Friday, March 16, 2012

சச்சின் :100வது செஞ்சுரி ஸ்பெஷல்: அசத்திய ஆட்டங்கள் ரீவைன்ட்

சச்சினின் ரசிகர்கள் "எப்போடா தலைவர் நூறாவது செஞ்சுரி அடிப்பார்?" என ஒரு வருடமாய் ஏங்கி தவிக்க, ஒரு வழியாக "கடமையை" முடித்து விட்டார் தல ! இந்த நேரத்தில் சச்சினுக்கும், மிக பொறுமையாய் இருந்த அவர் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு சச்சினின் சிறந்த ஆட்டங்களை திரும்பி பார்த்து மகிழ்வோம் !!

Sachin after reaching the 100th Century Vs Bangaladesh

சச்சின் இத்தகைய landmark-களை கடக்கும் முன் சற்று நேரம் எடுத்து கொள்கிறார் என்பது உண்மை தான். யோசித்து பாருங்கள். அடுத்தடுத்து மூன்று மேட்சில் 99 , 100 , 101 -வது செஞ்சுரிகள் அடித்து விட்டு போய் விட்டால், நமக்கு அதில் என்ன குஷி, excitement இருக்கும்? இப்படி காத்திருந்து அந்த landmark தாண்டும் போதே நாமும் முழுதாக மகிழ்கிறோம் ! ஆனாலும் கூட ஒரு வருஷம் என்பது ரொம்பவே டூ மச் தான். இந்த பதிவு ஒரு முறை மேற்கிந்திய தீவுகெதிரே சென்னையில் சச்சின் செஞ்சுரி அருகே இருக்கும் போது எழுதியது. தொந்நூறுகளில் அவுட் ஆனார் சச்சின். அவ்வப்போது Draft-ல் இருக்கும் இந்த பதிவு "காலா வாதியாகி விடுமோ" என நினைத்த வேளையில் இன்று ஒரு வழியாய் அடித்தார் அந்த நூறாவது செஞ்சுரி !

*********
இந்த பதிவில் சிறந்த ஐந்து ஒரு நாள் செஞ்சுரிகளும், அடுத்த பதிவில் சிறந்த ஐந்து டெஸ்ட் மேட்ச் செஞ்சுரிகளும் இருக்கும் ! இதோ என் பார்வையில் சச்சினின் சிறந்த ஐந்து ஒரு நாள் ஆட்டங்கள் !
*********

1. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 143 and 134 (ஷார்ஜா, 1998 )

எனக்கு தெரிந்து, ஒரு நாள் போட்டியில் சச்சினின் மிக சிறந்த ஆட்டங்கள் இவைதான். தன் பேட்டிங்கின் பீக்கில் இந்த இரு செஞ்சுரிகளும் அடித்தார்.
இந்தியா இந்த டோர்னமெண்ட்டில் மிக சுமாராக ஆடி வந்தது. கடைசி லீக் மேட்ச். இதில் குறிப்பிட்ட அளவு ரன் எடுத்தால் தான் பைனல் போக முடியும். நம் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னில் திரும்பி விட, சச்சின் தனி ஆளாக ஆடியது என்ன ஒரு ஆட்டம் ! இந்த மேட்சில் நடுவே ஷார்ஜாவில் பாலைவன புயல் ( Desert Storm ) வீச அப்போதும் சச்சின் மைதானத்தை விட்டு அசையாமல் கிரீஸ் அருகே அமர்ந்திருந்த காட்சி டிவியில் பார்த்தது இன்றும் நினைவில் உள்ளது. சச்சினின் இந்த ஆட்டத்தால் இந்தியா பைனல் சென்றது.

பைனலிலும் அதே போன்ற ஆட்டம் ஆடி ( 134 ரன்கள் ) , இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இந்த கடைசி இரு ஆட்டத்திலும் சச்சின் Man of the Match என்பதோடு, Man of the Series -ம், அவர் தான் ! இந்த டோர்ணமேண்டிற்கு பிறகு Worlds Best Batsman யார் என்ற கேள்விக்கான விடை கிரிக்கெட் வட்டத்தில் குழப்பமின்றி புரிந்து விட்டது !




2. 200 நாட் அவுட் Vsதென் ஆப்ரிக்கா/ 24 பிப்ரவரி 2011

ஒரு நாள் போட்டியில் ஒரு நாள் யாரேனும் இருநூறு ரன் எடுப்பார்களா என நீண்ட நாளாக எதிர்பார்ப்பு இருந்தது. நான் இதனை கில்கிறிஸ்ட் ஆடும் வரை அவர் 50 ஓவர் ஆடினால் இருநூறு அடிப்பார் என நினைத்து வந்தேன். அவரோ ரிட்டையர் ஆகி விட்டார். தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டேயின், மார்க்கல் போன்ற நல்ல பந்து வீச்சாளர்களுக்கு எதிரே ஆடிய ஆட்டம் இது ! பங்களாதேஷ் அல்லது கென்யா போன்ற குட்டி நாடுகளுக்கு எதிரே அடித்தது அல்ல !



இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தியா எவ்வளவு ரன் எடுக்கிறது என்பது முக்கியமல்ல, சச்சின் நூறு அல்லது இருநூறு அடிப்பது தான் முக்கியம் ! இதை இந்த மேட்ச் நடந்த போது உணர்ந்திருக்கலாம் ! சச்சின் மிக வேகமாக ஆடி ரன்னுக்கு மேல் எடுத்து ஆடி கொண்டிருக்கிறார். மறு முனையில் ஆடும் தோனி சச்சின் சற்று களைப்படைந்ததால், தானே மிக அதிக strike எடுத்து விளாசி கொண்டிருந்தார். இதனால் சச்சினுக்கு strike கிடைக்க வில்லை. பொறுமையிழந்த ரசிகர்கள் தோனியை எதிர்த்து கத்த ஆரம்பித்து விட்டனர். மேட்சின் கடைசி பந்தில் சச்சின் இருநூறு எடுத்தார்.

3. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 175 ( ஹைதராபாத், 2011)

சச்சினின் சிறந்த ஆட்டங்கள் பல ஆஸ்திரேலியாவிற்கு எதிரில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கிரிக்கெட்டை dominate செய்த ஆஸ்திரேலியாவுடன் சச்சின் நன்கு ஆடுகிறார் என்பது மகிழ்ச்சி தானே ! அப்படி ஒரு ஆட்டம் தான் சமீபத்தில் ஹைதராபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரே அவர் அடித்த 175 ரன்கள் !

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 350 ரன்கள் எடுத்து விட, இந்தியா இதை சேஸ் செய்வது மிக கடினம் என நான் பார்க்கவே இல்லை. மொத்த ரன்களில் பாதிக்கும் மேல் சச்சின் அடித்து எடுத்துள்ளார். 40 ஓவர் வரை மிக பொறுமையாகவே ஆடிய சச்சினின் ஆட்டம் கடைசி பத்து ஓவர்களில் தான் செம சூடு பிடித்துள்ளது. மறு நாள் ஹை லைட்சில் சச்சின் ஆட்டம் பார்த்து அசந்து விட்டேன். பல ஷாட்டுகள் இது வரை எந்த மேட்சிலும் நாம் பார்க்காதவை. கடைசி 75 ரன்களை மிக குறைந்த பந்துகளில் எடுத்தார் சச்சின். 48ஆவது ஓவரில் சச்சின் ஒரு நல்ல கேட்சுக்கு சச்சின் அவுட் ஆக, இந்தியா நான்கு ரன் வித்தியாசத்தில் தோற்றது. 36 வயதில் ஆடிய மாரத்தான் இன்னிங்க்ஸ் என்பதாலோ என்னவோ, சச்சினுக்கே பிடித்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்டுளார்.

4. நியூசிலாந்துக்கு எதிராக -186* ஹைதராபாத் 1999-2000


சச்சின் கேப்டனாக இருந்து ஆடிய ஆட்டம் இது. அதுவரை கபிலின் 175 ரன்கள் தான் இந்திய சாதனையாக இருந்தது. அதை தாண்டி சச்சின் எடுத்த இந்த ஸ்கோரை பின் சச்சினே தான் தாண்டினார். இந்த மேட்சில் இந்தியா எளிதாக வென்றது. டிராவிடும் இந்த மேட்சில் 153 ரன்கள் எடுத்தார் என்பது ஆச்சரியமான தகவல் (அவருக்கு அது தான் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக பட்ச ரன்கள் )

5. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 117 Not out (1st Final - 2008)

சச்சின் ஆஸ்திரேலியாவில் ஒன் டே மேட்சில் செஞ்சுரி அடித்தது இல்லை ! இதற்கும் ஒரு முடிவு வந்தது. ஆஸ்திரேலியா விற்கு எதிரான முத்தரப்பு ஒரு நாள் போட்டி தொடரில் "Best of three finals " . முதல் மேட்சில் மிக சுமாரான பிட்சில் இந்தியா Second batting. சச்சின் செஞ்சுரி அடித்தது மட்டுமல்லாது இறுதி வரை நாட் அவுட். அடுத்த மேட்சிலும் சச்சின் இதே போல் ஆடி ஜெயித்து கொடுக்க, மூன்றாவது பைனலுக்கு அவசியம் இன்றி இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது !

*****
பங்களாதேஷ் என்கிற சின்ன அணியுடன் 100th செஞ்சுரி அடித்தார்; ஒரு வருடம் எடுத்து கொண்டார் என்றெல்லாம் சொல்லாமல், இந்த கணத்தை என்ஜாய் செய்வோம். இன்னொரு மனிதர் யாரும் நூறாவது செஞ்சுரி  என்கிற சாதனை புரிய போவதே இல்லை !

சச்சினின் 23 வருட உழைப்புக்கு ஒரு சல்யூட் !

டிஸ்கி: விரைவில் வருகிறது இதன் இரண்டாம் பகுதி...... சச்சின் அசத்திய டெஸ்ட் மேட்சுகள் !

32 comments:

  1. சுடச் சுட அருமையான பதிவு...

    ReplyDelete
  2. அப்பாடா ஒரு மாதிரி பதிவைப் போட்டுவிட்டீர்கள்.... :-)வாழ்த்துக்கள் சச்சின் ரிலிஸில் கமலின் மருதநாயகத்தை முந்திவிட்டீர்கள்....

    joke apart......

    100 வது 100 என்பது சாதாரண சாதனை அல்ல. இவருக்கு அடுத்துள்ள ரிக்கி பாண்டிங் 71 சதமும் அதற்க்கு அடுத்துள்ள ஜாக் காலிஸ் 59 சதங்களும்தான் அடித்துள்ளார்கள் என்றால் இவரின் 100வது சதத்தின் அசாதாரணம் புரியும். தற்போது ஆடும் எவரும் இவரது சாதனையை முறியடிக்கபோவதிலலை.
    இவரின் இந்த சாதனையும் முத்தையா முரளிதரனின் 1334 விக்கட் (ODI - 534 & TEST 800) சாதனைமும் கமலின் மருதநாயகம் சாதனையும் நீண்டகாலம் நிலைத்திருக்கும்.

    ReplyDelete
  3. சங்கவி said...

    சுடச் சுட அருமையான பதிவு...

    **
    சுட சுட உங்கள் கமன்ட். நன்றி சங்கவி

    ReplyDelete
  4. வாசகன்: உங்கள் கமன்ட் ரொம்பவே ரசித்தேன். சச்சின் + முரளி பற்றி சொல்லியது சரி தான்., அவர்களை பற்றி சொல்லி விட்டு கூடவே "கமலின் மருதநாயகம் சாதனை" பற்றியும் நீங்கள் சொன்னதை வாசித்த போது சிரிப்பு வந்து விட்டது

    ReplyDelete
  5. மாதவி: நீங்களும் சச்சின் fan-ஆ?மகிழ்ச்சி நன்றி !

    ReplyDelete
  6. //1. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 143 and 134 (ஷார்ஜா, 1998 )//

    பிறவி பலனை அடைந்தது போன்ற மகிழ்ச்சி இந்த மேட்சுகளை பார்த்தபோது கிடைத்தது. 1998ல் சச்சின் எடுத்த 50கள் வெறும் 7தான். ஆனால் 9 செஞ்சுரி!

    நீங்கள் குறிப்பிட்ட அனைத்து செஞ்சுரிகளுமே சூப்பர். செஞ்சுரி அடிக்காவிட்டாலும், 2003 உலகக் கோப்பையின்போது பாகிஸ்தானுக்கெதிரான 93 சச்சினின் ஸ்பெஷல்களில் ஒன்று. அதுவும் ஷோய்ப் அக்தரின் பந்தை சிக்ஸருக்கு விரட்டிய ஷாட்! ஏதோ கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கேன். அதான் சச்சின் விளையாடும் காலகட்டத்தில் நானும் வாழ்கிறேன் :)

    ReplyDelete
  7. I was also Sachin's fan.

    But, not so now. He should have realised abt his retirement long back..

    Remember.. Murali announced his retirement when 9 wkts short of 800 & still could achieved it. That's how great players do.

    Also, Tendulkar failed to make 100 against SA, Aus, Pak, SL...& finally got it against B'desh.

    Nothing great to celebrate I feel. Of course it doesn't matter Sachin.

    ReplyDelete
  8. // ஏதோ கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கேன். அதான் சச்சின் விளையாடும் காலகட்டத்தில் நானும் வாழ்கிறேன் :) //

    சார்.. இது உங்களுக்கே ரொம்ப அதிகமா (ன பில்ட்டப்பா) தெரியல ..?

    அப்துல் கலாம், வெங்கடராமன் (நோபெல் ரேசிபிஎன்ட்), அன்னை தெரசா.. இவங்க வாழ்ந்த காலத்துல வாழ்ந்தேன்னு சொன்னா ஓரளவுக்கு பரவாயில்ல..

    ReplyDelete
  9. அந்த ஷார்ஜா மேட்ச்.... என்ன ஆட்டம் அது! எனக்கும் மிகவும் பிடித்த, மறக்க முடியாத ஆட்டம் அது. மணற்புயலில் அசையாது ஆடக் காத்திருந்த சச்சின், வர்ணனையாளர் டோனி கிரேயிக்கின் உணர்ச்சி மிக்க வர்ணனை, ஓ..ஹீ வாண்ட்ஸ் டு வின் த கேம் என்று அவர் போட்ட ஆனந்தக் கூச்சல், வாட் எ ப்ளேயர் வாட் எ ப்ளேயர் என்று ஆர்ப்பரித்தது, அவர் அவுட் ஆன பால்- நடுவர் நோ பால் கொடுக்கிறாரா என்று பார்த்து விட்டு, அவர் நோ பாலும் தராமல் அவுட்டும் கொடுக்கா விட்டாலும் தானாகவே நடையைக் கட்டிய சச்சின்...அந்த பவுலர் பெயர்தான் மறந்து விட்டது...கையைத் தட்டி கோபத்தை வெளிப் படுத்துபவர் இவர் நேர்மையாக வெளியேறுவது கண்டு கூட பாராட்ட மனமில்லாமல் இருந்தவர்...

    ReplyDelete
  10. மீண்டும் நிரூபணம்..
    டெண்டுல்கர் செஞ்சுரி அடிச்சா இந்தியா தோக்குது... மறுபடியும் நிரூபணம் ஆயிட்டுது..

    டெண்டுல்கர் தேவையா உனக்கு செஞ்சுரி..
    ப்ளீஸ்.. ரிடையர் ஆய்டு ப்ளீஸ்..

    ReplyDelete
  11. நண்பர்களே பதிவர்கள் செய்திகளை எதனால் முந்தி கொண்டு தருகிறார்கள் தெரியுதா?

    மேட்ச் முடிந்த பின் இந்த பதிவை வெளியிட நினைச்சிருந்தா வெளியிட்டிருக்கவே மாட்டேன்.

    ஹும்.. சச்சின் ..இன்னிக்கு நிம்மதியா தூங்க மாட்டார். அழுது புலம்பிட்டே இருப்பார்.

    இர்பான் பதான் என்ற வள்ளல் செய்த புண்ணியம் ..நல்லாயிருடே !

    இந்தியா நிச்சயம் பைனல் போகும் என்ற நிலை மாறி பைனல் போவதே கஷ்டம் என்று இருக்கு இப்போது !!

    ReplyDelete
  12. ரகு: நானும் இன்று யு டியூபில் Sharjah பைனலில் சச்சின் ஆட்டம் பார்த்து அசந்து போனேன். குறிப்பாய் Straight Drives !! Awesome !!

    ReplyDelete
  13. ஸ்ரீராம்: ஷார்ஜா மேட்ச் பற்றி அற்புத வர்ணனை தந்தீர்கள். அருமை !!

    ReplyDelete
  14. மாதவா: ரகு சச்சினின் பேன். அதான் அப்படி சொல்லியிருக்கிறார்

    நான் பகிர்ந்த யூ டியூபில் அந்த ஷார்ஜா மேட்ச் பார். அது தான் சச்சின்.

    அவர் ஒரு நாள் போட்டிகளில் உடனே ரிடையர் ஆக வேண்டும் என்பதில் நானும் உடன் படுகிறேன். அதற்காக சச்சினை முழுக்க பழிக்க முடியாது. இத்தகைய புகழுக்கு பின்னும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கத்துடன் வாழ்வதில் அவர் நிச்சயம் ஒரு ரோல் மாடல் என்று தான் நினைக்கிறேன்

    ReplyDelete
  15. நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. உண்மையிலேயே இந்த மேச்சு அசத்தல்தான்... அசத்தினது பங்களாதேஷ் வீரர்கள்..

    BTBy.. No need to see that in youtube again. B'cos
    அந்த ஷார்ஜா பைனல் நான் லைவா பாத்தேன் அப்பவே. நல்ல நியாபகம் இருக்கு.. ஆஸ்திரேலியாவ தனியாள வேருப்பெத்தினாறு சச்சின்.. முக்கியமா ரெண்டு விஷயம் இப்பவும் ஞாபகம் இருக்கு.. ஒண்ணு.. அந்த செஞ்சுரி அவருக்கு அவரு கொடுத்த பிறந்தநாள் பரிசு. ரெண்டாவது.. ஆடியன்ஸ் ஒருத்தர் காட்டின பேனர் "Whole world is waiting for 21st Century" ஏன்னா அது .. இருபதாம் நூற்றாண்டின் கடைசி பகுதி.. & Tendulkar scored 20th century before that match and was playing on 90s in full flow.

    My point is there is a limit for everything & Sachin is noway an exception. He must realise his age and call it a day leaving way for another deserving / skillful next generation batsman.

    Enuf is Enuf.. atleast now, he must think...

    ReplyDelete
  17. ஸ்ரீராம், அந்த பெளலர் Damien Fleming

    ReplyDelete
  18. சச்சினின் ராசியோ... இந்தியாவின், குறிப்பாக பந்து வீச்சாளர்களின் இயலாமையோ, ஆகக் கூடி வழக்கம் போலத் தோல்வி! சச்சின் தன் நூறுக்காக கொஞ்சம் பந்துகள் வீணடித்தாரோ என்று கூடத் தோன்றியது.

    ரகு...பவுலர் பெயர் நினைவூட்டியதற்கு நன்றி. எனக்கு மெக்ராத் ரொம்பப் பிடிக்கும் அவர் கூட சச்சின் ஆட்டத்தில் டென்ஷனாகி சிலபல சைகைகள் காட்டியிருக்கிறார். வார்னே பந்து போட்டு சச்சின் அதை பவுண்டரிக்கோ சிக்சருக்கோ தூக்கினால் வார்னே காட்டும் முகபாவம் மிக சுவாரஸ்யம்.

    மாதவன் சொல்வதுபோல இனியாவது சச்சின் ஓய்வு அறிவிப்பாரா... அது சரி, அவர் ஹேர் ஸ்டைல் இந்த மேட்ச்சில் மாறியிருக்கிறதே கவனித்தீர்களோ...!!! :)))

    ReplyDelete
  19. மோகன் குமார், இர்ஃபானை மட்டும் சொல்லிக் குற்றமில்லை... நல்ல ஒரு ஓவர் போட்ட பிரவீனின் அடுத்த ஓவருக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்கள் அல்லவா....பேட்ஸ்மேனைப் பாராட்ட வேண்டும்! இர் ஃ பாண் ஓவருக்கு நடுவே அவரிடம் மிஸ்டர் கூழ் என்று சொல்லப் படும் தோனி வந்து டென்ஷன் ஆனபோது சென்னை 28 படத்தில் வரும் "எப்படிப் போட்டாலும் அடிக்கறாங்கடா..." வசனம் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை!.:)))

    ReplyDelete
  20. ஸாரி....உணர்ச்சி வசத்தில் கூல் கூழ் ஆகி விட்டது...!

    ReplyDelete
  21. //Madhavan Srinivasagopalan said...
    // ஏதோ கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கேன். அதான் சச்சின் விளையாடும் காலகட்டத்தில் நானும் வாழ்கிறேன் :) //

    சார்.. இது உங்களுக்கே ரொம்ப அதிகமா (ன பில்ட்டப்பா) தெரியல ..?//

    இல்லை மாதவன் சார், இதை உணர்ச்சிவசப்பட்டு சொல்லவில்லை. வருங்காலத்தில் என் பிள்ளைக்கோ, பேரப்பிள்ளைக்கோ பாட்டி வடை சுட்ட கதையை சொல்லுவதை விட, சச்சினின் வாழ்க்கை வரலாற்றை சொல்வதில்தான் ஆர்வம் காட்டுவேன். சச்சின் அடித்த ஸ்பெஷலான செஞ்சுரிகள், எதிரணி, பவுலர்கள் சொதப்பிய மேட்சுகள் (இந்த மேட்ச் உட்பட), இவ்வளவு சாதனைகள் செய்தும் தலைகனம் இல்லாமல் தனிமனித ஒழுக்கத்தோடு வாழும் வாழ்க்கை ஆகியவற்றை பற்றி நிறைய பகிர்ந்துகொள்வேன். கண்டிப்பாக சச்சின் போல இன்னொரு ப்ளேயர் அவர்களின் தலைமுறைக்கு கிடைக்கபோவதில்லை என்பது மட்டும் உண்மை.

    எப்படி ப்ராட்மேனின் 99.94ஐ யாராலும் உடைக்க முடியாதோ, அதே போல சச்சினின் நூறு செஞ்சுரிகள். இதற்கு மேலும் நான் சொல்லியது, அதிகமான பில்டப்பாகவோ, ஏன் சிறுபிள்ளைத்தனமாகவோ கூட தோன்றினால், let it be sir :)

    //Madhavan Srinivasagopalan said...

    மீண்டும் நிரூபணம்..
    டெண்டுல்கர் செஞ்சுரி அடிச்சா இந்தியா தோக்குது... மறுபடியும் நிரூபணம் ஆயிட்டுது.//

    டீம் ஸ்கோர் 290௦. இதை defend பண்ணாதது பெளலர்களின் தவறு. இதற்கு கூட சச்சினை குறை கூறினால் என்னதான் செய்வது? :(

    ReplyDelete
  22. //டீம் ஸ்கோர் 290. இதை defend பண்ணாதது பெளலர்களின் தவறு. இதற்கு கூட சச்சினை குறை கூறினால் என்னதான் செய்வது? :( //உண்மை அவரை குறை சொல்வதையே தொழிலாக இருக்கிறது பலருக்கு

    ReplyDelete
  23. ச‌ச்சினைப்ப‌ற்றி உட‌னேயே உங்க‌ளின் ப‌திவு வ‌ருமென‌ எதிர்பார்த்தேன். வந்து விட்ட‌து. த‌ர‌வ‌ரிசைப்ப‌ட்டிய‌ல் மிக‌ச் ச‌ரியான‌து. அந்த‌‌ 1998 ஷார்ஜா போட்டி ம‌ற‌க்க‌ இய‌லாத‌து. நான் அப்போது ஊரிலிருந்தேன். ந‌ள்ளிர‌வு சச்சினின் ஆட்ட‌த்தை ர‌சித்துப்பார்த்துக்கொடிருக்கும்போது தொலைபேசியில் ஷார்ஜாவிலிருந்து தொடர்ந்து என் க‌ண‌வ‌ரும் ம‌க‌னும் ர‌ன்னிங் க‌மெண்ட்ரி கொடுத்துக்கொண்டிருந்த‌‌தையும் ம‌ற‌க்க‌ இய‌லாது. அந்த‌‌ மாட்ச் முடிந்த‌‌தும் ஆஸ்த்ரேலிய‌ காப்ட‌ன் ஸ்டீவ் வாஹ் ' தோற்றுப்போன‌ ஒரு டீம் இப்ப‌டி சந்தோஷ‌த்துட‌ன் கொண்டாடுவ‌தை நான் என் வாழ்நாளிலேயே பார்த்த‌தில்லை' என்று சொன்னார். ஷேன் வார்ன் ' தூங்கும்போது என் க‌ன‌வில் ச‌ச்சின் அடித்த பந்துகள் த‌லைக்கு மேல் ஆற‌க‌வும் நாலாக‌வும் ப‌றந்து கொண்டிருந்த‌‌ன‌" என்று சொன்ன‌து புக‌ழ்பெற்ற‌ வாச‌க‌மான‌து ச‌ரித்திர‌த்தில்!‌

    நேற்றைய‌ மாட்ச் தோற்றுப்போன‌த‌ற்கு ஒரு வார்த்தை கிரிக்கெட் விம‌ர்ச‌க‌ரால் எழுத‌ப்ப‌ட்டிருந்த‌‌து.
    "Sachin created a world record and our Indian players broke its happiness!"

    உலகத்தில் வேறெந்த ஆட்டக்காரரும் அனுபவிக்காத மன அழுத்தத்தையும் கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் எப்போதுமே அனுபவித்துக்கொண்டிருக்கும் சச்சினைப்பற்றி என்னுடைய கருத்தும் கீழேயுள்ள‌ ஒரு ரசிகரின் க‌ருத்தும் ஒன்றேதான்!!

    A man who has had all wealth , fame , records at his feet , yet humble with no controversies , no gossips , no late night parties , no negative comments about other players....is something to salute. If you say he doesnt play matchi winnning performance ..then my question would what other 10 players were doing in the team if only 1 player had to do everything.....He never had the advantage during his peak career like Ponting had with exceptions bowlers to support!!

    ReplyDelete
  24. சூப்பர் பதிவு ! நன்றி சார் !

    ReplyDelete
  25. //டீம் ஸ்கோர் 290௦. இதை defend பண்ணாதது பெளலர்களின் தவறு. இதற்கு கூட சச்சினை குறை கூறினால் என்னதான் செய்வது? :( //

    Sachin swallowed atleast 30 = 5 overs.. (run scored vs run faced) -- 5 / 50 is 10 %.. very crucial, particularly with the weakness on indian bowling.

    I feel sachin though scored century, was part of the reason for the team's defeat.

    ReplyDelete
  26. மாதவன், ரகு, ஸ்ரீராம் நம் ப்ளாகில் இப்படி ஒரு விவாதம் நடப்பது மிக அரிது. உங்கள் ஆரோக்கிய விவாதம் மகிழ்ச்சி தருகிறது ரசித்தேன் நன்றி !

    ReplyDelete
  27. சச்சின் பற்றிய கருத்துக்கு நன்றி பிரேம் !

    ReplyDelete
  28. **
    மனோ மேடம்: அந்த மேட்ச் பற்றி சொன்னதும் சரி, நீங்கள் ஆங்கிலத்தில் மேற்கோள் காட்டியதும் சரி அருமை !

    ReplyDelete
  29. ரத்னவேல் நடராசன் ஐயா: நன்றி
    **

    ReplyDelete
  30. திண்டுக்கல் தனபாலன்: நன்றி !

    ReplyDelete
  31. Really Sachin is a Legend.

    I met him & Talk to him when he was n Singaopore 2 yrs back.
    Thats the most precious time n my life

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...