திருச்சூரில் ஒரு நிகழ்ச்சியில் பேச அழைப்பு. இது வரை செல்லாத ஊர் என்பதால் கூடுதலாய் ஒரு நாள் தங்கி சில இடங்கள் பார்த்து வர திட்டமிட்டேன்.
சென்னையிலிருந்து குறைந்தது நான்கு ரயில்கள் தினம் திருச்சூர் செல்கின்றன. இரவு 9.15 -க்கு கிளம்பும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ், மறு நாள் காலை ஏழு மணிக்கு திருச்சூர் செல்வதால் மிக வசதியாய் உள்ளது.
***
திருச்சூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியதும் வெளியே ஒரு போலிஸ் பூத் உள்ளது. அங்கு ஆட்டோ எண்ணை குறித்து கொண்டு நம்மை ஒரு ஆட்டோவில் ஏற்றி விடுகிறார்கள் போலீசார். (ஜாக்கிரதைக்கு தான் !) நாங்கள் தங்கிய கேசினோ ஹோட்டல் ரயிலடியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆட்டோவிற்கு மீட்டர் போட்டு 12 ரூபாய் தான் கேட்டனர். இறங்கியதும் முதல் ஆச்சரியம் இது (நம்ம ஊராய் இருந்தால் நாற்பது ரூபாய் வாங்கியிருப்பர்). காலை ஏழு மணிக்கு கிளைமேட் சிலு சிலுவென்று இருந்தது. கடைகள் எட்டு மணி வரை திறப்பதே இல்லை. ஆங்காங்கு ஒரு சில டீ கடைகள் மட்டும் தெரிந்தன.
****
அறைக்கு சென்று குளித்து விட்டு விரைவில் கோயில் பார்க்க கிளம்பி விட்டோம்.
திருச்சூரில் உள்ள மிக பெரிய மற்றும் தவற விடாமல் அனைவரும் செல்லும் கோவில் வடக்கு நாதர் கோவில் தான். நகரின் மைய பகுதியில் இருக்கிறது இக்கோவில். மிக மிக பெரிய வளாகம்.36 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. சிவன் கோவிலான இங்கு ராமர், கிருஷ்ணர், ஐயப்பன் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.
வடக்கு நாதர் கோவிலின் உள்ளே படமெடுக்க அனுமதி இல்லை. வெளியிலிருந்து எடுத்த படங்கள் இதோ
கேரளாவில் நிறைய கோவிலில் ஆண்கள் சட்டை அணிந்து செல்ல கூடாது. சில கோவில்களிலோ வேட்டி அணிந்தால் தான் அனுமதி. இந்த கோவிலை பொறுத்த வரை பேன்ட் போட்டாலும் அனுமதிக்கிறார்கள். ஆனால் சட்டை நிச்சயம் போட கூடாது. ஒரு கையில் சட்டையை பிடித்து கொண்டு, மறு கையில் கடவுளை கும்பிடுவது கஷ்டமாக உள்ளதால் பலரும் சட்டையை முழுதும் கழற்றமால் இடது கையை மட்டும் சட்டைக்குள் விட்டு , ஒரு கையில் சட்டை தொங்கி கொண்டு இருக்குமாறு கோவில் வளாகம் முழுதும் சுற்றி வருகிறார்கள். இது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது
வடக்கு நாதர் கோயிலில் நெய் உருகாமல் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
இங்கு வசிஷ்டர் மரம் என்று ஒன்று உள்ளது. ஏதேனும் வேண்டி கொண்டு, இங்கு உள்ள மணலில் நம் விரலால் எழுதினால் அது பலிக்கும் என்பது ஒரு நம்பிக்கை !
கோயில் வெளியில் பெயர் பலகை துவங்கி சாமி பெயர்கள் பலவும் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் எழுத பட்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. (ஆனால் பஸ்களில் எல்லாம் மலையாளத்தில் மட்டும் தான் பெயர் பலகை உள்ளது )
என்னுடன் செமினார் எடுக்க வந்த மற்ற இரு faculty-கள் பிரகாஷ் மற்றும் ஸ்ரீனிவாசன்.
படத்தில் கண்ணாடி அணிந்துள்ள பிரகாஷ் Airforce-ல் இருந்தவர். அதில் வேலை பார்த்தவாரே ACS படித்து முடித்தார். கோர்ஸ் முடித்த உடனே, ACS வகுப்புகளில் பாடம் எடுப்பது உள்ளிட்ட எங்கள் Institute-க்கு பயன் தரும் விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். (இப்படி ஈடுபடுவோர் மிக குறைவே) சென்னையின் ஒரு முக்கிய நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தாலும், மறுபுறம் சென்னையில் கம்பனி சட்டம் குறித்த பாடங்களில் ஒரு குறிப்பிடத்தக்க ஆசிரியராக இருக்கிறார். மாணவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் போன் செய்து சந்தேகம் கேட்டு இவரை தொந்தரவு செய்தவாறே உள்ளனர். மனுஷன் பசங்களிடம் ரொம்ப பேமஸ் !
கோயிலை விட்டு வெளியே வந்ததும் இவரிடம் " யோவ் நெஞ்சு முழுக்க முடி வச்சிக்கிட்டு சத்யராஜ் மாதிரி சீன் போடுறீரா? சட்டையை போடுமையா" என செல்ல சண்டை போட்டார் அய்யாசாமி.
மற்றொருவர் சீனிவாசன். தன் நண்பர் அழகருடன் (Genicon அழகர்) தனியாக நிறுவனம் வைத்து பல கம்பனிகளுக்கு சேவை/ வேலை செய்து வருகிறார். வக்கீலுக்கும் படித்த இவர் தொழிலாளர் சட்டம் உள்ளிட்டவற்றில் மிகுந்த நாட்டம் உள்ளவர்.
கூச்ச சுபாவம் உள்ளவராதலால் கோயில்களில் சட்டையை கழற்றினால் மேலே போட்டு கொள்ள துண்டு கொண்டு வந்திருந்தார். வெளியில் வந்த பின்னும் துண்டை விடாமல் பிடித்திருக்க, கிண்டல் செய்தவாரே இருந்தோம்.
அய்யாசாமியை பார்த்த சீனிவாசன் "உங்களுக்குள் ஒரு ரிப்போர்டர் இருக்கார். உங்களால் சும்மாவே இருக்க முடியாது" என்று சொன்னார் !
வீடு திரும்பல் ப்ளாக் பார்த்து விட்டு மிக மகிழ்ச்சியாகி நானும் ஒரு நாள் ப்ளாக் எழுதணும் என்று சொல்லி வருகிறார்
சரி கேரளாவிற்கு மீண்டும் வருவோம்
வடக்கு நாதர் கோவில் பரசுராமரால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் திருச்சூர் பூரம் பண்டிகை இந்த கோவிலில் கொண்டாடப்படும்.
உங்களுக்கு நினைவு கூற வேண்டுமெனில், நீங்கள் பார்த்த சினிமா அல்லது டிவியில் நிறைய யானைகள் நின்று வாத்தியங்கள் முழங்க ஒரு கேரளா விழா காண்பிப்பார்களே ! அது தான் பூரம் திருவிழா !
குட்டீஸ் கார்னர்
படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர்
**********
பீச்சி டேம்
திருச்சூரில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் பாலக்காடு செல்லும் வழியில் உள்ளது பீச்சி டேம். ஏராளமான பேருந்துகள் இங்கு செல்கின்றன. பீச்சி என்பது ஊர் பெயர். அங்கு இருப்பதால் டேம் பெயரும் அதுவே ஆனது
பேருந்தில் செல்லும் போது அருகில் அமர்ந்த வயதான பெரியவர் (மலையாளி) நான் தமிழன் என்றதும் பாச மழை பொழிந்தார். அவர் அரசு அலுவலகத்தில் Dr . ரத்னம் என்கிற தமிழரின் கீழே வேலை செய்ததாகவும், தற்போது இருவரும் ரிட்டையர் ஆகி விட்டதால் அவரை பார்க்க திருச்சி போக எண்ணியுள்ளதாகவும் சொல்லி கொண்டிருந்தார். Dr .சுந்தர்ராஜன், Dr .கைலாசம் என பல தமிழர்கள் தன்னுடன் வேலை பார்த்ததாக இவர் சொல்ல, நீங்கள் மருத்துவ துறையில் இருந்தீர்களா என கேட்டேன். " இல்லை ஆராய்ச்சி துறையில் இருந்தேன். இங்கு Forest Research Department , Engineering Research Department , Banana Research Department நிறைய துறைகளும் அலுவலகங்களும் உண்டு" என்றார். வழியெல்லாம் அந்த ரிசர்ச் சென்டர்களை எனக்கு காட்டி கொண்டே வந்தார் அவர்.
திருச்சூர் டு பீச்சி நடுவே இருந்த ஒரு ஊர் பெயர் : பட்டிக்காடு ! நாம் கிராமத்தை "பட்டிக்காடு" என்று கிண்டலாக சொல்வோம். அங்கு அந்த பெயரில் ஒரு ஊரே இருக்கு !
இருபது நிமிட பிரயாணத்தில் பீச்சியை அடைந்தோம். துவக்கத்திலேயே டேம் கட்ட உதவிய இஞ்சிநியர்கள் பெயர்கள் போட்டு ஒரு கல்வெட்டு வைத்துள்ளனர். நமது டேம்களில் இவை இருக்குமா? நினைவில்லை
பீச்சி டேமில் வெளியிலிருந்து எடுத்த வீடியோ
இந்த இடத்தை காணும் போது திருச்சியில் கல்லணை மற்றும் முக்கொம்பு நினவுக்கு வந்தன. அவையும் இதே போல சிறு டேம்கள் தான். ஆனால் அவை மிக மோசமாக மெயின்டெயின் செய்யப்படும். காதலர்கள் என்று சொல்லி கொண்டு சில்மிஷம் செய்யும் நிறைய பேர் வந்து பதுங்கும் இடமாக அவை ஆகி போயின. ஆனால் இங்கு இந்த வளாகம் முழுதும் மிக அருமையாக கார்டனிங் செய்யப்பட்டு பார்க்கவே மிக அழகாக உள்ளது
இங்கே நீர் சுழித்து கொண்டு ஓடும் காட்சி பார்க்கவே செம அழகாய் உள்ளது.
ஏராளமான மரங்களுக்கிடையே மிக அழகான ஒரு இடம் இங்கு இருந்தது. இதற்கு நடுவில் ஒரு போட்டோ எடுத்து கொள்ள ஆசைப்பட்டு அங்கிருந்த ஒருவரிடம் காமிரா தர, இரண்டு படங்கள் எடுத்தார். இரண்டிலும் ஷேக் ஆகி படம் சரியாக வரலை. அதனால் என்ன.. நான் எடுத்த இந்த இடத்தை பாருங்கள் :
பீச்சி டேமின் தண்ணீரையும், அழகான கார்டனையும் இந்த வீடியோவில் பார்க்கலாம் ( நடந்து கொண்டே எடுத்ததால் சற்று ஜெர்க் இருக்கும். பொறுத்தருள்க !)
இந்த கோவில் திருச்சூர் நகரின் முக்கிய இடத்தில் உள்ளது. இதற்கு சற்று தள்ளி ஒரு Circle உள்ளது. இங்கு நிறைய கடைகள் ஷாப்பிங் செய்ய வசதியாக உள்ளன
இந்த கோவிலுக்கு எதிரிலேயே மற்றொரு சிவன் கோவில் உள்ளது. இதுவும் சற்று விசேஷமான கோவில் தான் இரவில் விளக்குகள் பொருத்திய பின் சிவன் கோவிலை பார்த்தால் செம அழகாக உள்ளது
பரமக்காவு அம்மன் கோவிலில் நான் சென்ற மாலை நேரம் பெண்கள் உள் பிரகாரத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டிருந்தனர். சமையல் அறை சாமி இருக்கும் இடத்திற்கு மிக அருகே உள்ளது. அங்கு ஏதோ சரியான சமையல் நடந்து வாசனை தூக்கலாக இருந்தது.
கோயில் பலரின் Contribution-ஆல் கட்டப்பட்டது போலும். ஒவ்வொரு தூணுக்கும் மேலே அதனை கட்ட யார் உதவினார் என்று இருக்கிறது. பலரும் தங்கள் தாயார் அல்லது தந்தை பெயர் போட்டு அவர் நினைவாக என்று குறிப்பிட்டுள்ளனர் !
வடக்குநாதர், பரமக்காவு மற்றும் திருவெம்பாடி ஆகிய மூன்று கோயில்களும் பூரம் festival-ல் கலந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
*****
நண்பர்கள் அனைவருக்கும் உகாதி திருநாள் வாழ்த்துகள் !
******
2-ம் பகுதி: கேரளாவில் பார்த்த புது மம்மூட்டி படம்: கேரள தியேட்டர்கள் எப்படி?
******
அடுத்த பதிவில்:
ஆட்டோ காரர் போக விரும்பிய, இதுவரை செல்லாத இடத்துக்கு அவரை கூட்டி சென்ற அய்யா சாமி
திருச்சூர் Zoo-ஒரு அனுபவம்
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற கிராம மக்கள்
இருபது மாடி உயரத்திலிருக்கும் சர்ச் டவர்- அட்டகாச அனுபவம்

சற்று உயரத்திலிருந்து எடுத்த போட்டோ |
இங்கே நீர் சுழித்து கொண்டு ஓடும் காட்சி பார்க்கவே செம அழகாய் உள்ளது.
ஏராளமான மரங்களுக்கிடையே மிக அழகான ஒரு இடம் இங்கு இருந்தது. இதற்கு நடுவில் ஒரு போட்டோ எடுத்து கொள்ள ஆசைப்பட்டு அங்கிருந்த ஒருவரிடம் காமிரா தர, இரண்டு படங்கள் எடுத்தார். இரண்டிலும் ஷேக் ஆகி படம் சரியாக வரலை. அதனால் என்ன.. நான் எடுத்த இந்த இடத்தை பாருங்கள் :
பீச்சி டேமின் தண்ணீரையும், அழகான கார்டனையும் இந்த வீடியோவில் பார்க்கலாம் ( நடந்து கொண்டே எடுத்ததால் சற்று ஜெர்க் இருக்கும். பொறுத்தருள்க !)
***********
பரமக்காவு கோவில்
இந்த கோவில் திருச்சூர் நகரின் முக்கிய இடத்தில் உள்ளது. இதற்கு சற்று தள்ளி ஒரு Circle உள்ளது. இங்கு நிறைய கடைகள் ஷாப்பிங் செய்ய வசதியாக உள்ளன
இந்த கோவிலுக்கு எதிரிலேயே மற்றொரு சிவன் கோவில் உள்ளது. இதுவும் சற்று விசேஷமான கோவில் தான் இரவில் விளக்குகள் பொருத்திய பின் சிவன் கோவிலை பார்த்தால் செம அழகாக உள்ளது
சிவன் கோவில்
|
கோயில் பலரின் Contribution-ஆல் கட்டப்பட்டது போலும். ஒவ்வொரு தூணுக்கும் மேலே அதனை கட்ட யார் உதவினார் என்று இருக்கிறது. பலரும் தங்கள் தாயார் அல்லது தந்தை பெயர் போட்டு அவர் நினைவாக என்று குறிப்பிட்டுள்ளனர் !
வடக்குநாதர், பரமக்காவு மற்றும் திருவெம்பாடி ஆகிய மூன்று கோயில்களும் பூரம் festival-ல் கலந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
*****
நண்பர்கள் அனைவருக்கும் உகாதி திருநாள் வாழ்த்துகள் !
******
******
அடுத்த பதிவில்:
ஆட்டோ காரர் போக விரும்பிய, இதுவரை செல்லாத இடத்துக்கு அவரை கூட்டி சென்ற அய்யா சாமி
திருச்சூர் Zoo-ஒரு அனுபவம்
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற கிராம மக்கள்
இருபது மாடி உயரத்திலிருக்கும் சர்ச் டவர்- அட்டகாச அனுபவம்
//சமையல் அறை சாமி இருக்கும் இடத்திற்கு மிக அருகே உள்ளது. அங்கு ஏதோ சரியான சமையல் நடந்து வாசனை தூக்கலாக இருந்தது.// அதானே... என்னன்னு விசாரிச்சு சொல்லி இருக்கலாமே... காதாரா கேட்டு [சாப்பிட முடியலைன்னாலும்] ரசித்திருக்கலாமே.... :))))
ReplyDeleteநல்ல விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் மோகன்.. தொடருங்கள்..
ஹைய்யோ....உகாதி தினத்துக்கு நல்ல கோவில்கள் தரிசனம்.
ReplyDeleteதிருசூர்ன்னதும் மனசு தானே கொசுவத்தி ஏத்திக்கிச்சு:-)
சாலக்குடியில் ஒன்னரை கொல்லம் ஜீவிச்சிருந்நு கேட்டோ:-)
நல்லதொரு தரிசனம்..
ReplyDeleteதிருச்சூர் பூரம் திருவிழாவுக்கு போவோம்...செமையா இருக்கும்!என்ன ஹோட்டல் உணவுதான் தமிழ்நாடு மாதிரி இல்லை....
ReplyDeleteஆஹா அருமையான பயணம்....!
ReplyDeleteபடங்கள் யாவும் சூப்பர் மக்கா....!
ReplyDeleteநல்லா ஊர் சுத்தறீங்க..நல்லாவும் எழுதறீங்க..பயணக்கட்டுரைகள் தொகுத்து புத்தகம் போடலாம் மோகன்..வாழ்த்துக்கள்
ReplyDeleteMessage from Srinivasan :
ReplyDeleteNallaa pesuvinganu theriyum. Nalla Kooda ezhudhuringa (Ayya) sami.
Thanks for including us in your Payana Katturai.
With best regards,
N.A. Srinivasan
படங்கள் அழகோ அழகு. உங்கள் எழுத்து நடை பயணக் கட்டுரையை சுவையாக்குகிறது
ReplyDeleteகேரளான்னாலே ஒரு சொர்க்கபூமிதான்..உங்கள் பயணகட்டுரை நிறைவானதாக இருந்தது
ReplyDeleteநட்புடன்
கவிதை காதலன்
படங்களும் தகவல்களும் நன்று.
ReplyDeleteகோவில்கள், இயற்கை சூழல் என எல்லாமே பிரமாதம். கன்னியாகுமரியில் கூட கோவிலுக்குள் ஆண்கள் சட்டையுடன் அனுமதியில்லை.
ReplyDeleteபோலீஸ்காரர்கள் டோக்கன் குடுத்து ஆட்டோ ஏற்றி விடுவது விஜயவாடாவிலும் உண்டு. நாங்கள் நடு இரவில் தான் சென்றோம். ஆனாலும் பயமில்லாமல் செல்ல முடிந்தது.
Good experience..
ReplyDeleteYour bus experience shows that we still have an 'integrated India' --- only media / politicians differentiate Indians.
Differentiation is good only in 'mathematics / science' -- not among people.
ஃபோட்டோஸ் சூப்பர்ப்! உங்களுக்குள் நல்லதொரு புகைப்படக் கலைஞர் இருக்கிறார் போல!
ReplyDelete//Differentiation is good only in 'mathematics / science' -- not among people.//
செம பஞ்ச் :))
படங்களும் பகிர்வும் அருமை. இருபக்கமும் ஏணிகளுடனான அதி உயர விளக்கு மிக அழகு. தொடருங்கள்.
ReplyDelete@ வெங்கட்: மொழி புரியாத பிரச்சனையால் நிறைய விஷயங்கள் விசாரிக்க முடியலை.
ReplyDelete@ மாதவி: நன்றிங்கோ
ReplyDelete@ துளசி டீச்சர்://சாலக்குடியில் ஒன்னரை கொல்லம் ஜீவிச்சிருந்நு கேட்டோ:-)//
ReplyDelete@ டீச்சர் "கொல்லம்"னா வருஷமா? ஒன்னரை வருஷம் சாலக்குடியில் இருந்தீங்களா என்ன? !!
@ அமைதி சாரல்: நன்றி மேடம்
ReplyDelete@ வீடு சுரேஷ் : பூரம் திருவிழா போவீங்களா? எனக்கும் போகணும்னு ஆசை வந்துச்சு நண்பரே ; அவர்கள் அரிசி நமக்கு ஒத்துக்காது தான்
ReplyDelete@ மனோ: நன்றி இந்தியாவில் தான் இன்னும் இருக்கீங்களா? ஊருக்கு போயாச்சா?
ReplyDelete@ மணிஜி : அட அதிசயமா கமன்ட் போட்டுள்ளீர்கள். தங்கள் வார்த்தைகள் நிரம்ப மகிழ்ச்சி தருகின்றன. சீரியசாவே நீங்க சொன்னது பத்தி யோசிக்கலாம்
ReplyDelete@ ரிஷபன் : ரொம்ப நன்றி சார். மகிழ்ச்சி
ReplyDelete@ வாங்க கவிதை காதலன். நலமா? கருத்துக்கு நன்றி
ReplyDelete@ நன்றி அமைதி அப்பா
ReplyDelete@ நன்றி கோவை டு தில்லி மேடம்; போலிஸ் காரர்கள் ஆட்டோ ஏற்றுவது பல ஊர்களில் உள்ளதாக அறிகிறேன்
ReplyDelete@ மாதவா: நன்றி. "அரசியல் வாதிகள்" பற்றி நீ சொன்னது உண்மை தான். அதை தான் இந்த பயண கட்டுரை தொடங்கும் போதே சொல்லி இருந்தேன்
ReplyDelete@ ரகு: நீங்க என் நண்பர் என்பதால் நீங்க என்னை புகழ்ந்தால் மக்கள் ஒத்துக்க மாட்டாங்க. இருந்தாலும் கூட நீங்க சொன்னது ஹாப்பியா இருந்தது நன்றி !
ReplyDelete***
@ ராமலட்சுமி: ஆஹா ! Reputed புகை பட கலைஞரிடம் இருந்து புகைப்படத்துக்கு பாராட்டா? அடுத்து பிட்ஸ்க்கு அய்யாசாமி எடுத்த படம் அனுப்ப வேண்டியது தான் போலருக்கு :)) நன்றி மேடம்
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள் & விவரிப்பு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
super... good experience...
ReplyDeleteநீர் சுழித்து ஓடும் படம், அடுத்த படிக்கட்டு படம், அருமை. அதற்கும் அடுத்த கட்டிடம் ரொம்பவே அழகு. தொடருங்கள். தொடர்கிறேன்.
ReplyDeleteரத்னவேல் ஐயா: முக நூல் பக்கத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteநன்றி சரவணன்
ReplyDeleteஸ்ரீராம்: குறிப்பிட்டு பாராட்டியது மிக மகிழ்ச்சி தருகிறது. ஆதரவுக்கு நன்றி
ReplyDeleteபடங்கள் மிக அழகு.. பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாகிக்கொண்டே வருகிறது!
ReplyDeleteமணிஜி சொன்னத try பண்லாமே சார்,
ReplyDeleteஅகில இந்தியாவில் முதல் பதிவில்... இரண்டாம் பதிவில்,... என்று டீசர் போட்டு பதிவெழுதும் ஒரே ப்ளாக்கர் நீங்கதான் மோகன்...
ReplyDeleteகேரளாவை மீதம் வச்சுட்டுதானே வந்தீங்க...
:-))
படங்கள் வீடியோ என கேரளபயணம் இனித்தது.
ReplyDeleteஅண்ணே திருச்சூர் தேரைப்பார்த்தீங்களா????
ReplyDeleteVery pretty place.A good post with excellant video too. Thanks.
ReplyDeleteThe post is bringing such little known places to the notice of the readers.
bandhu said...
ReplyDeleteபடங்கள் மிக அழகு.. பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாகிக்கொண்டே வருகிறது!
#######
தங்கள் கமன்ட் மிக மகிழ்ச்சி தருகிறது நன்றி பந்து
*###
கோகுல் : நிச்சயம் யோசிக்கிறேன் நன்றி
ReplyDeleteRVS said...
ReplyDeleteஅகில இந்தியாவில் முதல் பதிவில்... இரண்டாம் பதிவில்,... என்று டீசர் போட்டு பதிவெழுதும் ஒரே ப்ளாக்கர் நீங்கதான் மோகன்...
********
பாராட்டுக்கு நன்றி RVS (ஆமாம் அது பாராட்டு தானே ?:))
***
மாதேவி said...
ReplyDeleteபடங்கள் வீடியோ என கேரளபயணம் இனித்தது.
*******
நன்றி மாதேவி
சங்கவி: கேரளா தேர் பார்க்கலை :((
ReplyDeleteVetrimagal Vetrimagal said...
ReplyDeleteVery pretty place.A good post with excellant video too. Thanks.
The post is bringing such little known places to the notice of the readers.
*******
இத்தகைய மனம் திறந்த பாராட்டு மிக மகிழ்ச்சி தருகிறது. நன்றி வெற்றிமகள் மேடம்