தமிழில் தமிழ் மணம், இன்ட்லி, யுடான்ஸ், தமிழ் 10, திரட்டி, உளவு என ஏறக்குறைய பத்து திரட்டிகள் இருக்கும் என நினைக்கிறேன். இதில் முன்னணியில் இருப்பவை தமிழ் மணம் மற்றும் இன்ட்லி ! யுடான்ஸ் சமீபத்தில் துவக்கப்பட்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த மூன்று திரட்டிகள் குறித்த ப்ளஸ்/ மைனஸ் அலசல் இதோ:
தமிழ் மணம்
எனக்கு தெரிந்த வரை பல விஷயங்களில் மிக User friendly திரட்டி என்றால் அது தமிழ் மணம் தான். "தமிழின் நம்பர் 1 திரட்டி" என்று அவர்கள் சொல்கிறார்கள். இனி தமிழ் மணத்தின் ப்ளஸ் மைனஸ் பார்க்கலாம்
ப்ளஸ்:
முகப்பு பக்கம் அசத்தல். அநேகமாய் அங்கேயே உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் ! எடுத்தவுடன் தமிழ் மணம் ஸ்டார். அவரின் பதிவுகள்... ப்ளாக் எழுதும் ஒவ்வொருவருக்கும் நாம் ஒரு முறை ஸ்டார் ஆக மாட்டோமோ என்ற ஆசை வரும் அளவுக்கு இந்த தமிழ் மண ஸ்டார் ரொம்பவே பிரபலம். ஆயினும் அதனை குறிப்பிட்ட நபர் எப்படி உபயோகிக்கிறார் என்பதை பொறுத்தே அவரது ரீச் அமையும்
முகப்பு பக்கத்தில் உள்ள இந்த வார மற்றும் இன்றைய சூடான இடுகைகள் இன்னொரு நல்ல அங்கீகாரம் ! நமது பதிவு எப்போதாவது அங்கு வருகிறதா என பார்ப்பது வழக்கம். (சமீப காலமாக இந்த சூடான இடுகையில் நம் பதிவுகள் அடிக்கடி எட்டி பார்க்கிறது சிறு மகிழ்ச்சி)
வலப்புறம் ஒன்று முதல் நாற்பது வரை பின்னூட்டம் பெற்ற பதிவுகள் அணிவகுக்கும். இந்த வரிசையும் மாறி கொண்டே இருக்க, வாசிப்பவர்களுக்கு நல்ல வெரைட்டி கிடைக்கிறது
பின் பதிவுகளை பகுதி வாரியாக அரசியல், நகைச்சுவை, சமையல் என பிரித்திருப்பதும் நமக்கு பிடித்த பகுதிக்கு சென்று பதிவுகள் வாசிக்க பெரும் வசதியாக உள்ளது (ஆனால் இங்கு சில நேரம் தவறாக லிஸ்ட் ஆவதும் நடக்கிறது. உதாரணமாக சினிமா சம்பந்தமான பதிவு சமையல் என்பதன் கீழே தொகுக்கப்பட்டிருக்கும். கவனித்து சரி செய்தால் நலம்)
வாரா வாரம் அந்த வார முதல் 20- ப்ளாகர்கள் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறது. இது குறித்து பலருக்கும் மாற்று கருத்து உள்ளது. இருப்பினும் இது ஒரு மாரத்தான் வேலை. விருப்பு வெறுப்பின்றி இது நடந்தால் உண்மையில் மகிழ்ச்சியே.
வருட இறுதியில் தமிழ் மணம் நடத்தும் போட்டிகளில் பதிவர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர் !! இதில் வெல்வோருக்கு நல்ல புத்தகங்களை பரிசளித்து வாசிக்கும் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்கிறார்கள்.
இனி தமிழ் மணத்தில் எனக்கு பிடிக்காத ஒரு சில விஷயங்கள் :
தமிழ் மண முன்னணி (வாக்குகள்) பட்டியலில் இருப்பவை அனைத்தும் சிறந்த பதிவுகளா? உண்மையில் மிக நல்ல பதிவுகள் நிறைய வாக்குகள் பெறுவது இல்லை. உதாரணமாய் சமுத்ரா என்கிற பதிவர் மிக அருமையாக எழுதுகிறார். புத்தகங்களில் வரும் அளவு அவர் எழுத்து உள்ளது. அவருக்கு எத்தனை பேர் வாக்களிக்கின்றனர்? எத்தனை முறை அவருடைய இடுகை சூடான இடுகை லிஸ்டிலாவது வருகிறது என்றால், அநேகமாய் இல்லை என்று தான் சொல்ல வேண்டி உள்ளது. வாக்கு என்பது முழுக்க முழுக்க " மொய்க்கு பதில் மொய்" என்கிற அளவில் தான் நடக்கிறது என்கிற போது அதற்கு அதிக முக்கியத்துவம் தேவையா?
தமிழ் மண நிர்வாகிகள் அவ்வப்போதாவது மிக அதிக வாக்குகள் வாங்கி முன்னணியில் இருக்கும் இடுகைகளை வாசித்து பார்க்கட்டும். இந்த அரசியல் தமிழ் மணத்தின் quality-ஐயும் குறைக்கிறது என்பதை தமிழ் மண நிர்வாகிகள் உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்த மைனஸ்: ஓட்டு போடுவதற்கு ஒவ்வொரு முறையும் முழு ஈ மெயில் ஐ.டி மற்றும் பாஸ்வோர்ட் கேட்பது. இதனால் நிறைய பேர் ஓட்டு போடாமல் போய் விடுகிறார்கள்.
சமீபத்தில் நிகழ்ந்த பிரச்சனை தமிழ் மணத்திற்கு சிறு கரும் புள்ளி தான். அதிலிருந்து விரைவில் மீண்டு அனைவரையும் மீண்டும் அரவணைத்தது நல்ல விஷயம் !
இன்ட்லி
ஒன்றை முதலிலேயே சொல்லி விடுகிறேன். நம் சைட்டுக்கு எங்கிருந்து அதிக visitors வருகிறார்கள் என பார்க்கும் வசதி கூகிளில் உள்ளதல்லவா? அதை வைத்து பார்க்கும் போது எப்போதும் இன்ட்லி மூலம் தான் அதிக visitors நம் ப்ளாகுக்கு வருகிறார்கள் ! ஒவ்வொரு ப்ளாகரும் விரும்புவது நம் எழுத்தை நிறைய பேர் வாசிக்க வேண்டும் என்பது தானே ! இதனை நிறைவேற்ற பெரிதும் உதவுகிறது இன்ட்லி.
இன்ட்லியில் ஓட்டு போடுவது மிக எளிது. இதனால் முன்பெல்லாம் ஒவ்வொரு பதிவுக்கும் நிறைய ஓட்டு விழும். மேலும் குறிப்பிட்ட ஓட்டுகள் தாண்டினால் நமக்கு "உங்கள் இடுகை பிரபலமாக்கப்பட்டது " என மெயில் வரும். இது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இப்போது இந்த முறை இல்லை.
இன்ட்லியில் தற்போதைய மாற்றங்கள் சற்று குழப்பமாக அமைந்து விட்டன.
கிட்டத்தட்ட நூறு பதிவர்களை மட்டும் "இன்ட்லி பரிந்துரை " பதிவர்களாக காட்டுகிறார்கள். இதில் ரெகுலராக எழுதும் பலரும் வந்தாலும் கூட, இதில் வராத பிற பதிவர்கள் மனம் வருந்தவும் வாய்ப்புண்டு.
நாம் இன்ட்லியில் நுழைந்தால்,முதலில் நாம் எந்தெந்த பதிவர்களை தொடர்கிறோமோ அவர்களின் படைப்புகள் மட்டுமே தெரிகிறது. மற்ற பதிவுகளை வாசிக்க எங்கே போவது என புது ஆட்களுக்கு நிச்சயம் குழப்பமாக இருக்கும்.
வாசிக்க, ஓட்டளிக்க என பல விதத்திலும் எளிமையாக இருந்த இன்ட்லி தற்சமயம் சற்று Complicate ஆகி விட்டது. பழைய விஷயங்களில் சிலவற்றை மீண்டும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்பது வாசகர்களின் எதிர்பார்ப்பு .
யுடான்ஸ்
தமிழ் மணம், இன்ட்லி என்கிற வரிசையில் யுடான்ஸ் பேரும் இவ்வளவு குறுகிய காலத்தில் வந்ததே பெரிய விஷயம் அல்லவா? பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் திரட்டி என்கிற இவர்கள் tagline- சுவாரஸ்யமாகவும் அனைவரையும் கவரும் விதத்திலும் உள்ளது. தமிழ் மணம் மற்றும் இன்ட்லியில் உள்ள நல்ல விஷயங்களை தங்களுக்கே உரித்தான முறையில் இங்கு உபயோகித்துள்ளனர்.
ஓட்டு போடுவது மிக எளிதாக உள்ளது. பதிவுகள் வாசிப்பதும் தான். இந்த வார ஸ்டார் இன்னும் ஒரு சுவாரஸ்யம். இப்போதைக்கு அமைப்பளர்களுக்கு தெரிந்த நண்பர்கள் தான் அதிகம் நட்சத்திரங்களாக இடம் பெறுகிறார்கள் ! இன்னும் புது புது ப்ளாகர்களை ஸ்டார் ஆக்கி எழுத வைக்க வேண்டும். மேலும் இதற்கு முன் ஸ்டாராக இருந்தவர்கள், அந்த வாரத்தில் என்ன எழுதினார்கள் என்பது குறித்த தகவல் கிடைப்பதில்லை. இன்னும் சொல்லணும்னா, யார் யார் ஸ்டார் ஆக இருந்தார்கள் என்ற தகவலே பார்க்க முடியலை. இதை பார்க்கிற மாதிரி அவர்கள் செய்ய வேண்டும்.
யுடான்ஸ் டிவி என்பது மிக நல்ல கான்செப்ட். இந்த விஷயத்தில் தமிழ் திரட்டிகளில் இவர்கள் ஒரு முன்னோடியாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
மேலும் பிரிவுகள் படி பதிவுகளை (நகைச்சுவை, சினிமா) வாசிக்கும் வசதியும் கொண்டு வந்தால் நல்லது.
***
இறுதியாக ..
எழுதும் எந்த பதிவருக்கும் இந்த திரட்டிகள் தான் மிக பெரிய உந்துதல் ..Recognition எல்லாமே தருகின்றன ! லாப நோக்கின்றி சாதாரண மனிதர்களால் நடத்தப்படும் இவர்கள் சேவை போற்ற தக்கது. இன்னும் தங்கள் திரட்டியை எப்படி முன்னேற்றலாம் என்று எண்ணத்துடன் இவர்கள் செயல் பட்டால் பதிவர்களாகிய நமக்கு கொண்டாட்டம் தான் !
ஓட்டு போடுவது மிக எளிதாக உள்ளது. பதிவுகள் வாசிப்பதும் தான். இந்த வார ஸ்டார் இன்னும் ஒரு சுவாரஸ்யம். இப்போதைக்கு அமைப்பளர்களுக்கு தெரிந்த நண்பர்கள் தான் அதிகம் நட்சத்திரங்களாக இடம் பெறுகிறார்கள் ! இன்னும் புது புது ப்ளாகர்களை ஸ்டார் ஆக்கி எழுத வைக்க வேண்டும். மேலும் இதற்கு முன் ஸ்டாராக இருந்தவர்கள், அந்த வாரத்தில் என்ன எழுதினார்கள் என்பது குறித்த தகவல் கிடைப்பதில்லை. இன்னும் சொல்லணும்னா, யார் யார் ஸ்டார் ஆக இருந்தார்கள் என்ற தகவலே பார்க்க முடியலை. இதை பார்க்கிற மாதிரி அவர்கள் செய்ய வேண்டும்.
யுடான்ஸ் டிவி என்பது மிக நல்ல கான்செப்ட். இந்த விஷயத்தில் தமிழ் திரட்டிகளில் இவர்கள் ஒரு முன்னோடியாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
மேலும் பிரிவுகள் படி பதிவுகளை (நகைச்சுவை, சினிமா) வாசிக்கும் வசதியும் கொண்டு வந்தால் நல்லது.
***
இறுதியாக ..
எழுதும் எந்த பதிவருக்கும் இந்த திரட்டிகள் தான் மிக பெரிய உந்துதல் ..Recognition எல்லாமே தருகின்றன ! லாப நோக்கின்றி சாதாரண மனிதர்களால் நடத்தப்படும் இவர்கள் சேவை போற்ற தக்கது. இன்னும் தங்கள் திரட்டியை எப்படி முன்னேற்றலாம் என்று எண்ணத்துடன் இவர்கள் செயல் பட்டால் பதிவர்களாகிய நமக்கு கொண்டாட்டம் தான் !
தமிழ்மணமும் பதிவர்களால் தான் நடத்தப் படுகிறது என நினைக்கிறேன்.
ReplyDeleteதமிழ்மணம் திரட்டியின் தொன்மையும் அதன் பிரபலத்துக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteநல்ல பய்னுள்ள பதிவு
ReplyDeleteபாரபட்சமின்றி மிகச் சரியாக திரட்டிகளின்
பலம் மற்றும் பலவீனங்களை
ப்திவிட்டிருப்பது அருமை.வாழ்த்துக்கள்
த.ம 1
மோஹன்குமார்,
ReplyDeleteஹி..ஹி நானும் சில நாட்களுக்கு முன்னர் எது சிறந்த திரட்டினு ஒருப்பதிவுப்போட்டேன், என்னைப்பொறுத்த வரை தமிழ்மணம் முதலில் வருது, அடுத்து யுடான்ஸ் தான், வேறு எதுவும் கவரவில்லை.
சிறந்த வலைப்பதிவு திரட்டி எது
நன்றி தலைவரே.. நிச்சயம் குறைகள் களைந்து மேலும் மேம்படுத்தப்படும் உங்களைப் போன்ற பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் திரட்டி.
ReplyDeleteநல்ல ஆய்வு.
ReplyDeleteGood review .. excellent keep it up
ReplyDeleteதமிழ்மணத்தின் முகத்தோற்றத்தில் உள்ள கவர்ச்சி வேறு எந்த திரட்டியிலும் இல்லை.
ReplyDeleteஇப்பொழுதே நீங்கள் பிரிவுகளின் படி படிக்க முடியும் தலைவரே..
ReplyDeleteயூசர் ஃப்ரண்ட்லி என்று பார்த்தால் 'யூடான்ஸ்' தான் வரும். அதிகம் பேருக்குத் தெரிந்திருப்பது 'தமிழ் மணம்' தான். நல்லதொரு ஆய்வு.
ReplyDeleteThis post has come in Thamizh Manam hot articles for the day:
ReplyDelete//இன்று வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 30 இடுகைகள்
தமிழ் மணம், இன்ட்லி, யுடான்ஸ் : ஓர் ஒப்பீடு மோகன் குமார் | 0 மறுமொழி | | பதிவுலக நண்பர்கள் | அனுபவம்தமிழில் தமிழ் மணம், இன்ட்லி, யுடான்ஸ், தமிழ் 10, திரட்டி, உளவு என ஏறக்குறைய பத்து திரட்டிகள் இருக்கும் என நினைக்கிறேன். இதில் முன்னணியில் இருப்பவை ...0 மறுமொழிகள் //
சரியான அலசல்.தங்களது தொழில் சார்ந்த திறமை எழுத்தில் பளிச்சிடுகிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteயுடான்ஸின் மாஸ்டர் ப்ரெய்னாக ஒரு பச்சிளம் பாலகர் இருப்பதுதான் வியப்பை தருகிறது.
ReplyDeleteநீச்சல் காரன்: நன்றி. நிர்வாகிகளில் ஒரு சில ப்ளாக் வைத்திருக்கின்றனர். ஆயினும் தமிழ் மணம்
ReplyDeleteநிர்வாகிகளாக தான் அதிகம் அறியப்படுகிறார்கள்
**
அப்பாதுரை said...
தமிழ்மணம் திரட்டியின் தொன்மையும் அதன் பிரபலத்துக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
உண்மை. மிக சரி !
**
ரமணி : மகிழ்ச்சி நன்றி
**
வவ்வால் : வாசித்தேன். இன்ட்லியும் நல்ல திரட்டி தான். Experience செய்து பாருங்கள்
ராமலட்சுமி: நன்றி
ReplyDelete**
வெங்கி: மிகுந்த மகிழ்ச்சி நன்றி
**
கேபிள் : யுடான்சில் பிரிவு வாரியாக பார்க்க முடியும் என்பது புது தகவல். பார்க்கிறேன்
**
Robin said...
தமிழ்மணத்தின் முகத்தோற்றத்தில் உள்ள கவர்ச்சி வேறு எந்த திரட்டியிலும் இல்லை.
உண்மை தான் Robin! நன்றி
வியபதி : முதல் வருகைக்கு மகிழ்ச்சி நன்றி
ReplyDelete**
நன்றி டாக்டர் வடிவுக்கரசி
**
சிவகுமார்; உங்க தோஸ்தை வம்பிக்குழுக்காம உங்களால் இருக்க முடியாதே :))
நல்ல அலசல்.
ReplyDeleteநல்ல அலசல் மோகன்..... திரட்டிகள் மூலம்தானே நிறைய பேர் படிக்கிறார்கள்....
ReplyDeleteNadunilaimaiyodu koodiya nalla alasal. Nanri.
ReplyDeleteTM 4.
ReplyDeleteநல்ல பதிவு. எனது நல்வாழ்த்துக்கள். நன்றி. புது பதிவர் : தனபாலன்
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
நேர்மையான பதிவும், உண்மையான கருத்துக்களும்!
ReplyDeleteAre you in need of a loan?
ReplyDeleteDo you want to pay off your bills?
Do you want to be financially stable?
All you have to do is to contact us for
more information on how to get
started and get the loan you desire.
This offer is open to all that will be
able to repay back in due time.
Note-that repayment time frame is negotiable
and at interest rate of 2% just email us:
reply to us (Whats App) number: +919394133968
patialalegitimate515@gmail.com
Mr Jeffery