மம்மூட்டி ஒரு இளம் சாப்ட்வேர் இஞ்சினியர். (நல்ல வேளை கல்லூரி மாணவன் என சொல்லாமல் போனாங்க) "ஷிகாரி" என்கிற நாவலை வாசிக்கும் இவர் நாவலின் முடிவு தெரியாமல் தவிக்கிறார். இதனால் அந்த நாவலில் சொல்ல பட்ட ஊருக்கு வர அங்கு பூனம் பாஜ்வாவை சந்திக்கிறார்
பிளாஸ் பேக் விரிகிறது. "ஷிகாரி" நாவலை எழுதியவரின் மகள் பூனம் பஜ்வா (டபிள் ஆக்ஷன்) அந்த கிராமத்தில் ஒரு புலி வந்து விடுகிறது. ஆங்கிலேயர் ஆளும் காலம். ஆங்கிலேய வீரர் ஒருவரை அழைத்து புலியை கொல்ல சொல்கின்றனர். அப்போது அங்கு வரும் மம்மூட்டி (இன்னோர் டபிள் ஆக்ஷன்) புலியை சத்தம் எழுப்பி விரட்டுகிறார். பூனத்துக்கும் மம்மூ ட்டிக்கும் காதல் மலருகிறது
கடந்த காலமும் நிகழ் காலமும் simultaneous-ஆக சொல்லப்படும் கதையில் சாப்ட்வேர் இஞ்சினியர் மம்மூட்டி நெடு நாள் லீவில் இருப்பதால் வேலை போகிற நிலைமை. ஆனாலும் பூனம் மீது காதலோடு அலைகிறார்.
கடந்த கால கதை என்ன ஆனது? கதையில் வாழ்ந்த ஒரு மனிதரையாவது நேரில் பார்க்க வேண்டும் என்ற மம்மூட்டியின் லட்சியம் பலித்ததா என்பதே க்ளைமேக்ஸ்.
கதை அவுட் லைன் கேட்டால் நல்லா தான் இருக்கு, ஆனா படமாக்கும் போது சொதப்பி விட்டனர்.
ஒரே நேரத்தில் மலையாளம் மற்றும் கன்னடத்தில் எடுத்த படம். மம்மூட்டிக்கு கன்னடத்தில் இது தான் முதல் நேரடி படமாம். (எந்த வயசில் debut பாருங்க !) நியூ டில்லி உள்ளிட்ட படங்களில் நாம் பார்த்து பார்த்து வியந்த மம்மூட்டியா இது! ஹும் ! கழுத்து தொங்கி போய் வயதானது நன்கு தெரிகிறது. இது மம்மூட்டிக்கும் தெரிந்து பாடல் காட்சிகளில் கழுத்தில் மப்ளர் கட்டி கொள்(ல்)கிறார். ரொம்ப செயற்கையாக உள்ளது அவரது இரு பாத்திர படைப்புகளும் !
படத்தின் ஆச்சரியம் ஹீரோயின் பூனம் பஜ்வா தான் ! தமிழில் நம் ஜீவாவுடன் சில படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்டவரா இவர்? கண்களும் முகமும் என்ன அழகாய் பாவம் காட்டுகிறது ! அழகான, நடிக்க தெரிந்த நடிகையை நாம் வீணடித்தோம் ! புடவையில் வரும் பழைய பாத்திரமும் சரி, மாடர்ன் டிரெஸ்சில் வரும் பாத்திரமும் சரி அசத்துகிறார் ! இவர் இல்லா விட்டால் படம் முழுதும் பார்த்திருக்க முடியாது !
இன்னொசன்ட் தமிழில் வடிவேலு மாதிரி ! ஒரு நல்ல பாத்திரத்தில் வந்து ஆங்காங்கு சிரிக்க வைக்கிறார்
இடைவேளைக்கு பின் மக்கள் கொத்து கொத்தாக எழுந்து போன போதே படத்தின் ரிசல்ட் தெரிந்து விட்டது !
நான் எந்த ஊர் போய் தங்கினாலும் அங்கு ஒரு படம் பார்க்க விரும்புவேன். படத்தை விடவும் அந்த மக்களின் வாழ்க்கை, ரசனை, தியேட்டர்கள் எப்படி உள்ளன, அதன் சவுண்ட் எபக்ட், டிக்கெட் விலை இவை அனைத்தும் தான் என்னை கவரும்.
திருச்சூரில் படம் பார்த்த தியேட்டர் ராமதாஸ் அருமை. புது படம் (அன்று தான் ரிலீஸ்!) டிக்கெட் விலை ரூ 40 மற்றும் 50 ! திடீரென மழை பெய்யும் சத்தம். எங்கேனும் ஓட்டை உள்ளதா என மேலே பார்த்தால் திரையில் மழை பெய்கிறது. ஸ்பீக்கரில் மழை சத்தம்! நிஜம் போல் அவ்வளவு அருமையான ஒலி அமைப்பு ! இன்டர்வெல்லில் வெளியே நின்றவர்கள் அனைவரும் தவறாமல் ஒரு முட்டை போண்டா மற்றும் ஒரு காபி வாங்கி கொண்டு, ஒரு கடி முட்டை போண்டா, ஒரு வாய் காபி என குடிக்கின்றனர். ( Be a Roman when you are in Rome என்பதால்,....நானும் !)
இங்கு மாலை படங்கள் ஆறு மணிக்கு சரியாக துவங்கி எட்டு மணி அளவில் முடிகிறது. இறுதி காட்சி எட்டரைக்கு ஆரம்பித்து பத்தரை, 11 அளவில் முழுசும் முடித்து தூங்க போய் விடுகிறார்கள் !
****************************
கடந்த கால கதை என்ன ஆனது? கதையில் வாழ்ந்த ஒரு மனிதரையாவது நேரில் பார்க்க வேண்டும் என்ற மம்மூட்டியின் லட்சியம் பலித்ததா என்பதே க்ளைமேக்ஸ்.
கதை அவுட் லைன் கேட்டால் நல்லா தான் இருக்கு, ஆனா படமாக்கும் போது சொதப்பி விட்டனர்.
படத்தின் ஆச்சரியம் ஹீரோயின் பூனம் பஜ்வா தான் ! தமிழில் நம் ஜீவாவுடன் சில படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்டவரா இவர்? கண்களும் முகமும் என்ன அழகாய் பாவம் காட்டுகிறது ! அழகான, நடிக்க தெரிந்த நடிகையை நாம் வீணடித்தோம் ! புடவையில் வரும் பழைய பாத்திரமும் சரி, மாடர்ன் டிரெஸ்சில் வரும் பாத்திரமும் சரி அசத்துகிறார் ! இவர் இல்லா விட்டால் படம் முழுதும் பார்த்திருக்க முடியாது !
இன்னொசன்ட் தமிழில் வடிவேலு மாதிரி ! ஒரு நல்ல பாத்திரத்தில் வந்து ஆங்காங்கு சிரிக்க வைக்கிறார்
இடைவேளைக்கு பின் மக்கள் கொத்து கொத்தாக எழுந்து போன போதே படத்தின் ரிசல்ட் தெரிந்து விட்டது !
வாரம் மூணு படம் பார்க்கிற கேபிள் & சிபி கூட தியேட்டரில் போட்டோ எடுப்பதில்லை. அய்யாசாமி லூட்டி தாங்க முடியலை !
|
திருச்சூரில் படம் பார்த்த தியேட்டர் ராமதாஸ் அருமை. புது படம் (அன்று தான் ரிலீஸ்!) டிக்கெட் விலை ரூ 40 மற்றும் 50 ! திடீரென மழை பெய்யும் சத்தம். எங்கேனும் ஓட்டை உள்ளதா என மேலே பார்த்தால் திரையில் மழை பெய்கிறது. ஸ்பீக்கரில் மழை சத்தம்! நிஜம் போல் அவ்வளவு அருமையான ஒலி அமைப்பு ! இன்டர்வெல்லில் வெளியே நின்றவர்கள் அனைவரும் தவறாமல் ஒரு முட்டை போண்டா மற்றும் ஒரு காபி வாங்கி கொண்டு, ஒரு கடி முட்டை போண்டா, ஒரு வாய் காபி என குடிக்கின்றனர். ( Be a Roman when you are in Rome என்பதால்,....நானும் !)
இங்கு மாலை படங்கள் ஆறு மணிக்கு சரியாக துவங்கி எட்டு மணி அளவில் முடிகிறது. இறுதி காட்சி எட்டரைக்கு ஆரம்பித்து பத்தரை, 11 அளவில் முழுசும் முடித்து தூங்க போய் விடுகிறார்கள் !
****************************
படத்தில் மூன்று பாடல்கள்.. பழைய நாவலில் வருவதாக சொல்லப்படும் இவை அனைத்தும் வேக தடையே ! இதில் ஹீரோ இன்டிரடியூஸ் பாடல் வேறு !
இயக்குனர் கன்னடத்தில் படம் எடுத்தவராம். முதல் முறை மம்மூட்டி இருக்கும் தைரியத்தில் மலையாள பக்கம் ஒதுங்கி உள்ளார். ஆனால் படம் backfire ஆகிடுச்சு ! அட்டர் பிளாப் !
மம்மூட்டி சார் ! எவ்வளவு பெரிய legend நீங்க ! உங்க வயதுக்கு தக்க நல்ல பாத்திரத்தை மட்டும் தேர்ந்தெடுத்து இனியாவது நடிங்க !!

********************
நேற்றைய பயனுள்ள பதிவுகள் :
மலையாளப் படம் விமர்சன்மும் எழுத ஆரம்பித்தாயிற்றா? ஒண்ணையும் விடறதா இல்லை போல!
ReplyDeleteநல்லா இருக்கு விமர்சனம்.....
அய்யாசாமி லூட்டி - ரசித்தேன் :)))
//வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteமலையாளப் படம் விமர்சன்மும் எழுத ஆரம்பித்தாயிற்றா? ஒண்ணையும் விடறதா இல்லை போல!//
நன்றி வெங்கட். கேரளா போன போது பார்த்த படம். ரொம்ப நாள் ஆனால் மறந்துடும் இல்லையா. அதான் உடனே எழுதி போட்டாச்சு
இடைவேளையில் என்ன சாப்பிட்டீங்க என்று கேட்க நினைத்தால் அதற்கும் விடை இருந்தது! தியேட்டரில் படம் பார்க்கும் பொறுமை இல்லை!
ReplyDeleteவிமர்சனம் சூப்பர் சார்.
ReplyDeleteஉங்க பதிவுகளின் சிறப்பே எங்கு போனாலும் அங்கு உள்ள உணவுகள், விலை முதற் கொண்டு எல்லாவற்றையும் எங்களுக்காக சொல்வது தான்....நன்றி சார்.
எல்லாம் சொன்னீங்க....கேரளாவுல எந்த ஊருன்னு சொல்லவே இல்ல....!!
ReplyDelete’வெட்டு புலி’ இன்பிரேஷனாக இருக்குமோ?
ReplyDelete//நாம் பார்த்து பார்த்து வியந்த மம்மூட்டியா இது! ஹும் ! கழுத்து தொங்கி போய் வயதானது நன்கு தெரிகிறது. இது மம்மூட்டிக்கும் தெரிந்து பாடல் காட்சிகளில் கழுத்தில் மப்ளர் கட்டி கொள்(ல்)கிறார். ரொம்ப செயற்கையாக உள்ளது அவரது இரு பாத்திர படைப்புகளும் ! //
ReplyDeleteஇப்படி நம்ம ஊரு பக்கமும் ஒருத்தர் ரெண்டு பேர் இருக்காங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு (அப்படி அவங்கள பார்கிறதுக்கு)
புதிதாக வந்த மோகன்லால் படங்கள் கூட சுமாராகத்தான் இருந்தன. கேரளா சினி பீல்ட் டல்லடிக்குது நல்லா..
ReplyDelete//நாஞ்சில் பிரதாப் said...
ReplyDeleteஎல்லாம் சொன்னீங்க....கேரளாவுல எந்த ஊருன்னு சொல்லவே இல்ல....!!//
அதானே, ஊரைக் குறிப்பிடாம எப்படி?!
***********
பதிவு நன்று.
//ஸ்ரீராம். said...
ReplyDeleteஇடைவேளையில் என்ன சாப்பிட்டீங்க என்று கேட்க நினைத்தால் அதற்கும் விடை இருந்தது! தியேட்டரில் படம் பார்க்கும் பொறுமை இல்லை!//
நன்றி ஸ்ரீராம். டிவியில் மட்டும் தான் படம் பார்க்கிறீர்களோ?
கோவை2தில்லி said...
ReplyDeleteஉங்க பதிவுகளின் சிறப்பே எங்கு போனாலும் அங்கு உள்ள உணவுகள், விலை முதற் கொண்டு எல்லாவற்றையும் எங்களுக்காக சொல்வது தான்....நன்றி சார்.
***********
மகிழ்ச்சியும் நன்றியும் மேடம்
நாஞ்சில் பிரதாப் said...
ReplyDeleteஎல்லாம் சொன்னீங்க....கேரளாவுல எந்த ஊருன்னு சொல்லவே இல்ல....!!
***
இப்ப தான் திருச்சூர் போய் வந்ததா முந்தைய பதிவில் சொன்னேன். அதான் தனியா சொல்லலை. இப்போ சேர்த்துட்டேன்
*************
சரவணகுமரன் said...
ReplyDelete’வெட்டு புலி’ இன்பிரேஷனாக இருக்குமோ?
**
வெட்டு புலி கதை எனக்கு தெரியலை நண்பரே ! கருத்துக்கு நன்றி
ஆதி மனிதன்: ஆமாங்கோ சரியா சொன்னீங்க !
ReplyDelete//சிவகுமார் ! said...
ReplyDeleteபுதிதாக வந்த மோகன்லால் படங்கள் கூட சுமாராகத்தான் இருந்தன. கேரளா சினி பீல்ட் டல்லடிக்குது நல்லா..//
அப்படியா சிவா? நன்றி
அமைதி அப்பா: படம் பார்த்த ஊர் பேர் இப்போ சேர்த்துட்டேன் நன்றி !
ReplyDeleteவேஷ்டி கலக்குது...
ReplyDeleteஅருமையான விமர்சனம்.
ReplyDeleteநன்றி.