Friday, November 11, 2011

11-11-11 பற்றி 11 பதிவர்கள் ...

11/11/11....இந்த நாளுக்கு தான் என்னா பில்ட் அப்! இந்த தேதியில் தான் பிள்ளை பெற்று கொள்ள வேண்டுமென உலக அழகி ஐஸ்வர்யா ராய் இன்று பிள்ளை பெற்று கொள்கிறார் என்றால் பாருங்களேன் !

என்னை பொறுத்த வரை ஞாபகத்தில் இருக்கும் படி இன்று செய்த விஷயங்கள் இரண்டு.

1. அலுவலகத்தில் இன்று நடக்கும் ரத்த தான முகாமில் Blood donate செய்தது.

2. 11 /11 /11 பற்றிய இந்த பதிவை, 11 /11 /11 - 11.11-க்கு வெளியிட்டது. :)))

நமது பதிவர் நண்பர்கள் 11 பேரிடம் இது பற்றி கேட்ட போது அவர்கள் சொன்னது இதோ:

கேபிள் சங்கர்
11 பேரில் இவர் படம் தான் ஈசியா கிடைக்குது !!
11-11-11 என்ற இந்த சீக்வென்ஸ்.. ஆச்சர்யமான, எப்போதாவது நிகழ்கிற ஒன்று தான். வெளிநாட்டில் இம்மாதிரியான தேதிகளுக்கு, நாட்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்யத்துவத்தின் காரணம் வேறு. அன்றைக்கு பிறந்த குழந்தைகள் உலகிலேயே தனித்து அறியப்படுவார்கள். அப்படி அறியப்பட வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். என் வாழ்க்கையில் இன்றைக்கு ஏதாவது ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்தாலே ஒழிய, என்னை பொருத்தவரை 11-11-11 மற்றுமொரு நாளே..

ரேகா ராகவன்

11-11-11 இந்த தேதியைப் பற்றி நினைக்கும்போது என்னால் 10-10-10 என்ற தேதியையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் அது என் அப்பா பிறந்த நாள். உலகெங்கிலும் உள்ள கர்ப்பிணிகள் இன்று அதாவது 11-11-11 தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களாம். ஏனெனில் இது ஒரு சிறப்பு தினம் என்பதால். அந்த காலத்தில் இப்படியெல்லாம் நினைத்திருப்பார்களா என்பது தெரியாது. உலகில் எங்காவது இன்று பிறக்கும் குழந்தையின் கையிலோ காலிலோ கூடுதலாக ஒரு விரலோடு பிறந்தால் அது 11-11-11 அன்று 11 விரல்களோடு பிறந்த குழந்தை என்று கூடுதல் கவனத்தோடு கொண்டாடப்பட வாய்ப்புண்டு. பணக்காரர்களுக்கும் நடுத்தர வர்கத்தினர்களுக்கும் வேண்டுமானால் இன்று ஒரு மாறுப்பட்ட நாளாகத் தோன்றலாம், ஆனால் வீதியில், குடிசையில்,கிராமங்களில் அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்வது என்று கவலையோடிருக்கும் ஏழைகளுக்கு இது மற்றுமொரு நாளே!

பெஸ்கி

இதற்கடுத்து 12/12/12 அன்று தான் இது போல விசேஷ நாள் வரும். இந்த தலை முறை மக்கள் தான் இந்த இரு நாளையும் பார்க்க முடியும். அடுத்த முறை நூறு ஆண்டுகள் கழித்து இது போல வரும் போது நாம் யாரும் இருக்க போவதில்லை.

ரகு

ஒன்று க‌வ‌னித்தீர்க‌ளா? அடுத்த‌ வ‌ருட‌ம் டிச‌ம்ப‌ர் 12ம் தேதி வ‌ந்தால், 01/01/01 முத‌ல் 02 /02 /௦02, 03/03 / 03 என 12/12/12 வ‌ரை நாம் க‌ட‌ந்து வ‌ந்திருப்போம். நாளை நான் செய்ய‌ நினைப்ப‌து ஒன்றே ஒன்றுதான். காலை 11 ம‌ணி 11 நிமிட‌ங்க‌ள் 11 நொடிக‌ளை எப்ப‌டியாவ‌து மொபைல் கேம‌ராவில் சிக்க‌வைக்க‌ வேண்டும். ஒரு சூப்ப‌ரான‌ Palindrome கிடைக்கும்.

மிடில் கிளாஸ் மாதவி

அன்றும் வழக்கம் போலவே சூரியன் உதிக்கும்; வழக்கம் போலவே வேலைகளைப் பார்க்க வேண்டியதுதான்! அன்றைய தினம் குழந்தை பெற விரும்பக் காரணம், பிறந்த நாளை மறக்காமல் இருப்பதற்காக இருக்கலாம்!! :-)) (வாலண்டைன்ஸ் டேவில் கல்யாணம் செய்து கொள்வது போல!!)

சரவண குமரன்

எனக்கு அந்த தேதியுள் ஒரு ‘டபுள் பட்டை நாமம்’ - ஒரு குறியீடாக புலப்படுவதால், ஜாக்கிரதையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. :-)

ஆதிமனிதன்

11/11/11 என்று தேதியை எழுதுவதற்கு வேண்டுமானால் பார்க்க வித்தியாசமாகவும் தனித்தும் தெரியும். அவ்வளவுதான். அதை தவிர அன்று பெரிதாக கொண்டாடுவதற்கு வேறு ஒன்றும் இல்லை. அதே போல் இந்த நாளெல்லாம் நினைத்து பார்த்து கொண்டாடுவதற்கு நம்மை போல் போன்றோர்களுக்கு தான் நேரம் இருக்கிறது. இல்லாதவர்களுக்கு எல்லா நாளும் கஷ்ட நாளே. மேலும் எங்களை பொறுத்தவரை அது ஒரு long weekend விடுமுறை நாள். ஆதலால் வழக்கம் போல் எங்கு செல்லலாம் என்ன செய்யலாம் என்று மட்டும் தான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பெயர் சொல்ல விருப்பமில்லை

போன வருஷம் தான் இப்படி ஒரு நாளை சொல்லி இது நூறு வருஷத்துக்கு ஒரு முறை தான் வரும்னாங்க. அது 20/10/ 2010 என நினைக்கிறேன். இப்போ இதா?

இன்னும் ஒன்பது நாள் வெயிட் செய்தால் 20/11/2011 வருமில்லையா? அன்று இரவு 20.21-க்கு பார்த்தால் 20/11/2011 - 20.11 hours என்று வரும். அதை கொண்டாடினாலாவது ஒரு அர்த்தம் இருக்கு.

என்னை பொறுத்த வரை எல்லா நாளுமே திரும்ப வராத விசேஷ நாள் தான். பிறருக்கு உதவ எல்லா நாளுமே ஏற்ற நாள் தான்.

ராஜூ

உங்களை அடையாளப் படுத்த மோகன் என்றும் என்னை அடையாளப் படுத்த ராஜு என்றும் பெயர் வைத்ததைப் போல, அந்த நாளை குறிப்பிட , 11-11-11 என்பது ஒரு அடையாளம் அவ்வளவே . மற்றபடி , அன்றைக்கும் வாயாலேயே சாப்பிட்டு , காலாலேயே தான் நடப்பேன்.

வெங்கட் நாகராஜ்

11/11/11 - தேதி நான் வித்தியாசமாய் ஒன்றும் செய்யப்போவதில்லை. ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு முறை இது போல முதல் பன்னிரண்டு வருடங்களில் வரும். நூறு வருடங்களுக்கு ஒரு முறை தான் வரும் என்பது தவிர வேறு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

அதற்காக இயற்கைக்கு மாறாக அறுவை சிகிச்சை செய்து அன்று குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுவதெல்லாம் தேவையில்லாதது என்பது என் எண்ணம்.

மக்கள் என்ன செய்யப்போகிறார்களோ இல்லையோ, இந்த மீடியாக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து இதைப் பெரிய விஷயமாக்கி விடுகிறார்கள் ! நாளை தில்லியில் கிட்டத்தட்ட 30,000 கல்யாணங்கள் நடக்கப்போகிறது எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் !!!!

ராமலக்ஷ்மி

எங்கள் ஃபைனான்சியல் அட்வைசர் அவ்வப்போது வாழ்த்துக் குறுஞ்செய்திகள் அனுப்பியபடி இருப்பார், தன் சேவையை கஸ்டமர்களுக்கு அடிக்கடி நினைவுறுத்தும் விதமாக. இன்று அவர் அனுப்பியிருந்த செய்தி: “11.11.11.11.11.11. இனி நம் வாழ்வில் கிடைக்க வாய்ப்பில்லாத தருணம். கொண்டாடுங்கள் அதை”. கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த மகனிடம் அதை வாசித்துக் காட்டி, “இப்படி ஒரு தருணத்தை உருவாக்க ரொம்ப வசதியாய் ஆண்டில் இருந்த 20-யை உருகி விட்டார்கள் பார்” என்றேன். அதற்கு அவன் “அதை விடுங்கள். எந்த நொடியுமே வாழ்வில் திரும்பி வராத பொக்கிஷம்தான்” என்றான். சரிதானே:)? எல்லா நொடியையும் போற்றுவோம்!

இந்த வார பதிவுகள் சில:


சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா?

எஸ். ராமகிருஷ்ணன் சந்திப்பு படங்களுடன்

ஏழாம் அறிவு சறுக்கியது ஏன்?

26 comments:

  1. 11.11.11.11.20 க்கு முதல் கமெண்ட்...

    அண்ணே என்னைப்பொறுத்த வரை ஒவ்வொரு நிமிடமும் போனால் மீண்டும் கிடைக்காது...

    ReplyDelete
  2. ஒரு ஆய்வே நடத்தியிருக்கீங்க...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. /பிறருக்கு உதவ எல்லா நாளுமே ஏற்ற நாள் தான். /

    ‘பெயர் சொல்லவிருப்பமில்லை’ சொல்லியிருப்பதை ஆமோதிக்கிறேன் என்றாலும் இந்த நாளை முன்னிறுத்தி இரத்த தானம், நல்ல விஷயங்கள் செய்கிறார்கள் என்றால் அது நடக்கட்டும்:)!

    பெரிய அளவில் இத்தினத்தை இங்கு யாரும் சிலாகிக்காதது ஆறுதலே.

    என் கருத்தைப் பகிர்ந்திருப்பதற்கு நன்றி.

    ReplyDelete
  4. அண்ணா, நீங்க குமுதம் எடிட்டர் ஆவதற்கு எல்லா தகுதியும் உடையவர்!

    ReplyDelete
  5. மோகன் அண்ணா,

    வரலாற்றில் ஒரு இடத்தை பதிவு செய்து விட்டீர்கள்.

    அனைவரின் (11 நபர்களின்) எண்ணப்பகிர்வுகளை தொகுத்தளித்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. Anonymous2:42:00 PM

    முதல் படத்தில் இருக்கும் தொப்பி போட்ட மர்ம நபர்..சாரி..மழலை யார்?

    ReplyDelete
  7. இந்த தினத்தை பற்றி அறிந்திருந்தேன்.இவ்வளவு அமர்க்களம் நடப்பதெல்லாம் தெரியாது. ஐஸ்வர்யா விஷயம்... நிஜமாவேவா? pathology இருந்தாலொழிய சிசேரியன் டெலிவரியை ஆதரிக்காத இனம் நான். நம்புங்க ப்ளீஸ். அவங்களுக்கு என்ன கஷ்டமோ...மீடியா கதை விடுதோ?

    ReplyDelete
  8. Anonymous2:43:00 PM

    இந்தக்குழந்தையை எங்கோ பார்த்ததாக நினைவு....

    ReplyDelete
  9. நமக்கு இதெல்லாம் நம்பிக்கை இல்லைங்கோ...(அப்போ இதற்காகத்தான் அந்த அழைப்பா.... இரவுதான் பார்த்தேன். நேரம் தாண்டிவிட்டது. அதனால் பேசமுடியவில்லை...)

    ReplyDelete
  10. என்னை பொறுத்த வரை நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்...இந்த பிளாக்குக்கு நான் கமெண்ட் போடுறேன்..

    அவ்வளவுதான்......

    ReplyDelete
  11. சாதாரணமான இன்னொரு நாள். அந்த குறிப்பிட்ட நேரம் டிராபிக்கில் மாட்டி பேகம்பேட் சிக்னலில் முதலமைச்சருக்கு வழிவிட்டு உட்கார்ந்திருந்ததைத் தவிர வேறெதுவும் பெருசாக இல்லை. :)

    இங்கே அந்த நேரம் ராகுகாலத்தில் அமைகிறது என்று பேசிக்கொண்டு அதனால் நல்லதில்லை என்று வேறு சொன்னார்கள். :))

    ReplyDelete
  12. அடுத்த வருடமும் இதேபோல் ஒரு நாள் வருகிறது.
    12-12-'12
    பகிர்வுக்கு நன்றி தோழரே....

    ReplyDelete
  13. 10.10.10 my birthday also

    ReplyDelete
  14. முதல் கமென்ட் டைமோடு போட்டதற்கு நன்றி சங்கவி
    **
    கவிதை வீதி சௌந்தர்: ஆள் ஆளுக்கு ஒவ்வொன்னு சொல்லிருக்காங்க. ஆய்வு அது இதுன்னு பயமுறுத்தாதீங்க
    **
    ராம லட்சுமி : நன்றி! எங்கள் அலுவலகத்தில் ரத்த தான் முகாம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை விடாமல் தொடர்ந்து நடத்துவார்கள். அப்படி இன்று அமைந்தது தற்செயலே.

    ஆனால் இன்று ரத்த தானம் செய்ததற்காக அவர்கள் தந்த -certificate என்றும் என்னிடம் இந்த தேதியின் நினைவாக இருக்கும் :))

    ரத்த தானம் செய்தேன் என எல்லாம் ஏன் எழுதுறீங்க என ஹவுஸ் பாஸ் சற்று டோஸ் விட்டார். :))
    **

    ReplyDelete
  15. தேவா: ஏம்பா இந்த கிண்டலு?
    **
    சத்ரியன்: நன்றிங்கோ
    **
    சிவா குமார்: ஆம் அந்த மர்ம நபர் தன்னை யூத் என்று சொல்லி கொள்கிறார். இதுக்கு ஒரு சொல்யூஷன் கிடைக்கணும் :))
    **
    Dr. வடிவுக்கரசி: அப்படி தான் செய்திகளில் படித்தோம். ஐஸ்வர்யாவிற்கு இன்று குழந்தை பிறந்ததா என தெரியலை

    ReplyDelete
  16. ரத்த தானத்திற்கு முதலில் ஒரு சபாஷ்!!

    என்னையும் கருத்து கேட்டு அதைப் போடவும் போட்டதற்கு மிகவும் நன்றி!
    பெசொவியின் கருத்து ஓஹோ!

    ReplyDelete
  17. அன்புமணி: ஆம் அதற்கு தான் அழைத்தேன். நன்றி
    **
    மாங்கனி நகர செல்லக் குழந்தை: வித்யாசமான பெயர்,. நன்றி
    **
    புதுகை தென்றல்: ஹும். நான் கூட சரியா அந்த நேரத்துக்கு ஹவுஸ் பாசுக்கு போன் செய்தேன். அவங்க போன் எடுக்கலை. அப்புறம் அஞ்சு நிமிஷம் கழிச்சு பேசினாங்க. ஆக மொத்தம் அந்த குறிப்பிட்ட நிமிடத்தில் நான் ஏமாந்துட்டேன்
    **
    தமிழன் வீதி: ஆம் அடுத்த வருடமும் இப்படி ஓர் நாள் வருகிறது நன்றி
    **
    சிவா: நன்றி

    ReplyDelete
  18. வித்தியாசம் பிளஸ் சுவாரசியம்!

    ReplyDelete
  19. பதினோறு பதிவர்களில் நானும் ஒரு பதிவர்... மகிழ்ச்சி...

    எத்தனை உழைத்து இருக்கீங்க இந்த பதிவினை இடுவதற்கு... வாழ்த்துகள்.... ரத்த தானம் செய்தமைக்கும் சேர்த்து தான்....

    ReplyDelete
  20. என்ன பாடு பட்டாலும் செலவழிந்த நேரம் கிடைக்காது இதில் இந்த நாள் இன்னொரு இனிய நாள்

    http://sparkkarthikovai.blogspot.com/2011/11/002.html#comments

    ReplyDelete
  21. மாதவி: மகிழ்ச்சி நன்றி
    **
    ரிஷபன் சார்: தொடர்ந்து வந்து ஊக்குவிக்கிறீர்கள் மகிழ்ச்சி நன்றி
    **
    வெங்கட்: நான் எங்கே இதற்காக பெரிதாய் உழைத்தேன். நண்பர்கள் சொன்ன பதிலை compile செய்து போட்டுள்ளேன். அவ்ளோ தான் !! நன்றி
    **
    ஸ்பார்க் கார்த்தி : உண்மை. நன்றி

    ReplyDelete
  22. இப்போ ச‌ரியா 12-11-11 12:00

    ReplyDelete
  23. இந்த வேள்வியை என்னிடம் கேட்காமல் விட்டுவிடீர்களே :(. 11/11/11 எனது மகனின் பிறந்தநாள் :)

    ReplyDelete
  24. ரகு: ம்ம் நடத்துங்க
    **
    அடடா ரோமியோ தெரியாமல் போயிடுச்சே !!

    ReplyDelete
  25. ரகு: ம்ம் நடத்துங்க
    **
    அடடா ரோமியோ தெரியாமல் போயிடுச்சே !!

    ReplyDelete
  26. நல்லதொரு தொகுப்பு..
    இப்படி நானும் ஒரு பதிவு போட்டிருக்கலாம்.. தொடர்ந்து அலுவல் நிமித்த வெளியூர் பயணம்..
    மற்றபடி இந்த தேதியால் எந்த விதத்திலும் உசத்தியாக ஒன்றுமில்லைஎன்பது என்னுடைய கருத்து.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...