Tuesday, November 22, 2011

நகரம் - சென்னை வாழ்க்கை குறித்த கவிதை



புகைவண்டியின்
ஏகமான கூட்டத்தில்
மூச்சு திணறி 
மூர்ச்சையானது 
என் கவிதை 

பேருந்து நடத்துனரின் 
"முன்னே போய்யா சோமாறி "க்கு 
பழகி பழகி 
காணாமல் போயிற்று 
சுய கெளரவம் 

எதிர்பார்ப்போடே 
அருகில் வரும் 
மனித உறவுகளைப் 
பார்த்து பார்த்து 
மரித்து போனது 
மனித நேயம் 

மிக பெரும் மந்தையில் 
என் முகம் எனக்கே மறக்க 
சிறுக சிறுக 
நானும் மாறி 
இயந்திரமானேன்.

டிஸ்கி: 1) கவிதையோ இல்லையோ சென்னை வந்த சில மாதங்களில் எனக்கு வந்த உணர்வுகளின் தொகுப்பு. .

2) இதை எழுதி/ சென்னை வந்து 15 வருஷம் ஆச்சு. இப்ப யாரும் சென்னையை குறை சொன்னா கோபம் வருது. :)))

11 comments:

  1. க‌விதையின் முத‌ல் வ‌ரி முத‌ல் முடிவு வ‌ரை முழுக்க‌ உண்மைதான்

    சாலை வ‌ச‌தி & போக்குவ‌ர‌த்து இது ரெண்டும் ஒழுங்கா இருந்தா சென்னை நிஜ‌மாவே சொர்க்க‌ம்தான்

    ReplyDelete
  2. மிக பெரும் மந்தையில்
    என் முகம் எனக்கே மறக்க
    சிறுக சிறுக
    நானும் மாறி
    இயந்திரமானேன்.

    சென்னை இப்பவும் எனக்கு டென்ஷ்ன் தான் ஆனா போயிட்டு திரும்பிடறதால ரொம்பவும் பீல் பண்றதில்ல

    ReplyDelete
  3. தெரியாத சொர்க்கத்திற்கு தெரிந்த பழகிய
    நரகம் நிச்சயம் மேல்தான்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல கவிதை... ”அனுபவித்து” எழுதி இருக்கீங்க!

    ReplyDelete
  5. ஃபீலிங் கவிதைதான். ஆனால் இப்போ நடத்துன மகாஜனம் சோமாறி என்றெல்லாம் சொல்வதில்லை!!

    ReplyDelete
  6. ரகு said :

    //சாலை வ‌ச‌தி & போக்குவ‌ர‌த்து இது ரெண்டும் ஒழுங்கா இருந்தா சென்னை நிஜ‌மாவே சொர்க்க‌ம்தான் //

    உண்மை தான். நன்றி ரகு.
    **
    ரிஷபன் சார்: மகிழ்ச்சி நன்றி
    **
    நன்றி ரமணி அவர்களே !

    ReplyDelete
  7. வெங்கட் & ராமலட்சுமி : நன்றி
    **
    ஸ்ரீராம்: உண்மை தான். அதான் டிஸ்கியில் 15 வருஷம் முன்பு எழுதியது என்று கூறியுள்ளேன். இப்போது அப்படி கண்டக்டர்கள் சொல்வதில்லை !

    ReplyDelete
  8. // பேருந்து நடத்துனரின்
    "முன்னே போய்யா சோமாறி "க்கு
    பழகி பழகி
    காணாமல் போயிற்று
    சுய கெளரவம் //

    அதான் இப்ப டிக்கட் வெலை எல்லாம் ஏத்தி உட்டுட்டாங்களே..
    பஸ்ல ஏறினாத்தான கண்டக்டர் திட்டுவாரு..

    ReplyDelete
  9. //மிக பெரும் மந்தையில்
    என் முகம் எனக்கே மறக்க
    சிறுக சிறுக
    நானும் மாறி
    இயந்திரமானேன்.//
    வரிகள் அருமை.

    ReplyDelete
  10. athe pol somaari enru sollul kaalam thirumba varuma? nan oru cinema paithiyan... nan cinemavil parthathu ellam rajini kamal perumbalum naditha chennai paguthigal... athai parthuthan valarnthen...(1980 to 1995.. solidare tv, gold spot cool drinks, pallavan bus.. ivai anaithum enaku parka vendum thinamum asai padugirenn... en manathai vitu oru pothum neengatha nagarm chennai only.........

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...