Saturday, March 17, 2012

பட்ஜெட் உங்களை எப்படி பாதிக்கும் - நிபுணர்கள் அலசல்

இன்று ACS Institute-ம், FICCI-ம் (Federation of Indian Chambers of Commerce &Industry)இணைந்து நடத்திய பட்ஜெட் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். தமிழகத்தின் சிறந்த அறிஞர்கள் அதில் பேசினார். பட்ஜெட் பற்றி அவர்கள் சொன்ன கருத்துக்களை இங்கு பகிர்கிறேன்

அதற்கு முன் பட்ஜெட்டில் எது விலை ஏறியது, எது குறைந்தது என சுருக்கமாக இதோ

விலை ஏறியது 

டூ வீலர் கார் மற்றும் இதர நான்கு சக்கர வாகனங்கள்
சோப் உள்ளிட்ட காஸ்மெட்டிக்குகள்
சிகரெட், பீடி, பான் மசாலா
Packaged உணவு பொருட்கள்
 நகைகள்
இறக்குமதி ஆன சைக்கிள்கள், காமிரா
விமான பயணம்
ஹோட்டல்களில் தங்குவது/ சாப்பிடுவது

விலை குறைந்தது
மொபைல் உதிரி பாகங்கள்
Branded சில்வர் நகைகள்
 LCD மற்றும் LED டிவி
தீப்பெட்டி
ரூபாய் ஐந்நூறுக்கு குறைவான காலணிகள்
சோயா ப்ரோடீன்
எழுது பொருட்கள்
இறக்குமதி ஆன மருத்துவ உபகரணங்கள்

புதிய வரி விகிதம் 
Upto Rs. 2,00,000                       Nil
Rs. 200,001 and Rs. 500,000     10%. 
Rs. 500001 to Rs. 10,00,000 -    20% 
Rs. 10,00,001 and above            30%.

பெண்களுக்கென்று தரப்படும் அடிஷனல் வரி சலுகை இந்த ஆண்டு முதல் ரத்து !

சீனியர் சிடிசன் வயது Income Tax-ல் அனைத்து இடத்திலும் இனி 60 என்றே கொள்ளப்படும். மேலும் அவர்கள் அட்வான்ஸ்  டேக்ஸ் (வியாபாரத்தில் ஈடுபடாத பட்சத்தில்) கட்ட வேண்டியதில்லை. இது தான் அவர்கள் குறித்த மாறுதல்.

**********
இனி பட்ஜெட் பற்றி அறிஞர்கள் சொன்னது ! இவர்கள் அனைவரும் இந்த துறையில் அனைவராலும் மதிக்க படுபவர்கள். டிவி மீடியாக்களும் பத்திரிக்கைகளும் இவர்களிடம் தான் கருத்து கேட்கும் ! அவர்கள் உரை சுருக்கம் நேரடியே உங்கள் பார்வைக்கு:

M R வெங்கடேஷ்  

பட்ஜெட் பற்றி சொல்லும் முன் ஒரு ஜோக். பட்ஜெட் தினத்தன்று காலை பத்தரை மணிக்கு டுவிட்டரில் ஒரு செய்தி. பட்ஜெட்டுக்கு மம்தா எதிர்ப்பு என ! பின் மம்தாவிடம் " பட்ஜெட் வெளியிடுவதே பதினோரு மணிக்கு தான் ஆரம்பிக்கும்" என்ற பின் அமைதியானார் மம்தா. பட்ஜெட் வந்து முடித்த பின் "ச்சே ! இதை எதிர்த்து நாம் பேசுவது கூட டைம் வேஸ்ட் " என அவரே எதிர்ப்பு தெரிவிக்காமல் போய் விட்டார் " அப்படி உள்ளது இந்த பட்ஜெட் !

1977-ல் சரண்சிங் வெளியிட்ட பட்ஜெட்டிற்கு அடுத்த மக்கள் மீது அதிகம் சுமை செலுத்தும் மிக ஹார்ஷ் ஆன பட்ஜெட் இது என்று பலரும் கருதுகின்றனர்.

சேவை வரி (Service Tax) உயர்வால் நிச்சயம் பண வீக்கம் (Inflation ) அதிகமாகும். அனைத்து பொருட்களும் விலை ஏறும். 

முன்னேற்றம் (Growth ) குறித்து இந்த பட்ஜெட்டில் போதுமான விஷயங்கள் இல்லை என்பது மிக வருத்தமான விஷயம்.

சன் டிவி குழுமத்தில் உள்ள ஒரு கம்பனி ஒரே நாளில் தன் தம்பிக்கும் வெளி நாட்டு முதலீட்டாளர் ஒருவருக்கும் ஷேர் வெளியிட்டது. ஒரு ஷேருக்கு ஐநூறு ரூபாய் வெளி நாட்டு முதலீட்டாளரிடம் வசூலிக்க, தம்பியிடம் மட்டும் அதே ஷேருக்கு ரூபாய் 70 மட்டும் வசூலித்தது. இதனால் ஒரு ஷேருக்கு 430 ரூபாய் நஷ்டம் தானே! இதுவரை இதனை வருமான வரி துறை கேட்க முடியாது என்று இருந்தது. இப்போது சட்டம் மாற்றப்பட்டுள்ளதால் இத்தகைய செயல்களை வருமான வரி துறை தட்டி கேட்கலாம். இது தான் இந்த பட்ஜெட்டில் நல்ல விஷயம் !


M.S சுந்தர ராஜன். Former MD, Indian Bank

                                               


வீடு கட்டும் நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்தும், குறைந்த வட்டிக்கு கடன் வாங்கலாம் என்பது நல்ல முடிவு. இதனால் வீடுகள் விலை குறைய வாய்ப்புண்டு. 

கல்விக்கான லோன் சரியே கிடைப்பதில்லை என மக்கள் சொல்கிறார்கள். வங்கிகளோ அப்படி தரும் பணம் பல நேரம் திரும்ப வருவதில்லை என்கிறார்கள் . இந்த இருவரையும் திருப்தி படுத்தும் வண்ணம் சில நடவடிக்கை இம்முறை எடுக்க பட்டுள்ளது. கல்வி கடன் இனி அதிகம் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

சிறு தொழில்கள் ( Medium and Smallscale Industries ) பலன் பெரும் வகையில் அவர்களுக்கு 5000 கோடி வரை பணம் வர வழி வகை செய்யப்பட்டுள்ளது. இது மிக நல்ல விஷயம்

G.C ஜெயின், Chief Commissioner Of Income Tax

                                               
பல சூழ்நிலைகளையும் வைத்து பார்க்கும் போது இப்போதுள்ள நிலையில் இது நல்ல பட்ஜெட் என்று தான் சொல்லணும் (இவர் பதவியில் உள்ள ஒரு அரசு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது !)

கருப்பு பணம் வெளிநாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் நிறைய உள்ளது. ஒவ்வொரு இந்தியர்க்கும் உள்ள அனைத்து வங்கி கணக்குகளிலும் நடக்கும் பரிவர்த்தனைகளை ஒழுங்காய் ஆராய்ந்தாலே நிறைய வரி ஏய்ப்பு தெரிய வரும். வருமான வரி துறையிலிருந்து ஏற்கனவே இதற்கான சில வேலைகள் செய்து வருகிறோம்.

சுந்தரராமன், ,Chartered Accountant

வெளிநாட்டில் இந்தியர்கள் வைத்திருக்கும் சொத்து விபரங்களை, அவை மூலம் எந்த வருமானமும் இல்லா விடில் கூட தெரிவிக்க வேண்டும் என மாறுதல் கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம்

பல விஷயங்களுக்கு TDS (Tax deducted at Source) அளவு உயர்த்தப்பட்டுள்ளது.

உங்களிடம் இருக்கும் ஒரு சொத்தை விற்று கிடைக்கும் லாபத்தை வேறு ஒரு அசையா சொத்தில் நீங்கள் முதலீடு செய்தால் தான் அந்த லாபத்திற்கு வரி விலக்கு உண்டு. இதில் சிறு மாறுதல் செய்து அந்த லாபத்தை தொழில் தொடங்க வாங்கும் மேஷினரிகளில் கூட முதலீடு செய்யலாம் என கொண்டு வந்துள்ளது நல்ல விஷயம். இதன் மூலம் தங்கள் சொத்தை விற்று,  வரும் லாபம் வைத்து புது தொழில் தொடங்குவோர் பயன் அடைவர் !

G. சேகர் ,Chartered Accountant

பாங்கில் சேவிங்க்ஸ் கணக்கில் கிடைக்கும் வட்டிக்கு 10,000 ரூபாய் வரை இருந்தால் வரி கிடையாது என்று கூறி உள்ளனர். ஆனால் சேவிங்க்ஸ் கணக்கில் இரண்டு லட்சம் இருந்தால் மட்டுமே ஆண்டுக்கு 10,000 ரூபாய் வட்டி கிடைக்கும். சேவிங்க்ஸ் கணக்கில் வட்டி நான்கு அல்லது ஐந்து % தான். எனவே யாரும் இவ்வளவு பெரிய தொகை சேவிங்க்ஸ் கணக்கில் வைத்து கொள்ள மாட்டார்கள். 10,000 ரூபாய் வட்டிக்கான சலுகை சேவிங்க்ஸ் கணக்கில் இருந்தால் மட்டுமே. Fixed Deposit-ல் இருந்தால் அல்ல !எனவே இந்த அறிவிப்பால் எந்த பலனும் இல்லை.

சம்பளம் வாங்கும் சேலரிட் மக்களுக்கு Tax strucuture வெறும் 2000 ரூபாய் பலன் அடையுமாறு செய்தது கண் துடைப்பு வேலை. இம்முறையும் மாறுதல் செய்துட்டோம் என சொல்ல உதவுமே அன்றி யாருக்கும் இதனால் பெரிய பலன் இராது.

S. ராஜரத்தினம் IRS (Retd ), Tax Consultant

ஷேர்களை விற்பதால் வரும் லாபத்திற்கு வரி 10 % முதல் 15 % ஆக அதிகரித்துள்ளனர். இது நிச்சயம் சரியல்ல

வோடபோன் வழக்கில் கோடிக்கணக்கான பணம் வரி செலுத்தாமல் தப்பினர். உச்ச நீதி மன்றம் வோடபோனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. ஆனால் இதை சரி செய்யும் விதத்தில் சட்ட மாற்றம் செய்ய பட்டுள்ளது. இதை வைத்து மீண்டும் வோடபோனை பணம் தர சொல்லி கேட்பார்களா அல்லது அந்த வழக்கில் நீதி மன்றம் ஏற்கனவே தீர்ப்பு தந்துள்ளதால்,  பிற வழக்குகளுக்கு மட்டும் இந்த நிலை எடுப்பார்களா என தெரியலை. 

உள் நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணம் வெளி வர இந்த பட்ஜெட் உதவும் என்று நிதி அமைச்சர் கூறுகிறார். அதற்கான சரியான அறிவிப்பு எதுவும் இருக்கிற மாதிரி தெரிய வில்லை

சாப்ட்வேர் நிறுவனங்கள் செய்யும் வேலைக்கு வரி வர வாய்ப்பு இருப்பது (Export of Software product and earning income is treated as Royalty income and will be taxed) மிக மோசமான விளைவை ஏற்படுத்தும் !

****
மொத்தத்தில் அரசு அதிகாரிகள் அரசை விட்டு கொடுக்காமல், சில நல்ல விஷயங்கள் சொன்னாலும், விலை வாசியை அதிகம் ஏற்றும், மக்களை பாதிக்கும் ஒரு பட்ஜெட் இது என்பதே பெருவாரியான கருத்து !

பட்ஜெட் முதல் பகுதி: பதிவர்கள் கருத்து இங்கே  

11 comments:

  1. இதத்தான் நா அப்பவே சொன்னேன்..
    (அருணாசலம் - வி.கே.ஆர் ஸ்டைலுல படிக்கவும்)

    ReplyDelete
  2. What about senior citizens?!

    As a working woman, my gain would be only around Rs.1000/- :-((

    Alasal arumai!

    ReplyDelete
  3. //விலை ஏறியது

    ஹோட்டல்களில் தங்குவது/ சாப்பிடுவது //

    ஹோட்டல்காரங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவாங்க.....இப்போ இது வேற....பேச்சிலர்ஸ் பாடு திண்டாட்டம்தான் :(

    ReplyDelete
  4. Anonymous11:20:00 PM

    என்னை மாதிரி சாமான்யன் கருத்தையும் கேட்டதற்கு நன்றி. உங்கள் எண்ணத்தையும் பதிவிடுங்கள்.

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி. உங்கள் கோணத்தையும் பகிர்ந்திடுங்கள்.

    ReplyDelete
  6. //Madhavan Srinivasagopalan said...
    இதத்தான் நா அப்பவே சொன்னேன்..
    (அருணாசலம் - வி.கே.ஆர் ஸ்டைலுல படிக்கவும்)//

    ஹா ஹா ! படிச்சிட்டோமுங்க !

    ReplyDelete
  7. ***
    middleclassmadhavi said...
    What about senior citizens?!

    As a working woman, my gain would be only around Rs.1000/- :-((

    **
    சீனியர் சிடிசன் வயது I .T-ல் அனைத்து இடத்திலும் இனி 60 என்றே கொள்ளப்படும். மேலும் அவர்கள் அட்வான்ஸ் டெக்ஸ் கட்ட வேண்டியதில்லை. இது தான் அவர்கள் குறித்த மாறுதல். கேட்டதற்கு நன்றி

    ReplyDelete
  8. ரகு said...
    //விலை ஏறியது

    ஹோட்டல்களில் தங்குவது/ சாப்பிடுவது //

    ஹோட்டல்காரங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவாங்க.....இப்போ இது வேற....பேச்சிலர்ஸ் பாடு திண்டாட்டம்தான் :(

    ********
    ஆம் ரகு ரொம்ப கஷ்டம் தான்

    ReplyDelete
  9. சிவகுமார் ! said...
    என்னை மாதிரி சாமான்யன் கருத்தையும் கேட்டதற்கு நன்றி. உங்கள் எண்ணத்தையும் பதிவிடுங்கள்.

    ***

    நன்றி சிவகுமார். நீங்க சாமானியன் அல்ல !!

    ReplyDelete
  10. ராமலக்ஷ்மி said...
    பகிர்வுக்கு நன்றி. உங்கள் கோணத்தையும் பகிர்ந்திடுங்கள்

    ***
    நன்றி மேடம்.

    சாமானியர்களை மிக பாதிக்கும் பட்ஜெட். செர்வீஸ் டெக்ஸ் மற்றும் எக்சைஸ் வரி ஏற்றம் விலை ஏற்றம் விளைவிக்கும். Salaried மக்களுக்கு தரப்பட்ட சலுகை மிக குறைவு என்பதே என் கருத்து.

    ReplyDelete
  11. மோஹன் குமார்,

    ஷங்கர் படத்தில் எல்லாம் ஹீரோவை கைது செய்துவிட்டால் ஊடகவியாலாளர்கள் மைக் நீட்டுவாங்க இட்லிக்காரம்மா ,ஆட்டோ டிரைவர் ,கண்ணாடிப்போட்ட பெருசு , கல்லூரி மாணவர்கள் , அவங்க எல்லாம் ஒரே மாதிரி கருத்தும் சொல்வாங்க அப்படிப்பட்ட கருத்து கந்தசாமிகள் தான் பட்ஜெட் பத்தி பேசியவர்களும், எப்படி வழக்கமா 1950 ல தயாரிக்கப்பட்ட பட்ஜெட் டெம்ப்ளேட்டில் அங்காங்கே வெட்டி ,ஒட்டி புது பட்ஜெட்ன்னு சொல்றாங்களோ அப்படியானது தான் இவர்களின் பட்ஜெட் அலசலும் வழமையான ஒன்று!

    பட்ஜெட் என்பது ஆட்சியாளர்கள் செலவுக்கு பணம் எடுத்துக்கொள்ள போடும் ஒரு கணக்கு சும்மா அவங்க மட்டுமே செலவு செய்துக்கிட்டா கேள்விக்கேட்பாங்களே என்று நாட்டுக்கும் கொஞ்சம் போனாப்போவுதுனு கொடுக்கிறாங்க :-))

    மொத்த் பட்ஜெட்டில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒதுக்கப்படும் தொகைக்கு திட்டமிட்ட செலவு , இது வெறும் 35% தான், வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல் ஒதுக்கப்படும் தொகைக்கு திட்டமில்லாத செலவு இது 65%.

    திட்ட செலவுனா முன்கூட்டியே ஒரு நிதியறிக்கை வரைவு கொடுக்கப்பட்டு ஒதுக்கப்படுவது, அப்படி வரைவு இல்லாமல் சும்மா இதான் செலவு செய்ய போற வகைனு பெயர மட்டும் சொல்லி தொகையை ஒதுக்கிக்கொள்வது திட்டமில்லாத செலவு.பெரும்பாலும் அரசின் நிர்வாக செலவுக்கு போயிடும் எல்லாம். இந்த திட்டமில்லாத செலவு நிதியை செலவு செய்யும் அதிகாரம் பிரதமர் கையில் அவர் யார் கையில் என்பது ஊர் அறிந்த ரகசியம் , அப்புறம் எங்கே முறையா செலவு செஞ்சு முன்னேற்றப்போறாங்க நாட்டை!

    பட்ஜெட் அலசலின் ஒருபகுதியாக ,திட்ட, திட்டமில்லாத செலவுகள் பற்றி மட்டும் ஒரு பதிவு போட்டு இருக்கேன், மற்றவை தொடரும்.
    பட்ஜெட் பம்மாத்து!-1

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...