெயிட்டாக சில காட்சியாவது இருக்கும். இந்த படத்தில் ரஜினி தங்கை கல்லூரி அட்மிஷனுக்காக போகும் போது நடக்கும் காட்சி ஒரு உதாரணம். "எனக்கு இன்னொரு பேர் இருக்கு" என்றவுடன் சத்தமில்லாமல் கண்ணாடி அறைக்குள் நடக்கும் காட்சிகள் பார்க்கும் ரசிகரை விசிலடிக்க வைக்கும்.
இந்த படத்தின் வெற்றி விழாவில் ரஜினி பேசியது பெரும் அரசியலானது. ரஜினியின் all time hits-ல் இந்த படம் இல்லாமல் போகாது.
படையப்பா
எனக்கு ரொம்ப பிடித்த ரஜினி படத்தில் இது ரொம்ப மேலே வரும். சில படங்கள் நாம் பார்க்கும் போது எந்த நிலையில் உள்ளோம் என்பதை பொறுத்து பிடிக்கும் அல்லது பிடிக்காமல் போகும். இந்த படம் மற்றும் அதன் பாடல்கள் எனக்கு மிக பிடித்தது அன்றைக்கு எனக்கு இருந்த மன நிலையும் ஒரு காரணம்.
ஒரு பெண்ணை powerful- வில்லியாக காட்டியிருந்தது அசத்தலாக இருந்தது. சொல்ல போனால் ஹீரோயின் விட எல்லோரும் ரம்யா கிருஷ்ணன் பற்றி தான் பேசினார்கள். அந்த அளவு இன்னொரு கேரக்டருக்கு scope -கொடுத்தது நிச்சயம் ரஜினியின் பெருந்தன்மை தான்.
A super hit film with excellent songs.
சந்திரமுகி
ரீமேக் என்றாலும் அதனை விட அதிக வியாபாரமும் வெற்றியும் பெற்ற படம். சென்னையில் 700 நாட்கள் ஓடிய படம். ஜோதிகாவிற்கு நடிக்க செம வாய்ப்பு இருந்தும் ரஜினியும் புத்தி சாலிதனமான நடிப்பால் நம்மை கவர்ந்தார்.
படத்தின் கடைசி 45 நிமிடங்கள் நாங்கள் DVD-ல் பல முறை பார்த்து ரசித்துள்ளோம்.
சிவாஜி
இது இந்த பட்டியலில் வருவது சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் ரஜினி டான்ஸ் மற்றும் சண்டை இந்த படம் அளவு வேறு எந்த படத்திலும் match-ஆகாது என்பது ஏன் எண்ணம்.
ஷங்கருடன் ரஜினி முன்பே நடித்திருக்க வேண்டியது... முதல்வனில்...!! நினைத்து பாருங்கள்!! முதல்வன் பட கதைக்கு ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்!! Great miss!!
மொட்டை ரஜினி அஞ்சே நிமிஷத்தில் அசத்தி இருந்தார். வெள்ளை ரஜினியும், அதற்கான ஷங்கரின் மெனக்கெடலும் குறிப்பிட பட வேண்டியவை. காமெடி, நல்ல தீம், விறு விறுப்பான திரைகதை என சிவாஜி ஒரு பக்கா entertaining film.
*********
எனது பத்து முடிந்து விட்டது. ஏதாவது படம் விடு பட்டு விட்டது என எண்ணுகிறீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!! இதே படங்களில் உங்களுக்கு பிடித்த படம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நமக்கு entertaining சினிமா தரும் ரஜினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
ரஜினி-10 பிடித்திருந்தால் தமிழிஷ் மற்றும் தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்க பாஸ்!!
தில்லு முல்லு என்னோட ஃபேவரைட்டும்கூட. மீசைய எடுக்கவெச்ச கோபத்துல தேங்காய் சீனிவாசனை பார்த்து "ஹே தோட்டக்காரா"ன்னு கூப்பிடுவார் பாருங்க....சூப்பர் ஸ்டார் காமெடியிலும் சூப்பர் ஸ்டார்தான்!
ReplyDeleteஅட! மீ த ஃபர்ஸ்டா!
ReplyDeleteதளபதியையும் சேர்த்துக்கொள்ளலாம்...
ReplyDeleteமறக்க முடியாத படங்கள்
ReplyDeleteஎனக்கு ரஜினியின் நடிப்பில் மிகவும் பிடித்த படம் நினைத்தாலே இனிக்கும், பிறகு அவள் அப்படித்தான். இரண்டிலும் அவ்ரின் ந்டிப்பு தனித்துவமாய் இருக்கும் தலைவரே
ReplyDeleteபுவனா ஒரு கேள்விக்குறி!., நினைத்தாலே இனிக்கும், ஜானி, பில்லா, முரட்டுக்காளையில் தலைவரின் பொதுவாக எம்மனது தங்கம் இந்த பாடல் இன்றும் அனைவராலும் ரசிக்கும் பாடல் தலை...........
ReplyDeleteநன்றி குறும்பன்.. முதல் முறை வந்திருக்கீங்க. நன்றி.
ReplyDeleteபாலாசி.. என்னோட அண்ணன் பெயர். நன்றிங்கோ. ஆம். தளபதி சிறந்த படம் தான்.
கரிசல் காரன்: நன்றிங்க.
கேபிள்ஜி : நீங்க சொன்னதில் நினைத்தாலே இனிக்கும் மிக சரி. படம் வந்த போதே மெயின் ஹீரோ கமலை விட ரஜினி பார்ட்- டை தான் பலர் ரொம்ப ரசித்தனர்.
சங்கவி: ரொம்ப சரியா மிஸ் ஆன படங்களை சொன்னீங்க. ஜானி ஓடா விடினும் நல்ல படமே.
எனக்கு மிகப் பிடித்த படங்கள்,
ReplyDeleteநினைத்தாலே இனிக்கும்
தில்லுமுல்லு
நெற்றிக்கண்
ஒரு தங்க ரத்தத்தில்
ReplyDelete//
ரதத்தில் பாஸ் :)
//என் நண்பர்களில் சிலர் இன்றும் இந்த படம் டிவி யில் வந்தால் முழுதும் பார்க்க உட்கார்ந்து விடுவர் //
ReplyDeleteஅட! நானும் அப்படித்தான் பாஸ்.இந்த படம் டிவியில் போட்டால் எந்த வேலையாக இருந்தாலும் போட்டுவிட்டு உட்கார்ந்துவிடுவேன்.
//அந்த ஒரு முகம் அலெக்ஸ் பாண்டியனுடயது //
ReplyDeleteசெந்தாமரை ரஜினியிடம் சொல்வார், “ என் பேரைச் சொன்னீன்னா அழுகுற குழந்தைகூட வாயைப் பொத்திக்கும்.
அதற்கு ரஜினி டயலாக், “கண்ணா!அதே குழந்தைக்கிட்ட அலெக்ஸ் பாண்டியன்னு சொல்லிப்பாரு...இன்னோரு கையால அவங்க அம்மா வாயையும் சேத்து பொத்தும்”.
மறக்க முடியாத டயலாக் டெலிவரி அது. டைமிங்கிலும் சரி, நடிப்பிலும் சரி.
அருமையான தொகுப்பு
ReplyDeleteநன்றி பாஸ்
எல்லாமே அருமையான படங்கள் மோகன் குமார். நல்ல அலசல்
ReplyDeleteகாயத்ரிய பாருங்க தல..,
ReplyDeleteஅப்படி ஒரு கொடூர வில்லத்தனம்..,
முத்து
ReplyDeleteபில்லா,
அண்ணாமலை,
படிக்காதவன்
இவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ரொம்ப நல்ல தொகுப்பு மோகன்.
ReplyDeleteஇதில் தர்மயுத்தம் அவ்வளவாக நினைவில்லை.. தற்போதைய
ReplyDeleteபுதிய படங்களை விட பழைய படங்களே நடிப்பில் அதிகம் கவர்ந்தது... தற்போது ரஜினி ரசிகர்களுக்காகவே நடித்துக்கொண்டுள்ளார்.
பழைய ரஜினியை திரும்ப ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
சங்கர் நன்றி: மூன்றுமே நல்ல படங்கள் தான்
ReplyDeleteநன்றி அப்துல்லா. மாற்றி விட்டேன். மூன்று முகம் வசனம் அப்படியே சொல்லி அசத்திடீங்க. (இன்று தான் clipping-ல் பார்த்தேன்)
Dr.ப்ருனோ : நன்றி bruno சார். நம்ம blog பக்கமெல்லாம் நீங்க வருவதுண்டா? மீண்டும் நன்றிகள்.
நன்றி சின்ன அம்மணி.
சுரேஷ் : காயத்ரி நான் பார்த்ததில்லை நண்பா.
ReplyDeleteராம்: நீங்க சொன்னவையும் நல்ல படங்கள் தான்.
வாங்க விக்கி எப்படி இருக்கீங்க?
கிரி: correct தான். ரஜினி தற்போது ரசிகர்ளுக்காக நடிக்க ஆரம்பித்து விட்டார். He can surely give far better films & performances, but commercial compulsions make him to act in popular films.
தில்லுமுல்லு நான் இன்றைக்கும் விரும்பி பார்க்கும் படம். நீ சொன்ன எல்லா படமும் என்னுடைய favourite படம்தான். good post.
ReplyDeleteசூப்பர் ஸ்டார் பற்றிய துணுக்குகளை அறிய...
ReplyDeletehttp://www.ponmaalai.com/2009/12/blog-post_12.html
சூப்பர் சூப்பர்.. .. இதே தினத்தில்தான் என் மகளும் பிறந்தாள்..
ReplyDeleteதம்பிக்கு எந்த ஊரு எனக்கு ரொம்ப பிடிக்கும்...
ReplyDeleteதலைவர் காமெடியில் பின்னி இருப்பார்
ரஜினி நடித்த படங்களில் மொத்தம் 10 படங்கள் வேண்டும் என்றால் மோசம் என்று சொல்லலாம். மத்த எல்லாமே ரஜினி ரஜினிதான், சூப்பர்! சூப்பர்! சூப்பர்!
ReplyDeleteஜெட்லி, நான் தம்பிக்கு எந்த ஊரு படத்தை ஒரு அம்பது வாட்டியாவது பாத்திருப்பேன். நல்லவனுக்கு நல்லவன் படத்தையும். ஹி,ஹி,ஹி,....
Annamalai Super padam sir. Adhuvum andtha escalator scenela malai da annamalai solluvaar parunga. Super!!!!
ReplyDelete"Cable Sankar said...
ReplyDeleteஎனக்கு ரஜினியின் நடிப்பில் மிகவும் பிடித்த படம் நினைத்தாலே இனிக்கும், பிறகு அவள் அப்படித்தான். இரண்டிலும் அவ்ரின் ந்டிப்பு தனித்துவமாய் இருக்கும் தலைவரே"
thala perusunnu confirm pannuringale.....
padangalai hit varusaiyil parkaathinga.... rajini villanaga naditha padangal nalla irukkum
மோகன் குமார் நல்ல தொகுப்பு. ஆனால் தளபதி, பில்லா போன்ற படங்களிலும் தலைவர் மிரட்டியிருப்பார்!!! மம்முட்டி தலைவர் இருவரும் போட்டி போட்டு நடித்த படம். ஒருவரை ஒருவர் மிஞ்சி இருப்பார்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்....
தில்லுமுல்லு படம் ஒரு காமெடி சகாப்தம்
ReplyDeleteபாஷா படம் ஒரு ஹைஜீனிக்ஸ்
ரஜினிக்கு மூன்று முகமல்ல .. கோடிக்கணக்கான முகம்
மன்னன் எனக்கு ரொம்ப பிடித்த படம்
ReplyDeleteநன்றி தலைவரே! நல்ல பதிவு! ;)
ReplyDeletei love u !
எங்கோயோ கேட்ட குரல், தப்புத் தாளங்கள், அன்புள்ள ரஜினிகாந்த போன்ற படங்களை வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். அற்புதமான படங்கள்.
ReplyDeleteபெயர் சொல்ல: நன்றி.
ReplyDeleteமல்லிக்கா: உங்க பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஜெட்லி: நன்றி; அந்த படத்தில் காதலின் தீபம் ஒன்று பாட்டு என்றும் அருமை
சித்ரா மேடம்: அவ்ளோ தீவிர ரஜினி ரசிகரா நீங்க? உங்க பேர் கொண்ட என் house boss-க்கு அவ்ளோ பிடிக்காது!!அவங்க கமல்/ விஜய் ரசிகை !!
பிரசன்னா: உண்மை தான்; அண்ணாமலை Vs சந்திரமுகி இரண்டில் எதை சேர்ப்பது என குழம்பி பின் சந்திரமுகி சேர்த்தேன்.
ReplyDeleteதம்பி மேவி: தலயை ஏன் ஓட்டுறீங்க?
காவிரி கரையான்: நன்றி. உங்க blog-ல் படங்கள் (photoes) சுட சுட போட்டு தூள் கிளப்புறீங்க
ஸ்டார்ஜன் & மணி: நன்றிங்க
ReplyDeleteதமிழ்: நீங்க தப்பு தாளங்கள் சொன்னது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. நான் யாரும் சொல்லா விடில் பின்னூட்டத்தில் சொல்ல நினைத்த படம் அது
புவனா ஒரு கேள்விகுறி, தளபதி, அண்ணாமலை - இவை மிஸ்ஸிங்
ReplyDeleteஇதில் தளபதியும் அண்ணாமலையும் மாஸ் என்டர்டெய்னர்
Thamilzhan aduththa state karanai thaan thalaivar thalavar nu thalaiyila thooki vachchu kondaduvaanunga,,,,,pinna eppadi inga irukkira thamizhan vaazhvaan....ellarum padichchavanunnga thaane,,,,ungalukkellam arivilla.....neenga ellarum ippadi paiththiyama alaiyirathunalathaan avan kodiyil mithakkiraan,,,,thamizhan therukkodiyila kidakkaan...
ReplyDelete