Over to அய்யாசாமி
***
வாங்க புதுசா இன்னிக்கு ஒரு டிஷ் எப்படி செய்வதுன்னு தெரிஞ்சிக்கலாம். பீட்ஸா இதுவரை கடையில் தான் சாப்பிட்டுருப்பீங்க. வீட்டிலேயே எளிமையா செய்ய இங்கே சொல்லி தர்றேன். ஓகே?
கல்லிலே பீட்ஸா |
தோசை மாவு புதுசா இருக்கும் போதே இதை செஞ்சிடுங்க. வார கடைசியில் செய்ய பார்த்தா மாவு புளிச்சு போயி சொதப்பிடும்
இப்போ செய்முறைக்கு போயிடலாமா?
குடை மிளகாய், வெங்காயம், பெங்களூர் தக்காளி (நாட்டு தக்காளி வேண்டாம்; புளிக்கும். பொடியா நறுக்க முடியாது; தண்ணியா கொட்டும் ) ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வச்சிக்குங்க (பின்னாடி தான் தேவை என்றாலும் அப்போ நறுக்க முடியாது!). - Cheese ஐ கேரட் திருகும் உபகரணம் மூலம் திருகி வச்சிக்குங்க
தோசை கல்லை போட்டு லேசா எண்ணெய் தொட்டு கல்லை துடைச்சிக்குங்க.
அப்புறம் தோசை மாவு கல்லில் ஊத்துங்க. இட்லி மாவில் தான் செய்யணும். தோசை மாவு என்றால் சில பேர் கொஞ்சம் தண்ணியா நினைச்சிட போறாங்க. இட்லி மாவில் கல் தோசை பதத்தில் மொத்தமா ஊத்தணும். மீடியம் அல்லது சின்ன சைசில் இருக்கணும். சுற்றி அதிக எண்ணெய் விடாதீங்க. கொஞ்சமா விடுங்க.
தோசையை மூடியை வச்சு மூடிடுங்க. அடுப்பை சிம்மில் வச்சிடுங்க; மெத்து மெத்துன்னு தோசை நல்லா சாப்ட்டா ரெடி ஆகும்.
இப்போ தக்காளி சாஸ் ஓரளவுக்கு தோசை மேல் ஊற்றி அதை நல்லா சுற்றி தோசை முழுதும் படுகிற மாதிரி செய்யுங்க.
அப்புறம் முதலில் நறுக்கி வச்ச குடை மிளகாய், வெங்காயம், தக்காளி, Cheese இவற்றை தூவுங்க. ஸ்பூன் வைத்து நன்றாக எல்லா இடத்திலும் படுற மாதிரி நிரவி விடுங்க
கொஞ்ச நேரத்தில் பீட்ஸா தோசை தயார் !!.
பீட்ஸா ரெடி! |
இந்த வார குழந்தைகள் தினம் அன்று இரவு இந்த பீட்ஸா தான் எங்க வீட்டு மெனு. சூப்பரா இருந்தது !!
இதை படிக்கும் ரங்கமணிகள் இந்த புது டிஷ் செய்து தங்கமணிகளை அசத்துங்க.
தங்கமணிகள் ..நீங்களும் செஞ்சு பாத்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க !
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
அய்யாசாமி
டிஸ்கி: தமிழக அரசு இன்று செய்துள்ள விலை ஏற்றத்தால் இனி வீட்டு பீட்ஸா சாப்பிட்டா தான் உண்டு ! பீட்ஸா சாப்பிட ஓட்டல் போக முடியாது !
படத்திலுள்ள பீட்ஸா தயார் செய்ததும் இந்த ரெசிப்பி முழுக்க எழுதியதும்.. ஒரே நபர் தான் ! அது அய்யா சாமியா? Mrs. அய்யா சாமியா. Guess பண்ணுங்க பார்ப்போம் !
ReplyDeleteநல்ல ஐடியா... :)
ReplyDeleteயார் செய்தால் என்ன... பார்க்க நல்லா இருக்கு. சாப்பிட்டா இன்னும் நல்லாவே இருக்கும்... :)))
//இதை படிக்கும் ரங்கமணிகள் இந்த புது டிஷ் செய்து தங்கமணிகளை அசத்துங்க//
ReplyDeleteஅஸ்கு புஸ்கு.. நா என்ன இளிச்சவாயனா..
தங்கமணிக்கு இந்த போஸ்ட காமிச்சிட்டேன் .. வீக் ண்டு, தங்கமணி கையால சுடச் சுட தோசைப் பிட்சாதான்..
>>படத்திலுள்ள பீட்ஸா தயார் செய்ததும் இந்த ரெசிப்பி முழுக்க எழுதியதும்.. ஒரே நபர் தான் ! அது அய்யா சாமியா? Mrs. அய்யா சாமியா. Guess பண்ணுங்க பார்ப்போம் !
ReplyDeleteநீங்களே அருமையான க்ளூ கொடுத்துவிட்டு இப்படி ஈசியான ஒரு கேள்வி கேட்டால் எப்படி ?
(இதை படிக்கும் ரங்கமணிகள் இந்த புது டிஷ் செய்து தங்கமணிகளை அசத்துங்க.)
புதுமையான பீட்ஸா. வாசிக்கும் போதே அய்யாச்சாமி இதை மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்து வாங்கி வந்த மாதிரிதான் தோன்றியது. முதல் பின்னூட்டம் அதை உறுதி செய்து விட்டது:)!
ReplyDeleteபீட்ஸா விரும்பி சாப்பிடும் ஃப்ரெண்ட்ஸை 'ஊசி போன தோசைல ஏதேதோ போட்டு தராங்க அதப்போய் இப்படி சாப்பிடுறீங்களே'ன்னு கிண்டல் பண்ணுவேன்.
ReplyDeleteநீங்க என்னடான்னா பீட்ஸா தோசை சொல்லி தர்றீங்க. ஹுக்கும் இதை யாருன்னு வேற கண்டுபிடிக்கணுமா? கண்டிப்பா வெங்காயம் தக்காளி கட் பண்றது அது இதுன்னு அய்யாசாமி நிறைய ஹெல்ப் பண்ணியிருப்பார். கரெக்டா? ;))
நம்பினால் நம்புங்கள்...
ReplyDeleteஇத்தாலியில் பீட்ஸாவை நிறுத்துதான் விற்ப்பார்கள். 100G பிட்ஸா 2.50யூரோ. toppings அதிகமாக அதிகமாக நிறையும் கூடி விலையும் அதிகமாகும்,
அத்துடன் அங்கு பீட்ஸாவிற்க்கு side dish ice cream. பிட்ஸா சாப்பிட்டால் ice cream சாப்பிடாமல் போகமாட்டார்கள்,,, நாம் டிபனுக்குபின்
காப்பி சாப்பிடுவது மாதிரி
அட இது புதுஷா இருக்கே நன்றி பாஸ்
ReplyDeleteவெங்கட். நன்றி மகிழ்ச்சி. சூடான பின்னூட்டம் தந்தது நீங்க தான்
ReplyDelete**
மாதவா:
//வீக் ண்டு, தங்கமணி கையால சுடச் சுட தோசைப் பிட்சாதான்..//
இதை படித்த அய்யாசாமிக்கு பெருமை பிடிபடலை.
**
Online Works For All : வாங்க சார். நல்லா இருக்கீங்களா? தீயா வேலை செஞ்சு, எல்லா சைட்டுக்கும் போய் இதே கமென்ட் போடுறீங்க சார்.
**
ராமலட்சுமி: ரொம்ப நாளாக நம்ம ப்ளாக் வாசிக்கிற பாவப்பட்ட ஜீவன் நீங்க தான்னு தெரிஞ்சுடுச்சு. மிக சரியா கண்டுபிடிச்சிட்டீங்க. இதை தயார் செய்தது, புகை படம் எடுத்தது, அய்யாசாமிக்கு டிக்டேட் செய்து எழுத சொன்னது, மறுபடி வாசித்து பார்த்து விட்டு எழுதியதில் உள்ள தப்புக்கு ரெண்டு குட்டு வைத்து திருத்த சொன்னது எல்லா புகழும் Mrs. அய்யா சாமிக்கே !!
ReplyDeleteபால ஹனுமான்: வாங்கன்னா ! க்ளூவில் ஏமாந்துடீங்களே ! சென்ற பின்னூட்டத்தை வாசியுங்க. ஆர்வமான வாசிப்புக்கு மிக நன்றி !!
ReplyDelete**
ரகு: ஹிஹி அன்னிக்கு அவர் பிசி. வீட்டுக்கு வரும்போதே இது தயார் ஆகிடுச்சு.
**
வாசகன் : புது தகவலுக்கு நன்றி பீட்சாவுடன் ஐஸ் கிரீமா? ஆச்சரியம் !
**
நன்றி ராஜா. முயற்சி பண்ணி பாருங்க
மிஸஸ் அய்யாசாமிக்கு எங்கள் நன்றியைச் சொல்லுங்கள்:)! நல்ல குறிப்பு. மைதா base-யை விட இட்லி மாவு ஆரோக்கியமானது. [குட்டுக்குப் பயந்து குறிப்புகளை நிறுத்தி விட வேண்டாம்:)!]
ReplyDelete//வெறும் தோசை என்றால் பசங்க நொந்து போவாங்க. இப்படி குடுத்தா செம டேஸ்ட்டி என சாப்பிடுவாங்க.//
ReplyDeleteஇதுக்கெல்லாம் எங்க வீட்டு வாலுங்க மசிய மாட்டேங்குது. நாங்களும் ஏற்கனவே முயற்சித்தாகிவிட்டது. ஆனால, இதில் அந்த sauce spreading வித்யாசமாகத்தான் இருக்கிறது. முயற்சி செய்யத் தூண்டுகிறது. என்ன வந்தா பீட்ஸா இல்லன்னா தோசா சரிதானே!
முன்னாடி மட்டும் பிட்சா ரேட் கம்மியாவா இருந்தது....???
ReplyDeleteநல்ல ஒரு குறிப்பைத் தந்த Mrs.அய்யாசாமிக்கு நன்றியை சொல்லிடுங்க சார்.
ReplyDeleteநேற்றே என் கணவர் படிக்கும் போது பக்கத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருந்தேன் இது நிச்சயம் Mrs.அய்யாசாமி தான் செய்திருப்பாங்க என்று.
குட். நாங்க தோசையையே பூனை ஷேப்புக்கு எல்லாம் ஊத்துவோம்.
ReplyDeleteஎன் புள்ளைய திங்க வைக்கறதுக்கு என்னவெல்லாம் பாடுபட வேண்டியிருக்கு;)
அட! இது எங்க வீட்லெ அடிக்க்டி செய்யும் பிட்ஸா ஆச்சே!!
ReplyDeleteநன்றி ராமலட்சுமி: சொல்லிடுறேன்
ReplyDelete**
வேங்கட சீனிவாசன்: பசங்கன்னா அப்படி தான். நன்றி
**
ஜெட்லி: நீங்க அம்மா கட்சியா? :))
**
கோவை டு தில்லி நன்றி மேடம். பெண்கள் உஷாரா இருக்கீங்க. சரியா கண்டு பிடிச்சிடுரீங்க
**
வித்யா : நன்றி. நாங்களும் என் பெண் சின்னவளா இருந்தப்போ வித வித ஷேப்பில் தோசை ஊத்துவோம். சுஜாதா சொன்னது போல் எல்லோரும் ஒரே மாதிரி வாழ்க்கை தான் வாழ்கிறோம் போலிருக்கிறது !
**
நன்றி அருணா: ரொம்ப நாள் கழித்து வருகை தந்தமைக்கு
அட என்னங்க மோகன் சார்,,, உங்க தளத்தில் பின்னூட்டத்தில் கூட நிறைய தகவல் கிடைக்கும் போல..?
ReplyDelete