அண்ணா யூனிவர்சிட்டியும் நுழைவு தேர்வும்
அண்ணா யூனிவர்சிட்டி பேராசிரியர் ஒருவருடன் சமீபத்தில் பேசும் போது " நுழைவு தேர்வை எடுத்த பிறகு மாணவர்கள் குவாலிட்டி ரொம்ப குறைஞ்சு போயிடுச்சு" என்று ஆரம்பித்தார். " சார் இப்போ தான் கிராமப்புற மாணவர்களும் உள்ளே வர்றாங்க. நுழைவு தேர்வு இருந்தால் நகரத்து மாணவர்கள் தான் அதிகம் உள்ளே வருவாங்க" என நான் கூற, அவர் சொன்ன ஒரு தகவல் அதிர்ச்சியாக இருந்தது.
"கணக்கில் இருநூறுக்கு இருநூறு வாங்கி அண்ணா யூனிவர்சிட்டியில் B. E சேர்ந்தவர்களில் அறுபது சதவீதம் பேர் முதல் வருஷம் கணக்கில் பெயில் ! நீங்களே பாத்துக்குங்க. பிளஸ் டூவில் இருநூறுக்கு இருநூறு. இஞ்சியரிங் முதல் வருஷம் கணக்கில் பெயில். ஏன் இப்படி?" என்று அவர் கேட்ட போது என்னிடம் அதற்கு பதில் இல்லை !
போட்டோ கார்னர்
அம்புலி
அம்புலி - பதிவர் ஹரீஷ் தன் நண்பருடன் இயக்கிய படம் ! இன்னும் பார்க்கலை. அரவான் படத்துக்கு சமீபத்தில் நங்கநல்லூர் சென்ற போது அதே காம்ப்ளக்சில் அம்புலி ஓடி கொண்டிருந்தது. அரவான் அன்று தான் ரிலீஸ் ! அம்புலி தியேட்டருக்கு வந்து மூணு வாரம் ஆகியிருந்தது. ஆனால் அரவானை விட அம்புலிக்கு கூட்டம் அதிகம் ! இது பற்றி தியேட்டர் ஊழியர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்த போது " அம்புலி நல்லா ஓடுது சார். என்ன ஒண்ணு...சம்மர் லீவில் ரிலீஸ் பண்ணிருந்தா சின்ன பசங்க கூட்டம் இன்னும் நிறைய வந்திருக்கும்.எக்ஸாம் டைமில் ரிலீஸ் பண்ணிட்டாங்க சார்"
இயக்குனர் ஹரீஷை கேட்டா, படம் ரொம்ப நாள் தாமதமானா, வட்டி நிறைய ஓடும், அத்தோட, இப்போ, போட்டி இல்லாத போது ரிலீஸ் செய்வதே மேல். தமிழ் புத்தாண்டுக்கு பெரிய படங்கள் வந்துடும் " என
தமிழ் மணம் டாப் 20-ல் வீடுதிரும்பல்
வீடுதிரும்பல் அவ்வப்போது தமிழ் மணம் டாப் 20- வலைப்பக்கங்களில் எட்டி பார்க்கும். ரெண்டு வாரம் முன்பு 18-ஆம் இடம் வந்தது. சென்ற வாரம் வீடுதிரும்பல் என்ன இடம் என்பதை சொல்ல கொஞ்சம் கூச்சமா இருக்கு. நீங்களே பாத்துக்குங்க. தமிழ்மண நட்சத்திரமாக இருந்த போது கூட இவ்வளவு குறைந்த இடம் கிடைக்கலை !
அய்யாசாமி கார்னர்
அய்யாசாமியின் கல்லூரி கால நண்பர் ஒரு வினோதமான பேர்வழி. கல்லூரி வரும்போது பேண்டுக்கு ஜிப் போட மறந்து விடுவார். தினம் யாராவது பார்த்து சொன்னவுடன் " அப்படியா?" என்று சாதாரணமாய் பேசியவாறு, வெட்கப்படாமல் போட்டு கொள்வார்.
நண்பர்கள் சந்திப்பு ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இதில் காலை நேரம் நண்பரை பார்த்த போது வழக்கம் போல்... போட வில்லை ! " ஏண்டா இன்னும் திருந்தலையா? ஜிப்பை போடுடா" என நண்பர்கள் திட்டியவுடன், ஜிப்பை போட்டவாறே நண்பர் சொன்னது :
" நான் வீட்டை விட்டு கிளம்பும் போது எல்லாத்தையும் கரக்டா பண்ணிடுவேன். சட்டை, பேண்ட்டு, பனியன், ஜட்டி, ஷூவு (அப்படி தான் சொல்வார்), சாக்சு எல்லாம் போட்டுடுவேன். ஆனா கரக்டா ஜிப் போட மட்டும் தோணவே தோணாது. வெளியே வந்து யாராவது சொன்னா தான் போடுவேன். சின்ன வயசிலேந்து இப்படியே தான் இருக்கு". என்றபோது சிரிச்சு மாளலை !
இது பற்றி அய்யாசாமியிடம் கருத்து கேட்டபோது " தினம் மறப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். எனக்கு கடந்த இருபது வருஷத்தில் ரெண்டு மூணு தடவை தான் இப்படி ஆகியிருக்கு" :))
டைம்ஸ் ஆப் இந்தியாவின் பரபரப்பு நியூஸ்கள்
டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு ஆங்கில தினத்தந்தி என அடிக்கடி கூறியுள்ளேன். அதில் நேற்று வந்த சில தலைப்பு செய்திகளை பாருங்கள் :
சென்னை: 17 வயது பள்ளி மாணவனை இழுத்து கொண்டு ஓடிய 37 வயது ஆசிரியை
சென்செக்ஸ் தடாலடி வீழ்ச்சி 247-புள்ளிகள் சரிந்தது
நடிகர் தற்கொலை; காதலி நடிகையும் தற்கொலை முயற்சி
ஐந்தாவது நாளாக நர்ஸ்கள் ஸ்டிரைக்: டாக்டர்கள் ஆதரவு
அதிபர் புடின் வெற்றி.. ரஷியாவில் அவர் வெற்றி தவறானதென போர் கொடி
டேன்கர் லாரி ஸ்டிரைக்: சென்னையில் LPG கேஸ் காலி !
***********
தலைப்புகளை ஜஸ்ட் மொழி பெயர்த்து தந்துள்ளேன். இப்ப சொல்லுங்க. இது ஆங்கில தினத்தந்தி தானே? புதுசாய் ஆங்கிலம் கற்று கொள்ள விரும்புவோர் படிக்க நிச்சயம் டைம்ஸ் ஆப் இந்தியாவை பரிந்துரைக்கலாம் !
ஊருக்கு போறார் அய்யாசாமி
அய்யாசாமி ஒரு செமினாரில் பேசுவதற்காக (இத பார்றா !) திருச்சூர் (கேரளா) போறார். இவர் பேச போவதென்னவோ ரெண்டு மணி நேரம் தான். ஆனால் இரண்டு நாள் அங்கு தங்குறார். ஏன்னு கேட்டா, "திருச்சூர் இதுவரை போனதில்லை. கொஞ்சம் இடமாவது சுத்தி பாக்கலாம்ல அதான்"
ரைட்டு ! போயிட்டு வந்து "பயண கட்டுரை"ன்னு உங்களை கொல்ல போறாரு ! Be careful :))
ஆனா கூட அய்யாசாமி ஒரு விஷயத்தில் அப்செட்டா இருக்கார். வாரா வாரம் சனி, ஞாயிறு தான் இவர் பதிவு எல்லாம் எழுதி அடுத்த ஒரு வாரம் ஓட்டுவார். இந்த முறை வீக் எண்டு ஊரில் இருப்பதால்
நாளை பெண்கள் தினத்தை முன்னிட்டு ஒரு பதிவு உண்டு (அதில் ஒரு சின்ன சர்பிரைஸ் இருக்கு) அதன் பின் வீடுதிரும்பல் ப்ளாகுக்கு கொஞ்ச நாள் விடுமுறை ! Enjoy !!

சொல்லக்கூடும் !

வரும் வாரம் பதிவுகள் கம்மி ஆகிடும். (அடுத்த வாரம் உள்ளூரில் இன்னொரு செமினார் - புது டாபிக்கில் கீது !!)
நாளை பெண்கள் தினத்தை முன்னிட்டு ஒரு பதிவு உண்டு (அதில் ஒரு சின்ன சர்பிரைஸ் இருக்கு) அதன் பின் வீடுதிரும்பல் ப்ளாகுக்கு கொஞ்ச நாள் விடுமுறை ! Enjoy !!
வாழ்த்துக்கள் சார்...தமிழ்மணம் 3-ஆம் இடத்திற்கு...இந்தவாரம் சென்னை வருவேன். வரும்போது உங்களை சந்திக்கிறேன்
ReplyDeleteபதிவின் பெயர் : வீடு திரும்பல்
ReplyDeleteMohan Kumar
இடம் : 3
=============*********============
Congrats
=============*********============
முதல் விஷயம் அதிகமா யோசிக்க வைத்தது...
ReplyDeleteரெண்டாவது விஷயம் போட்டோ நல்லா இருக்கு...
மூன்றாவது...நானும் இன்னும் பாக்கல..பாத்துடறேன் ஹிஹி!
அய்யாசாமி ஒன்னு ஹே ஹே கக்கே பெக்கே!
அய்யாசாமி ரெண்டு என்ஜாய் இன் மல்லு பிளேஸ்யா!(தப்பா எதவும் இல்லீங்கோ!)
அம்புலி - சென்ற வருடம் அக்டோபர், நவம்பர் மாதங்களிலேயே ரிலீஸ் பண்ணுவதாகத்தான் இருந்தார்கள். தவிர்க்க முடியாத சில காரணங்களால்தான் பிப்ரவரி 2012 வரை தள்ளிப்போனது.
ReplyDeleteதமிழ்மணம் 3ம் இடம் - மகிழ்ச்சி + வாழ்த்துகள் மோகன் :)
திருச்சூர் பயணம் - ரைட்டு, நீங்க அடிச்சு ஆடுங்க :))
தமிழ்மண பட்டியலில் மூன்றாம் இடத்தை பெற்றதற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅம்புலி படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க சார்.
திருச்சூர் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துகள். வந்து பயணக்கட்டுரை எழுதுங்க. ஆவலுடன் காத்திருக்கிறோம்.
//நாளை பெண்கள் தினத்தை முன்னிட்டு ஒரு பதிவு உண்டு (அதில் ஒரு சின்ன சர்பிரைஸ் இருக்கு)//
மிஸஸ் அய்யாசாமி புது வலைப்பூ தொடங்கி இருக்காங்களா? இல்லை மகளா?
கசாலி: நன்றி. இந்த வார இறுதியில் (சனி, ஞாயிறு) மட்டும் இருக்க மாட்டேன். பிற நாட்கள் எனில் அவசியம் பார்ப்போம்
ReplyDeleteநன்றி ஆதி மனிதன் !
ReplyDeleteவிக்கி: ஹா ஹா உங்க பின்னூட்டம் நான் ரசித்தேன். வீட்டம்மா படிச்சால் பிரச்சனை
ReplyDeleteஞே :))
அம்புலி பற்றிய தகவலுக்கு நன்றி ரகு
ReplyDeleteகோவை2டில்லி மேடம் : நீங்க சொன்ன ரெண்டும் இல்லை. ஒரு நாள் வெயிட் பண்ணுங்க. நன்றி
ReplyDeleteநல்ல பகிர்வு மோகன்....
ReplyDeleteநாளை வரை காத்திருக்கிறேன்....
அம்புலி நன்றாக ஓடுவது சந்தோசமான செய்தி. டைம்ஸ் ஆப் இந்தியா சென்ஷேசனல் செய்திகளை போட்டாலும் தவிர்க்க முடியாத பேப்பர். ஹிந்து, TOI ரெண்டையுமே நான் வாங்கறேன்.
ReplyDelete//வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநல்ல பகிர்வு மோகன்.... நாளை வரை காத்திருக்கிறேன்....//
நன்றி வெங்கட்
**
//சிவகுமார் ! said...
ReplyDeleteஅம்புலி நன்றாக ஓடுவது சந்தோசமான செய்தி. டைம்ஸ் ஆப் இந்தியா சென்ஷேசனல் செய்திகளை போட்டாலும் தவிர்க்க முடியாத பேப்பர். ஹிந்து, TOI ரெண்டையுமே நான் வாங்கறேன்.//
***************
நன்றி சிவா
********
Rathnavel Natarajan said...
ReplyDeleteவாழ்த்துகள்.
***
நன்றி ஐயா !
இஞ்சினியரிங் மாணவர்கள் முதல் வருடம் அதிகம் ஃபெயிலாவதற்குக்க் காரணம்:
ReplyDelete12-ம் வகுப்பில் எல்லாப் பள்ளிகளுமே அநேகமாக பயங்கர ட்ரெய்னிங் கொடுப்பார்கள். போததற்கு, மாணவர்கள் தனியாக ட்யூஷனுக்கும் செல்வார்கள். அதுவே, கல்லூரி வந்தவுடன் மாணவ்ர்களுக்கும் அலட்சியம் ஆகிவிடுகிறது. ஆசிரியர்களும் பள்ளியைப் போல விழுந்துவிழுந்து கவனிப்பதில்லை. பாடங்களும், பள்ளி போலல்லாது, முதல் வருடம் சற்று ஹெவியாக இருக்கும். இங்லீஷ் மீடியம் வேறு தகராறாகும்.
இது கணக்குக்கு என்றில்லை. மற்ற பாடங்களுக்கும் பொருந்தும். நுழைவுத் தேர்வு வைப்பதினால் கோச்சிங்க் செண்டர்கள்தான் லாபமடையும். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சிரமம்தான் அதிகமாகும்.
தமிழ்மண ரேங்குக்கு வாழ்த்துகள்!! சீக்கிரமே முதல் ராங்க் வாங்க வாழ்த்துகள். :-)))
ReplyDeleteஉங்க ’மறதி’ நண்பருக்கு ஒரு செக் லிஸ்ட் வச்சுக்கச் சொல்லுங்க, வெளியே கிளம்புமுன் படித்துக்கொள்ளட்டும்!!
ReplyDeleteஹுசைனம்மா: வழமை போல் விரிவாக விமர்சனம் செய்தமைக்கு நன்றி
ReplyDeleteதமிழ் மணத்தில் முதலிடமா? மூணே பெருசு. நீங்க வேற? :))Anyhow, thanks for your good wishes.