யுடான்ஸ் ஸ்டார்
சமீபத்தில் துவக்கப்பட்டு, அனைவரும் ஆச்சரிய படும் விதத்தில் மிக விரைவாக வளர்ந்து வரும் யு டான்ஸ் திரட்டியின் இந்த வார ஸ்டார் அடியேன் தான் !! நண்பர் கேபிள் சங்கருக்கு நன்றி !!
இந்த வாரம் முழுதும் தினம் ஒரு பதிவாவது நமது ப்ளாகில் வெளியாகும். ஒரு சில நாட்கள் மட்டும் ரெண்டு பதிவுகள் வரலாம் !! எஸ். ராமகிருஷ்ணன் சந்திப்பு, எங்க ஊர் நீடாமங்கலம் பற்றி படங்கள், வீடியோவுடன் கூடிய பதிவு என நிறைய சுவாரஸ்யமான பதிவுகள் தயாராக உள்ளது. வழக்கம் போல் வாசித்து ஊக்குவியுங்கள் ! உங்கள் ஊக்கம் தான் நிறைய எழுத வைக்கும் !
எந்திரன் மற்றும் டெர்மினேட்டர் சேர்ந்து செய்த கலவை இந்த ரா ஒன். துரதிஷ்ட வசமாக அந்த ரெண்டு படங்களிலும் இருந்த சுவாரஸ்யம் மிஸ்ஸிங் ! வீடியோ கேம் பார்க்கிற உணர்வையே படம் தருகிறது. ஆனால் வீடியோ கேம் விளையாடும் school going பசங்களும் இதனை பார்த்து விட்டு "மொக்கை படம்" என்கிறார்கள். எந்த வித Emotional attachment-ம் படத்தில் வர வில்லை.
மிக அதிக விளம்பரத்தால் நல்ல ஓபனிங் கிடைக்க, ஷாரூக் சற்று காசு பார்த்து விட்டாலும் இது அவரது சிறந்த படங்கள் லிஸ்டில் நிச்சயம் சேராது ! DVD-ல் பார்த்து கூட நேரத்தை வீணாக்க வேண்டாம் !
புழுதிவாக்கம் அரசு பள்ளி- அப்டேட்
புழுதிவாக்கம் அரசு பள்ளிக்கு சமீபத்தில் நண்பர்கள் சேர்ந்து லவுட் ஸ்பீக்கர் வாங்கி தந்தோம். இதனை புதிதாக கட்டப்பட்டுள்ள மேடையின் இரு புறமும் கட்டி இப்போது பிரேயர், மேடை அருகே நடக்கிறது.
பள்ளியில் பாடம் எடுக்க கணினி ஆசிரியர் வேண்டும் என கேட்டிருந்தேன் அல்லவா? பதிவர் விதூஷ் அவர்களின் சகோதரர் தற்போது அந்த பள்ளியில் +2 மாணவர்களுக்கு Computer Science பாடம் எடுத்து வருகிறார்.
சமீபத்தில் பள்ளிக்கு விதூஷ், அவர் தம்பி மற்றும் நான் சென்றிருந்தோம். ப்ரேயரில் எங்களை அறிமுகபடுத்தி பேச சொன்னார் தலைமை ஆசிரியர். விதூஷ் முதன் முறையாக இந்த பள்ளியை இப்போது தான் பார்க்கிறார்.
மாணவ, மாணவிகளின் ஏழ்மை நிலையும், படிப்பில் அவர்கள் ஆர்வமும் பார்த்து விட்டு இந்த பள்ளி மாணவர்களுக்கு வேறு எந்த விதத்திலெல்லாம் உதவ முடியுமோ நிச்சயம் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
பெட்ரோல் விலை ஏற்றம்
கடந்த ஓராண்டில் பதினோரு முறை பெட்ரோல் விலை ஏறி உள்ளது !! இது மத்திய அரசின் மிக மோசமான செயல் என்று நினைக்கிறேன். ஒரேயடியாக ஏற்றினால் எதிர்ப்பு வருமென கொஞ்சம் கொஞ்சமாக ஏற்ற, முதலிலேயே திட்டமிட்டு செய்துள்ளது மத்திய அரசு ! வேறு எந்த விஷயத்திலும் செயல்படாத இந்த அரசு இதில் மட்டும் தொடர்ந்து இயங்கி வந்துள்ளது !
பெட்ரோல் விலை ஏற்றத்தால் தான் மற்ற விலை வாசி மிக உயர்ந்துள்ளது. சாதாரண ஆட்டோ ஓட்டுனர்கள், மாத பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் டூ வீலர் காரர்கள், மின்சார பற்றாக்குறையால் ஜெனரேட்டர் வைத்து ஓட்டும் கம்பனிகள் என ஏராளமான நிறுவனங்கள், மனிதர்கள் பாதிக்கப்பட்டு விட்டனர். இது பற்றி எந்த கவலையும் இந்த அரசுக்கு இல்லை.
உலகின் பிற நாடுகளை விட நாம் தான் பெட்ரோலுக்கு அதிக விலை குடுக்கிறோம். நமது பெட்ரோல் விலையில் மிக அதிக அளவு அரசுக்கு வரியாக தான் செல்கிறது. இந்த அரசுக்கு சம்பாதிக்க வேறு வழி இல்லையா? இந்த அரசு தோற்கடிக்க பட வேண்டிய அரசு என்பதற்கு இது மட்டுமன்றி இன்னும் எத்தனையோ காரணங்கள் உண்டு. ஆனால் இதற்கு மாற்றான பீ.ஜே.பி வலுவாய் இல்லை என்பது தான் சோகமான உண்மை ! நம் நாடு எப்போது தான் ஒழுங்கான வழியில் போகுமோ ?
சென்னை ஸ்பெஷல்: சரவணபவன் பரிமாறும் விருந்து
சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டுக்கு கிரகப்ரவேசதிற்கு சென்ற போது சரவணபவனிலிருந்து வந்து உணவு பரிமாறினார்கள். சரவணபவன் சுவை & குவாலிட்டி பற்றி சொல்லவே வேண்டாம். என்ன வேண்டும், என்ன வேண்டும், என மறுபடி மறுபடி கேட்டு பரிமாறியது அருமையாக இருந்தது. சாப்பிடும் இடத்தில விழாவை ஏற்பாடு செய்தவர்கள் இருக்கணும் என்கிற அவசியமே இல்லை ! நிச்சயம் அவர்களே விருந்தினர்களை நன்கு கவனித்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அங்கேயே (மொட்டை மாடி) அடுப்பு வைத்து சுட சுட தோசை, வடை செய்து தந்தனர். காபியும் (அடடா ! என்ன சுவை !) சுட சுட அங்கேயே போட்டு தந்தனர்.
குறைந்தது நூறு பேர் என்றால் அவர்களே சாப்பாடு கொண்டு வந்து, பரிமாறியும் உதவுவார்களாம் ! ஐம்பதுக்கு மேல் என்றால், டெலிவரி மட்டும் உண்டாம். (நோ பரிமாறல்!) ஐம்பதுக்கு குறைவெனில் டெலிவரியும் இல்லை. இவை அனைத்தும் தி. நகர் சரவண பவனிலிருந்து மட்டுமே வருமாம். உங்கள் வீட்டுக்கருகே வேறு சரவண பவன் இருந்தாலும், தி. நகரிலிருந்து தான் வரும்) . சைதாப்பேட்டை வரை எனில் லோக்கல் எனவும் அது தாண்டினால், அதற்கு தனியாக டெலிவரி சார்ஜும் வசூலிக்கிறார்கள். செலவு என்று பார்த்தால், அதிகமாகும் தான் ! ஆயினும் மேலே சொன்ன குவாலிட்டி & சர்விசுக்காக ஒரு முறை முயற்சித்து பார்க்கலாம் !
ஆனந்த் எஸ்.எம்.எஸ் கார்னர்
Happiness is a perfume, you cannot spread it on others without getting a few drops on yourself. So always be happy to make others happy.
அய்யாசாமியும் இளம் பெண்ணும்
ஆனந்த் எஸ்.எம்.எஸ் கார்னர்
Happiness is a perfume, you cannot spread it on others without getting a few drops on yourself. So always be happy to make others happy.
அய்யாசாமியும் இளம் பெண்ணும்
அய்யாசாமிக்கு அலுவலகத்தில் தனி கேபின் உண்டு (இத பாருடா!!) அடுத்தடுத்து கேபின்கள் வரிசையாய் இருப்பதால் புதிதாய் வருவோருக்கு எந்த ரூமில் நுழைவது என சற்று குழப்பமாய் இருக்கும். அய்யாசாமி தன் கேபினில் தேமேன்னு உட்கார்ந்திருக்கும் போது திடீருன்னு ஒரு அழகிய பெண் அவரது கேபின் கதவை திறந்து கொண்டு நுழைந்தார். உள்ளே உள்ள அய்யாசாமியை பார்த்து ஷாக் ஆகி "சாரி" சொல்ல, அய்யா சாமி "நீங்க வந்ததுக்கு நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்" என நினைத்தாலும், "இட்ஸ் ஓகே " என்றார் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில். இப்படி "சாரி"யும் "இட்ஸ் ஓகே "யும் அடுத்து வந்த நாட்களில் தினம் சில முறையாவது நடந்தது. பொண்ணு அடுத்த கேபினில் தன் தோழிகளுடன் அமர்ந்து ஆடிட் செய்யும் ஆடிட்டர் ! வந்த புதிது என்பதால் சரியான கேபின் புரியாமல் இந்த குழப்பம் ! இப்போதெல்லாம் அந்த பெண் தெளிவடைந்து அய்யா சாமியை கண்ணாடி வழியே ஓரக்கண்ணால் பார்த்த படி கதவை திறக்காமல் சென்று விடுகிறார். இதில் அய்யா சாமி கொஞ்சம் அப்செட் தான் !
**
இஸ்லாமிய நண்பர்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள் !கமலின் ரசிகர்களுக்கு கமல் பிறந்த தின வாழ்த்துகள் !!
Udannz -kku vaazhthukkal
ReplyDeleteயுடான்ஸ் நட்சத்திரமானதுக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteகேபின் கதவுல நேம் போர்டு வைக்க வேண்டியதுதான !
ReplyDeleteஎவ்ளோவோ செய்யுறீங்க.. இத செய்ய மாட்டீங்களா..
or
டெலிபெரேட்டா செய்றீங்களா ?
வாழ்த்துக்கள் யுடான்ஸ் நட்சத்திர தேர்வுக்கு.
ReplyDeleteநல்ல அலசல்.
நீங்க தயாராக வைத்துள்ள மீதி பதிவுகளையும் படிக்க ஆவலோடு இருக்கிறோம்.
//கேபின் கதவுல நேம் போர்டு வைக்க வேண்டியதுதான !// அதானே... :)
ReplyDeleteஉடான்ஸ் திரட்டியில் நட்சத்திரம்... வாழ்த்துகள்... தினமும் வந்து விடுகிறேன் உங்கள் பகிர்வுகளைப் படிக்க....
கடந்த ஓராண்டில் பதினோரு முறை பெட்ரோல் விலை ஏறி உள்ளது !! இது மத்திய அரசின் மிக மோசமான செயல் என்று நினைக்கிறேன். ஒரேயடியாக ஏற்றினால் எதிர்ப்பு வருமென கொஞ்சம் கொஞ்சமாக ஏற்ற, முதலிலேயே திட்டமிட்டு செய்துள்ளது மத்திய அரசு ! வேறு எந்த விஷயத்திலும் செயல்படாத இந்த அரசு இதில் மட்டும் தொடர்ந்து இயங்கி வந்துள்ளது !/
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
யுடான்ஸ் நட்சத்திரம் வானவில்லாய் ஜொலிக்க வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉடான்ஸ் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபதிவர்களின் உதவி முயற்சிக்கு பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்,நன்றிகள்!
by being 'udanz star' i understand you are the most read blogger..if iam right, then iam happy for you. even if i am wrong, it does not matter. next to my blog, i read yours the most.haha!
ReplyDeletecongratz!for your services to the school.
i respect your sensitivity for id wishes and b'day wishes for kamal fans.
cabin galatta:hilarious...go-on!
yes! the inefficiency of congress govt. and inconspicuous BJP.. invalid communist.. sad.
wht abt rajini s portion in ra one?
நன்றி மாதவி மேடம்
ReplyDelete**
வித்யா நன்றி
**
மாதவா: கம்பனிக்குன்னு இருக்க நடை முறை தான் இங்கேயும் பாலோ செய்வாங்க? நமக்குன்னு போர்டு மாட்ட மாட்டாங்களே?
**
ராம்வி: மிக மகிழ்ச்சி நன்றி
வெங்கட் : மகிழ்ச்சி நன்றி
ReplyDelete**
நன்றி ராஜ ராஜேஸ்வரி
**
மகிழ்ச்சியும் நன்றியும் கோகுல்
**
டாக்டர் வடிவுக்கரசி: நன்றி நான் சாதாரண ப்ளாகர் தான். நீங்கள் சொல்வது போல் "Most read " அல்ல. உங்களை போல் சிலர் தொடர்ந்து வாசிப்பதும் ஊக்குவிப்பதும் தான் தொடர்ந்து எழுத வைக்கிறது
**
அரசுப்பள்ளி அப்டேட். நல்ல விஷயங்கள் தொடரட்டும். பாராட்டுக்கள்.
ReplyDeleteயுடான்ஸ் நட்சத்திர வாழ்த்துக்கள்:)!
அரசுப்பள்ளி அப்டேட்ஸ் மிக நல்ல விஷயம். வாழ்த்துகள் நண்பரே.
ReplyDeleteவாழ்த்துகள் யுடான்ஸ் ஸ்டார் ஆனதற்கு
ReplyDeleteரா.ஒன் - சத்யம்லதான் பார்க்கணும்னு நினைச்சுகிட்டிருந்தேன். ஆனா இந்த ஒரு வாரத்துல நிறைய பேர் குறை சொல்லி கேட்டு கேட்டு ஆர்வமே போயிடுச்சு. ஊர்லயே பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஷாரூக் அட்லீஸ்ட் DON 2லயாவது (Christmas Release) ஒரு கலக்கு கலக்குவாருன்னு நம்பறேன். இந்த படம் எப்படியிருந்தாலும் சத்யம்தான்!
புழுதிவாக்கம் அரசு பள்ளி...சிம்பிளா சொல்றேன் மோகன். நீங்க கோயிலுக்கு போகணும்னு அவசியம் இல்ல. அவ்வளவும் புண்ணியம்
பெட்ரோல் விலை ஏற்றம் - அரசியல் பற்றி நல்லா எழுதறீங்க. ஏன் தொடர்ந்து இதைப்பற்றி எழுதுவதில்லை? நரேந்திர மோடியை (நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ) பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், குறைந்தபட்சம் வட இந்தியாவிலாவது பெருமளவு பிஜேபி வெற்றி பெறும் என்றே நினைக்கிறேன்.
//ஆயினும் மேலே சொன்ன குவாலிட்டி & சர்விசுக்காக ஒரு முறை முயற்சித்து பார்க்கலாம் !//
சரவண பவனில் சர்வீசும், குவாலிட்டியும் நன்றாகத்தான் இருக்கும். குவாண்டிட்டிதான் இருக்காது. அவங்க குடுக்கற பொங்கலை பார்க்கணுமே :(
//அய்யாசாமியும் இளம்பெண்ணும்//
இந்த டைட்டில் உங்கள் ஹவுஸ்பாஸ் கண்ணில் பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ;))
//இப்போதெல்லாம் அந்த பெண் தெளிவடைந்து அய்யா சாமியை கண்ணாடி வழியே ஓரக்கண்ணால் பார்த்த படி கதவை திறக்காமல் சென்று விடுகிறார்.//
தப்பு பண்றீங்க. அவங்க ஒரு நாள் உங்க கேபினுக்கு வந்தாங்க இல்லியா. அதுமாதிரி நீங்க ஒரு நாள் வேணும்னே மறந்து அவங்க கேபினுக்கு போய் உட்காரணும்..பச்ச மண்ணுங்க நீங்க..இதையெல்லாம் சொல்லி தரவேண்டியதாயிருக்கு ;))
ரா ஒன் - ரத்தினச் சுருக்கமான அருமையான விமர்சனம்... உடான்ஸ் ஸ்டாருக்கு அன்பான வாழ்த்துகள்... அய்யாசாமி கலக்குகிறார்....
ReplyDelete//வேறு எந்த விஷயத்திலும் செயல்படாத இந்த அரசு இதில் மட்டும் தொடர்ந்து இயங்கி வந்துள்ளது//
ReplyDelete// இந்த அரசு தோற்கடிக்க பட வேண்டிய அரசு என்பதற்கு இது மட்டுமன்றி இன்னும் எத்தனையோ காரணங்கள் உண்டு.//
ஆஹா, அங்கங்க அரசியல் நெடி அடிக்குது... ஆட்டோ பயம் கொஞ்சம் விலகிடுச்சா? Just kidding ...
வேலை பளு காரணமாக கடந்த சில வாரங்கள் பிளாகிக்க முடியவில்லை...ஏகப்பட்ட பதிவுகள் அதற்குள். ஒவ்வொன்றாக படிக்க வேண்டும் இனி.
உடான்ஸ் ஸ்டார் ஆனதற்கு வாழ்த்துகள். கேபிள் ஷங்கர் எனும் புதிய பதிவர் யார் என்று தெரியவில்லை. ரா ஒன் பார்த்தேன். நொந்தேன். பள்ளிக்கு செய்த உதவி பாராட்டுக்குரியது.
ReplyDelete