அஷ்வின் முதல் டெஸ்ட் சீரிஸில் இரண்டு மேன் ஆப் தி மேட்ச் மற்றும் மேன் ஆப் தி சீரிஸ் வாங்கும் அளவு அசத்துவார் என நினைக்கவே இல்லை. ஆனாலும், ஆனாலும்.. அந்த ஒரு ரன்னை எடுக்க தவறினாரே !
இப்படி கடைசி பந்துகளில் வெற்றியை தவற விடுவது அவருக்கு முதல் முறை அல்ல ! இதே போல 2010-ஆம் ஆண்டு IPL -ல் சென்னை Vs பஞ்சாப் ஆட்டத்தில் சென்னை கடைசி ரெண்டு பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி. அஷ்வின் தான் பேட்டிங். ஐந்தாம் பந்து கட்டை போட்டார். கடைசி பந்தில் அவுட். இரண்டு பந்தில் ஒரு ரன் எடுக்காமல், மேட்ச் சூப்பர் ஓவர் சென்றது. அதில் பஞ்சாப் சென்னையை நைய புடைத்து வென்றது. இதனை நேரில் பார்த்து மனம் நொந்தவர்களில் நானும் ஒருவன். அது பற்றி இந்த பதிவில் எழுதி இருக்கிறேன் !
Dramatic Draw ஆன மும்பை டெஸ்ட் பற்றி சில துளிகள்:
முதல் இரு நாட்களும் மேற்கு இந்திய தீவுகள் பேட்டிங் செய்தது.. பிரேவோ பாட்டிங் பார்க்க லாரா போலவே உள்ளது. இவர் லாராவின் ஒன்று விட்ட தம்பி (Cousin பிரதர்) என்கிறார்கள். இடது கை ஆட்டக்காரர் என்பதோடு, உயரம், நடை, ஷாட்கள் இப்படி பல ஒற்றுமைகள். லாராவுடன் இவ்வளவு சீக்கிரம் ஒப்பிடுவது தவறு என்றாலும் லாரா என்கிற stylish batsman-ஐ நாம் மிஸ் செய்கிறோம் அல்லவா? அவர் நினைவுகளை இவர் மீண்டும் வர வைக்கிறார் !
இந்தியா முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் துவங்கிய பின் சச்சின் செஞ்சுரி பற்றி மட்டுமே எதிர் பார்ப்பு இருந்தது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் சச்சின் 67 நாட் அவுட் என்றதும் இரவோடு இரவாக மறு நாள் அவர் நூறாவது செஞ்சுரி அடித்த உடன் வெளியிட பதிவு தயார் செய்தேன். நான்காம் நாள் காலை அவர் மிக வேகமாக ஆட, பதிவிற்கு கடைசி கட்ட எடிட் செய்து வெளியிட தயாராகும் போது, 94-ல் அவுட் ! எனக்கு செம மூட் அவுட் ! பதிவை வெளியிடாதது பிரச்சனை இல்லை. அவர் என்னிக்கு நூறாவது செஞ்சுரி அடிச்சாலும் நான் வெளியிடத்தான் போறேன் ! (யாருப்பா அது ஐயையோன்னு கத்துனது?) சச்சின் மும்பையில் நூறாவது செஞ்சுரி அடிக்காதது தான் ஏமாற்றம் !அடுத்து வரும் ஒரு நாள் போட்டிகளும் விளையாடாத போது இன்னும் எவ்வளவு நாள் நூறாவது செஞ்சுரிக்கு காத்திருக்கணுமோ ?
விராட் கோலி இரண்டு இன்னிங்க்சிலும் நன்கு ஆடினார். கோலி முதல் இன்னிங்க்சில் அவுட் ஆனதும் அஷ்வின் ஆட்டம் செம சூடு பிடித்தது. எட்டாவதாக இறங்கும் இவர் செஞ்சுரி அடித்தது ஆச்சரியம் ! சச்சின் செஞ்சுரி எதிர் பார்த்த நாம் அஷ்வின் செஞ்சுரியில் மகிழ்ந்தோம் !
எப்படி இருப்பினும் அஷ்வினின் அந்த செஞ்சுரி இந்தியாவை தோல்வியிலிருந்து தவிர்த்தது என்பது உண்மை ! அவரின் இந்த ஆட்டத்தில் மகிழாதோர் ஹர்பஜன் மற்றும் அவர் நலம் விரும்பிகளாக மட்டுமே இருப்பார்கள்.
ஒன்றரை நாளுக்கு குறைவாக உள்ள நிலையில் மீதம் ஆளுக்கு ஒரு இன்னிங்க்ஸ் ஆடணும் என்றதும் மேட்ச் டிரா என நினைத்தோம். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு இந்திய தீவு 81க்கு 2 விக்கெட் இழப்பு. ஓவர் ஆள் லீட் கிட்டத்தட்ட 200 ரன்கள்.
ஐந்தாவது நாள் ஆட்டம் துவங்கி அடுத்த 42 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமுள்ள எட்டு விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியாவிற்கு 243 ரன்கள் என்ற வெற்றி இலக்கு. ஓஜா மிக அருமையாக பவுலிங் போட்டு ஆறு விக்கெட் வீழ்த்தியது முக்கிய காரணம் !
கடைசி நாள் பிட்சில் 243 ரன் எடுப்பது சற்று சிரமம் தான். ஆனால் கடைசி வரை இந்த ஸ்கோரை எடுக்க போராடியதற்கு இந்திய அணியை பாராட்ட தான் வேண்டும்.
சேவாக் 60 , லக்ஸ்மன் 34 என ஆளாளுக்கு தங்கள் பங்களிப்பை தந்தாலும் இறுதி வரை முன்னணி பேட்ஸ்மன் நின்று ஆடாதது தான் இந்த ரிசல்ட்டுக்கு முக்கிய காரணம் ! சச்சின் மீண்டும் ஒரு சொதப்பல் அவுட்
கோலி மிக பொறுப்பாக ஆடினார். அவர் அவுட் தான் நிச்சயம் டர்னிங் பாயின்ட்! பின் இஷாந்த் , அஷ்வின் ஆடிய போதும் ஜெயிக்க வாய்ப்பு பிரகாசம் என்றே தோன்றியது. பத்து ரன் எடுத்த இஷாந்த் அவுட் ஆன போது நாம் எட்டு பந்தில் 4 ரன் எடுக்க வேண்டும்.
ஒரு பந்தை கட்டை போட்ட ஆரூண் கடைசி பந்தில் ஓவர் காஜ் அடித்தார். கடைசி ஓவர். மூணு ரன் எடுத்தால் வெற்றி. மூன்று பந்துகளை வீணாக்கினார் ஆரூண். நான்காவதில் ஒரு ரன் எடுக்க, ஐந்தாவது பந்தை கட்டை போட்டார் அஷ்வின். (அதில் அவர் அவுட் ஆனால் அடுத்த பந்தில் இந்தியா ஆள் அவுட் ஆக வாய்ப்பு உண்டல்லவா?) கடைசி பந்தை பவுண்டரி அருகே அடித்தாலும் ஒரு ரன் மட்டும் ஓடி ரன் அவுட் ஆனது கொடுமை ! இந்த ரன் பற்றி அஷ்வின் தனது ட்வீட்டில் இப்படி கேட்டிருக்கிறார்:
"Can anyone tell what differently cud have been done??instead of saying cud have run the 2...moment I completed 1 the throw was over my head." - Ashwin.
ம்ம் எனது எனது வருத்தமெல்லாம் மேட்சை நேரில் பார்த்த மும்பை மக்களை நினைத்து தான். எவ்வளவு மனம் நொந்து திரும்ப போவார்கள் ! நான் மேட்ச் கடைசி அரை மணி மட்டும் தான் டிவியில் பார்த்தேன். மற்ற நேரம் கணினியில் வேலை பார்த்தவாறே Cricinfo-ல் அவ்வப்போது ஸ்கோர் கவனிப்பேன்.எனவே ரிசல்டுக்காக அதிக அப்செட் இல்லை !
இந்த மேட்ச் இந்தியா வென்றிருந்தால் நாம் சில மாதங்களில் மறந்திருப்போம். இப்படி ஒரு கொடுமையான டிரா என்பதால் பல ஆண்டுகள் கழித்தும் "அஷ்வின் ரெண்டு ரன் அடிச்சிருக்கணும்" என்று சொல்லி கொண்டிருப்போம் !
கடைசியில் என்ன நடக்கும் என்று தெரியாத, ஊகிக்க முடியாத இத்தகைய ஆண்டி கிளைமாக்ஸ் தான் கிரிக்கெட்டை தொடர்ந்து பார்க்க வைக்கிறது !
Indians இந்தியாவுக்குள்ள மட்டும் ஆடிகிட்டே இருந்தா எத்தனை மேட்ச் வேணுமின்னாலும் ஜெயிக்கலாம், டெஸ்டில் முதலாவது அணியாகவும் வரலாம், உலகக் கோப்பையும் வெல்லலாம். வெளியே [South Africa, New Zealand, England, Australia wherever it is] போனா தீர்ந்தது கதை டவுசர் கிழிஞ்சிடும்.
ReplyDeleteமாட்ச் பார்க்கவில்லை.கடைக்கு சென்றிருந்தேன்.வந்து இப்பதான் செய்தி பார்த்தேன்.நீங்க அதற்குள் பதிவு போட்டு விட்டீங்களே!!
ReplyDeleteஇந்திய மண்ணில் ஆடுவது பெரிசில்லை,வெளிநாடுகளில் ஆடி ஜெயிக்க வேண்டும்.
//இந்த மேட்ச் இந்தியா வென்றிருந்தால் நாம் சில மாதங்களில் மறந்திருப்போம். இப்படி ஒரு கொடுமையான டிரா என்பதால் பல ஆண்டுகள் கழித்தும் "அஷ்வின் ரெண்டு ரன் அடிச்சிருக்கணும்" என்று சொல்லி கொண்டிருப்போம் !//
ஆமாம்.. இந்த நிகழ்வு மனதை அரித்துக்கொண்டுதான் இருக்கு. .
// (யாருப்பா அது ஐயையோன்னு கத்துனது?) //
ReplyDeleteஅது.. நான்தான் சார்..
அதென்னவோ தெரியல.. இந்திய-வேஸ்ட் இண்டீஸ் மேட்ச் ரிசல்ட் எப்படி இருந்தாலும் எனக்கு வருத்தம் இருக்காது. அதாவது இந்திய அணிக்கப்புறம், வேஸ்ட் இண்டீஸ் டீம் மீது எனக்கு ஒரு சாஃப்ட் கார்னர் எண்ணம் இருப்பதென்னவோ உண்மைதான்.
கிரிக்கெட்ல கேம் ஸ்பிரிட்னா என்னான்னு இவங்ககிட்ட கத்துக்கணும்..
உதா : கடைசி ஓவருல அஷ்வின ரன் அப் செய்யும் பொது பவுலர் ஸ்டாப் பண்ணி அஷ்வின வார்ன் பண்ணது..
ஆஸ்திரேலிய, பாகிஸ்தானா இருந்தா பந்த விக்கெட் மேல போட்டு அவுட் பண்ணிருப்பாங்க.
இந்த பாயிண்ட நீங்க எழுதாம விட்டுட்டீங்களே.. !!
//இன்னும் எவ்வளவு நாள் நூறாவது செஞ்சுரிக்கு காத்திருக்கணுமோ ? //
ReplyDeleteகொஞ்ச நாள்தான்.........against Australia in Australia :-)
பின்னூட்டமிட்டவர்களுக்கு:
நம் அணி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது கொஞ்சம் சொதப்புவது உண்மைதான். ஆனால், நம் நாட்டில் விளையாடும்போதும் நன்றாக விளையாடினால்தான் வெற்றிபெற முடியும். ஏன் உள்ளூர் வெற்றியை குறைத்து மதிப்பீடுகிறீர்கள்?
ashWIN :(
ReplyDelete\\நம் அணி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது கொஞ்சம் சொதப்புவது உண்மைதான். ஆனால், நம் நாட்டில் விளையாடும்போதும் நன்றாக விளையாடினால்தான் வெற்றிபெற முடியும். ஏன் உள்ளூர் வெற்றியை குறைத்து மதிப்பீடுகிறீர்கள்? \\
ReplyDeleteதென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பையில் முதல் ரவுண்டிலேயே வெளியே வந்தவர்கள், இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையில் சாம்பியன். இங்கிலாந்தில் நடந்த டெஸ்டு மேட்சுகளில் மண்ணு, தவிடு எல்லாம் தின்று விட்டு வந்த அடுத்த ஒரு மாதத்திலேயே இந்தியாவில் அதே இங்கிலாந்தையும், மேற்கிந்தியத் தீவுகள் அணியையும் பந்தாடுகிறார்கள். அதே ஆட்கள் தான் ஆடுகிறார்கள், திறமையும் ஒரு மாதத்தில் ஆஹா ஓஹோ என்று வளர்ந்து விடாது. மேலும் இந்திய அணியினர், நியூசிலாந்து, ஆஸ்திரேலிய பிட்சுகளில் ரன் எடுக்கவே மிக்க சிரமப் படுகின்றனர். நல்ல ஆட்டக் காரன் என்றால் எல்லா பிட்சுகளிலும் ஆட வேண்டும். சொந்த நாட்டில் சாதகமான பிட்ச்சை ரெடி செய்து வைத்துக் கொண்டு மற்றவனை இங்கே வா பார்க்கலாம் என்பது வீரமல்ல. அல்லது, கிரிக்கெட் ஆட்டத்தின் அடிப்படையிலேயே கோளாறு என்று அர்த்தம்.
//இங்கிலாந்தில் நடந்த டெஸ்டு மேட்சுகளில் மண்ணு, தவிடு எல்லாம் தின்று விட்டு வந்த அடுத்த ஒரு மாதத்திலேயே இந்தியாவில் அதே இங்கிலாந்தையும், மேற்கிந்தியத் தீவுகள் அணியையும் பந்தாடுகிறார்கள்.//
ReplyDeleteசொந்த நாட்டில் இந்தியாவை பந்தாடிய அதே இங்க்லேண்ட் (ஏன் எப்பவும் இங்கிலாந்துன்னு எழுதறோம்?) அணிதான் இங்கு வந்து மண்ணு, தவிடு எல்லாம் தின்றுவிட்டு போனார்கள். ஒரே மாதத்தில் அவர்கள் திறமை குறைந்துவிட்டதா என்ன?
ஒவ்வொரு அணிக்கும் சொந்த நாட்டில் விளையாடுவது என்பது மிகப்பெரிய ப்ளஸ். ஆஸ்ட்ரேலியாவைத் தவிர கடந்த 20 வருடங்களில் எத்தனை அணிகள் மற்ற நாடுகளுக்குச் சென்று கன்ஸிஸ்டன்ட்டாக ஜெயித்துக்கொண்டே இருந்தார்கள்?
சொந்த நாட்டில் விளையாடும்போது கொஞ்சம் கஷ்டப்பட்டு வெற்றி பெற்றால், 'இதுக்கே இவ்வளவு போராட வேண்டியதாயிருக்குது' என்று கமெண்ட் வருகிறது. எளிதாக வெற்றி பெற்றால், 'சொத்தை டீம், செத்த பாம்பை அடிக்கறாங்க'..இன்னும் எக்ஸட்ரா எக்ஸட்ரா.... நான் சொல்ல விரும்புவது, எதிரே ஆடும் அணி ஆஸ்ட்ரேலியாவோ, ஜிம்பாப்வேவோ, நாம் நன்றாக விளையாடினால்தான் வெற்றி பெற முடியும். நம் நாட்டில் விளையாடுகிறோம் என்பதால், சச்சின் இடது கையில் பேட்டிங் செய்வதில்லை, இஷாந்த் ஷர்மா நாலு ஸ்டெப்பில் ஓடி வந்து பெளலிங் செய்வதில்லை.
ஒன்று மட்டும் ஒத்துக்கொள்கிறேன். ஆஸ்ட்ரேலியா, இங்க்லேண்ட், செளத் ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகளில் விளையாடும்போது தொடரை வெல்லாமல், நம்பர் ஒன் என்று சொல்லிக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
\\சொந்த நாட்டில் இந்தியாவை பந்தாடிய அதே இங்க்லேண்ட் (ஏன் எப்பவும் இங்கிலாந்துன்னு எழுதறோம்?) அணிதான் இங்கு வந்து மண்ணு, தவிடு எல்லாம் தின்றுவிட்டு போனார்கள். ஒரே மாதத்தில் அவர்கள் திறமை குறைந்துவிட்டதா என்ன?\\ஆட்டக் காரனின் திறனை ஆடுகளம் தீர்மானிக்கக் கூடாது, அதனால் தான் அதை கிரிக்கெட்டின் அடிப்படையிலேயே தவறு என்று சொன்னேன், நன்றி!!
ReplyDeleteஎன்னாது? கார-சார விவாதம் நடக்குது.. ஒனரக் காணுமே.. கடை கட்டிட்டாரோ ?
ReplyDeleteமுடிவு பார்ப்பதற்குள் எங்கள் ஊரில் கரண்ட் கட்! தங்களின் வர்ணனை சூப்பர். நன்றி நண்பரே!
ReplyDeleteமுடிவு பார்ப்பதற்குள் எங்கள் ஊரில் கரண்ட் கட்! தங்களின் வர்ணனை சூப்பர். நன்றி நண்பரே!
ReplyDeleteஅட சில மணி நேரம் வெளியே போயிட்டு வர்ரதுக்குள் இவ்ளோ விவாதம் நடந்துருக்கா? ஒரு வழியா முடிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன் :))
ReplyDeleteஇப்படி விவாதம் நடப்பது நம்ம ப்ளாகுக்கு புதுசு :))
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
Nalla ezhuthuringa. Valthukkal Sago.
ReplyDeleteTM 3.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//அவர் என்னிக்கு நூறாவது செஞ்சுரி அடிச்சாலும் நான் வெளியிடத்தான் போறேன் //
ReplyDeleteஹா.. ஹா.. உங்கள மாதிரி ஆளுங்களப் பத்தி நல்லாவே எழுதி இருக்காங்க.. மறக்காம படிங்க..
http://www.fakingnews.com/2011/11/thousands-of-blog-posts-remain-in-drafts-as-sachin-misses-century/
Are you in need of a loan?
ReplyDeleteDo you want to pay off your bills?
Do you want to be financially stable?
All you have to do is to contact us for
more information on how to get
started and get the loan you desire.
This offer is open to all that will be
able to repay back in due time.
Note-that repayment time frame is negotiable
and at interest rate of 2% just email us:
reply to us (Whats App) number: +919394133968
patialalegitimate515@gmail.com
Mr Jeffery