நளாஸ் ஆப்ப கடை
எங்கே: வேளச்சேரி விஜய நகர் பஸ் டெர்மினஸ்சில் இருந்து கூப்பிடு தூரத்தில் உள்ளது.
ஸ்பெஷல் உணவு : வேறென்ன? ஆப்பம் தான் ! அதிலும் பூ வடிவ ஆப்பம் மற்றும் டூட்டி பிரூட்டி ஆப்பம் குழந்தைகள் மிக ரசித்து சாப்பிடுவார்கள்.
விலை: Reasonable
எதற்காக போகணும்? ஆப்ப கடை என்கிற வித்தியாச concept-ற்காக அவசியம் போகலாம். குறிப்பாக வீட்டில் Guest வந்தால், அதில் குட்டி பசங்க இருந்தால், அவசியம் ஓர் முறை கூட்டி போங்க.
மைனஸ்: மிக குறுகிய இடம். சாதாரண நாட்களிலேயே மாலை நேரத்தில் காத்திருந்து தான் சாப்பிடனும். வார இறுதி என்றால் Waiting time இன்னும் அதிகம் ! மேலும் பார்கிங் இங்கு ஒரு பிரச்சனை தான்.
அடையார் ஆனந்த பவன்:
எங்கே: வேளச்சேரி விஜய நகர் பஸ் டெர்மினஸ்சில் இருந்து இரு நிமிட நடை. வேளச்சேரி ரயில் நிலையத்திலிருந்து வந்தாலும் சில நிமிடங்களில் அடையலாம்.
ஸ்பெஷல் உணவு : கோதுமை பரோட்டா !! ஆம் பரோட்டா பலரும் தவிர்க்க காரணம் மைதா மாவு மற்றும் நிறைய எண்ணெய் என்பதாக இருக்கும் அல்லவா? இவை இரண்டையும் தவிர்த்து கோதுமையில் செய்த பரோட்டா அட்டகாசம்! மிஸ் பண்ணிடாதீங்க !!
விலை: அடையார் ஆனந்த பவன், எப்போதும் சரவணபவனை விட சற்று விலை குறைவாய் இருக்கும் (அதுவே அதிகம் தான் அப்படிங்கறீங்களா?)
மைனஸ்: இங்கு வேலை செய்யும் ஆட்கள் பெரும்பாலும் வெளி மாநிலத்தவர்கள். எனவே நீங்கள் ஒன்று ஆர்டர் செய்ய, அவர்கள் வேறு ஒன்றை புரிந்து கொண்டு, எடுத்து வருவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. நிர்வாகம் இது பற்றி கண்டு கொள்கிற மாதிரியே தெரியலை.
எதற்காக போகணும்? மிக மிக பெரிய அளவு இடம். வீக் எண்ட் கூட வெயிட் செய்யாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். கார் மற்றும் டூ வீலர் பார்க்கிங்கும் நிறையவே உள்ளது.
அஞ்சப்பர் ஹோட்டல்
எங்கே: வேளச்சேரி விஜய நகர் பஸ் டெர்மினஸ்சிற்கு மிக அருகில். நளாஸ் ஆப்ப கடை மாடியில்.
ஸ்பெஷல் உணவு : பிரியாணி.
விலை: வழக்கமான அஞ்சப்பர் ஹோட்டல் விலை தான். நான் வெஜுக்கு இந்த விலை வொர்த் தான்.
மைனஸ்: பார்க்கிங்
ரத்னா கபே
எங்கே: வேளச்சேரி நூறடி ரோடில் உள்ளது
ஸ்பெஷல் உணவு : இட்லி சாம்பார். ஓட்டல்களில் நாம் வழக்கமாய் இட்லிக்கு வித வித சட்னிகள் மற்றும் சாம்பாருடன் சாப்பிடுவோம். ரத்னா கபே பொறுத்தவரை இரண்டு இட்லிகளை சுட சுட சாம்பாரில் ஊற வைத்து தருவார்கள். ஸ்பூன் வைத்து இட்லிகளை சின்ன சின்ன துண்டாக்கி சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் வேறெதுவும் சாப்பிடவே வேண்டாம் ! வயிறு நிரம்பி விடும்!!
ப்லேமிங்கோ ரெஸ்டாரன்ட்
இந்த ஹோட்டலும் வேளச்சேரி நூறடி ரோடில் தான் உள்ளது. நான் இது வரை சென்றதில்லை. நண்பர்கள் சிலர் ரொம்ப நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளனர். அடுத்து நான் போக எண்ணி இருக்கும் ஓட்டல் !
தலப்பாகட்டி
எங்கே: வேளச்சேரி நூறடி ரோடில் உள்ளது.
ஸ்பெஷல்: சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி. சென்னையில் சிறந்த பிரியாணி கிடைக்கும் இடங்களுள் இதுவும் ஒன்று. வார இறுதி நாட்களில் மதியம் & இரவு காத்திருந்து தான் சாப்பிடணும் !பிரியாணி பிரியர்கள் தவற விட கூடாத இடம் !
ராக் ரெஸ்டாரன்ட்
எங்கே: அடையார் ஆனந்த பவன் ஓட்டலுக்கு நேர் எதிரில் உள்ளது.
எதற்காக போகணும்? அங்கு உள்ள ambience பார்க்க தான் அவசியம் ஒரு முறை போகணும். பாறையிலேயே செய்த இன்டீரியர், வண்ண மீன் தொட்டிகள், பாலம், சின்ன நீர் வீழ்ச்சி போன்ற செட் அப் இவை குழந்தைகளை ரொம்ப குஷிபடுத்தும். உணவு ஓகே ரகம். விலை சற்று கூடுதல் தான். எனினும் ஒரு வித்தியாச அனுபவத்திற்காக ஒரு முறை செல்லலாம்.
****
இவை தவிர சங்கீதா (ஓகே ரகம்), ஹாட் சிப்ஸ் (ரொம்ப சுமார்), KFC சிக்கன், மேக் டனால்ட்ஸ் என இன்னும் நிறைய ஹோட்டல்கள் வேளச்சேரி பேருந்து நிலையம் அருகிலேயே உள்ளன. விலை வாசி என்ன தான் அதிகமானாலும், வீக் எண்டில் அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிகிறது !! மக்கள் வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்கள் !
ஒரு வேளை வேளச்சேரி வந்தால் உங்க பதிவை படிச்சிட்டு வரணும் போல...
ReplyDeleteநம்ம தளத்தில்:
நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?
சென்னை வந்தா எங்கே கூட்டிட்டு போவீங்க! - ந்னு நான் யோசிக்கத் தேவையில்லை... :)
ReplyDeleteசாப்பாடு கள கட்டுது போல..
ReplyDeleteபிரகாஷ்: வேளச்சேரி வந்தா சொல்லுங்க நண்பா ஏதாவது ஒரு ஹோட்டல் போகலாம்
ReplyDelete***
வெங்கட்: ஹா ஹா. வந்துட்டாலும் ?? எப்போ சென்னை வந்தாலும் சொல்லாம கொள்ளாம வர்றீங்க. போயிடுறீங்க. வாங்க பாஸ். நிச்சயம் நல்ல ஹோட்டல் போகலாம்
**
மாதவா: ரைட்டு
**
நான் எதிர் பார்த்ததுக்கும் மேல் அதிகம் பேர் பதிவை வாசித்து கொண்டுள்ளனர். ஆனால் வீக் எண்டு மூடில் பின்னூட்டம் போடாம போயிடுறாங்க. இட்ஸ் ஓகே
Flamingo - பஃபே நல்லாருக்கும்.
ReplyDeleteRock - ரொம்ப நல்லாருக்கு. Rain forrest கம்பேர் பண்ணும்போது விலை குறைவு, சுவை அதிகம். மஸ்ட் ட்ரை.
தலப்பாக்கட்டி போனதில்ல. அடையார் ஆனந்த பவன் பக்கத்தில் தான் வீடு:) பத்து மாச வேளச்சேரி வாசம். A2B, நளாஸ் ரெண்டுமே சூப்பர் குட். ஹேவன்’ஸ் சம்பூர்ணா கூட ஒக்கேவா இருக்கும்.
This comment has been removed by the author.
ReplyDeleteஎனக்கு தலப்பாகட்டி ரொம்ப பிடிச்சிருந்தது. வயிறை பதம் பார்க்காத பிரியாணி..ம்ம்ம்ம்ம்!
ReplyDeleteஃப்ளேமிங்கோவும், ராக்கும் இதுவரை போனதில்லை. தலப்பாகட்டி அருகே அமராவதின்னு ஒரு ஆந்திரா ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சிருக்காங்க. நல்லாருக்குன்னு ஃப்ரெண்ட்ஸ் மூலமா கிடைத்த அறிக்கை சொல்வதால், போகவேண்டிய லிஸ்ட்டில் இதுவும் சேர்ந்திருக்கிறது :)
வேளச்சேரி வரும்போது இந்தத் தகவல்கள் ரொம்பவும் உபயோகமாக இருக்கும்!!
ReplyDeleteஇததனை நாளா வேளச்சேரி போனப்பல்லாம் என்னை எங்கேயுமே கூட்டிகிட்டு போகாம விட்ட என் சொந்தக்காரர்ட்ட பேசிட்டு வந்து பின்னூட்டம் போடறேன்..
ReplyDeleteநேற்று தான் என் மகளிடம் சரவணா பவனின் சுவையான டிபன் ஐட்டங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவு மேலும் எச்சில் ஊற வைத்துவிட்டது. வேளச்சேரி எவ்வளவோ மாறிவிட்டது. மக்களும் தான் (வெளியில் சென்று சாப்பிடும் பழக்கத்தை சொன்னேன்).
ReplyDelete//நான் எதிர் பார்த்ததுக்கும் மேல் அதிகம் பேர் பதிவை வாசித்து கொண்டுள்ளனர். ஆனால் வீக் எண்டு மூடில் பின்னூட்டம் போடாம போயிடுறாங்க. இட்ஸ் ஓகே//
கமென்ட் போட்டுட்டோம்ல...
அட! வேளச்சேரிக்கு வந்த வாழ்வைப்
ReplyDeleteபாருங்க:-)))))
நான் வேலைக்கு சேர்ந்தப் புதிதில் மிலன் & கலவரா மட்டும் தான் வேளச்சேரியில் குறிப்பிடத்தகுந்த ஹோட்டல்கள். கலவரா தற்போது மூடி விட்டார்கள் என நினைக்கிறேன்.கரோகே இசை பின்னணியில் ஒலிக்க ஒருவர் பாடிக்கொண்டே பரிமாறுவார். நளாஸ் பற்றி ஒரு சுவையான தகவல். வேளச்சேரிகிளை திறந்த அன்று மாலை ஆப்ப வகைகள் அனைத்தும் இலவசமாக வழங்கினார்கள். அது அவர்களுக்கு நல்ல விளம்பரமாக அமைந்தது. உங்கள் லிஸ்டில் விட்டுப்போன சில.. குமரகம், ஸ்நோபார்க்
ReplyDeleteவித்யா: சாப்பாட்டு ஸ்பெஷலிஸ்ட் நீங்களே சொல்லிடீங்க. Flamingo போயிட வேண்டியது தான். எங்களுக்கும் நம்பர் ஒன் ஆனந்த பவன் தான். அடிக்கடி இங்கு பார்சல் டிபன் வாங்கவும் தவறுவதில்லை.
ReplyDelete**
ரகு: அமரவாதியா? நன்றி (ஒரு கை) பாக்குறேன்
**
மனோ சாமிநாதன் மேடம் : நன்றி
**
ரிஷபன் சார்: ஹா ஹா. என்னோட ஆபிஸ் வேளச்சேரி தான். வீடும் மூணு கிலோ மீட்டர் தூரத்தில் மடிப்பாக்கத்தில் இருக்கு. அடுத்த தடவை இங்கு வந்தா சொல்லுங்க. மீட் பண்ணுவோம்.
ReplyDelete**
நன்றி ஆதி மனிதன்
**
துளசி கோபால் மேடம்: வேளச்சேரி பழைய கதை உங்களுக்கு தெரியும் போல. ஒரு காலத்தில் ஏரியாகவும் காடாகவும் இருந்த இடம் இன்னிக்கு என்ன வளர்ச்சி பாருங்க. எல்லாம் IT jobs செய்யும் வேலை !
ees said...
ReplyDelete//உங்கள் லிஸ்டில் விட்டுப்போன சில.. குமரகம், ஸ்நோபார்க்//
Perfect ! நீங்கள் சொன்ன மற்ற தகவல்களும் சுவாரஸ்யம் ! குமரகம் தெரியும் அது என்ன ஸ்நோபார்க்? விசாரிக்கணும் ! நன்றி
மோஹன்குமார்,
ReplyDeleteநீங்க இன்னொரு முக்கியமான இடத்தை விட்டுடிங்க , ஹி..ஹி வேளாச்சேரில சீப் அன்ட் பெஸ்ட் ஆ சரக்கடிக்குற இடம், ஐ டெக் பார் , டாஸ்மாக் கடை தான் , ஆனால் நிம்மதிய உட்கார்ந்து சாப்பிடலாம், திரைக்கட்டி உலககோப்பை கிரிக்கெட் மேட்ச் எல்லாம் போட்டாங்க !ஒரு காலத்தில ரெகுலர் கஸ்டமர் நான்! தலப்பாகட்டுல மட்டும் சாப்பிட்டு இருக்கேன், மத்த இடம் லாம் கேள்விப்பட்டதோட சரி, எம் ஆர் டி எஸ் ஸ்டேஷன் பக்கம் ஒரு ஓட்டல் இருக்கே அது பேர் மறந்துடுச்சு! நளாஸ் ஆப்பக்கடை இங்கே தாம்பரம் பக்கம் கூட ஒன்னு இருக்குனு நினைக்கிறேன்.
Snowpark is in baby nagar , taramani road. opp to BSNL office. KARAIKUDI restaurant is also there in taramani road.
ReplyDeleteஅத்துவானக்காடா இருந்த சமயத்தில் தைரியமா நிலம் வாங்கி வீடு கட்டிப்போன சிலரில் என் சின்ன மைத்துனரும் ஒருவர். வீட்டைச்சுத்தி இருந்த காடெல்லாம் போய் இப்போ வீட்டைச் சுத்தி வீடுகளே:-)
ReplyDelete