Thursday, November 10, 2011

சொர்க்கமே என்றாலும்,நம்மூரை போல வருமா?

எங்கள் ஊர் நீடாமங்கலம் பற்றிய சிறு பதிவு இது. எங்கள் ஊர், அதன் வித்தியாச மனிதர்கள், இனிய நினைவுகள் பற்றி எழுத எவ்வளவோ உள்ளது. இப்போதைக்கு சில இடங்கள் மட்டும் அறிமுகம்..




நீடாமங்கலத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மூணாம் தலைப்பு. வெண்ணாறு என்கிற பெரிய ஆறு கோரையாறு, பாமனியாறு மற்றும் சிறிய வெண்ணாறு என மூன்றாக இங்கு பிரித்து விடப்படுகிறது. ஒரு மினி டேம் போல் இருக்கும் இந்த நீர் தேக்கம் பார்க்க மிக இனிமையாக இருக்கும். சுற்றிலும் முழுக்க முழுக்க கிராமம்.

சின்ன வயதில் காணும் பொங்கல் அன்று இங்கு கூட்டம் கூட்டமாய் மக்கள் மாட்டு வண்டி கட்டி கொண்டு வருவார்கள்.  சில ஆண்டுகள் முன் எங்கள் குடும்பத்தினர் பலருடன் காணும் பொங்கல் அன்று  மூணாம் தலைப்பு சென்ற போது கூட்டமே இல்லை. மக்கள் டிவி முன் தங்களை மெய் மறந்து விட்டனர்.


இந்த முறை தீடீரென முடிவு செய்து ஒரு நாள் மாலை கிளம்பி மூணாம் தலைப்பு சென்றோம். மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனம் பார்க்க மிக ரம்மியமாக இருந்தது. ஆறுகளில் தண்ணீர் நிறையவே இருந்தது. இருந்த கொஞ்ச நேரம் ரொம்ப அற்புதமாக இருந்தது. இருட்டி விட்டதால் விரைவில் கிளம்ப வேண்டியதாயிற்று. மூணாம் தலைப்பில் எடுத்த வீடியோ இதோ  




 
எங்கள் ஊரில் கோயில்கள் பலவும் ரொம்பவே விசேஷம். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கோயில் சந்தான ராமசாமி கோயில். குழந்தை வரம் தரும் கடவுள் என இந்த கோயில் மிக பிரபலம். அதி காலை தம்பதியர் சேர்ந்து வந்து வணங்கினால் குட்டி கிருஷ்ணனை மடியில் வைத்து பூஜை செய்வார்கள்.

இந்த கோயிலில் இம்முறை கொலு வைத்திருந்தனர். சாமி பார்க்க மாலை நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குழுமி இருந்தது ஆச்சரியமாய் இருந்தது. பூஜை முடிந்து கொலு இருப்பதால் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர். அனைவரையும் தரையில் அமர சொல்லி பந்தியில் பரிமாறுவது போல் இலை போட்டு பிரசாதம் பரிமாறினர் !

கீழே உள்ள வீடியோ சில ஆண்டுகள் முன் இந்த சந்தான ராமர் கோயில் வெளியே எடுத்தது. இதில் கோயிலின் குளம், மண்டபம், தேர்,  பாம்பு பொம்மை வாய் அருகே அமர்ந்திருக்கும் ஆடு, நொங்கு வெட்டும் ஆள், எங்க ஊரின் தெருக்கள் இவற்றை பார்க்கலாம்  



ராமர் கோயிலில் இருந்து கொஞ்ச தூரத்தில் உள்ளது சிவன் கோவில். இங்கு எடுத்த சில படங்கள் இதோ


சிவன் கோவில்: சற்று உடைந்த நிலையில் சிலைகள்

 சிவன் கோவில் கொலு

************* 
என் பெண் சின்னவளாய் இருக்கும் வரை நீடாமங்கலம் சென்றால் போர் செட்டில் குளிப்பது தான் வழக்கம். செம ஜாலியாக நீண்ட நேரம் குளித்து விட்டு வருவோம். இம்முறை காலை நேரத்தில் போர் செட் ஓடாது என்றதால் போக வில்லை. இந்த படம் சில வருடங்களுக்கு முன் எடுத்தது

ஊருக்கு சென்ற முதல் நாள் காலை பெண்ணுடன் ஊரை சுற்றி ஒரு ரவுண்டு நடந்து வந்தேன். அப்போதே பல ஹோட்டல்களில் புரோட்டாவிற்கு மாவு பிசைய ஆரம்பித்திருந்தனர். " இவ்ளோ காலையிலேயேவா?" என என் பெண் ஆச்சரியப்பட்டாள். இப்படியான ஒரு சூழலில் இருந்ததாலோ என்னவோ நமக்கு பரோட்டா ரொம்ப பிடித்து போய் விட்டது. பரோட்டா போடும் வீடியோ ஒன்று இதோ உங்கள் பார்வைக்கு


எங்கள் ஊரின் பிரபலமான இனிப்பு கடை SMT சுவீட்ஸ் ! சென்னையில் கூட இவ்வளவு அருமையான இனிப்புகள் கிடைக்காது. மிக ரீசனபில் விலையில் அல்வா, அசோகா போன்றவை சாப்பிடவாவது நீங்கள் எங்கள் ஊருக்கு ஒரு முறை வரலாம் !

குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு மிக அருகில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது எங்கள் ஊர் ! நீங்கள் ஆலங்குடி அல்லது கும்பகோணம் வந்தால் அப்படியே எங்கள் ஊருக்கும் வாருங்கள். எங்கள் இல்லத்தில் அம்மா- அப்பாவையும் அவசியம் சந்தியுங்கள் !

இந்த வார பதிவுகள் சில:


எஸ். ராமகிருஷ்ணன் சந்திப்பு படங்களுடன்

ஏழாம் அறிவு சறுக்கியது ஏன்?

15 comments:

  1. நல்ல இடம் .நல்ல தகவல்

    வரும் வாய்ப்பு கிடைத்தால் வருகிறேன் நண்பரே

    தமிழ்மணம் -2

    ReplyDelete
  2. சொந்த் ஊருக்குப் போய் வந்தால் வயதும் பின்னோக்கி போகும் பேட்டரி சார்ஜ் ஆகி விடும்
    படங்களும் வீடியோவும் கண்கொள்ளா காட்சி.

    ReplyDelete
  3. சொந்த ஊர் என்றாலே உடனே நமக்குள் ஒரு புத்துணர்ச்சி வந்துவிடுகிறது. காணொளிகள் அனைத்தும் பார்த்தேன். நன்று...

    ReplyDelete
  4. நல்ல இருக்கு

    நன்றி,
    ஜோசப்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  5. நாம் எங்கு வாழ்ந்தாலும்... நம் பிறந்து வளர்ந்த நம் சொந்த பூமி தான் நம் சொர்க்க பூமி....

    அருமையான இடம், அருமையான கட்டுரை...

    அதுவும் அந்த மோட்டர் தண்ணில குளிக்கறீங்களே அது அருமை...

    கிட்டத்தட்ட 10 வருடம் ஆகிறது மோட்டர் தண்ணீரில் ஆட்டம் ஆடி....

    சொந்த மண் சுகமே தனி தான் தல...

    ReplyDelete
  6. அழகான படங்கள். அழகியதொரு பகிர்வு.

    ReplyDelete
  7. தீபாவளிக்கு அடுத்த நாள் நண்பர்களை ரயிலேற்றிவிட (மன்னார்குடி எக்ஸ்பிரஸ்) நீடாமங்கலம் சென்றிருந்தேன். உங்கள் நினைவு வந்தது அப்போது

    ReplyDelete
  8. புகைப்படங்கள் அற்புதம். நுரை பொங்க ஓடிவரும்( ?!) ஆறு.. அஸ்தமன சூரியக் கதிர்கள் ஆற்றுத் தண்ணீரில் பிரதிபலிப்பது ரொம்ப அழகு. அழைத்ததற்கு நன்றி.

    ReplyDelete
  9. எங்கள் ஊருக்கு வருவதாக சொன்னதற்கு மகிழ்ச்சியும் நன்றியும்
    **
    ரத்னவேல் ஐயா: நன்றி
    **
    ரிஷபன் சார்: உண்மை. மகிழ்ச்சி. நன்றி
    **
    நன்றி ஜோசப்
    **

    ReplyDelete
  10. விரிவாக ரசித்து போட்ட கமெண்டுக்கு நன்றி சங்கவி
    **
    வித்யா: நன்றி
    **
    கோபி: அப்படியா? மகிழ்ச்சி. நீங்கள் தீபாவளிக்கு சென்றுள்ளீர்கள். அதற்கு ஒரு வாரம் முன்பு ஆயுத பூஜைக்கு தான் நாங்கள் அதே ரயிலில் பயணித்தோம்
    **
    டாக்டர் வடிவுக்கரசி. நிஜமாகவே தஞ்சை பக்கம் வந்தால் எங்க ஊருக்கும் வாங்க

    ReplyDelete
  11. நல்ல அழகான ஊர் மோகன் சார். சின்ன வயதில் போரில் குளித்தது. நியாபக படுத்துகிறது.

    ReplyDelete
  12. மாயா:ஆம் நன்றி எங்க ஊருக்கு வந்திருக்கீங்களா?

    ReplyDelete
  13. அருமையான பகிர்வு.வீடியோ இனிதான் பார்க்க வேண்டும். படங்கள் நன்று.

    ReplyDelete
  14. ஒருமுறை நீடாமங்கலம் சென்று வர வேண்டும்.

    ReplyDelete
  15. I also bought a house in Kumbakonam - very nice article supported by photos/viedeos - grt - could hv been even better-anyways nice presentation

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...