Saturday, March 31, 2012

ஏப்ரல் 1 : சட்டக்கல்லூரி நண்பர்களை ஏப்ரல் Fool ஆக்கியது எப்படி?

நாளைக்கு ஏப்ரல் 1 ! இன்னமும் அருகில் இருப்போரை முட்டாளாக்க பார்க்கும் பழக்கம் குறைய வில்லை. மனைவியையும் குழந்தையும் நாளை எப்படி ஏமாற்றுவது என டீப்பா யோசிச்சிட்டு இருக்கேன்

சட்டக்கல்லூரி   கோஷ்டி இன்று : இடமிருந்து வலம்: நித்தி, மோகன்குமார், நவீன் (பாலா- டெய்ஸி மகன்), ரவி, பிரேம்,  டெய்ஸி, பாலா

பலரையும் பல விதமாய் ஏமாற்றினாலும், 18 வருடங்களுக்கு முன் கல்லூரி காலத்தில் நண்பர்கள் பிரேம் மற்றும் டெய்ஸியை April fool-ஆக்கியது பசுமையாக இன்னும் நினைவில் ....

****
அதனை சொல்லும் முன் எங்கள் கேங் பற்றி சுருக்கமாக. 20 வருடத்துக்கு முன் சட்டகல்லூரியில் படித்த போது, எங்கள் செட் ஆண்கள் பெண்கள் என அனைவரும் சேர்த்து 15 - 20 இருப்போம். ஒவ்வொருவர் பிறந்த நாளுக்கும் சினிமா மற்றும் ஹோட்டல் போவது வழக்கம். ஒரே கொட்டம் தான் !

20 நெருங்கிய நண்பர் குழுவில் இரு காதல் திருமணம் நடந்துள்ளது. மற்ற அனைவரும் நண்பர்கள்.. அவ்வளவு தான் !

இந்த பகுதியில் நாம் பார்க்க போகும் நபர்கள் பாலா, பிரேம் மற்றும் டெய்சி.

*********
இந்த முறை போலவே ஏப்ரல் 1: அந்த வருடம் ஒரு ஞாயிறில் வந்தது. அன்று கல்லூரி இல்லை.

நண்பர்கள் பிரேம் மற்றும் டெய்சியை ஒரே நேரத்தில் ஏப்ரல் Fool -ஆக்க, பாலாவும் நானும் சேர்ந்து plan போட்டோம்.

முதலில் பிரேமுக்கு போன் செய்தோம்.

" டேய் விஷயம் தெரியுமா? டெய்ஸிக்கு accident ஆகிடுச்சு"

" அப்படியா? எங்கே? என்ன ஆச்சு?"

" வெளியே போயிட்டு cycle-ல் வீட்டுக்கு வரும் போது, கார் மோதிடுச்சு"

"அப்படியா? இப்ப எங்க இருக்கா?"

" Hospital -ல்"

"எந்த Hospital?"

" டெய்ஸி வீட்டுக்கு பக்கத்தில் உள்ள BHEL Hospital தான் ; நீ டெய்ஸி வீட்டுக்கு வந்துடு. அங்கே கேட்டுகிட்டு ஆஸ்பிட்டல் போயிடலாம் " என போனை வைத்தோம்.

அடுத்த அரை மணி நேரம் காத்திருந்து விட்டு, பின்,  டெய்ஸி வீட்டுக்கு போனோம்.. (பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பிரேம், டெய்ஸி வீட்டுக்கு வர அரை மணி நேரம் ஆகும் !!) 

டெய்ஸியீடம் இதே கதையை மாற்றி சொன்னோம்...

"பிரேமுக்கு accident ஆகிடுச்சு" .

" ஐயையோ என்ன ஆச்சு?"

"அதெல்லாம் போகும் போது பேசிக்கலாம்.  கிளம்பு ; Hospital போய் பார்த்துட்டு வரலாம்" என பேசிட்டு இருக்கும் போதே கதவு மீண்டும் தட்ட பட்டது.

டெய்ஸி போய் கதவு திறக்க, எதிரே நின்றது பிரேம்.

"உனக்கு accident ஆகிடுச்சு -ன்னு சொன்னாங்களே" என பிரேம் கேட்க டெய்ஸியும் அதையே பிரேமிடம் கேட்க...

நானும் பாலாவும் "ஏப்ரல் Fool ! ஏப்ரல் Fool !" என கத்தினோம் !   

அப்புறம் பாலாவுக்கும் எனக்கும் அவர்கள் இருவரிடமிருந்து செம மாத்து விழுந்தது..

அடி, உதை சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்த டெய்ஸி அம்மா " ஏம்பா accident-ன்னு சொல்லியா ஏமாத்துவீங்க" என எங்களை கேட்டாலும்,  அவரும் சிரித்து தீர்த்தார்.

****
அதன் பின் பிரேமை அருகிலிருந்த பாலா வீட்டுக்கு கூட்டிட்டு போய்,  அரை நாள் பேசிட்டு இருந்து பின் அனுப்பினோம்..

அப்போதெல்லாம் நண்பர்கள் மணி கணக்கில் பேசுவோம்.. அரசியல், சினிமா, college politics என எத்தனையோ விஷயங்கள்..

இப்போது பாலாவுக்கும் டெய்ஸிக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ப்ரேமுக்கும் ரெண்டு குழந்தைகள் ..

கல்லூரியில் 5 வருடம் ஒன்றாய் சுற்றிய நண்பர்களில் பலர் சென்னையில் தான்,  கல்யாணம் ஆகி settle-ஆகி விட்டனர்.

இப்போதும் 3 - 4 மாதங்களுக்கு ஒரு முறை குடும்ப சகிதமாய் எதாவது ஒருவர் வீடு அல்லது ஒரு ஹோட்டலில் 6 or 7 குடும்பங்கள் சந்திப்போம். ஹோட்டல் என்றால் அனைவரின் குட்டி பசங்களும் அங்கும் இங்கும் ஓடி எதையாவது கீழே தள்ளி விடுவர்.. Hotel bearer -தான் எதுவும் உடைய கூடாது என கவலையில் அவர்கள் பின்னால் ஓடுவர்..

நாங்கள்? அனைத்தையும் மறந்து யாராவது ஒருவனை செமையாய் கிண்டல் செய்து சத்தமாய் சிரித்தவாறு இருப்போம்...

*********
நம்முள் இருக்கும் குழந்தையை எழுப்பி பார்க்கும் இத்தகைய (ஏப்ரல் Fool) குதூகலங்கள் தேவை தான்.
 
நாளை யாரை ஏமாற்றலாம் என யோசியுங்கள். கூடவே நீங்கள் யாரிடமும் ஏமாறாமல் இருக்க முயலுங்கள் !! All the best !!

22 comments:

 1. இனிய அனுபவம்
  Accident ஆனது பிரேமுக்கும் டெய்சிக்கும்தானே?? ஆனா மாட்டிக்கொண்டது பாலாவா? ha ha haa...

  ReplyDelete
 2. நம்முள் இருக்கும் குழந்தையை எழுப்பி பார்க்கும் இத்தகைய (ஏப்ரல் Fool) குதூகலங்கள் தேவை தான்.

  இனிய பகிர்வுகள்..

  ReplyDelete
 3. எல்லாரையும் ஏமாத்துற உங்கள, நாளைக்கு நா ஏமாத்தப் போறேன்..
  ஜாக்ரதை... ஜாக்ரதை..

  ReplyDelete
 4. இனிய அனுபவம்.. ஆனாலும் விபத்து என்று ஏமாற்றியது கொஞ்சம் ஓவர் தான் மோகன்.....

  பள்ளியில் படித்தபோது உருளைக் கிழங்கில் AF என்று என்கிரேவ் செய்து அதில் இங்க் தடவி மற்ற எல்லாப் பசங்க சட்டையிலும் குத்தி பாழ் செய்திருக்கிறோம்.... அது நினைவுக்கு வந்தது....

  ReplyDelete
 5. :துள்ளித் திரிந்ததொரு காலம்...

  ReplyDelete
 6. அனுபவம் நன்றாக இருந்தது சார். ஆனா விபத்துன்னு சொன்னது.......

  ReplyDelete
 7. இத்தனை வருடங்கள் சென்ற பிறகும் நேற்று நடந்தது போல் சொல்லியுள்ளது, உங்களின் ஞாபக சக்திக்கு சான்று.

  ReplyDelete
 8. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. இனிய அனுபவ பகிர்வு !

  ReplyDelete
 10. உமா: கமண்டுக்கு நன்றி. பாலா மிக மகிழ்ச்சியாக தான் இருக்கிறான் மேடம்
  **

  ReplyDelete
 11. நன்றி.இராஜராஜேஸ்வரி
  ***

  ReplyDelete
 12. Madhavan Srinivasagopalan : நீங்க எப்படி ஏமாதுவீங்கன்னு நான் guess பண்ணிட்டேன்

  ReplyDelete
 13. ****
  வெங்கட் நாகராஜ் : உங்க பள்ளி அனுபவமும் Interesting !

  ReplyDelete
 14. ஸ்ரீராம். said...
  :துள்ளித் திரிந்ததொரு காலம்...

  ***

  ஆம் நன்றி ஸ்ரீராம்

  ReplyDelete
 15. கோவை2தில்லி said...
  அனுபவம் நன்றாக இருந்தது சார். ஆனா விபத்துன்னு சொன்னது.......

  ********
  நன்றிங்கோ அந்த வயசில் அது தப்பா தெரியலை.

  ReplyDelete
 16. அமைதி அப்பா said...
  இத்தனை வருடங்கள் சென்ற பிறகும் நேற்று நடந்தது போல் சொல்லியுள்ளது, உங்களின் ஞாபக சக்திக்கு சான்று.

  ***
  நன்றி அமைதி அப்பா

  ReplyDelete
 17. Rathnavel Natarajan said...
  அருமை.
  வாழ்த்துகள்.

  நன்றி ரத்தினவேல் ஐயா

  ReplyDelete
 18. திண்டுக்கல் தனபாலன் said...
  இனிய அனுபவ பகிர்வு !

  ***********

  நன்றி தனபாலன்

  ReplyDelete
 19. // மோகன் குமார் said...

  Madhavan Srinivasagopalan : நீங்க எப்படி ஏமாதுவீங்கன்னு நான் guess பண்ணிட்டேன் //

  வினாத்தாள்(Question paper) கசிந்துவிட்டால்(leak) தேர்வினை நடத்தக்கூடாது..
  --- எனவே உங்களை ஏப்ரல் ஃபூல் செய்யும் எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

  ReplyDelete
 20. மாதவா, நீ என்ன செய்ய போகிறாய் என எதிர் பார்க்க வைத்து எதுவும் செய்யாமல் தான் என்னை ஏமாற்ற எண்ணியுள்ளாய் என்பதை யூகித்தேன் எப்புடி?

  ReplyDelete
 21. ஒத்துக்கறேன், உங்கள ஏமாத்த முடியாதுன்னு..
  (நா, முந்தாநேத்து சொன்னது ரொம்ப ஓல்ட் டெக்னிக்கோ ?)

  ReplyDelete
 22. அனுபவமே வாழ்க்கை....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...