நண்பர்களே, கேரள பயணம் நல்ல படி முடிந்தது.
துவக்கத்திலேயே ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். கேரளா செல்ல,
அங்குள்ள இடங்களை சுற்றி பார்க்க நிறைய தயக்கம் இருந்தது. முல்லை பெரியாறு அணை ஒட்டி எழுந்த பிரச்சனைகள், தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற தகவல். இவையே
தயக்கத்துக்கு காரணம் ! ஆனால் எனது பயணத்தில் அறிந்த விஷயம் :
இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகள் தங்கள் சுய லாபத்துக்காக செய்யும் வேலை ! எல்லா இடங்களுக்கும் ஆட்டோ மற்றும் பஸ்ஸில் தான் - அனைவரிடமும் தமிழில் விசாரித்து விசாரித்து தனியாக பயணித்தேன்.நான் சந்தித்தவர்களில் பெரும்பாலானோர் என்னை மிக அன்புடனும், நல்ல முறையிலும் நடத்தினர்.
நிற்க. விரைவில் துவங்குகிறது கேரள பயண கட்டுரை. இதோ ஒரு மினி டிரைலர்...
|
அடடா நீர்வீழ்ச்சின்னா இது தான்யா நீர் வீழ்ச்சி ! இடத்தை எளிதில் கண்டு பிடிசிருப்பீங்களே ! |
|
ஊருக்கு போனதென்னவோ இப்படி பேசத்தான். ஆனா பயபுள்ளை வேற என்னென்ன வேலையெல்லாம் செஞ்சிருக்கு நீங்களே பாருங்க ! |
|
இருபது மாடி உயரத்தில் ஒரு சர்ச் டவர். ஏறி இறங்கிய அனுபவம்..விரைவில்... |
|
பின்னாடி டேம் இருப்பது தெரியது !
நீங்க நினைக்கிற மாதிரி இது சர்ச்சைக்குரிய டேம் அல்ல !
|
|
இந்த இடம் குறித்த க்ளூ : கேபிள் மற்றும் சிபிக்கு பிடித்த இடம் ! |
|
படத்தில் கோபமா வருபவர் அய்யா சாமியை அடித்தாரா இல்லையா? |
|
யாருங்க இந்த வி. ஐ. பி? என்ன கோவில் இது?
|
|
பார்வை இல்லாத நபர் என்ன விற்கிறார் என்று அறிய
வெயிட் பார் பியூ டேஸ் .. |
|
பாத்துய்யா. தலை மேலே Fan விழுந்து வைக்க போகுது..
அய்யா சாமி தங்கிய ஹோட்டல் !!
|
|
இது என்ன இடம்? எனி கெஸ்? |
|
முக்கிய நேரத்தில் அய்யாசாமிக்கு உதவிய
சிறுவர்கள் ...... இதன் பின்னே உள்ள கதை...விரைவில் !
|
|
உழைப்பாளர் சிலை (மாதிரி)யை நகர்த்த பார்க்கும்
அய்யாசாமி....
|
|
படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர் (இந்த கார்னர் அனைத்து பதிவிலும் உண்டு) |
|
குட்டீஸ் கார்னர் (இதுவும் அனைத்து பதிவிலும் உண்டு) |
|
கல்லறையா இது? என்ன கதை பின்னணியில்? |
|
அட ! இது வேறயா? |
|
ஆட்டோ காரரையும் விட்டு வைக்கலை போலிருக்கு ! (ஆட்டோ காரர் இதுவரை போகாத இடத்துக்கு, அவரை கூட்டி போனார் அய்யா சாமி ! விவரத்துக்கு காத்திருங்கள்) |
|
கொள்ளை கூட்ட தலைவர்கள் போலிருக்கும் இவர்கள்
மெய்யாலும் பெரிய ஆளுங்க !
**************
விரைவில் துவங்குகிறது கேரளா பயண கட்டுரை !
டிஸ்கி: ஊருக்கு வந்த பின் "அனைத்து இடங்களிலும் " அதிக ஆணி. புது பதிவெழுத நேரம் இல்லை. விரைவில் சந்திப்போம்!
|
ட்ரைலர் அசத்தல்!
ReplyDeleteநான் எர்ணாகுளம் போயிருக்கிறேன். ஆட்டோ கட்டணம் செம சீப்.
//படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர் (இந்த கார்னர் அனைத்து பதிவிலும் உண்டு) //
மிசஸ்.அய்யாசாமியின் கவனத்திற்கு இது கண்டிப்பாக போகவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் :))
ஸ்ஸ் அபா...டிரைலரே கண்ண கட்டுதே...நெறய எதிர்ப்பார்க்கிறேன் மாப்ள!
ReplyDeleteஅசத்தலான ட்ரைலர்....
ReplyDeleteகேரளா அருமையான ஊர்.... சும்மாவா சொன்னாங்க “God's Own Country" அப்படின்னு....
பயணத்தொடரை விரைவில் எதிர்ப்பார்க்கிறோம்:)!
ReplyDeleteகுழந்தைகள் படம் அழகு.
ஒரு சேச்சி! படம்கூட டிரைலர்ல இல்லை இது போங்கு ஆட்டம்....
ReplyDeleteகல்லறை தலைகீழாக இருப்பதன் பின்னணி என்ன? wait for few days...
ReplyDeleteகாத்திருக்கிறேன் தோழர்
உதவி செய்த சிறுவர்கள் பற்றிய பதிவை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ReplyDeleteஇன்று முதல் 'வீடு திரும்பல்' மோகன் 'கேள்வியின் நாயகன்' என்று அழைக்கப் படுகிறார்.
ReplyDeleteயம்மா? எவ்வளவு கேள்விகள்...
அய்யாசாமி ஒரு மாதத்துக்கு பதிவ தேத்திட்டார்போல... என்ன அண்ணா சரியா........
ReplyDeleteடிரைலரே பிரமாதமா இருக்கு சார்.
ReplyDeleteபயணக் கட்டுரைக்காக ஆவலுடன் வெயிட்டிங்....
அருமையான படங்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
போகிற போக்கைப் பார்த்தால், சினிமாத்துறையில் நுழையும் எண்ணம் வந்துவிட்டது போல் தெரிகிறதே? டிரைலர் பற்றித்தான் சொல்றேன்.
ReplyDelete//முக்கிய நேரத்தில் அய்யாசாமிக்கு உதவிய சிறுவர்கள் ...... //
அவங்க நிற்பதப் பார்த்தா, நீங்க என்னமோ அவங்கள மிரட்டிப் படம் எடுத்த மாதிரில்ல தெரியுது:-)))))))!
எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ள ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.
// தனியாக பயணித்தேன்.//
ReplyDeleteஅய்யாசாமி அப்பாவின்னுல நினைச்திருந்தேன்!
ரகு said...
ReplyDelete//படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர் (இந்த கார்னர் அனைத்து பதிவிலும் உண்டு) //
மிசஸ்.அய்யாசாமியின் கவனத்திற்கு இது கண்டிப்பாக போகவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் :))
***
ரகு உங்களை ஒரு நல்ல பிரண்டு என நினைத்திருந்தேன். ஏன் இப்படி ஒரு கோபம்? எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம். :))
விக்கியுலகம் said...
ReplyDeleteஸ்ஸ் அபா...டிரைலரே கண்ண கட்டுதே...நெறய எதிர்ப்பார்க்கிறேன் மாப்ள!
**'
உங்கள் கமன்ட் ரொம்ப மகிழ்ச்சி தருது விக்கி. விரைவில் தொடர் துவங்கும்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteகேரளா அருமையான ஊர்.... சும்மாவா சொன்னாங்க “God's Own Country" அப்படின்னு....
**
ஆம் வெங்கட். அப்படி சொன்னது முழுக்க சரி என்பதை ஒவ்வொரு முறை செல்லும் போதும் உணர்கிறேன்
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteபயணத்தொடரை விரைவில் எதிர்ப்பார்க்கிறோம்:)! குழந்தைகள் படம் அழகு.
***
நன்றி மேடம் !
வீடு K.S.சுரேஸ்குமார் said...
ReplyDeleteஒரு சேச்சி! படம்கூட டிரைலர்ல இல்லை இது போங்கு ஆட்டம்....
**
ஹா ஹா. நன்றி சுரேஷ் !
suryajeeva said...
ReplyDeleteகல்லறை தலைகீழாக இருப்பதன் பின்னணி என்ன? wait for few days...காத்திருக்கிறேன் தோழர்
**
ஜீவா; அந்த படத்தை தவறுதலாய் தலை கீழாய் வலை ஏற்றி விட்டேன். பின்பு தான் தெரிந்தது. சரி அப்படியே இருக்கட்டும். நேரே இருந்தால் அதில் உள்ள வரிகளை படித்து விடுவார்கள் என விட்டு விட்டேன் !
சிவகுமார் ! said...
ReplyDeleteஉதவி செய்த சிறுவர்கள் பற்றிய பதிவை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
**
நன்றி சிவா. தொடரை தொடர்ந்து படித்தால் (தான் ) கண்டுபிடிக்க முடியும் (யப்பா என்னா மார்கெட்டிங் )
ஆதி மனிதன் said...
ReplyDeleteஇன்று முதல் 'வீடு திரும்பல்' மோகன் 'கேள்வியின் நாயகன்' என்று அழைக்கப் படுகிறார்.
யம்மா? எவ்வளவு கேள்விகள்...
**
ஹி ஹி .. சில கேள்விகளை "கேள்வி இல்லாத மாதிரி" இப்போ மாத்தி எழுதிட்டேன் . நன்றி ஹை
சங்கவி said...
ReplyDeleteஅய்யாசாமி ஒரு மாதத்துக்கு பதிவ தேத்திட்டார்போல... என்ன அண்ணா சரியா........
***
இல்லையா பின்னே? நன்றி சங்கவி !
கோவை2தில்லி said...
ReplyDeleteடிரைலரே பிரமாதமா இருக்கு சார். பயணக் கட்டுரைக்காக ஆவலுடன் வெயிட்டிங்....
**
மகிழ்ச்சியும் நன்றியும் மேடம்
Rathnavel Natarajan said...
ReplyDeleteஅருமையான படங்கள்.வாழ்த்துகள்.
**
நன்றி ஐயா
அமைதி அப்பா said...
ReplyDeleteபோகிற போக்கைப் பார்த்தால், சினிமாத்துறையில் நுழையும் எண்ணம் வந்துவிட்டது போல் தெரிகிறதே? டிரைலர் பற்றித்தான் சொல்றேன்.
**
அதுக்கெல்லாம் ஹவுஸ் பாஸ் பெர்மிஷன் கிடைக்காது சார்.
***
////முக்கிய நேரத்தில் அய்யாசாமிக்கு உதவிய சிறுவர்கள் ...... //
அவங்க நிற்பதப் பார்த்தா, நீங்க என்னமோ அவங்கள மிரட்டிப் படம் எடுத்த மாதிரில்ல தெரியுது:-)))))))!
*****
ஹா ஹா ! அப்படியெல்லாம் இல்லை. காத்திருங்கள்
****
அமைதி அப்பா said...
// தனியாக பயணித்தேன்.//அய்யாசாமி அப்பாவின்னுல நினைச்திருந்தேன்!
***
முதல் நாள் சில நண்பர்கள், உடன் இருந்தனர். ஒரு சில கோயில்களுக்கு உடன் வந்தனர். மற்ற இடங்கள் தனியே தான் பயணித்தேன்
நன்றி அமைதி அப்பா
ஏராள எதிர்பார்ப்புகளை உண்டு பண்ணிவிட்டீர்கள்!
ReplyDeleteரசிக்கும்படி...ருசிக்கும்படி எழுதுங்கள்.
அருமையான படங்கள் ! தொடருங்கள் !
ReplyDeleteகட்டுரைக்கு ட்ரைலர் போட்டு அசத்துறீங்க காத்திருக்கிறேன் கேள்விகளுக்கான பதில்களுக்காக.
ReplyDeleteகட்டுரைக்கு ட்ரைலர் போட்டு அசத்துறீங்க காத்திருக்கிறேன் கேள்விகளுக்கான பதில்களுக்காக.
ReplyDelete//ஒரு சேச்சி! படம்கூட டிரைலர்ல இல்லை இது போங்கு ஆட்டம்....
ReplyDelete:)))))
//பரமசிவம் said...
ReplyDeleteஏராள எதிர்பார்ப்புகளை உண்டு பண்ணிவிட்டீர்கள்! ரசிக்கும்படி...ருசிக்கும்படி எழுதுங்கள் //
மிக நன்றியும் மகிழ்ச்சியும் பரமசிவம். நிச்சயம் முயல்கிறேன்
***
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅருமையான படங்கள் ! தொடருங்கள் !
****
நன்றி தனபாலன்
Uma said...
ReplyDeleteகட்டுரைக்கு ட்ரைலர் போட்டு அசத்துறீங்க காத்திருக்கிறேன் கேள்விகளுக்கான பதில்களுக்காக.
*******
நன்றி உமா. ப்ளாகை தொடர ஆரம்பித்து கொஞ்ச நாள் ஆனாலும் இப்போது தான் முதலில் Comment தருகிறீர்கள் ! நன்றி !!
அப்பாதுரை said...
ReplyDelete//ஒரு சேச்சி! படம்கூட டிரைலர்ல இல்லை இது போங்கு ஆட்டம்....
:)))))
***
அப்பாதுரை : :)))
என்னங்க முன்னோட்டமே இவ்வளவு பெரிசா இருக்கு... அது பத்மநாபசாமி கோவிலதானே...! எப்போ தொடங்கப் போறீங்க...
ReplyDeleteஸ்ரீராம். said...
ReplyDeleteஎன்னங்க முன்னோட்டமே இவ்வளவு பெரிசா இருக்கு... அது பத்மநாபசாமி கோவிலதானே...! எப்போ தொடங்கப் போறீங்க...
**
நன்றி ஸ்ரீராம். பத்மநாபசாமி கோவில இல்லை. அநேகமாய் அடுத்த வெள்ளி தொடர் தொடங்கிடும்
போட்டோவை தலைகீழாப் போட்டாலும் நாங்க கண்டுபிடிச்சு படிச்சுருவோம்ங்கற உங்க நம்பிக்கை வீண் போகலை.. இது என்ன அக்கப்'போர்'ன்னு குழம்பாதீங்க,
ReplyDeleteஅதாவது............................................. படிச்சாச் :-)