Tuesday, March 27, 2012

எங்கள் குடும்பத்தில் ஐக்கியமான புதிய நபர்: படம் & வீடியோக்களுடன்

குடும்பத்திற்கு வந்த புது நபர் என்றதும் என் பெண்ணுக்கு தம்பி அல்லது தங்கை என நினைத்து உள்ளே வந்திருந்தால் ஐ யாம் சாரி ! :))

எங்கள் வீட்டுக்கு ஒரு புது ஆண் கிளி வந்துள்ளது. அவன் பெயர் அஜூ. பியூட்டி பாய் என்றும் செல்லமாய் கூப்பிடுவோம் ! அவனை தான் உங்களுக்கு அறிமுக படுத்த போகிறேன். எங்களிடம் உள்ள நாட்டி என்கிற பெண் கிளி பற்றி    ஏற்கனவே இங்கு சொல்லியிருந்தேன்.

அழகு பையன் அஜூ

அஜூ வீட்டுக்கு வந்ததிலிருந்து துவங்கலாம்

*********
நாட்டி தனியாக உள்ளது. துணை கிளி வேண்டும் என கொஞ்ச நாளாகவே பேசி வந்தோம். வாராவாரம் வெள்ளியன்று பல்லாவரம் சந்தை நடக்குமென்றும் அதில் கிளி கிடைக்குமென்றும் தெரிய வந்தது. ஒரு வெள்ளியன்று திடீரென முடிவெடுத்து பெண்ணை பள்ளியில் விட்டு விட்டு நேரே பல்லாவரம் சந்தைக்கு சென்றேன். கிளி விற்பவரை காண, அவர் அஜூவை காட்டினார். சின்ன துணி பையில் போட்டு வைத்திருந்தார். "துணி பைக்குள் மூச்சு முட்டிடாதா?" என்றால் "அதெல்லாம் ஆகாது" என்றார். அஜூவை அப்படியே வண்டி பாக்ஸில் போட்டு விட்டு கிளம்பினேன். பைக்குள் வேறு இருக்கான்; பாக்ஸ் வேறு மூடி இருக்கு செத்து போயிட போறான் என மிக மிக வேகமாய் ஓட்டி வீடு வந்து சேர்ந்தேன்.


பாக்சை திறந்து பார்த்தால் பையை விட்டு வெளியே வந்து கோழி போல ஒடுங்கி உட்கார்ந்துள்ளான். இப்போ அடுத்த பிரச்சனை. எப்படி வீட்டிற்கு உள்ளே கொண்டு போவது என்பது. கையில் தூக்கி கொண்டு நடந்தால் பறந்திட வாய்ப்புண்டு. மேலும் அறிமுகம் இல்லாததால் நன்கு கடிக்கவும் கூடும். வண்டியை எப்படியேனும் வீட்டினுள் கொண்டு போய் பாக்ஸ் திறக்க பார்த்தால் வண்டியை மேலே ஏற்ற முடியலை. பின் ஒரு வழியாய் கதவுக்கு அருகில் வண்டியை வைத்து விட்டு அவனை தூக்கி வீட்டினுள் விட்டு விட்டு கதவை சாத்தி விட்டேன்.

அப்போது வீட்டில் ஒரு பெரிய கூண்டும் ஒரு மிக சிறிய கூண்டும் இருந்தன. நாட்டி வெளியே வேண்டுமானாலும் இருக்கட்டும். இவன் பெரிய கூண்டில் இருக்கட்டும் என நாட்டியை வெளியே விட்டு விட்டு இவனை பெரிய கூண்டின் மேல் விட்டேன். நாட்டி இதனை பார்த்தது. மெதுவாக இறங்கி நடந்து வந்து, " என் கூண்டிலா நீ உட்காருகிறே?" என அவனை கடி கடி என கடித்தது.

ஒரு வழியாய் நாட்டியை பிரித்து இருவரையும் வேறு வேறு ரூமில் போட்டு விட்டு ஆபிஸ் கிளம்பினேன். வீட்டில் ஆள் இல்லாததால் எப்படி இருப்பான் என அலுவலகம் சென்றும், முதல் நாள் யோசனையாகவே இருந்தது.

மாலை வந்து பார்த்த பெண்ணுக்கும் மனைவிக்கும் செம Surprise + குஷி.

முதல் இருநாள் அஜூ ஒழுங்கா சாப்பிடாம, தூங்காம இருந்தான். அப்போது நாட்டியையும் இவனையும் ஒன்றாக விட மாட்டோம். புது கிளிகளை தன் இடத்தில் விட கூடாது என கொத்தி கொத்தி கொன்றும் விட கூடும் என தெரிந்தவர் ஒருவர் கூறியிருந்தார் .

அஜூவுக்கு புது கூண்டு வாங்கினோம். ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் மட்டும் இரு கிளிகளும் ஒன்றாய் இருக்கும். நாங்கள் இல்லாத போது தனி தனி ரூமில் போட்டு விடுவோம். பின் நன்கு பழகியதும் அருகருகே உள்ள கூண்டில் வைத்து விட்டு போய் விடுவோம்.

கணக்கு போடும் நாட்டி
கொஞ்சம் கொஞ்சமாய் இரண்டும் நன்கு பழகி இப்போது ஒரு நிமிடம் கூட ஒன்றை விட்டு அடுத்தது இருக்காது என்கிற நிலை வந்து விட்டது.

முன்பெல்லாம் நாட்டியை நாங்கள் தூக்கி கொஞ்சினால் பேசாமல் இருக்கும். சோபாவில் நம் அருகில் வைத்து விட்டு நாம் பாட்டுக்கு புத்தகம் படிக்கலாம். டிவி பார்க்கலாம். அது பேசாமல் உட்கார்ந்திருக்கும். சோபா மேல்புற முனையில் அமர்வது முன்பு நாட்டிக்கு மிக பிடித்தமான ஒன்று. இப்போது அங்கு வைத்தால் உடன் இறங்கி அஜூவிடம் ஓடுவேன் என நிற்கிறது !

மனிதர்களில் பெண்கள் அழகு. விலங்குககளில் பெண்ணினத்தை விட ஆண் அழகு தான். அஜூ-மீசை, தாடி எல்லாம் வைத்து கொண்டு என்ன ஸ்மார்ட் ஆக இருக்கான் பாருங்கள் !



மூக்குக்கு மேலே கோடு போகுது பாருங்க .. அது தான் மீசை. மூக்குக்கு கீழே தாடி தெரியுதா?

நாட்டி முகத்தில் நிறைய சுருக்கம் இருக்கும். இதனால் சில நேரம் "கிழவி" என சொல்லி கிண்டல் செய்வோம். ஆனால் இவன் முகத்தில் ஒரு சுருக்கம் கூட இல்லாமல் மொழு மொழு வென்று இருப்பான்.
************
அஜூ வந்த  புத்தில் எடுத்த வீடியோ;  அப்போது நாட்டியுடன்  அதிகம்  தோஸ்த் ஆகலை  :



ஆரம்பத்தில் இப்படி தனித்தனி கூண்டில் இருந்தனர் நாட்டியும் அஜூவும்.....


இன்னும் நாட்டி மாதிரி எங்களிடம் மிக எளிதாய் வர மாட்டேன் என்பது தான் குறையாய் இருக்கு. அவன் அடிக்கும் லூட்டிகள் சில:

கூண்டு திறந்து இருந்தால் நாட்டி நடந்து நடந்து வெளியே போகும். ஆனால் அஜூ ரெண்டு காலாலும் தாவி தாவி நடப்பான். இது பார்க்க செம அழகாய் வேடிக்கையாய் இருக்கும்.
கொஞ்சம் நட்பானபின் ஒன்றாய் நடைபோடுகிறார்கள்
செம புத்திசாலி. நாம் பேசுவதை நன்கு கேட்பான். சிறு சத்தமும் தெரிந்து விடும். அலர்ட் ஆகிடுவான்.

இப்போது எல்லா நேரமும் ஒரே  கூண்டினுள்

வெயில் காலம் என்பதால் பெரும்பாலான நாள் இருவரையும் ஒன்றாய் குளிப்பாட்டுவோம். தண்ணீர் ஊற்றினால் அஜூ நன்கு காட்டுவான். நாட்டிக்கு இன்னும் குளிக்க பிடிப்பதில்லை.

குளிக்க போகும் போது மட்டும் இதில் போவார் அஜூ

கூண்டை விட்டு வெளியே வந்ததும் டைனிங் டேபிள் மேல் ஏறுவார். அங்கு இருக்கும் நீல நிற பர்ஸ்சை கடிக்க அஜூவுக்கு ரொம்ப பிடிக்கும்.
இதனை ஒவ்வொரு படியாக புகைப்படம் எடுத்துள்ளோம் பாருங்கள்

டைனிங் டேபிள் மேல் ஏறியாச்சு.

என்னென்ன இருக்கு என பார்வையிடுறார்

கிட்டே வந்தாச்சு

வந்ததே இந்த பர்சை கடிக்கத்தான்  !

நாட்டி அஜூவை கொஞ்சும் வீடியோ, 2 or மூன்று நிமிஷம் ஓடும். சில நிமிடம் பார்த்து விட்டும் க்ளோஸ் செய்யலாம்





காலை எழுந்ததும்கூண்டை திறந்து விட்டால் முதலில் அஜூ தான் வெளியே வருவான். எதிரே இருக்கும் ஸ்க்ரீன் மேல் ஏறி அதன் மேலே உள்ள கம்பியில் சென்று அமர்ந்து கொள்வான். அவன் போனதும் நாட்டி கீ கீ என்று சற்று நேரம் கத்தி தீர்க்கும். பின் தானும் வெளியே வந்து அவனை போலவே கம்பிமேலே சென்று அமர்ந்து கொள்ளும்.

நாங்கள் வீட்டில் உள்ள போது ஹாலில் உயரத்தில் உள்ள கம்பி மேல் தான் இருவரும் அமர்ந்திருப்பார்கள். கதவு பகல் நேரத்தில் திறந்திருந்தாலும் இருவருக்கும் பறக்கும் வெளியே பறந்து தப்பிக்கும் எண்ணம் வரவில்லை!

ஸ்கிரீனுக்கு பின்னே ஜன்னல் இருக்கும். ஜன்னலை மூடியுள்ள  நெட்லானை அஜூ கடித்து கடித்து ஒரு வழி ஆக்கிட்டான். விரைவில் அதை மாத்தணும் !

ரொம்ப நேரம் மேலே இருந்து விட்டு பின் நிறைய பசி வந்ததும் தானாய் கூண்டுக்குள் போய் சாப்பிடுவார்கள். நெடு நேரம் கழித்து சாப்பிடுவதால் நன்றாக சாப்பிடுவர்.

நாட்டி தான் அஜூவை நன்கு கொஞ்சும். அவன் கொஞ்ச வந்தால், திட்டி தள்ளி விடும். ஸ்க்ரீன் மேலே போனதும் அஜூ தன் தலையை காட்ட, நாட்டி அதனை நன்கு கடித்து கடித்து கொஞ்சும். இதில் அஜூ செம குஷி ஆகிடுவார்.
அஜூவை கொஞ்சும் நாட்டி

இதுவும் கொஞ்சல்ஸ் தான்

அஜூவிற்கு மிக பிடித்த உணவு வேர் கடலை. ஏனோ தரையில் அமர்ந்து சாப்பிட தான் இவனுக்கு அதிகம் பிடிக்கும்.

இரண்டு கால்களையும் விரித்து  கொண்டு ஆளவந்தான் கமல் போல 
அஜூ நிற்கும் காமெடி போஸ் கீழே உள்ள படத்தில் 



ஆண் குழந்தை ஒன்று இல்லாத குறையை போக்க வந்த வாலு பயலாக இருக்கிறான் இவன். என்ன ஒன்று இன்னும் எங்களிடம் முழுசாய் பயம் போகலை. எங்கள் கைக்கு வர ஆரம்பிக்கலை. நாட்டி இப்போது சர்வ சாதாரணமாக எங்களிடம் வருவாள். (ஆனால் அஜூ அதே ரூமில் இருந்தால் சீக்கிரம் இறங்கி அவனிடம் போகணும் என துடிப்பாள். வேறு ரூம் என்றால் பேசாமல் எங்களுடன் இருப்பாள்)


நாட்டி அவ்வப்போது கத்துவாள். அஜூ அநேகமாய் பேசுவதே இல்லை. வீடு பூட்டி விட்டு, நெடு நேரம் கழித்து வந்து திறக்கும் போது ஒரு வித சவுண்ட் கொடுப்பான். எங்கள் பெண் அதே சவுண்ட் திரும்ப தந்தால், தானும் அதே சவுண்ட் விடுவான்.

நாட்டி ரொம்ப கடித்தால், தொந்தரவு செய்தால் மட்டும் அடி தொண்டையில் சின்னதாய் ஒரு சத்தம் போடுவான். மற்றபடி இவன் தான் அவளை நிறைய வம்பு வளர்ப்பான்.



ஒவ்வொரு நாளும் காலை எங்கள் மூவருக்கும் இவர்களை கொஞ்சிய படி தான் விடியும். Pets -இல்லாமல் இருக்கவே முடியாது என்கிற நிலைக்கு வந்து கொண்டிருக்கிறோம் !

இப்போதைக்கு நாட்டி என் பெண்ணுடைய செல்லம். அஜூ என் செல்லம்.
நீங்களும் ஏதேனும் ஒரு Pet animal வீட்டில் வளர்த்து பாருங்கள். வாழ்வில் சந்தோஷம் மிகுவதை உணர்வீர்கள் !


டிஸ்கி: நாட்டி பற்றி முன்பு எழுதிய பதிவில் ஹுசைனம்மா " நாட்டி தனியாவே இருந்துடுமா?" என அக்கறையுடன் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார். இதனால் அஜூ வந்து ஒரு மாதம் கழித்து ஹுசைனம்மவிற்கு அவன் எங்களிடம் வந்த தகவல் சொன்னேன். உடன் வந்த பதில்: "வக்கீல் சார்; பொறுப்பான குடும்ப தலைவர்  ஆகிட்டீங்க !  பின்னே ? கிளிக்கு கல்யாணம் பண்ணி வச்சிடீங்களே   :))

29 comments:

  1. புதுநபர் வரவுக்கு வாழ்த்துகள்:)! அஜூவைப் பற்றி முழுதாக வாசித்து விட்டு மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  2. ரசனை மோகன் :)

    லவ் பேர்ட்ஸ்
    லவ் பேர்ட்ஸ்
    லவ் பேர்ட்ஸ்
    லவ் பேர்ட்ஸ்
    தக்க திம்மி தா :))

    ReplyDelete
  3. // "வக்கீல் சார்; பொறுப்பான குடும்ப தலைவர் ஆகிட்டீங்க ! பின்னே ? கிளிக்கு கல்யாணம் பண்ணி வச்சிடீங்களே :))//

    ரசித்தேன்....

    ReplyDelete
  4. /அழகு பையன் அஜூ /

    படம் ஒன்று மற்றும் (கூண்டில் க்ளோஸ் அப்) எட்டில் பேரழகன்:)! ரசித்து எழுதியுள்ளீர்கள். சுவாரஸ்யமான பதிவு.

    ReplyDelete
  5. வித்தியாசமான அனுபவமாக இருந்தது உங்களது இந்த பதிவைப் படிப்பதற்கு. என்ன அழகழாய் அஜூவையும் நாட்டி யையும் படம் பிடித்து போட்டு அசத்தியிருக்கிறீர்கள். நானே கிளியாய் மாறி விடலாமா என்று ஆசை வருகிறது. அற்புதமான பதிவு. பகிர்வுக்கு நன்றி சார்!

    ReplyDelete
  6. Anonymous2:58:00 AM

    க்யூட் போஸ்ட். புதிய குடும்ப உறுப்பினருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. Very Cute :) you and your loved ones just made my day :)

    ReplyDelete
  8. //இப்போதைக்கு நாட்டி என் பெண்ணுடைய செல்லம். அஜூ என் செல்லம்.
    நீங்களும் ஏதேனும் ஒரு Pet animal வீட்டில் வளர்த்து பாருங்கள். வாழ்வில் சந்தோஷம் மிகுவதை உணர்வீர்கள் !//

    Well said. 100 % true.

    ReplyDelete
  9. அழகு கிளி அழகு பதிவு..

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்.

    Questions
    1. Will they not accidentally escape from home ???

    2. When they fly inside house, will they be careful not to fly near FAN.

    We have புறா outside our house, which will come inside sometimes if the window is open. So, I make sure never to turn on the FAN as long as possible.

    ReplyDelete
  11. கிளி பேச்சு கேட்கவா......கல்யாண சாப்பாடு உண்டா மக்கா....

    ReplyDelete
  12. மற்ற உயிரினத்தையும் வளர்த்து மனித நேயம் காட்டும் உங்கள் எண்ணம் புரிகிறது.

    அரிசி மாவில் கோலமிடுவதே சிறு உயிர்களுக்கு(அரிசி) உணவாக்கத்தான்..

    காக்கைக்கும் உணவளிப்போம்.. தெரு நாயிற்கும் உணவளிப்போம்.

    ReplyDelete
  13. ஹுசைனம்மாவின் பதிலை ரசித்தேன்.

    அஜூ அழகாக இருக்கிறான்.

    ReplyDelete
  14. நன்றி ராமலட்சுமி. என் பையனை பேரழகன் என்று சொன்னதுக்கும் தான் !
    ***

    ReplyDelete
  15. நன்றி ரகு. வேளச்சேரியில் தானே இருக்கீங்க. ஒரு முறை பக்கத்திலேயே இருக்கும் வீட்டுக்கு வாருங்கள். ரெண்டு கிளிகளையும் பார்க்கலாம். மேலும் Mrs அய்யாசாமி நன்கு சமைப்பார். ஒரு வேளை ஹோட்டல் சாப்பாட்டிலிரிந்து தப்பலாம்

    ReplyDelete
  16. ஸ்ரீராம்: நீங்கள் கூட pets பிரியர் ஆயிற்றே !
    **

    ReplyDelete
  17. வெங்கட். நன்றி
    **

    ReplyDelete
  18. துரை டேனியல் சார்:

    //என்ன அழகழாய் அஜூவையும் நாட்டி யையும் படம் பிடித்து போட்டு அசத்தியிருக்கிறீர்கள். நானே கிளியாய் மாறி விடலாமா என்று ஆசை வருகிறது. //

    உங்களின் இந்த வரிகளை வீட்டில் பெண்ணும் மனைவியும் மிக ரசித்தனர்
    **

    ReplyDelete
  19. நன்றி சிவகுமார்
    **

    ReplyDelete
  20. AlwaysRight- said...

    Very Cute :) you and your loved ones just made my day :)

    தங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி தருகிறது Always Right. நன்றி ஹை

    ReplyDelete
  21. **
    நன்றி மாதவி

    ReplyDelete
  22. **

    ஆதிமனிதன்: நன்றி

    **

    ReplyDelete
  23. ரியாஸ்: மகிழ்ச்சி நன்றி

    **

    ReplyDelete
  24. விஸ்வநாத்: லவ் பேர்ட்ஸ் தான் பறக்கும். கிளிகள் வீட்டினுள் அநேகமாய் பறப்பதில்லை. ஏனோ அவை தப்பி செல்லவும் நினைப்பதில்லை.

    முதல் வருகைக்கு நன்றி

    **

    ReplyDelete
  25. மனோ: இந்தியாவில் தானே இருக்கீங்க. சென்னை வாங்க, சாப்பிட்டுடலாம்

    ***

    ReplyDelete
  26. கோவை2தில்லி மேடம்: அஜூ அழகு எனும் போது எங்கள் மகனை சொன்ன மாதிரி தான் மகிழ்ச்சியா இருக்கு. Thanks

    ReplyDelete
  27. //விலங்குககளில் பெண்ணினத்தை விட ஆண் அழகு தான். //

    :-))))

    அஜுவின் முதல் புகைப் படத்தைப் பார்த்தபோது, அது கிளி பொம்மை என்றே நினைத்தேன்!! பெண்கிளியைவிட ரொம்ப வித்தியாசமா இருக்கு. முதல்முறை ஆண்கிளியைப் பார்க்கீறேன்.

    என் கமெண்டை மறக்காமல் பதிவில் சேர்த்துக் கொண்டது மகிழ்ச்சி!!
    (ஆனாலும், என்னை யாரும் ‘பொறுப்பான அம்மா மாதிரி கவலைப்பட்டேன்’னு பாராட்டலை பாருங்க -ஸோ ஸேட்!!) :-D

    ReplyDelete
  28. கிளி கொஞ்சும் பதிவுக்குப் பாராட்டுக்கள்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...