Tuesday, November 29, 2011

வானவில் :யுவராஜ் சிங் : தம்பி வெட்டோத்தி சுந்தரம்

யுவராஜ் சிங்

நடந்து முடிந்த கிரிக்கெட் உலக கோப்பையில் மேன் ஆப் தி சீரிஸ் வாங்கிய யுவராஜ் சிங் அதன் பின் அனுபவித்த உடல் மற்றும் மன கஷ்டம் வாசிக்க மிக கஷ்டமாய் உள்ளது ! உலக கோப்பையின் போதே தொடர் இருமல் இருந்திருக்கிறது. பின் டெஸ்ட் செய்து பார்க்க லங்க்சில் பெரிய கட்டி இருப்பது தெரிந்து கேன்சர் ஆக இருக்கும் என சந்தேகித்துள்ளனர். மூன்று மாதத்துக்கும் மேல் கேன்சர் தான் என்கிற மன வேதனை உடன் இருந்துள்ளார். பல சோதனைகளுக்கு பிறகு இப்போது தான் அது கேன்சர் அல்ல, கட்டி தான், அகற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர். ஆஸ்திரேலியா போகாததற்கு இந்த ட்ரீட்மேன்ட்டும் காரணமாம் ! விளையாட்டு இருக்கட்டும்.. வாழ்க்கை அதை விட பெரியது !யுவராஜ் நல்ல உடல் நலத்துடன் இருந்தால் சரி.. அவர்கள் பெற்றோருக்கு ஒரே மகன் என நினைக்கிறேன். Get well soon Yuvaraj Singh !

பார்த்த படம்: தம்பி வெட்டோத்தி சுந்தரம்

கொஞ்ச நாள் முன்பே பார்த்து விட்டாலும் இப்போது தான் பகிர்கிறேன். ஆரம்பத்தில் படம் சற்று வித்யாசமாக இருப்பது போல் தெரிந்தது. ஆனால் கடைசி அரை மணி நேரம் அவர்கள் பிழிந்த சோகம் மனதை நோக அடித்து விட்டது ! பழைய காலத்து பீம்சிங் படங்கள் தோற்றது போங்கள் ! படத்தில் ரசித்த இரு விஷயம் கரனின் நடிப்பும், அஞ்சலியின் அழகும். கரன் அந்த கேரக்டரை மிகை இன்றி செய்துள்ளார்.



அஞ்சலி.. !!! அனுஷ்கா பெரிய தலைவி என்றால் அஞ்சலி சின்ன தலைவி ஆகி விட்டார். கற்றது தமிழ் முதல் ரசித்து வந்தாலும் கூட, அவருக்கு சின்ன தலைவி என்கிற பதவி உயர்வு எங்கேயும் எப்போதும் முதல் தான் கிடைத்துள்ளது.

மற்றபடி படம் பார்ப்பதானால், அழுவதற்கு நான்கைந்து கை குட்டை உடன் செல்லுங்கள். அல்லது கடைசி அரை மணிக்கு முன் வெளியே வந்து விடுங்கள்!

பூனை குட்டியும் குழந்தைகளும்

சமீபத்தில் நண்பனின் குழந்தை பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்றிருந்தேன். மழை என்பதால் வீட்டில் யாரையும் கூட்டி போகலை. கல்லூரி கால நண்பர்கள் மனம் விட்டு சிரித்து பேசி கொண்டிருந்தது செம நிறைவாக இருந்தது. நாங்கள் கல்லூரியில் சந்தித்து நண்பர்களாகி 23 வருடங்கள் ஆகின்றன. 25 வது வருடத்தில் நிச்சயம் நினைவில் இருக்கிற மாதிரி ஏதேனும் செய்வோம் என நினைக்கிறேன்.

கிளம்பும் போது குழந்தைகள் செடி அருகே நின்று கொண்டு எதையோ பார்த்து கொண்டிருந்தன. என்ன என்று எட்டி பார்த்தால் பூனை குட்டி ஒன்று இருந்தது. "தூக்கலாமா?' என நான் கேட்க, குழந்தைகள் முகத்தில் செம குஷி ! மெதுவாக பூனை குட்டியை தூக்கியதும் கிட்ட தட்ட பத்து குழந்தைகளும் சூழ்ந்து கொண்டன. "அங்கிள். என் கையில் குடுங்க. நான் தொட்டு பாக்கணும் " என்றன. ஒவ்வொரு குழந்தையும் தொட்டதால் நெளிந்தது பூனை குட்டி. அப்போது ஒரு குட்டி பாப்பா வைத்திருந்த ஐஸ் கிரீம் கீழே கொட்ட, பூனை குட்டியை மெதுவாக இறக்கி விட்டேன். அது ஜம்மென்று ஐஸ் கிரீம் சாப்பிட ஆரம்பித்து விட்டது. குழந்தைகள் மகிழ்ச்சியோடு அதை வேடிக்கை பார்க்க, பெரிய கூட்டம் சுற்றி இருந்தும் ஐஸ் கிரீம் சாப்பிடும் குஷியில் பூனை குட்டி நகர வில்லை. மழை வலுக்கும் முன் குழந்தைகளை விட்டு பிரிய மனமின்றி நான் கிளம்பினேன்...

இனி தினம் தினம் பதிவு இல்லை.. ஏன்?

கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து நம் ப்ளாகில் பதிவுகள் வருவதை பார்த்திருப்பீர்கள். யுடான்ஸ் வாய்ப்பில் தினம் பதிவு எழுத துவங்கியது. பின் அடுத்த இரு வாரங்கள் தொடர்ந்தது. நம்மாலும் தினம் பதிவு எழுத முடியும் என்பதும், அப்படி எழுதினால், வாசிக்கவும், ஹிட்ஸ், பின்னூட்டம் நிறைய கிடைப்பதும் புரிந்தது. முன்பெல்லாம் வாரம் ரெண்டு பதிவு தான் என strict-ஆக இருப்பேன். இந்த மூன்று வாரங்களில் அநேகமாய் தினம் ஒரு பதிவு போட்டுள்ளேன். ஆனால் இனி இதனை தொடர போவதில்லை.

எழுத விஷயங்கள் இல்லாமல் இல்லை. இந்தியா போன்ற நாட்டில் விஷயங்களுக்கா பஞ்சம்? நேரமும் பெரிய பிரச்சனை இல்லை. அநேகமாக நான் எழுதிய பதிவுகள் அனைத்தும் ஒரு மணி நேரத்தில் எழுத பட்டவையே. தினம் எழுதுவதை நிறுத்துவதன் காரணம் வேறு.

பதிவு எழுதி முடித்த பின் அடுத்த பல மணிநேரத்துக்கு, அவ்வப்போதாவது என்ன response-வந்தது என்பதை பார்ப்பதில் செலவிடுகிறோம். சும்மா சும்மா இணையம் பக்கம் வருகிறோம். இது சுத்தமாக பிடிக்க வில்லை. ஆனால் முழுதும் avoid செய்ய முடியலை. இது வேலைக்கும் குடும்பத்துக்கும் இடைஞ்சல் ஆக உள்ளது. எனவே தான் தினம் பதிவு எழுத போவதில்லை.

முன்பு போல் வாரம் இரண்டுடன் என்று நிறுத்தி கொள்ள போவதுமில்லை. தினமும் எழுத போவதுமில்லை. இயலும் போது எழுதுவேன்... வழக்கம் போல் நீங்கள் ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் !

விகடன் "வலை பாயுதே"வில் ரசித்த ட்விட்டர்

பெண்களுக்கு நல்ல புருஷன் கூட கிடைச்சுடுவான்; ஆனா நல்ல டெய்லர் ?? ம்ஹும் # எல்லா டெய்லரையும் திட்டுறாங்கப்பா !!

நாட்டி கார்னர்

நாட்டியின் படம் அல்லது வீடியோ பகிர சொல்லி சில நண்பர்கள் அவ்வப்போது கேட்டதால் சில வீடியோக்கள் எடுத்துள்ளோம்.
இந்த இரண்டரை நிமிட வீடியோ முழுக்க பார்க்கா விட்டாலும் முதல் ஒன்னரை நிமிடங்கள் மட்டும் பார்க்கலாம் !
   


அய்யாசாமி

Mrs. அய்யாசாமி இப்போது அலுவலகத்தில் லெண்டிங் லைப்ரரியில் சேர்ந்திருக்கார். இதனால் விகடன், குமுதம், கல்கி, ஜூவி என புத்தகங்கள் நிறைய வீட்டுக்கு வர ஆரம்பிச்சிடுச்சு. முன்னெல்லாம் அய்யாசாமி புத்தகம் படிச்சா ஹவுஸ் பாஸ் " என்ன இது எப்ப பார்த்தாலும் புக்கை எடுத்து வச்சிக்கிட்டு உட்கார்றது !" என்பார். இப்போது சற்று மாற்றம் ! மேடம் கொண்டு வந்த புக்குகளை படிப்பதால், மறு நாள் அலுவலகத்தில் திரும்ப தரணுமே என Mrs . அய்யாசாமி ஒன்றும் சொல்வதில்லை. இதனால் அய்யாசாமி செம குஷியா தினம் கதை புக் படிக்கிறார். இன்னும் எவ்ளோ நாளைக்கோ.. பாவம் என்ஜாய் பண்ணிக்கட்டும். ஒரு வேளை Mrs . அய்யாசாமி இதை படிச்சிட்டு கூட " மாறுதல்" வரலாம் !! (இது தான் சொந்த செலவில் சூனியம் வச்சிக்கிறதா?)

17 comments:

  1. பூனைக்குட்டியும் குழந்தைகளும் அழகான பகிர்வு.

    முன்னர் சொன்னது உண்மைதான். நாட்டி என்ன கூப்பிட்டாலும் கண்டு கொள்ளாமல் தன் காரியமே கண்ணாக:)!

    ReplyDelete
  2. Anonymous12:53:00 PM

    தம்பி வெட்டொத்தி சுந்தரம் விமர்சனம் நறுக்கென்று உள்ளது. எனக்கு படம் பார்த்து தலைவலியே வந்து விட்டது. நீங்கள் சொன்னது உண்மை தான்ணே.

    ReplyDelete
  3. வீடியோவைவிட, பேக்ரவுண்ட் ஆடியோ நல்லாருக்கு!! ;-))))))))

    ReplyDelete
  4. //இனி தினம் தினம் பதிவு இல்லை.. ஏன்? //

    ஹி ஹி...இங்கும் அதே கதை தான். அதனால் தான் கடந்த சில நாட்களாக நானும் பதிவு எதுவும் போடவில்லை. சில சமயம், பதிவு எழுதுவதற்கு நாம் அடிக்ட் ஆகி விடுகிறமோ என்ற எண்ணம் வந்து விடுகிறது. வீட்டையும் வேலையையும் மேனேஜ் செய்வதை போல் நாம் பதிவு எழுதுவதையும் இனி மேனேஜ் செய்ய வேண்டும் போல.

    ReplyDelete
  5. பாவம் யுவராஜ் சீக்கிரம் குணமாக வேண்டும்.

    பூனைக்குட்டி விஷயம் அழகாக கொடுத்துள்ளீர்கள்.

    டி.வி வசனத்தை ரசித்துக்கொண்டே நாட்டி சாப்பிடும் அழகே தனிதான்.

    நல்ல அலசல்.

    ReplyDelete
  6. சின்ன தலைவி அஞ்சலி வாழ்க.... அதுக்குள்ள யாருயா கட்சி ஆரம்பிக்கிறது?


    நம்ம தளத்தில்:
    அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?

    ReplyDelete
  7. வானவில் வாரம் ஏழு நாட்கள் வர வேண்டும் என்றில்லை. எப்போதேனும் வந்தாலும் வண்ணமயமாக இருக்கின்ற பட்சத்தில் நாங்கள் ரசிப்போம். வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. ஒரு குட்டி பாப்பா வைத்திருந்த ஐஸ் கிரீம் கீழே கொட்ட, பூனை குட்டியை மெதுவாக இறக்கி விட்டேன். அது ஜம்மென்று ஐஸ் கிரீம் சாப்பிட ஆரம்பித்து விட்டது. குழந்தைகள் மகிழ்ச்சியோடு அதை வேடிக்கை பார்க்க, பெரிய கூட்டம் சுற்றி இருந்தும் ஐஸ் கிரீம் சாப்பிடும் குஷியில் பூனை குட்டி நகர வில்லை.

    லவ்லி..

    ReplyDelete
  9. விகடனுக்கு ஆதீனம் (மதுரை) மாதிரி நம் வீடு திரும்பலுக்கு அய்யாசாமி தானே..இடையில் கொஞ்ச நாளாய் காணோமே..? எனிவே, இப்போ வந்தாச்சு!! பச்சையின் வீடியோ ரசித்தேன்.
    என்ன இருந்தாலும், கடந்த மூன்று வாரங்களாக, நீங்கள் எழுதிய வேகத்திற்கு ஈடு கொடுத்து என்னால் படிக்க முடிய வில்லை, என்பதை கூறியே ஆக வேண்டும். இந்த எக்ஸ்பிரஸ் வேகம் உங்களுக்கு புத்துணர்வு தந்திருக்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  10. நாட்டி வீடியோ - கருமமே கண்ணாயினார்... :) பேக் கிரவுண்ட்-ல சீரியல் சின்சியரா ஓடிட்டு இருக்கு!

    அய்யாசாமி - சொந்த செலவுல எதுக்கு சூன்யம்.... :)

    ReplyDelete
  11. யுவ‌ராஜ் சிங் ‍- நானும் வாசித்தேன். உல‌க‌க்கோப்பை வெல்ல‌ இவ‌ரும் முக்கிய‌மான‌ கார‌ண‌ம். ந‌ல‌முட‌ன் மீண்டு(ம்) வ‌ர‌ வேண்டும்.

    எங்கேயும் எப்போதும் பார்த்த‌ பின்பு, என‌க்கும் அஞ்ச‌லியை பிடிக்க‌ ஆர‌ம்பித்திருக்கிற‌து. அத‌ற்காக‌ த‌ம்பி வெட்டோத்தி சுந்த‌ர‌ம் ப‌ட‌ம் பார்க்கும் தைரிய‌மெல்லாம் என‌க்கில்லை :)

    //இனி தினம் தினம் பதிவு இல்லை.. ஏன்?//

    ஒரு வ‌கையில் ந‌ல்ல‌ முடிவுதான் மோக‌ன். பொழுதுபோக்கிற்காக‌ ஆர‌ம்பித்து, அதிலேயே ஊன்றி, பின்பு ஒரு அடிக்ட் மாதிரி ஆகிவிடுவ‌தை உண‌ர‌முடிகிற‌து.

    இப்போதெல்லாம், எழுத‌வேண்டும் என்று தோன்றும்போது ம‌ட்டுமே எழுதுகிறேன்.

    புத்த‌க‌ம் வாசிப்ப‌து ந‌ம்மை மேலும் செம்மைப‌டுத்துகிற‌து என்ப‌து என் ந‌ம்பிக்கை. மிஸ்ட‌ர் & மிஸ‌ஸ் அய்யாசாமி..இருவ‌ரும் தொட‌ர்ந்து வாசியுங்க‌ள். எக்கார‌ண‌ம் கொண்டும் இப்ப‌ழ‌க்க‌த்தை நிறுத்திவிடாதீர்க‌ள்.

    ReplyDelete
  12. வெட்டோத்தி என்றால் என்ன?
    தினம் ஒரு பதிவா? சரிதான்!
    எழுதுவதில் ஒரு சுகம் இருப்பது உண்மை தான். அதுவே சுமையாகி விடாமல் பார்த்துக் கொள்வதும் ஒரு கலை.
    முடிந்த போது எழுதுங்கள்.

    ReplyDelete
  13. வானவில் வழக்கம் போல் சுவாரஸ்யம். ஐஸ்கிரீம் பூனைக்குட்டியையும் நாட்டியையும் ரசித்தேன்!

    ReplyDelete
  14. நன்றி ராம லட்சுமி. நாட்டிக்கு சாப்பிடுவதும், எதையாவது கொத்துவதுமே பொழுது போக்கு.
    **
    செந்தில்: நன்றி. சினிமா நம்மை குஷி படுத்த தான். ஆனால் இந்த படம் பார்த்து முடிச்சதும் ஒரு மாதிரி ஆகிடுறோம் .. ஏண்டா பாத்தோம்னு இருக்கு
    **
    ஹுஸைனம்மா said...

    வீடியோவைவிட, பேக்ரவுண்ட் ஆடியோ நல்லாருக்கு!! ;-))))))))

    ரைட்டு நன்றி
    **

    ReplyDelete
  15. //டி.வி வசனத்தை ரசித்துக்கொண்டே நாட்டி சாப்பிடும் அழகே தனிதான்.//
    நன்றி ராம்வி
    **
    பிரகாஷ்: மகிழ்ச்சி நன்றி
    **
    சிவ குமார்: நன்றி நண்பா
    **
    ரிஷபன் சார்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  16. நன்றி டாக்டர் வடிவுக்கரசி. ஐயா சாமி வாரா வாரம் இல்லா விடினும் அவ்வபோது வருவார்
    **
    நன்றி வெங்கட். பின்னாடி கலைஞர் டிவியில் வெள்ளி இரவு போடும் புது படம் ஓடுது !
    **
    ரகு:
    //பொழுதுபோக்கிற்காக‌ ஆர‌ம்பித்து, அதிலேயே ஊன்றி, பின்பு ஒரு அடிக்ட் மாதிரி ஆகிவிடுவ‌தை உண‌ர‌முடிகிற‌து.//
    உண்மை. வாசிக்கும் பழக்கம் குறித்து சொன்னதும் கூட தான்
    **
    அப்பா துரை: வெட்டோத்தி என்பது நாகர்கோவில் அருகே உள்ள ஊர் பெயர் என நினைக்கிறேன்
    **
    நன்றி மாதவி

    ReplyDelete
  17. உங்களுடைய இந்த பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கேன்
    http://blogintamil.blogspot.co.uk/2014/05/blog-post.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...