புகைப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது |
2003 -ஆம் வருடம் என நினைக்கிறேன். என் பெண் சிறியவளாக இருந்த போது அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போனது. டாக்டர்கள், லேப்கள் என அலைந்து அலைந்து மனம் நொந்து போயிருந்தோம். அப்போது வீட்டுக்கருகில் எங்களுக்கு நன்கு தெரிந்த பெண்மணி ஒருவர் எங்கள் ஜாதகம் பார்த்து விட்டு சில விஷயங்கள் சொன்னார். அப்போது தந்தையான நான் வார வாரம் அன்ன தானம் தந்து வந்தால், அவள் உடல் நிலை சரியாகும் என்றார். அப்படித்தான் அன்னதானம் செய்கிற பழக்கம் எனக்கு துவங்கியது.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாரம் நான்கு பேருக்காவது அன்ன தானம் செய்து வருகிறேன். ஏழை சிறுவர்களுக்கு, அரசு பள்ளிகளுக்கு உதவுவது என சின்ன சின்ன நற் காரியங்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஈடு பட்டாலும் முழுக்க முழுக்க எங்கள் குடும்பம் மட்டும் செய்யும் நற் காரியம் என்கிற நிம்மதி இதில் உண்டு.
இந்த வித்தியாச அனுபவத்திலிருந்து சில துளிகள்:
அன்ன தானம் தர ஆரம்பத்தில் கையில் சாப்பாட்டு பையுடன் ஆட்களை தேடி அலைந்திருக்கிறேன். பின் ரயில்வே நிலையம் ஒட்டி நிறைய ஏழைகள் தங்கி இருப்பது தெரிந்து மவுன்ட் ஸ்டேஷன் அருகே சென்று வாரா வாரம் சாப்பாடு தர ஆரம்பித்தேன்.
முதலில் வெவ்வேறு வித உணவுகள் குடுத்து வந்தவன் இப்போது பெரும்பாலும் "நான்கு இட்லிகள் அடங்கிய உணவு பொட்டலமே " தருகிறேன். சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் என்பதால் நன்கு செரிக்க உதவும் என்பதால் !
ஆரம்பத்தில் இட்லி நான்கு பேருக்கு வாங்கி தந்த போது ஆளுக்கு பத்து ரூபாய் என நாற்பது ரூபாய் செலவாகும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் விலை ஏறி நான்கு இட்லி இருபது ருபாய் என வாரம் என்பது ரூபாய் ஆகிறது. கொஞ்சம் கொஞ்சமாக விலை ஏறியதால் பெரிதாக தெரிய வில்லை.
வழக்கமாய் வாங்கும் கடையில் இன்று அன்ன தானம் செய்கிறேன் என்றால் 15 நிமிடம் முன்பே போன் செய்து பார்சல் கட்ட சொல்லிடுவேன். போகும் போது ரெடி ஆக வைத்திருப்பார்கள்.
ஹவுஸ் பாஸ் உடன் வேலை பார்ப்போரில் சிலர் தங்கள் திருமண நாள் அல்லது குழந்தைகள் பிறந்த நாள் போது மட்டும் " பத்து பேருக்கு அன்னதானம் செய்யுங்கள்" என எங்கள் மூலம் செய்ய சொல்வார்கள். இப்படி சற்று அதிகமான நபர்களுக்கு தர வேண்டுமெனில் ரயில்வே ஸ்டேஷன் அருகே தான் தந்தாக வேண்டும் ! அங்கு தான் ஒரே நேரத்தில் இத்தனை பேரை பார்க்க முடியும். அதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். எல்லோரும் " எனக்கு சாப்பாடு; எனக்கு சாப்பாடு" என்று கேட்பார்கள். எல்லோருக்கும் தர முடிய வில்லையே என்று சற்று வருத்தமாக இருக்கும் !
சமீபமாக மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் வயதான பாட்டிகள் மற்றும் தாத்தாவிற்கு உணவு தந்து வருகிறேன். இதில் ஒரு பாட்டி பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இந்த பாட்டி எப்போதும் தனக்கு சாப்பாடு மற்றும் சாம்பார் தனியாக கவரில் போட்டு தான் தர வேண்டும் என்று சொல்லும் ! சில நேரம் கடையில் சாப்பாடு கட்டுபவர் அனைத்தையும் ஒரே கவரில் போடுவார். அப்போது எல்லோருக்கும் தனி தனியே எடுத்து தர வேண்டி இருக்கும். ஆனால் நம்ம பாட்டியோ கவர் இன்றி வாங்க மாட்டேன் என உறுதியாய் இருக்கும். இதனால் மற்றவர்களுக்கு கவர் இன்றி தந்து விட்டு, கடைசியாக கவர் உடன் இந்த பாட்டிக்கு தருவேன். அப்போதெல்லாம் " இந்த நிலையிலும் இந்த பாட்டி தான் நினைத்ததில் விடாபிடியாய் இருந்து சாதிக்கிறதே !" என்று மனதுக்குள் சிரித்து கொள்வேன் ! ஒன்றை பாருங்கள் ! உங்களுக்கு எது தேவை என்பதில் நீங்கள் தெளிவாக, உறுதியாக இருந்தால் அது உங்களுக்கு கிடைக்கிறது !
பொன்னியம்மன் கோயிலில் வாரா வாரம் கோயிலுக்கு உள்ளேயே செல்லாமல், வெளியில் நின்று உணவு மட்டும் தந்து விட்டு சென்று விடுவது எனக்கே சற்று வித்தியாசமாக தான் இருக்கும். ஆனாலும் காலை நேரம், அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் உள்ளே செல்ல நேரம் இருக்காது.
வாரா வாரம் குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரம் என வைத்து கொள்வதில்லை. அப்படி செய்தால் அவர்களுக்கும் ஒரு எதிர் பார்ப்பு வந்து விடும். சில காரணங்களால் நம்மால் அன்று தரா விடில் நமக்கும் மன கஷ்டம். அவர்களுக்கும் ஏமாற்றம். எப்படியும் வாரம் ஒரு முறை நான்கு பேருக்கு என்பது மட்டும் தான் ரூல். இதிலும் கூட சில வாரங்கள் தர விடுபட்டு விடும். அப்போது அடுத்த வாரம் நான்கு பேருக்கு பதில், எட்டு பேருக்கு தந்து கணக்கை சரி செய்வேன்.
பார்த்த சாரதி கோயில், வேளாங்கண்ணி என கோயில்கள் செல்லும் போதெல்லாம் வெளியில் வயதானவர்கள் அமர்ந்திருப்பது பார்த்தால், அந்த வார அன்னதானத்தை அங்கு முடித்து விடுவது வழக்கம்.
சில நேரம் ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் வசிக்கும் ஏழைகள், அவர்கள் குழந்தைகளுக்கு தரும் போது, அந்த குழந்தைகள் பையை பெற்று கொண்டு மகிழ்ச்சியாக சிரிக்கும். அந்த நேரம் நமக்கும் மிக மகிழ்ச்சியாக இருக்கும்.
சரி முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்த அன்ன தானத்தால் எனக்கு ஏதும் நல்லது நடந்ததா?
முன்பே சொன்ன மாதிரி எங்கள் பெண் உடல் நலனுக்காக துவங்கியது இது. அதன் பின் அவள் பெரியவள் ஆக ஆக சின்ன வயதில் இருந்த உடல் தொந்தரவுகள் முழுதும் மறைந்து விட்டன. அதற்கு இதுவும் ஒரு காரணம் என ஹவுஸ் பாஸ் உறுதியாக நம்புகிறார். ஏதாவது பிரச்சனை வந்தால், "இந்த வாரம் சாப்பாடு குடுத்தீங்களா? " என கேட்பார். நான் "குடுத்துட்டேன்" என்றால் ஓகே. இல்லா விடில் " இந்த வாரம் குடுக்காததால் தான் இப்படி" என்பார்.
எப்போதும் ஏதோ யோசனையுடனே வண்டி ஓட்டும் என் டூ வீலரை எத்தனையோ முறை லாரி அல்லது பஸ் முத்தமிடுவது போல் ஒட்டி சென்றுள்ளன. அப்படி தப்பும் போதெல்லாம். " தர்மம் தான் தலை காக்கிறது " என நினைத்து கொள்வேன்.
நிஜமான நன்மை என்றால் நம் மனதில் தோன்றும் திருப்தி. அது தான் இதை தொடர்ந்து செய்ய வைக்கிறது. நான் ஒன்றும் அநியாயத்துக்கு நல்லவன் கிடையாது. எல்லோரையும் போல கடவுள் பாதி மிருகம் பாதி தான் ! ஆனால் நம்மை நாமே மதிக்க, இது போன்ற செயல்கள் தான் உதவுகின்றன.
மேலும் நிஜமாக வேலை பார்க்க முடியாமல், பிள்ளைகளாலும் கை விடப்பட்ட இத்தகைய வயதானோருக்கு, பிற ஏழைகளுக்கு உதவுவது ஒரு சின்ன சமூக கடமை என்று தான் நினைக்கிறேன். சில பேராவது இப்படி ஈடு பட்டால், பட்டினியை ஓரளவு ஒழிக்கலாம் !
இதை வாசிக்கும் யாரோ ஒருவர் அடுத்த முறை கோயிலுக்கு போகும் போது வெளியில் இருக்கும் இருக்கும் வயதானவருக்கு சாப்பாடு வாங்கி தந்தால், நான் இந்த பதிவு எழுதியதற்கான ஒரு அர்த்தம் கிடைக்கும் !! குழந்தைகள் பிறந்த நாள் போன்ற நேரத்திலாவது செய்து பாருங்கள் ! உங்களை நீங்களே இன்னும் அதிகமாக மதிக்க துவங்குவீர்கள் !
எது கொடுத்தாலும் இன்னும் கொஞ்சம் இருந்தால் நல்லது
ReplyDeleteஎனத்தான் எண்ணத் தோன்றும்
ஆயினும் சாப்பாடு விஷயத்தில் எப்படியும் ஒரு நிலையில்
போதும் எனச் சொல்லித்தானாகவேண்டும்
தானத்தில் சிறந்தது அன்னதானம்தான் என்பதில்
எவ்வித சந்தேகமுமில்லை
மனம் கவர்ந்த அருமையான பதிவு.வாழ்த்துக்கள்
த.ம 1
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்தப் பதிவை நீங்கள் எழுதாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏன் என்று கேட்டீர்களேயானால் காரணம் சொல்லத் தெரியவில்லை.
ReplyDeleteமனுசன்னா நீதாயா மனுஷன் !!
ReplyDeleteபல இடங்களில் முரண்பாடு.. நீங்கள் பசியாக இருக்கும் நபர்களுக்கு உணவு கொடுக்க வில்லை என்று தெரிகிறது... ஏழை போல் வேடமிட்டு உண்மையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் எத்தனையோ பணக்காரர்கள் அந்த பிச்சை காரர்கள் கூட்டத்தில் இருப்பது நீங்க வர்ணித்த விதத்தில் தெரிகிறது... அன்ன தானம் சிறந்தது தான்.. ஆனால் பாத்திரமறிந்து பிச்சையிடு என்று சும்மா சொல்ல வில்லை... பசியால் இருப்பவர்கள் பல பேர் தன்மான சிங்கம் சார்... அவ்வளவு சீக்கிரத்தில் உங்களிடம் அகப் பட மாட்டான்... மன்னிக்கவும் தோனுச்சு சொல்லிட்டேன்...
ReplyDeleteநிஜமான நன்மை என்றால் நம் மனதில் தோன்றும் திருப்தி. அது தான் இதை தொடர்ந்து செய்ய வைக்கிறது. நான் ஒன்றும் அநியாயத்துக்கு நல்லவன் கிடையாது. எல்லோரையும் போல கடவுள் பாதி மிருகம் பாதி தான் ! ஆனால் நம்மை நாமே மதிக்க, இது போன்ற செயல்கள் தான் உதவுகின்றன.
ReplyDeleteஉண்மையில் பசித்தவனுக்கு சோறிட்டு பார்ப்பது நம் திருப்திக்குத்தான். “பணமா கொடுத்துர்ங்க” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
பூங்கொத்து!!
ReplyDeleteபகிர்ந்திருக்க வேண்டாமோ என்று தான் எனக்கும் தோன்றுகிறது! மன்னித்துக் கொள்ளுங்கள்
ReplyDeleteபதிவை போட்டுட்டு அடுத்த மூணு மணி நேரம் இணையம் பக்கம் வர முடியாத சூழல். அடுத்த சில மணி நேரங்களில் வந்த பின்னூட்டங்கள் இப்போது தான் பார்க்கிறேன்.
ReplyDeleteசிலர் இது நல்ல விஷயம் அப்படிங்கறாங்க. சிலர் இதை எழுதியிருக்க வேண்டாமேன்னு சொல்றாங்க ! எழுதுவதா வேண்டாமா என நான் குழம்பியது போலவே தான் பின்னூட்டங்களும் ரெண்டு விதமாவும் இருக்கு ! எப்போதும் பின்னூட்டங்களில் அதிகம் வராத லக்கி "இதை நீங்க எழுதியிருக்க வேண்டாம்" என்கிறார். அவர் இந்த ப்ளாக் படிக்கிறார் என தெரிகிறது !
அரிதாக பூங்கொத்து தரும் அருணா மேடம், யூர்கன் க்ருகியர் போன்றோர் சொல்வதை எடுத்து கொள்வதா? மாதவி, லக்கி போன்றோர் சொல்வதை ஏற்பதா?
எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்லுவார். "ஒரு எழுத்துக்கு எதிர்ப்பு (controversy ) நிறைய வந்தால், அது நிச்சயம் நல்ல எழுத்து" என்று ! அது தான் ஞாபகம் வருது ! இது நல்ல எழுத்தா என்று தெரியலை. ஆனால் நான் எழுதியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. அது ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் பாதிக்கலாம் !
உங்களில் சிலர் இந்த பதிவின் மூலம் என்னை நல்லவன் என நினைக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவை எழுத வில்லை. உங்களில் பலரை என்றைக்குமே நான் சந்திக்க போவதுமில்லை. நீங்கள் நல்லவன் என நினைப்பதால் எனக்கு எதுவும் ஆக போவதில்லை.
கடைசியில் சொன்னதை தான் மீண்டும் சொல்கிறேன். இதை படிக்கும் யாரேனும் சிலர் வருடத்திற்கு சில முறையேனும் அன்ன தானம் செய்ய வேண்டும் என நினைக்க வைப்பதே இந்த பதிவின் எண்ணம். அப்படி உங்களுக்கு தோன்ற வைக்க, இன்னும் சரியான முறையில் இந்த பதிவை எழுதியிருக்கலாம்.
வடிவேலு பாணியில் சொல்லணும்னா, இன்னும் பயிற்சி வேண்டும் போலிருக்கிறது :))
வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுப்பதுவே நன்று! பசிக்கிறது என்று யாரேனும் கேட்டால் பசியாற நம்மால் முடிந்தவரை உதவலாம்! முகமறியா நபர்களுக்கு அன்னமிடுவதை விட, நமது பகுதியில் உள்ள ஆதரவற்றோரை அடையாளம் கண்டு அன்னமிடலாம்!
ReplyDeleteSago. Kulappme thevai illai. Thodarungal.
ReplyDeleteParaattu kidaikkum...
Manitharkalidamirunthu alla
Kadavulidamirunthu.
TM 4.
தானத்தில் எந்த தானம் சிறந்தது பார்த்தால் எல்லா தானமே சிறந்த தானமே.அது கிடைக்க பெறுபவரின் மற்றும் வழங்கபடுபவரின் சூழ்நிலையை(தேவையை) பொறுத்தே அமைகிறது.
ReplyDeleteஉங்கள் செயலை பார்க்கும் போது எனக்கும் அவ்வெண்ணம் மெலெழும்புவதை உணர முடிகிறது.பதிவுக்கு வாழ்த்துகள்.
malaithural.blogspot.com
அன்னதானம் செய்வதில் சில கஷ்டங்களும் இருக்கின்றன மோகன்... எனக்கும் இந்த அனுபவங்கள் உண்டு.... சில விஷயங்கள் வெளியே சொல்ல முடிவதில்லை......
ReplyDelete//அன்ன தானம் தர தயாராக இருந்தால் கூட, மக்களை தேடி கண்டி பிடிப்பது ஒரு வேலையாக உள்ளது ! //
ReplyDeleteநெகட்டிவான விஷயங்களை பதிவில் தவிர்த்திருக்கலாம் என நினைக்கிறேன்.
இது உங்கள் சொந்த அனுபவம், இதனால் மற்றவருக்கு நல்லதோர் உந்துதல் இருக்கக் கூடும் என்று யோசித்த பின்னே எழுதுகிறீர்கள் - என்ற அளவில் நீங்கள் எழுதியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
ReplyDeleteஇணையத்தில் எழுதும் பிரபலங்கள் பலரும் தம் எழுத்துகளுக்கான தார்மீகப் பின்னணியை விட சொந்தப்பயன் கருதி எழுதும் காலம் இது. அந்த 'அளவை' உங்களுக்கு தேவை இல்லை என்பது என் கருத்து.
தானம் செய்யும் போது, தேவை இல்லாதவர்கள் பயன் படுத்துவர். என் சொந்த அனுபவம். உங்கள் மன திருப்திக்கு ஏற்றதைச் செய்யுங்கள்.
வாழ்த்துகள்.
இந்த செய்தியை பகிர்ந்ததும் தொடர்ந்து செய்வதும் நல்லதே. தொடருங்கள்.
ReplyDeleteதானத்தில் சிறந்தது அன்னதானம். ஆனால்.....உண்மையில் தேவை இருப்பவர்களைப் பார்த்துத் தானம் செய்வது கஷ்டம். இப்பெல்லாம் பிச்சை எடுப்பதும் ஒரு தொழிலாக ஆகிக்கிடக்கே:(
ReplyDeleteவாயில்லா ஜீவன்களுக்கு சாப்பாடு கொடுப்பது ரொம்ப நல்லதுன்னு நான் நினைக்கிறேன். இப்போ சாப்பிட்டுட்டு அடுத்த வேளைக்கு எடுத்து வச்சுக்க அதுகளுக்குத் தெரியாது பாருங்க.
நம்மூர்லே சூப்பர் மார்கெட்டுலேயே ரெண்டு தனித்தனி Bins வச்சுருப்பாங்க. அதுலே ஒன்னு மனுசருக்கு. இன்னொன்னு வாயில்லா ஜீவன்களுக்கு.
பூனை நாய் சாப்பாடுகள் ரெண்டு டின் வாங்கி அதுலே போட்டுட்டுப் போறதுதான் நம்ம வழக்கம்.
மனுசருக்கான சாப்பாடுன்னால் அரிசி முதல் கோதுமைமாவு, பாஸ்த்தா, சூப் டின்னுகள் இப்படி எது தோணுதோ அதைக் கொடுக்கலாம். காய்கறி பழங்கள் போல சீக்கிரம் கெட்டுப்போகும் உணவுகளைத் தவிர்க்கணும்.
எப்படியோ இன்னொரு ஜீவனுக்கு எதாவது அப்பப்பக் கொடுக்கத்தான் வேணும். முடிஞ்சதைக் கொடுத்தால் போதும். நமக்குள்ள பலகடமைகளில் இதுவும் ஒன்னுன்னு நினைச்சுக்கிட்டு நமக்கு உப்புப்புளி மொளகாய் வாங்கும்போது இன்னொரு சாமான் கூடச்சேர்த்து வாங்கி அதுக்குள்ள இடத்தில் வச்சுட்டுப் போய்க்கிட்டே இருக்கலாம்.
நல்ல பதிவு.
ReplyDeleteநல்ல முயற்சி.
மனப்பூர்வ வாழ்த்துகள்.
நல்லதொரு கருத்தை வலியுறுத்த விளைவதே பதிவின் அடிப்படை நோக்கமென்பது புரிகிறது.
ReplyDeleteதுளசி மேடம் சொல்வது போல பிறருக்கு உதவுவது நம் கடமைகளில் ஒன்றாக என்பதே என் கருத்தும்.
மனச்சிரமங்களுடன் தொடர்வதைக் காட்டிலும் தேவையுடைய ஆதரவற்ற இல்லங்கள் சிலவற்றுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு உதவி வரலாம்.
அன்னமாக மட்டுமே தரவேண்டுமென்பதில்லை. அவர்கள் வாழ்வின் ஆரோக்கியத்துக்குத் தேவையான பழங்கள் போன்றனவும் வாங்கித் தரலாம்.
தொடர்புடைய என் பதிவொன்று இங்கே.
இது போன்று நான் எழுதுவேனா என்று தெரியாது. ஆனால் நான் செய்ய மறுக்கும் செயலை பிறர் செய்யும் போது, நான் பிறரை judge செய்வதில்லை. ஏனெனில்,எந்த செயலுக்கும் உள்ளிருக்கும் நோக்கம்(volition ) தான் அந்த செயலின் நன்மையையும் தீமையையும் நிர்மாணம் செய்யுமே தவிர ,"செயல்" எதையும் தீர்மானிப்பதில்லை. அது தர்மமே ஆனாலும்...
ReplyDeleteஉங்கள் மனைவிக்கோ, பெண்ணிற்கோ, எங்களுக்கோ உங்கள் எழுத்தின் நோக்கம் பற்றி எதுவும் தெரிய போவதில்லை. நாங்கள் அதை அனுமாநிப்பதும் நாகரிகம் ஆகாது. moreover,not a healthy thought process for us.
இதனால், ஹவுஸ் பாசுக்கு நிம்மதி...உங்கள் பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை வழி காட்டல்..எங்களில் சிலருக்கு இது கண்-திறப்பு.
இன்றைய தேதியில், மிக அரிதான பொருள்- மனிதற்கு மனித குலத்தின் மீதும், வாழ்வின் மீதும் குறைந்து வரும் " trust"- இதற்கு இணையான தமிழ் சொல் கிடைக்கவில்லை. இது போன்ற "testimonial"- சாட்சி கூறுதல், பலருக்கு உத்வேகம் தரும்... தருவதால் நாம் குறைந்து போக போவதில்லை, என்ற உண்மை உணர வழி வகுக்கும். அதனால் நமது வெற்றியை(இந்த இடத்தில், கொண்ட உறுதி) நாலு பேருக்கு கூறுவதில் தவறொன்றும் இல்லை..என்ன செய்ய..சூட்சமாக கூறினால் புரிந்து கொள்ளுமளவிற்கு,எல்லோரும் மேலே பதிவிட்டிருக்கும் தோழர்களை போல் கூர்மையாக இருப்பதில்லையே.. மற்றபடி, உங்களுக்குள், நேர்மையான நோக்கம் இருக்கும் போது.. கவலை தேவையில்லையே. எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.. என்ன...? சில-பல நாள் பிடிக்கும்.
இந்த செயலை ஆதரித்து எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. மழை தூறல் என்கிற நண்பர் இதை படித்ததும் எனக்கும் செய்ய வேண்டும் என தோன்றுகிறது என எழுதி உள்ளார். இதை அவர் உண்மையில் மனமுவந்து எழுதியிருந்தால் இந்த பதிவு எழுதப்பட்டது அதற்காக தான் ! நான் எழுதியதன் நோக்கம் நிறைவேறி விட்டது !
ReplyDeleteசில clarifications சொல்ல வேண்டிய கடமை உள்ளது :
நான் உணவு குடுப்போரில் யாரும் உணவை வீணாக்குவதை நான் பார்க்க வில்லை. பல நேரம் அதே வழியே திரும்பி போகும் போது அவர்கள் நாம் தந்த உணவை சாப்பிடுவதை பார்த்துள்ளேன். மேலும் சிலர் " இன்னோர் பாக்கெட் தாருங்கள்; பக்கத்தில் உட்கார இன்னொரு நபர் வருவார் என்றும் கேட்பார்கள்" (அநேகமாய் அப்படி தருவதில்லை. என் கையால் நேரே தர விரும்புவதால்)
மிக வயதான (அநேகமாய் எழுபது வயதுக்கு மேல் இருக்கும் ) இவர்கள் கோயிலின் வெளியே அமர்ந்து பிச்சை எடுக்க விட்டுள்ள இவர்கள் மகன்/ மகள்கள் தான் தவறு செய்தவர்கள் ! இவர்களுக்கு பிச்சை மூலம் எவ்வளவு கிடைத்து விட போகிறது? நூறு ரூபாய்? நான் தரும் பொன்னி அம்மன் கோயில் வெளியே ஒரு நாளைக்கு இதுவே கிடைப்பது சந்தேகமே.
மிக மிக வறிய நிலையில் உள்ளோர் மன நிலையில் அவர்களிடம் நன்றி எல்லாம் எதிர் பார்க்க முடியாது. பெரும்பாலும் தங்களுக்குள் புலம்பி கொண்டு தங்கள் கஷ்டங்களையே நினைத்து கொண்டு இருப்பதை பார்த்துள்ளேன் (அங்கு ஆட்களே இல்லாத போதும்)
எனவே இத்தகைய வயதானவர்களுக்கு அன்ன தானம் தருவதை தொடரவே செய்வேன். இதில் எந்த வித சந்தேகமும் எனக்கு இல்லை. யார் சொல்வதற்காகவும் இதை மாற்றி கொள்ள போவதில்லை
அடுத்து சொல்ல வேண்டியது அநாதை இல்லங்கள் பற்றி. அத்தகைய இல்லங்கள் பலவற்றிற்கு சென்று வந்த அனுபவம் உண்டு. அதனை நடத்துபவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பணத்தையும் அந்த இல்லங்கள் மூலம் தான் ஈட்டுகின்றனர். மருத்துவராக உள்ள என் மாமா, இத்தகைய ஒரு இல்லத்தில் வயதானோருக்கு இலவசமாக தரப்படும் மருந்துகளை வெளியில் விற்பதை சொன்னார். இத்தகைய சம்பவங்களால் இந்த இல்லங்கள் செல்வது சற்று குறைந்து விட்டது. இதற்கு பதில் நேரே நம் கையால் உணவு தரலாமே என..
ReplyDeleteஒரு வேளை அந்த இல்லங்கள் செல்லும் போது அன்ன தானம் நாமே நேரே தருவதை மட்டும் செய்கிறேன். இவை வருடம் ஒரு முறை அல்லது ரெண்டு வருடத்துக்கு ஒரு முறை மிக அரிதாக நடக்கின்றன. நடக்கும்.
எந்த செயலையும் பல வருடங்கள் தொடர்ந்து செய்யும் போது அதில் ஒரு இயந்திர தன்மை வந்து விடும். அந்த இயந்திர தன்மை + சிறு அலுப்பு எனக்கு இருப்பதை உங்களில் சிலர் கண்டு பிடித்து சொல்லி உள்ளீர்கள். இதை உணர்த்தியமைக்கு நன்றி. மாற்றி கொண்டு, முழு மனதோடு இதை தொடருவேன் !
உங்கள் அனைவர் கருத்துகளுக்கும் மிக மிக நன்றி. அனைவருக்கும் அன்பும் வணக்கமும் !
//மாற்றி கொண்டு, முழு மனதோடு இதை தொடருவேன் !//
ReplyDeleteமகிழ்ச்சியும் பாராட்டுக்களும்.
மோகன், நான் சொல்ல வந்தது அநாதை ஆஸ்ரமங்கள் முதியோர் இல்லங்கள் பற்றி,ஆனால் உங்க பின்னூடங்களை பார்த்ததும் புரிந்து கொண்டுவிட்டேன். நாமே நேரில் கொடுப்பது நல்லது என்று.
ReplyDeleteநீங்க செய்து கொண்டிருப்பது போற்றுதுக்குரிய செயல். வாழ்த்துக்கள்,உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும்.
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான நல்ல பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteநல்ல செயல்.
ReplyDeleteஒருவேளை உணவாவது கொடுத்தோம் என்ற மனத்திருப்தி இருக்கும்.
இந்த ஒரு பதிவிற்கு மட்டும் அனைவருக்கும் தனித்தனியே பதில்/ கருத்து சொல்ல வில்லை. காரணம் இது விவாதம் ஆக விரும்ப வில்லை ! நண்பர்கள் மன்னிக்க !
ReplyDeleteஉங்க மனசுக்கு பிடிச்சத செய்கின்றீர்கள் அது யாராக இருந்தாலென்ன ஆனால் நீங்கள் இரயில்நிலையம் பேருந்து நிலையம் எல்லாம் தேடவேண்டியது இல்லை உங்கள் ஊரிலேயே அனாதை ஆசிரமங்களுக்கு செய்யலாம் வாரம் ஒரு முறையல்ல ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை முயற்சி செய்துபாருங்கள்.....
ReplyDeleteஅனுபவம்
ReplyDeleteWell Said and Well done boss.
ReplyDeleteKeep it up I will try to do it.
arumaiyaana pathivu. vaazhalthukkal
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteAwesome Mohan! No matter to whom you have given, whether they are rich, poor, elder, young, known, unknown, blah blah.... what matters is your commitment and attitude. I could not get now many years you have been doing, but I guess its pretty long, that shows your attitude. You have made a very big difference to all of them whom you have given food, for that time!!!! Simply you are superb! Some times I pay a rupee or two to a seeking and may times I dont. When I pay at least I'm ok, when I dont pay I'm left with irritation or a guilt or its just not a pleasant moment at all!!!
ReplyDeleteஇந்த மாதம் விகடன் யூத் விகடனில் உங்கள் பதிவு வந்துருகிறது வாழ்த்துகள்.............
ReplyDeleteதானத்தில் சிறந்தது அன்னதானம்....... எனக்கும் இந்த மாதிரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது... என் பையன் பிறந்தநாள் அன்று மட்டும் ஆதரவற்ற சிறுவர் இல்லம் சென்று அன்று ஒரு நாள் உணவு வழங்கி உடன் இருந்து வருவோம்.. இனி தொடர்ந்து நம்மால் முடியும் வரை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது...
உண்மைதான் நன்பரே. கடந்த 29 வருடங்களாக ஒவ்வொரு தமிழ் வளர்பிறை சஷ்டி, ஐப்பசி சஷ்டி திருவிழா 10 நாட்கள், ஆவணி மூலத்திருநாள், மாசி மகத் திருநாட்கள் 10 என நாங்கள் அன்னதானம் அளித்து வருகிறோம். அதில் கிடைக்கும் திருப்தி அதுவும் முன்பின் தெரியாத நபர்களுக்கு அன்னதானம் இடுவதுதான் உயர்வானது. முடிந்தால் இந்த இணையத்தை பாருங்கள்
ReplyDeletehttp://www.tiruchendur.org/annadanam.htm
cz;ikjhd; ed;gNu. fle;j 29 tUlq;fshf xt;nthU jkpo; tsHgpiw r\;b> Ig;grp r\;b jpUtpoh 10 ehl;fs;> Mtzp %yj;jpUehs;> khrp kfj; jpUehl;fs; 10 vd ehq;fs; md;djhdk; mspj;J tUfpNwhk;. mjpy; fpilf;Fk; jpUg;jp mJTk; Kd;gpd; njhpahj egHfSf;F md;djhdk; ,LtJjhd; caHthdJ. Kbe;jhy; ,e;j ,izaj;ij ghUq;fs;.
ReplyDeletehttp://www.tiruchendur.org/annadanam.htm
வெளி நாட்டில் இருக்கும் எனக்கு இது மாதிரி செய்ய முடியவில்லையே என்று ஒரு ஏக்கம் இருக்கும். அதனால் ஒன்று/இரண்டு இல்லங்களுக்கு வெறும் பணத்தை மட்டும் அனுப்பிவிடுவேன். ஆனால் அதில் உண்மையான, மனமார்ந்த திருப்தி கிடைக்காது. உங்களுடைய இந்த செயலை படித்தவுடன், ஏதோ நானே இதை செய்த மாதிரி ஒரு சந்தோஷம் உண்டானது. வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteபிறருக்கு உதவணும் , என்பது வெறும் எண்ணமாக மட்டுமே தங்கிவிட்ட என் போன்றோரின் உள்ளத்தில் , மீண்டும் அந்த எண்ணம் தழைக்க உங்கள் பதிவு உதவியாயிருந்தது. விமர்சனங்களை சொல்ல நன் யோக்கியனள்ள. உங்கள் நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇவண்
இணைய தமிழன்.
+1
ReplyDelete