Wednesday, December 30, 2009

வானவில் - சென்னை பதிவர் சந்திப்பும், N . T திவாரியும்

வானவில் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் சில எண்ணங்களை உங்களுடன் பகிர உள்ளேன். ஏழு வண்ணங்கள் போல் ஏழு விஷயங்கள்... இதே தலைப்பில் தான் இருக்கும் என்று கட்டாயம் இல்லை. ஏனெனில் " மாறுதல் ஒன்றே மாறாத ஒன்று.."

ஒரு சந்திப்பு

பதிவர் உலகநாதன் சென்னை வந்திருந்தார். மலேசியாவில் பணி புரியும் இவர் முதல் முறை பதிவுலக நண்பர்கள் பலரை சந்தித்தார். நண்பர் தண்டோரா அலுவலகத்தில் சந்திப்பு. கேபிள், தண்டோரா, பொன். வாசுதேவன், பட்டர்பிளை சூரியா, கார்க்கி, அதி பிரதாபன், பைத்திய காரன் முதலானோர் சந்தித்தோம். பலரை நானும் இன்று தான் சந்திதேன்.

கார்க்கி எழுத்தில் இருப்பதற்கு சற்று குறைவான குசும்புடன்.. உலகநாதன் உடல் நலத்துக்கு மட்டும் வாகிங், யோகா என தினம் ரெண்டு மணி நேரம் ஒதுக்குவாராம். பார்த்தாலே தெரிகிறது. (நான் வாகிங் ஆரம்பிப்பது மழை பெய்தால் விடுவது ..வழக்கம் போல்..)

உலக நாதன் அனைவருக்கும் ஓர் சிறு நினைவு பரிசுடன் வந்திருந்தார். அன்பிற்கு நன்றி உலக நாதன்!!

கலக்கலான அரட்டை.. வேட்டைக்காரன் பற்றியும் ஆயிரத்தில் ஒருவன் ட்ரைலர் பற்றியும் பிரித்து மேய்ந்தனர். கார்க்கி , கேபிள் பாட... .. மிக இனிமையாய் மூன்று மணி நேரங்கள் போனது.

சந்திப்பில் எடுத்த புகை படங்கள் நண்பர்கள் யாரேனும் விரைவில் upload செய்வார்கள் என நினைக்கிறேன்.

வாரம் ஒரு சட்ட சொல் – இந்த வாரம்- Caveat

முதலில் ஒரு உதாரணம்: நீங்கள் உங்கள் நிலத்தில் ஒரு அலுவலகம் அல்லது வீடு கட்டுகிறீர்கள். பக்கத்து நிலத்து சொந்த காரருக்கும் உங்களுக்கும் ஏதோ சண்டை. நீங்கள் கட்டடம் கட்டுவதை அவர் எதிர்க்கிறார். இவர் இதற்காக கோர்டுக்கு போய், நீங்கள் கட்டடம் கட்டுவதை நிறுத்த இடை கால உத்தரவு (interim order) பெறலாம் என உங்களுக்கு நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோர்ட்டுகள் பெரும்பாலும் இரு பக்கமும் கேட்டு தான் நீதி வழங்கும். ஆயினும் அவசர நேரத்தில் ஒரு party-யை மட்டும் கேட்டு விட்டு interim order வழங்க வாய்ப்பு உண்டு. நீங்கள் உங்களை பாது காக்க என்ன செய்யலாம்? கோர்ட்டில் நீங்கள் ஒரு caveat file செய்யலாம். இவ்வாறு செய்தால் கோர்ட் உங்களுக்கும் தகவல் தந்து, உங்கள் தரப்பையும் கேட்டு தான் எந்த ஆர்டரும் தர முடியும். ஆங்கிலத்தில் proactive என்பார்களே அதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் caveat file செய்தல்.

ரசித்த SMS/ QUOTE:

“On no account brood over your errors. Take the learning alone. Rolling over the muck is not the best way of getting clean”.

ஆனந்த் என்று ஒரு நண்பர். முன்பு எனது colleague. தவறாமல் ஒரு நல்ல மெசேஜ் தினம் காலை அனுப்புவார். நன்றி ஆனந்த்

ஒரு தகவல்

குளோபல் வார்மிங் பற்றிய ஒரு Talk show-வில் வசந்த் டிவியில் பேசியுள்ளேன். நிகழ்ச்சி புத்தாண்டு (1/1/2010) அன்று இரவு 8.30 முதல் 9.30 வரை வசந்த் டிவியில் ஒளி பரப்பாகும். இதன் தொடர்ச்சி சனி மற்றும் ஞாயிறு (2/1/2010 & 3/1/2010) இரவு எட்டரைக்கு அரை மணி நிகழ்ச்சியாக வரும். முடிந்தால் காணுங்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேச பல அற்புதமான தகவல்கள் தந்த சக பதிவர் ஜெய மார்தாண்டனுக்கு நன்றிகள் பல.

ரசித்த கவிதை

திறந்த வாயிற்படியில்
ஒரு முகம் தோன்றி
ஏதேனும் உரைக்கட்டும்
பார்க்கும் போது
பூட்டில்லாமல் இருத்தல் வேண்டும்

- மறைந்த நண்பன் லக்ஷ்மணன்

நாட்டு நடப்பு

திவாரி என்ற மனிதர்.. நமக்கு பக்கத்தில் ஆந்திராவில் கவர்னரா இருந்தார். ஊரே தெலுங்கானாவில் பத்தி எரியும் போது மனிதர் பெட் ரூமில் ரெண்டு பெண்களுடன் குஜாலா இருந்திருக்கார். இப்போ பதவி போய் சொந்த ஊர் போய்ட்டார் ..இவருக்கு வயது அதிகமில்லை ஜென்டில் மேன் .. 86 . அவரிடம் இரு கேள்வி:

1. ஏனுங்க இந்த வயசிலுமா??
2. ஆமாம் இந்த வயசில என்ன செய்வீங்க?


கிசு கிசு (100 % பொய்; 0 % நிஜம் )

அவதார பெயர் கொண்ட பதிவரை அவரது கார் கம்பனி மும்பைக்கு இட மாற்றம் செய்துள்ளதாம். மும்பை போனால் அவர் எழுதுவது கூடுமா குறையுமா என இரு பதிவர்கள் சரக்கடித்தவாரே, காரசாரமாக டிஸ்கஸ் செய்துள்ளனர்.

***
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!

16 comments:

  1. அவதார பெயர் கொண்ட பதிவரை அவரது கார் கம்பனி மும்பைக்கு இட மாற்றம் செய்துள்ளதாம். மும்பை போனால் அவர் எழுதுவது கூடுமா குறையுமா

    அய்யோ இப்பவே நான் அவரிடம் பேசுறேன்.

    ReplyDelete
  2. //1. ஏனுங்க இந்த வயசிலுமா??
    2. ஆமாம் இந்த வயசில என்ன செய்வீங்க?//

    ஹீஹீஹீ... `
    1.பல்லுருக்குறவன் பக்கோடா திங்கறான;..
    2. அவருமட்டும் என்ன புதுசாவாங்க பண்ணப்போறாரு...

    ReplyDelete
  3. வானவில் - மிக அருமை. தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வசந்தி டிவி நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்.

    தங்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வானவில் மின்னுது, சட்ட சொல் மிக அருமை

    ReplyDelete
  6. ஹூம், நானும் அதே ஊரில்தான் இருக்கேன்.

    ReplyDelete
  7. அன்புள்ள மோகன்,

    "வானவில்" நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். திடீரென "வாரம் ஒரு பதிவர்" நிறுத்தி விட்டீர்களே? நேரமின்மை காரணமா? தொடருங்களேன்.

    --
    வெங்கட் நாகராஜ்
    புது தில்லி
    www.venkatnagaraj.blogspot.com

    ReplyDelete
  8. Kaveri Ganesh: நன்றி தங்களை ஏமாற்றி இருந்தால் மன்னிக்க. சம்பந்த பட்டவருக்கு தொலை பேசினீர்கள் போல??

    பிரதாப் :தேங்க்ஸ்

    நன்றி சங்கர்

    பெயர் சொல்ல : நன்றி

    பட்டர்பளை தங்களை சந்தித்தில் எனக்கும் மகிழ்ச்சி.

    Kailash Hyderabad: Thanks

    வெங்கட்: ஆம் நேரமின்மை தான் காரணம். ஓர் இடை வெளிக்கு பின் ஆரம்பிக்கிறேன்.

    ReplyDelete
  9. //ஆமாம் இந்த வயசில என்ன செய்வீங்க//

    ஹி...ஹி...செம‌ குறும்பு சார் நீங்க‌!

    ReplyDelete
  10. Happy New year 2010 my Friend . . . .

    I've added a new post to my blog.DO see it and comment.
    And if you want to vote,go to tamilish.com

    ReplyDelete
  11. சார், வீடு திரும்பல் கூடிய விரைவில் முதலிடத்தைத் அடையும், தங்களுடைய
    எழுத்து தொலை தூரத்தை நோக்கி பயணிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
    2010 சிறப்பாக அமையுமென்று நம்புகிறேன்.

    ReplyDelete
  12. வானவில்...தலைப்பு சூப்பர்

    ReplyDelete
  13. caveat என்பதன் சட்ட பிரயோகம் இப்போது புரிகிறது. தின வாழ்க்கையில் (அலுவலகத்தில்) It is like this. However, there is a caveat here என்று உபயோகப் படுத்துவோம் - பெரும்பாலும் there is a condition or stipulation என்ற பொருளில். (அதோ பார் இங்க ஒரு பொறி வைத்திருக்கிறது என்றும் புரிந்து கொள்ளலாம்).

    வானவில் நல்லா இருக்கு. தொடருங்கள். ஆனால், இதே பெயரில் (பத்தி பெயரல்ல. ப்ளாக் பெயரே வானவில்) என் நண்பன் கார்த்திக் எழுதி வருவதால் கொஞ்சம் குழப்பம் வரலாம்.

    அனுஜன்யா

    ReplyDelete
  14. வானவில் வண்ணங்கள் அழகா இருக்கு.

    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. நன்றி குறும்பன்
    அமைதி அப்பா: நன்றி
    ஜெட் லி: தேங்க்ஸ்
    சுசி: நன்றி மேடம்
    அனுஜன்யா சார்: நன்றி. கேபிள் சங்கரின் கொத்து பரோட்டா தலைப்பில் கூட ஒரு blog -இருக்காம். இப்போதைக்கு வானவில் இருக்கட்டும். ஒவ்வொரு வாரமும் வானவில் உடன் அந்த வார subject பற்றி வேறு தலைப்பும் சேர்த்து வைப்பதால் வித்யாசப்படும் என நினைக்கிறேன் நன்றி

    ReplyDelete
  16. //1. ஏனுங்க இந்த வயசிலுமா??
    2. ஆமாம் இந்த வயசில என்ன செய்வீங்க?//

    என்னா மோகன் சார்? இந்த வயாகரா லேகியம் இதெல்லாம் உங்க ஊர்ல கிடைக்காதா இல்ல அதெல்லாம் இருக்கிறது உங்களுக்கு தெரியாதா?

    அனால் திவாரி ஊர்ல நிறைய கிடைக்கும் போலருக்கு. அதான்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...