Saturday, March 3, 2012

அரவான் - A must watch movie - விமர்சனம்

ஒரு நல்ல சினிமாவை எப்படி அடையாளம் காணலாம்? படம் பார்த்து விட்டு வந்த பின்னும் அது நம் மனதை பிசைய வேண்டும். வீட்டிலும், நண்பர்களிடமும் அடுத்த இரு நாள் அந்த படம் பற்றி பேச வைக்க வேண்டும். படம் பார்த்த இரவு உறக்கம் வர தாமதமாக, மனம் படம் பற்றி யோசிக்க வேண்டும். காலை எழுந்து, அரை நினைவோடு பல் துலக்கும் போதும், சில காட்சிகள் நினைவில் வந்து போக வேண்டும். இந்த பாதிப்பை உங்களுக்கு ஒரு படம் தந்தால் அது நிச்சயம் நல்ல சினிமா தான். அரவான் அப்படி ஒரு படம்.

நிற்க. பதிவு எழுதுவதற்காக இரவும், அதி காலையும் படம் குறித்து யோசித்திருப்பாய் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் பதிவுக்கான முழு மேட்டரும் படம் பார்த்து விட்டு வெளியே வரும் போதே தயார் ஆகி விட்டது. மொபைலில் சிறு சிறு பாயிண்டுகளாக இடை வேளையில் எழுதி விடுவது வழக்கம்.

கதை

வேம்பூர் -கள்வர்கள் நிறைந்த ஊர். திருட்டு தொழிலில் தான் ஊரே சாப்பிடுகிறது. கொம்பூதி (பசுபதி) கள்வர்களுக்கு தலைவர் போல இருக்கிறார். இந்த ஊருக்கு வந்து இவர்களுடன் சேர்கிறார் வரிப்புலி (ஆதி) . தன்னை   அனாதை என்று சொல்லி கொள்ளும் ஆதியை ஊரில் சேர்க்க பலர் தொடர்ந்து எதிர்த்த வண்ணம் உள்ளனர். பசுபதியின் தங்கை ஆதியை காதலிக்க, பசுபதியும் "என் தங்கையை மணந்து கொள் " என்கிறார். ஆதி அப்போது தான் , தனக்கு திருமணம் ஆகி விட்டது என்கிறார்.

ஜல்லி கட்டில் பசுபதி காயமுற, ஆதி தான் யார் என்ற உண்மையை சொல்லி விட்டு இறங்குகிறார். ஜல்லி கட்டில் வெல்லும் ஆதியை, அவர் சொந்த ஊர் காரர்கள் வந்து அடித்து இழுத்து செல்கின்றனர். ஏன் என கேட்கும் பசுபதியிடம் "ஆதி ஒரு பலியாடு. பலி ஆக வேண்டியவன்" என்கிறார்கள்.

இடைவேளைக்கு பின் ஆதியின் கதை விரிகிறது. அந்த ஊர் ராஜாவின் சூழ்ச்சியால், ஆதியை பலி கொடுக்க நாள் குறிக்கின்றனர். உண்மையை சொல்லாமல் ராஜா தற்கொலை செய்து கொள்கிறார். பத்து ஆண்டுகள் மறைந்திருந்து திரும்பினால், பலி தர மாட்டார்கள் என்பதால், மறைந்து வாழ்கிறார் ஆதி. 9 ஆண்டுகள் முடிந்த நிலையில் தான் ஜல்லி கட்டு முடிவில் மாட்டி கொள்கிறார்.

"அரவான் " என்ற பெயர் இருக்கும் போதே ஹீரோ கதி என்ன ஆகும் என தெரிந்தாலும், அது கிளைமாக்சில் நடக்கும் விதம்... எதிர் பாராதது !

Casting 

படத்தின் மிக பெரிய பலங்களில் ஒன்று Casting .

ஆதியின் உழைப்பை என்ன சொல்லி பாராட்டுவது? படம் முழுதும் வெய்யிலில் சட்டையோ, செருப்போ இன்றி கல்லிலும் முள்ளிலும் ஓடுகிறார். " சரசர" வென சுவற்றில் ஏறுகிறார். வெறும் உடம்புடன் மரத்தில் கட்டி தொங்க விடுகிறார்கள். ஜல்லி கட்டில் டூப் இன்றி வீரம் காட்டுகிறார் (பசுபதிக்கு டூப் போட்டது தெளிவாய் தெரிகிறது. ஆதிக்கு சிறிதும் டூப் இல்லை). கன்று குட்டியை தூக்கி கொண்டு ஓட்ட பந்தயம் ஓடுகிறார். நீர்வீழ்ச்சி மேலிருந்து குதிக்கிறார். மாடு மேல் சவாரி ( Race ) செய்கிறார். சிக்ஸ் பேக் உடல் படம் முழுதும் பரமாரித்துள்ளார். (தொடர்ந்து 6 pack- maintain செய்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?) இவை அனைத்துமே கஷ்டப்பட்டோம் என சொல்ல, துருத்தி கொண்டு தெரியாமல், மிக இயல்பாக அமைந்துள்ளது. எந்திரனில் ரஜினியை "பெண்டு" நிமிர்த்திய மாதிரி இதில் ஆதியை வேலை வாங்கி உள்ளனர். அவரது உயரம் + உடலை வைத்து அவர் செய்யும் அனைத்தையும் நம்ப முடிகிறது. நடிப்பும் நிச்சயம் குறை சொல்ல முடியாத விதத்தில் உள்ளது. ஆதி என்பவர் ஸ்டார் இல்லை என்பதால், அந்த பாத்திரமே மனதில் நிறைகிறது. (ஆனாலும் விக்ரம் அல்லது சூர்யா நடித்திருந்தால் இந்த படத்தின் ரீச்சே வேறு என்றும் தோன்றுகிறது. அவர்கள் ஆதி அளவு உழைத்திருப்பது சந்தேகமே எனினும், ரீச் அதிகம் இருந்திருக்கும் !)

பசுபதி கள்வன் பாத்திரத்தை மிக அழகாக செய்துள்ளார். தேர்ந்த நடிகர் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறார். ஆதிக்கு அடுத்து முக்கிய துவம் உள்ள கேரக்டர் இது தான். " எவ்வளவோ ரகசியம் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா உன்னை பத்தின ரகசியம் மட்டும் தெரியவே இல்லையே " என்று ஆதியிடம் சொல்லும் இடமாகட்டும், திருட்டுக்கு கூட்டி போக வில்லையென கோபிக்கும் மகனை சமாதானம் செய்வதாகட்டும், இறுதி காட்சியில் ஆதியிடம் பேசுவதாகட்டும்...மிக நிறைவாய் செய்துள்ளார். தமிழில் இந்த வருடத்தின் சிறந்த துணை நடிகர் விருது அநேகமாய் இவருக்கு தான் !

ஆதியின் மனைவியாக தன்ஷிகா ! பேராண்மையில் அறிமுகம் ஆனவர். அப்போது அதிகம் கவரா விட்டாலும் தற்போது தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தி கொண்டு விட்டார். கண்கள் செம, செம செம அழகு. பெண்கள் அதிகம் வெள்ளையாய் இருந்தாலும் அதிக கருப்பாய் இருந்தாலும் பிடிப்பதில்லை. கோதுமை தான் எனக்கு பிடிச்ச கலரு ! தன்ஷிகா கோதுமை நிறம் ( ஹி ஹி). பின்னணி குரல் எடுத்தவுடன் சொதப்பினாலும் போக போக பழகிடுது. ஆதி வாழ போவது முப்பதே நாள் எனும் போது " உன்னிடம் பிள்ளை பெத்துக்குரேன்; அவனை பார்த்தே மிச்ச வருஷம் வாழ்வேன்" என சொல்லி ஆதியை மணக்கிறார் இவர். ஆதியோ சாக போகிறோமே என வெறுப்பில்   திரிகிறார்... இவரை கண்டு கொள்ளவே இல்லை. அப்போது இவர் எப்படி அவரை வழிக்கு கொண்டு வர்றார் தெரியுமா? அவர் இருக்கும் இடத்தில போய் "" ஓன்னு" அழுகை ! அப்புறம்? அவர் பின்னாடியே ஆதி வீட்டுக்கு வந்துடுறார். பத்து மாசத்தில் பிள்ளை தயார் ! கிளைமாக்சில் 9 வருஷத்துக்கு பின்னும் அப்படியே அவரை சிறிதும் மாற்றமின்றி காட்டிய இடத்தில் இயக்குனர் சறுக்கி விட்டார்.

அர்ச்சனா கவி: பசுபதி தங்கையாக, ஆதியை ஒரு தலையாய் காதலிப்பவராக வருகிறார் இந்த மாடர்ன் பெண் ! இத்தகைய ஒரு கிராமத்து பாத்திரத்தில், இவரை நன்கு நடிக்க வைத்தது ஆச்சரியம் !

திருமுருகன்: களவானியில் வில்லன்; இதில் ஹீரோவின் நண்பனாக, அவனுக்கு பதில் பலி ஆகும் நபராக வருகிறார். புத்தக கண்காட்சியில் இவரை நேரில் பார்த்தேன். செம உயரம் ! ஆனால் படத்தில் ஆதியின் அருகில் இவர் உயரம் என்பது தெரியவே இல்லை. இறக்க போகும் போதும் சிரிப்புடன், நண்பனை பற்றி உயர்வாய் பேசி விட்டு இறக்கிறார்.

சிங்கம் புலி: இவர் வந்தவுடன் தியேட்டரில் வந்த விசிலை பாக்கனுமே ! இவருக்கு இவ்ளோ ஆதரவா என ஆச்சரியமா இருந்தது. " என் பொண்டாட்டி மேலே கண் வச்சான். அதை கூட பொறுத்துக்கலாம். என் மச்சினிச்சி மேலே கண்ணு வைக்கிறாம்பா; என் மச்சினிச்சி மேலே அவன் கண்ணு வைக்கலாமா? நீயே சொல்லு " எனும்போது எனக்கு அருகிலிருந்த ரெண்டு ரோவிலும் விழுந்து விழுந்து சிரித்தனர். இப்படி மச்சினிச்சி மேல் கண்ணாய் உள்ள ஆண்களை இப்போதும் நான் பார்த்திருக்கேன் (அய்யாசாமி இல்லீங்க ! அவருக்கு நோ மச்சினிச்சி!)

ஆதி அம்மாவாக: TK கலா (பின்னணி பாடகி). வழக்கமான சினிமா அம்மா. ஆதி - தன்ஷிகா திருமணம் ஆன இரவு தன்ஷிகா உடன் இவர் பேசும் இடத்தில் மட்டுமே கவர்கிறார்.

கரிகாலன்: கஸ்தூரி ராஜாவின் "சோலையம்மா" வில் நெகடிவ் ஹீரோவாக நடித்த கரிகாலனுக்கு வில்லன் வேடம். வித்யாச தலை முடியுடன் ஆதியை தேடி அலைகிறார். கடைசியில் ஹீரோ இறக்கும் போது இவர் மட்டும் புன்னகைப்பது பக்கா வில்ல தனம் !

பரத்துக்கு மிக சிறிய ஆனால் முக்கிய பாத்திரம்: பிற்பாதி கதையே இவர் மரணத்தை சுற்றியே நகர்கிறது. நடித்த காட்சிகளை விட பிணமாக கிடக்கும் நேரம் மிக அதிகம் !

அஞ்சலி: ஓ ! காட் ! இது அஞ்சலியா? ஒத்துக்கவே முடியாது ! எங்கேயும் எப்போதும் படத்துக்கு முன்பே இப்படத்தில் இவர் நடித்த காட்சிகள் எடுத்திருப்பார்கள் போலும். செம குண்டு ! தம் அடிக்க வெளியே சென்று விட்டு வந்தால், இவர் வந்து போவதை மிஸ் செய்து விடுவீர்கள்.

நிற்க. இந்த நல்ல படத்தை, அதன் அத்தனை பரிணாமங்களுடன் முழுமையாய் விமர்சிப்பதே அந்த படத்துக்கு நான் செய்யும் குறைந்த  பட்ச மரியாதை! அதற்காக ஒரே நேரம் பத்து பக்கம் எழுதினால் என்னை நீங்கள் அடிப்பீர்கள் ! So....???

அரவானின் நிஜ ஹீரோக்கள்- ( Technical Crew ) குறித்து - இரண்டாம் பாகம் இன்று மாலை அல்லது நாளை "வீடுதிரும்பலி"ல் வெளியாகும் !

அரவான் : A must watch movie !

சமீபத்திய பதிவு:

சூர்யாவின் ஒரு கோடி நிகழ்ச்சி: விமர்சனம் : இங்கே வாசிக்கலாம் !

27 comments:

  1. நல்ல விமர்சனம் மோகன்....

    அந்த ஆசாமி அய்யாசாமி இல்லை! ஏன்னா அவருக்கு மச்சினி இல்லை...

    உங்க ஆதங்கம் புரியுது... :)))

    படத்தினை நானும் எதிர்பார்த்திருந்தேன். இங்கே வெளியாகி இருக்கிறதா பார்க்க வேண்டும்.

    இரண்டாவது பாகத்தினை எதிர்னோக்கி....

    ReplyDelete
  2. விரிவான விளக்கமான விமர்சனம். படத்தின் அத்தனை விடயங்களையும் அலசி ஆராய்ந்திருக்கீங்க. சீக்கிரம் பார்க்கலாம். நன்றி.

    ReplyDelete
  3. பார்ப்போமா வேண்டாமா என இருந்த என்னை உங்கள் விமர்சனம் பார்க்க தூண்டுகிறது நன்றி.....

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம். இரண்டாம் பகுதிக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. Anonymous4:52:00 PM

    பட்டவர்த்தமான விமர்சனம். சும்மா குறை சொல்லனுமே இல்லாட்டி விமர்சனத்த மதிக்க மாட்டானுங்க என்ற கட்டாயம் இல்லாமல் மனதில் இருந்து வந்துள்ள விமர்சனம்.

    ReplyDelete
  6. சரியான விமர்சனம்.,

    சின்ன சின்ன சறுக்கல்கள் படத்தில் இருந்தாலும் படம் நன்றாகவே இருந்தது.

    ReplyDelete
  7. ரொம்பவும் வித்தியாசமான விமர்சனம்..கதாபாத்திரங்கள், கதை என்று தனியாக ஒவ்வொன்றையும் ரொம்பவும் விளக்கமாக சொல்லியுள்ளீர்கள்...இவ்வளவு அழகான விமர்சனம் படித்துவிட்டு படம் பார்க்காமல் போனால் என்னாவது..கண்டிப்பாக பார்த்துடுவேன்.மிக்க நன்றி சகோ.

    Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

    ReplyDelete
  8. விமர்சனம் நன்று.

    படம் பார்க்கின்றேன். நன்றி.

    ReplyDelete
  9. வெங்கட் நாகராஜ் said...

    அந்த ஆசாமி அய்யாசாமி இல்லை! ஏன்னா அவருக்கு மச்சினி இல்லை...

    உங்க ஆதங்கம் புரியுது... :)))

    **
    வெங்கட் : ஏன் ??? :))
    **
    //படத்தினை நானும் எதிர்பார்த்திருந்தேன். இங்கே வெளியாகி இருக்கிறதா பார்க்க வேண்டும். //

    வெளிவந்தால் அவசியம் பாருங்கள் !

    ReplyDelete
  10. ********
    ஹாலிவுட்ரசிகன் said...
    விரிவான விளக்கமான விமர்சனம். படத்தின் அத்தனை விடயங்களையும் அலசி ஆராய்ந்திருக்கீங்க. சீக்கிரம் பார்க்கலாம். நன்றி.

    **

    நன்றி நண்பரே. நல்ல படத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணமே காரணம்

    ******

    ReplyDelete
  11. மறைக்காட்டன் said...
    பார்ப்போமா வேண்டாமா என இருந்த என்னை உங்கள் விமர்சனம் பார்க்க தூண்டுகிறது

    ***

    மகிழ்ச்சி. பாருங்கள் நண்பா

    **

    ReplyDelete
  12. கோவை2தில்லி said...
    நல்ல விமர்சனம். இரண்டாம் பகுதிக்காக காத்திருக்கிறேன்.

    நன்றி மேடம். இப்போது இரண்டாம் பகுதி வெளியாகி விட்டது

    ***

    ReplyDelete
  13. ஆரூர் மூனா செந்தில் said...
    பட்டவர்த்தமான விமர்சனம். சும்மா குறை சொல்லனுமே இல்லாட்டி விமர்சனத்த மதிக்க மாட்டானுங்க என்ற கட்டாயம் இல்லாமல் மனதில் இருந்து வந்துள்ள விமர்சனம்.
    *********
    நன்றி செந்தில்

    ReplyDelete
  14. நிகழ்காலத்தில்... said...
    சரியான விமர்சனம்.,

    சின்ன சின்ன சறுக்கல்கள் படத்தில் இருந்தாலும் படம் நன்றாகவே இருந்தது.

    **

    நீங்களும் பார்த்து விட்டீர்களா? மகிழ்ச்சி !

    ReplyDelete
  15. Kumaran said...
    ரொம்பவும் வித்தியாசமான விமர்சனம்..கதாபாத்திரங்கள், கதை என்று தனியாக ஒவ்வொன்றையும் ரொம்பவும் விளக்கமாக சொல்லியுள்ளீர்கள்...இவ்வளவு அழகான விமர்சனம் படித்துவிட்டு படம் பார்க்காமல் போனால் என்னாவது..கண்டிப்பாக பார்த்துடுவேன்.மிக்க நன்றி சகோ.
    ******

    அடடா ! நன்றி நண்பா ! Very happy to see your comment !

    ReplyDelete
  16. மாதேவி: நன்றி மேடம்

    ReplyDelete
  17. நடுநிலையான விமர்சனம்.

    ReplyDelete
  18. //வெங்கட் : ஏன் ??? :))//

    ஏன்னா அய்யாசாமி மாதிரி தான் எனக்கும்... :)

    ReplyDelete
  19. படத்தை பார்க்கலாம் என்றிருக்கிறேன். [உங்க முழு விமர்சனத்தையும் படிச்சா கதை தெரிந்து படத்தின் த்ரில் போய்விடும் என்பதால் படம் பார்க்கும் வரை படிக்க வேண்டாமென்றிருக்கிறேன்!!]

    ReplyDelete
  20. விமர்சனம் அருமை.
    ஒரு நல்ல படம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி தொடக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்து சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
  21. //துரைடேனியல் said...

    நடுநிலையான விமர்சனம்.//

    ********
    நன்றி துரை டேனியல்

    ReplyDelete
  22. வெங்கட் நாகராஜ் said...

    //வெங்கட் : ஏன் ??? :))//

    ஏன்னா அய்யாசாமி மாதிரி தான் எனக்கும்... :)

    ***
    வெங்கட்: உங்க வாழ்க்கையில் இவ்ளோ பெரிய சோகமா? :))

    ஆமா. வீட்டம்மா உங்க ப்ளாக் மட்டும் தான் படிப்பாங்க.. மற்ற இடத்தில் நீங்க என்ன கமன்ட் போடுறீங்கன்னு பாக்க மாட்டாங்க அப்படிங்கிற தைரியமா?:))
    ***

    ReplyDelete
  23. Jayadev Das said...

    படத்தை பார்க்கலாம் என்றிருக்கிறேன். [உங்க முழு விமர்சனத்தையும் படிச்சா கதை தெரிந்து படத்தின் த்ரில் போய்விடும் என்பதால் படம் பார்க்கும் வரை படிக்க வேண்டாமென்றிருக்கிறேன்!!]

    ***

    நல்ல லாஜிக். படம் பாருங்க. பிடிக்கும்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  24. Babu said...

    Super விமர்சனம்
    **
    நன்றி பாபு
    ***

    ReplyDelete
  25. RAMVI said...


    விமர்சனம் அருமை.
    ஒரு நல்ல படம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி தொடக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்து சிறப்பாக இருக்கு.

    **
    குறிப்பிட்டு பாராட்டியது மனதுக்கு மகிழ்வா இருக்கு ராம்வி

    ReplyDelete
  26. அரவான் – அபத்தத்தில் இருந்து சொதப்பலுக்கு...

    http://www.tamilhindu.com/2012/03/aravaan-film-review/

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...