Wednesday, March 28, 2012

வானவில் 81 :ஆபிஸ் விளையாட்டு: கையை சுட்டு கொண்ட எழுத்தாளர்

நம்மை பார்த்து கெட்டு போனவர்கள்

நாம் ப்ளாக் எழுதுவது, நண்பர்கள் சிலருக்கு ப்ளாக் துவங்க உந்துதலாக உள்ளது. சமீபத்தில் எனது நெருங்கிய நண்பர்கள் இருவர் ப்ளாக் துவக்கிட்டாங்கன்னா பாத்துக்குங்க ! கண்ணன் என்ற பள்ளி நண்பன் ஒரு ப்ளாக் துவக்கி உள்ளான். அதன் லிங்க் பிறகு தருகிறேன் (பையன் முதல் பதிவிலேயே என்னை வில்லன் மாதிரி எழுதிட்டான். படிச்சா நம்ம இமேஜ் டேமேஜ் ஆகிடும்)

ராமசுப்ரமணியம் என்கிற கம்பனி செகரட்டரி "வழித்துணை" என்கிற ப்ளாக் ஆரம்பித்துள்ளார். , தமிழ் மணம், இன்ட்லி, யுடான்ஸ் உள்ளிட்ட பதிவுலக அவசியங்கள் அவருக்கு தெரியலை ! என்னுடன் சேர்ந்து நீங்களும் அவருக்கு கற்று தாருங்கள்: "தொலை பேசி அழைப்புகளில் இருந்து தப்புவது எப்படி" என ஒரு பதிவு எழுதி உள்ளார். நகைச்சுவை இயல்பா வருது. வாசித்து உங்கள் ஆதரவை தாருங்கள்! 

பேஸ்புக் கிறுக்கல்கள்
ந்தியா மட்டுமில்ல நாம் சப்போர்ட் பண்ற எல்லா டீமும் தோக்குது

இலங்கை Vs ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலிய முத்தரப்பு கிரிகெட்) : ஆஸ்திரேலியாவை சப்போர்ட் பண்ணோம். தோத்துடுச்சு

இலங்கை Vs பங்களாதேஷ். (ஆசிய கோப்பை லீக் ஆட்டம்) இலங்கையை சப்போர்ட் பண்ணோம். தோத்துடுச்சு

பாகிஸ்தான் Vs பங்களாதேஷ் (ஆசிய கோப்பை பைனல்) .பங்களாதேஷ் சப்போர்ட் பண்ணோம். அதுவும் தோத்துடுச்சு

ஏதோ சதி திட்டம் நடக்குதுன்னு நினைக்கிறேன் :))
##########

பவர் கட் பற்றி எங்கோ வாசித்த ஒரு ஜோக்:
பிறந்த குழந்தை கண்ணு முழிச்சு கேட்டுதாம்: கரண்டு இருக்கா?
நர்ஸ் சொன்னாங்களாம்: "இல்லை"

" அட கடவுளே ! மறுபடி தமிழ் நாட்டுலே வந்து பிறந்துட்டேனா"

##########

சச்சின் அடிச்சது ஒன் டேயில் 49-ஆவது சென்சுரியாம்! அப்போ அடுத்தது 50-ஆவதுக்கு மறுபடி காத்திருக்கணுமா?

முடியலை !!
########## 
இன்னிக்கு நைட்டு நீயா நானா சுவாரஸ்யமான டாபிக்..." மாமியார் Vs மருமகள்"!. கல்யாணமான அனைவரும் பார்த்து மகிழலாம்.. பார்க்கும் போது நமட்டு சிரிப்புடன், மேலே வேறு ஏதும் கமெண்ட் அடிக்காமல் பார்ப்பது இல்லற வாழ்வுக்கு நல்லது
##########

கண்கள் நீயே பாட்டு 

இளம் வயதிலேயே GV பிரகாஷின் திறமை வியக்க வைக்கிறது. முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் "கண்கள் நீயே" என்கிற இந்த பாட்டை கேட்டுள்ளீர்களா? டியூன் மற்றும் இசை ! சான்சே இல்லை !

படத்தில் பார்க்கும் போது அந்த அளவு தாக்கம் இல்லை என்பதால் பாடலின் ஆடியோ மட்டும் தான் இங்கு ஷேர் செய்கிறேன்.கேட்டு பாருங்கள்




இது ஒரு அம்மா பாச பாட்டு தான். ஆனால் பாடல் பிடிப்பதற்கு காரணம் அம்மா செண்டிமெண்ட் அல்ல ! மிக அற்புதமான மெலடி, மனதை மயக்கும் பாடலின் டியூன் இவை தான் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.
பாடகி சித்தாரா
பாடலை பாடியது சித்தாரா-வாம் ! மலையாள பாடகியான இவரின் முதல் தமிழ் பாடல் இது என நினைக்கிறேன். என்ன ஒரு குரல் ! என்ன ஒரு திறமையான rendition ! இவரின் அடுத்த பாடலுக்காக காத்திருக்கிறேன். 

அலுவலக விளையாட்டுகள்

ரேடியோ மிர்ச்சி பல நிறுவனங்களுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு சில போட்டிகள் நடத்தி குஷிபடுத்தி வருகிறது. இந்த வாரம் எங்கள் அலுவலகம் வந்து டான்ஸ், பாட்டு மற்றும் நிறைய குட்டி போட்டிகள் வைத்து அசத்தியது. என் டீமில் பணி புரியும் ஒருவர் "சாதுவாய் பூனை" மாதிரி இருப்பார். ஆனால் அன்று டான்சில் வெளுத்து வாங்கி விட்டார். பார்த்த அனைவரும் அசந்து போய் விட்டனர். பார்க்காத நண்பர்களுக்கு மாலை கேண்டினில் வேறு ஆடி காட்டினார். ஒரு போட்டியில் அய்யாசாமியையும் மாட்டி விட்டனர். 

தண்டால் எடுக்கும் அய்யாசாமி
வேலை சுமையை மறக்க, Employees -க்கு இதெல்லாம் தேவையாய் உள்ளது ! ஒவ்வொரு நிறுவனத்திலும் HR-ல் ஒரு டீமே இத்தகைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகள் செய்து வருகின்றன.


இலங்கைக்கு எதிரான தீர்மானம் 

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வென்றது மகிழ்ச்சி. ஆனால் பெரும்பாலான ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன பாருங்கள் ! உலகம் முழுதும் அரசியல் வாதிகள் எந்த பிரச்சனையிலும் தனக்கு என்ன லாபம் என்பதை பொறுத்தே நிலைப்பாடு எடுப்பார்களே அன்றி நியாயம் பக்கம் இருக்க மாட்டார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகிறது.

இந்தியா மட்டும் என்னவாம். ஆதரித்து வாக்களித்தாலும், இலங்கை பாதிக்காத அளவு அந்த தீர்மானத்தை மாற்றியது நாங்கள் தான் என்கிறது. நல்லா இருக்குதுய்யா உங்க நியாயம் !

இந்த தீர்மானத்துக்கு பிறகாவது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நல்லது நடக்கிறதா என பார்க்கலாம் !

தேர்வில் குறைந்த மதிப்பெண்: மகளை பிச்சை எடுக்க வைத்த தந்தை

மைசூரில் ஒரு தந்தை தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், ஏழாம் வகுப்பு படிக்கும் தன் பெண்ணை கோயில் வாசலில் பிச்சை எடுக்க வைத்துள்ளார். தாய் இல்லாத இந்த பெண் அழுது கொண்டே பிச்சை எடுத்துள்ளார். போலிசுக்கு தகவல் தெரிந்து கைதான தந்தை இப்போது அவளை தன்னுடன் சேர்த்து கொள்ள மறுக்கிறாராம் ! வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் என உணர்த்தவே இப்படி செய்ததாக சொல்கிறாராம் அவர். படிப்பின் பேரில் நம் குழந்தைகளை எவ்வளவு படுத்துகிறோம் பாருங்கள் ! நம் கல்வி முறை மாற வேண்டியது எத்தனை அவசியம் என இன்னும் ஒரு முறை நமக்கு சொல்கிறது இந்த நிகழ்ச்சி. கூடவே நம் குழந்தைகள் மேல் நாம் செலுத்தும் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் தான் !

இது குறித்த பத்திரிக்கை செய்தி இங்கே

கையை சுட்டு கொண்ட எழுத்தாளர்

சமீபத்தில் பிரபல எழுத்தாளர் ஒருவர் செமையாக கையை சுட்டு கொண்டார். ஏதோ புத்தகம் போட்டு சரியாக விற்காமல் கையை சுட்டு கொண்டார் என நினைத்தீர்களா? அது தான் இல்லை. அவர் வீட்டு அடுப்படியில் தான் இது நடந்தது ! மனைவி வாணலியில் காய்கறி சமைத்து அடுப்பை ஆப் செய்திருக்க, இந்த எழுத்தாளர் பிடி துணி வைத்து தான் இறக்கினார். ஆனால் மெல்லிய துணி என்பதாலோ என்னவோ கை நன்றாக சுட்டு கொப்பளம் வந்து விட்டது. இதை காரணம் காட்டி அடுத்த இரு நாள் வீட்டில் வேலை செய்யாமல் ஓ. பி அடித்தார். அலுவலகத்தில் கையெழுத்து போட ஒரு பெரிய பண்டில் வர, "இருநூறு முன்னூறு கையெழுத்தெல்லாம் ரெண்டு நாள் வரை போட முடியாது; கையில் கொப்பளம் வந்துடுச்சு" என பந்தா காட்டினார். பொறுத்து பொறுத்து பார்த்த அவர் மனைவி, " தினம் எத்தனையோ தடவை சூடு வாங்கிட்டு தான் சமைக்கிறேன். சீன் போடாம வேலையை பாருங்க" என்றதும் " நீ சொன்னா சரிதான் " என்று பம்மியபடி மீண்டும் வேலையில் குதித்தார்.

இந்த புகழ் பெற்ற எழுத்தாளர் யார் என்பது சஸ்பென்ஸ். :)))
*****************
டிஸ்கி: 1.  கோடை விடுமுறையை முன்னிட்டு, வீடுதிரும்பல் வாசிப்போர் பயன்பெறும் வகையில் மே மாதம் முடியும் வரை அனைத்து வெள்ளிகிழமைகளும் வெவ்வேறு ஊர்களின் பயண கட்டுரை வெளியாகும் !

டிஸ்கி 2. நேற்றைய பதிவு:  அஜூ என்கிற பியூட்டிபாய்

39 comments:

  1. நாம் சப்போர்ட் செய்யும் டீம் தோற்பது பற்றி வருத்தம் எனக்கும் உண்டு! :)))) இது சம்பந்தமாய் தினமணியில் வந்த மதியின் கார்ட்டூன் அபாரம், பிரமாதம். மதியின் கார்ட்டூன்கள் ரொம்பவே ரசிக்க வைக்கின்றன.

    ReplyDelete
  2. ஹெ ஹெ நடத்துங்கோ

    ReplyDelete
  3. 'ஒரு போட்டியில் அய்யாசாமியையும் மாட்டி விட்டனர்.' அய்யாசாமி வெற்றியா,தோல்வியா?

    ReplyDelete
  4. இந்த புகழ் பெற்ற எழுத்தாளர் யார் என்பது சஸ்பென்ஸ். :)))

    Please tell me .. I cant bear the suspense :)

    ReplyDelete
  5. //நம்மை பார்த்து கெட்டு போனவர்கள்//

    ஹும்ம்ம்...நடக்கட்டும் நாசவேலைகள் :))

    /தேர்வில் குறைந்த மதிப்பெண்: மகளை பிச்சை எடுக்க வைத்த தந்தை//

    மதிப்பெண்..மதிப்பெண்...மதிப்பெண்...வாழ்க்கையில் 22 வயது வரை இதை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும் என்பதுதான் நம் கல்விமுறையின் ஐடியாலஜி :(

    //" நீ சொன்னா சரிதான் " என்று பம்மியபடி மீண்டும் வேலையில் குதித்தார். //

    திருமணமான எல்லா ஆண்களுக்கும் பொருந்துகிற global line இது :))

    ReplyDelete
  6. பாடல் நன்றாக இருந்தது. இதற்கு முன் நான் கேட்டது இல்லை.

    அந்த எழுத்தாளர் யார் சார்......சஸ்பென்ஸ் தாங்கல.....

    கோடை விடுமுறை பதிவுகளை காண ஆவலாய் காத்துள்ளோம்.

    ReplyDelete
  7. //இன்னிக்கு நைட்டு நீயா நானா சுவாரஸ்யமான டாபிக்..." மாமியார் Vs மருமகள்"!. கல்யாணமான அனைவரும் பார்த்து மகிழலாம்.. பார்க்கும் போது நமட்டு சிரிப்புடன், மேலே வேறு ஏதும் கமெண்ட் அடிக்காமல் பார்ப்பது இல்லற வாழ்வுக்கு நல்லது//

    இன்னிக்கா? எத்தனை மணிக்கு பாஸ்?

    ReplyDelete
  8. அய்யாசாமி - ஒரே வானவில்லில் இரு முறை இன்று.... :)))

    பிச்சை எடுக்க வைத்த அப்பா... :(((

    வானவில் நன்றாக இருக்கிறது......

    ReplyDelete
  9. சார். உங்கள் வானவில்லை இப்போதுதான் முதன்முதலில் பார்க்கிறேன். அத்தனை பகுதிகளும் அசத்தல். வானவில்லின் அத்தனை நிறங்களும் கண்ணைப் பறிக்கிறது. மகளை பிச்சை எடுக்க வைத்த தந்தை செய்தி மனதை கனக்கச் செய்கிறது. உங்கள் நண்பரின் தளத்தை உடனடியாகப் பார்க்கிறேன். நன்றி!

    ReplyDelete
  10. //தந்தை இப்போது அவளை தன்னுடன் சேர்த்து கொள்ள மறுக்கிறாராம்//

    என்ன கொடுமை:((!

    /மீண்டும் வேலையில் குதித்த/ எழுத்தாளருக்கு கை நல்லாவே சரியாகி விட்டதை நிரூபிக்கிறது அவர் தட்டச்சு செய்த பதிவு:)! இனி கவனமாக இருப்பார் என நம்புகிறேன்.

    ReplyDelete
  11. அரிய தகவல்கள்.
    அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. அனைத்து பகுதிகளும் அருமை ! பாராட்டுக்கள் !

    ReplyDelete
  13. அய்யாசாமிதான் 'Gymboy' ஆச்சே.. அப்புறமென்ன :-)

    ReplyDelete
  14. . படிப்பின் பேரில் நம் குழந்தைகளை எவ்வளவு படுத்துகிறோம்.

    குழந்தைகள் மீது வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்..

    ReplyDelete
  15. அனைத்துப் பகுதிகளின் பகிர்வுகளும் ரசிக்கவைத்தன..

    புகழ் பெற்ற எழுத்தாளருக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  16. // ஒவ்வொரு நிறுவனத்திலும் HR-ல் ஒரு டீமே இத்தகைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகள் செய்து வருகின்றன.//

    சில கம்பனிகளில் HR ருக்கு இது தான் வேலையே..

    ReplyDelete
  17. // கையை சுட்டு கொண்ட எழுத்தாளர் //

    நம்ப வீடு திரும்பல் மோகன் குமாரோ ?

    ReplyDelete
  18. குழந்தை ஜோக்...!சூப்பர்!
    பிச்சை எடுக்க வைத்த தந்தை அவர் தந்தையல்ல வேறு ஒரு ஜீவராசி!

    ReplyDelete
  19. //பவர் கட் பற்றி எங்கோ வாசித்த ஒரு ஜோக்:
    பிறந்த குழந்தை கண்ணு முழிச்சு கேட்டுதாம்: கரண்டு இருக்கா? //

    பதிலே வரலையாம்..
    "அப்பாடா தமிழ்ட்டுல பிறக்கல' -- நிம்மதி வந்திச்சாம் குழந்தைக்கு..

    எப்படி தெரியுமா ?

    ReplyDelete
  20. ஸ்ரீராம்: நன்றி மதியின் கார்ட்டூன் பார்க்கலை.
    ***

    ReplyDelete
  21. விக்கி: :))
    ***

    ReplyDelete
  22. உமா: அய்யாசாமியை நம்புறீங்களே :)) அவர் போய் ஜெயிப்பாரா?
    ***

    ReplyDelete
  23. ரிஷபன்: சார். தெரிஞ்சிக்கிட்டே கேக்குறீங்களே:))
    ***

    ReplyDelete
  24. ரகு : நன்றி
    ***

    ReplyDelete
  25. கோவை2தில்லி said...

    அந்த எழுத்தாளர் யார் சார்......சஸ்பென்ஸ் தாங்கல.....

    ****

    கோவை2தில்லி வானவில் படிக்காத மாதிரி கேக்குறீங்களே :))


    ***

    ReplyDelete
  26. ஹாலிவுட் ரசிகன்: முன்பே வந்த நிகழ்ச்சி அது

    ***

    ReplyDelete
  27. வெங்கட் நாகராஜ் said...

    அய்யாசாமி - ஒரே வானவில்லில் இரு முறை இன்று.... :)))

    ஹிஹி
    ****

    ReplyDelete
  28. துரைடேனியல் சார்: தங்கள் மனம் திறந்த பாராட்டு மிக மகிழ்ச்சி தருகிறது

    ReplyDelete
  29. ராமலக்ஷ்மி said...

    /மீண்டும் வேலையில் குதித்த/ எழுத்தாளருக்கு கை நல்லாவே சரியாகி விட்டதை நிரூபிக்கிறது அவர் தட்டச்சு செய்த பதிவு:)! இனி கவனமாக இருப்பார் என நம்புகிறேன்.

    **
    தங்கள் அக்கறைக்கு நன்றி. கை சரியாகி விட்டதாக எழுத்தாளர் சொன்னார். :))

    ReplyDelete
  30. ரத்னவேல் நடராசன்: நன்றி சார்
    **

    ReplyDelete
  31. தனபாலன்: மகிழ்ச்சி நன்றி
    **

    ReplyDelete
  32. மரா : வாங்க சார். ஜிம் பாயா? இருபது தண்டால் எடுக்கறதுக்குள் நாக்கு தள்ளிடுச்சு உங்க ஆளுக்கு
    **

    ReplyDelete
  33. இராஜராஜேஸ்வரி said...

    . படிப்பின் பேரில் நம் குழந்தைகளை எவ்வளவு படுத்துகிறோம்.குழந்தைகள் மீது வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்..
    ****
    உண்மை நன்றி

    ReplyDelete
  34. ஆதி மனிதன் said...

    சில கம்பனிகளில் HR ருக்கு இது தான் வேலையே..

    ***
    ஆம். நன்றி

    ReplyDelete
  35. விஸ்வநாத் said...

    // கையை சுட்டு கொண்ட எழுத்தாளர் // நம்ப வீடு திரும்பல் மோகன் குமாரோ ?

    **
    ஹி ஹி

    ReplyDelete
  36. சுரேஷ்: நன்றி

    ReplyDelete
  37. மாதவா : தெரியலை. நீங்களே சொல்லுங்கள்

    ReplyDelete
  38. ஹி.. ஹி.... அந்த நர்ஸுக்கு தமிழ் தெரியாது.. (அப்ப, பெரும்பாலும் அது தமிழ்நாடா இருக்க சான்ஸ் கம்மிதான... அதான்..)

    [I got this idea while reading the joke on ur page here.]---நாங்களும் யோசிப்போமில்ல.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...