Tuesday, April 17, 2012

ஷாக் அடிக்கும் உங்க புது EB பில் எவ்வளவு என தெரியணுமா?


ல வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் EB பில் அதிகரிக்க பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டது பற்றி சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது முதலமைச்சர் இப்படி சொன்னார் " TNERC என்கிற அமைப்பு தான் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. தமிழக அரசு அல்ல. எனவே நாங்கள் ஏதும் செய்ய முடியாது" இதை சொன்ன அடுத்த இரு நாட்களில் முதல்வர் மின் கட்டணம் குறைக்கப்படுகிறது என அறிவிக்கிறார். உயர்த்துவது மட்டும் TNERC ஆம். குறைப்பது தமிழக முதல்வராம் !

சரி புது Tariff என்ன என்று பார்ப்போம் 

இது தமிழக அரசு முதலில் அறிவித்த மின் கட்டண Tariff:


பிரிவு :1 : up to 100 - 0 to 100 Rs.1 .10

பிரிவு :2 : up to 200 - 0 to 200 Rs.1.8

பிரிவு :3 : up to 500 - 0 to 200 Rs.Rs.3 and 201 to 500 Rs.3 .50

பிரிவு :4 : Above 500 - 0 to 200 Rs.3 and 201 to 500 Rs.4 and 501 and above Rs.5.75


இது பின்னர் குறைத்து அறிவிக்கப்பட்ட Tariff

பிரிவு :1 : up to 100 - 0 to 100 Rs.1

பிரிவு :2 : up to 200 - 0 to 200 Rs.1.5

பிரிவு :3 : up to 500 - 0 to 200 Rs.Rs.2 and 201 to 500 Rs.3

பிரிவு :4 : Above 500 - 0 to 200 Rs.3 and 201 to 500 Rs.4 and 501 and above Rs.5.75


இந்த புது Tariff-ன் படி
உங்கள் வீட்டில் 100  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 100 என வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.65 )

200  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 300 வரும்.(இதற்கு முன் கட்டிய   பில் ரூ.220 )

300  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 700 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.440 )

400  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 1000 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.660 )

500  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 1300 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.880 )
***
இனி தான் இருக்கு நிஜ ஷாக். நாம் EB  பில் கட்டுவது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை. எனவே நம்மில் பலர் வீட்டுக்கு ஒவ்வொரு இரு மாதமும் யூனிட்டுகள் ஐந்நூறுக்கு மேல் தான் வரும். இந்த Category-க்கு விலை உயர்வில் எவ்வித சலுகையும் செய்யப்பட வில்லை ! மின் கட்டணம் குறைக்கப்படவில்லை. 

இவர்களின் பில்லை பாருங்கள் :

600  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 2375 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.1100 )

700  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 2950 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.1500 )

800  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 3525 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.1900 )

900  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 4100 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.2300 )
***
எங்கள் வீட்டை எடுத்து கொள்ளுங்கள் நாங்கள் சராசரியாக  அறுநூறு  யூனிட் செலவு செய்கிறோம். இதுவரை ரூபாய் 1100 -ஆக இருந்தது எங்கள் பில். இப்போது அது 2375  ஆக இருக்கும் ! 100 % க்கும் மேல் !

இத்தனைக்கும் மூன்றே பேர் இருக்கிறோம் என்பதோடு, ஒரு ஏ. சி அதுவும் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஓடுவதில்லை. சற்றே பெரிய குடும்பம் எனில் எவ்வளவு யூனிட் ஓடும் என எண்ணி பாருங்கள் !

இதை விட கொடுமை 490 யூனிட் உபயோகிப்பவருக்கும், 501 யூனிட் உபயோகிப்பவருக்கும் உள்ள வித்யாசம் !

490 யூனிட் உபயோகிப்பவர் பில் : 1270

அதை விட பத்து யூனிட் அதிகமாக, 501 யூனிட் உபயோகிப்பவர் பில் : 1804 !! இன்னும் சொல்ல வேண்டுமானால், 500 லிருந்து 501 ஆனாலே, ஒரு யூனிட் உயர்வுக்கு குறைந்தது ஐநூறு ரூபாய்க்கு மேல் அதிகம் கட்ட வேண்டும் !!

மக்களை மிக மோசமாய் discriminate செய்வதற்காக  ஏன் இன்னும் உயர் நீதி மன்றத்தில் யாரும் பொது நல வழக்கு தொடராமல் உள்ளனரோ தெரியவில்லை.

எனக்கு தெரிந்த வரை உங்களில் பலரின் யூனிட்டுகள் 500-க்கு மேல் தான் இருக்கும். உங்கள் வீட்டில் ரெண்டு பெட்ரூம், ஒரு பிரிட்ஜ், ஒரு டிவி, ஒரு ஏ. சி இருந்தால் உங்கள் வீட்டில் யூனிட்டுகள் 500-க்கு மேல் எளிதில் வந்து விடும் ! நான் சொன்ன வீட்டு உபயோக பொருட்கள் சாதாரண மிடில் கிளாஸ் வீட்டில் இருக்க கூடிய விஷயங்களே !

இந்நிலையில் எப்படி தான் முதல்வர் வெறும் 30 % தான் மின்கட்டண உயர்வு என்கிறாரோ? பில் கட்டுவோர் அதே EB கார்டை தான், எடுத்து செல்ல போகின்றனர். அப்போது சென்ற மாதங்களுக்கும் இம்முறைக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிட மாட்டார்களா?

எனக்கு தெரிந்த வரை இதுவரை யாரும் தங்களுக்கு என்ன அளவு பில் வரும் என தீவிரமாய் கணக்கு பார்க்க வில்லை ! அப்படி செய்தால் தான் அவர்களுக்கு ஷாக் அடிக்கும் !! உங்கள் வீட்டுக்கு எவ்வளவு யூனிட் வழக்கமாய் வரும் என்பதை பார்த்து உங்களுக்கு நீங்கள் கணக்கிட்டு பாருங்கள் !

இன்னொரு முக்கிய விஷயம். ஏப்ரல் முதல் தான் இந்த மின் உயர்வு அமலில் வந்துள்ளது. உங்களுக்கு மார்ச், ஏப்ரல் இரு மாதங்களுக்கான பில்லை பார்த்தால் முழு பாதிப்பும் தெரியாது. காரணம் மார்ச் மாதம் பழைய ரேட்டும், ஏப்ரல் புது ரேட்டிலும் இருக்கும். அடுத்த சைக்கிள் வரும்போது தான் அதன் முழு effect தெரியும் !

எனக்கு தெரிந்து நண்பர்கள் பலரின் வீட்டில் (குறைந்தது பத்துக்கு இருவர்!) ஈ. பி மீட்டர் வேலை செய்வதில்லை. அவர்கள் மினிமம் பில் தான் எப்போதும் கட்டுகிறார்கள். இவர்கள் இதனால் ஏ. சி போன்றவற்றை நிறுத்தாமல் ஓட்டுகிறார்கள். இரு மாதத்துக்கு ஒரு முறை கரண்ட் பில் எழுத வருபவர் இந்த மீட்டர்களை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 

போலவே ஆட்சி எதுவாயினும் ஒவ்வொரு அரசியல் மீட்டிங், கோயில் விழா இவற்றுக்கு தெரு முழுதும் வண்ண விளக்குகள் போட்டு அமர்க்கள படுத்துகின்றனர். அனைத்தும் திருட்டு கரண்ட் !

இப்படி ஓடாத ஈ. பி மீட்டரை சரி செய்து, மின் திருட்டையும் சரி செய்தாலே அரசுக்கு ஏராளமாய் வருமானம் வரும். ஆனால் அரசு இவ்விஷயத்தில் திருடர்களை விட்டு விட்டு, ஒழுங்காய் பில் கட்டுவோரை தான் தண்டிக்கும் !

மொத்தத்தில் : உங்கள் வீட்டு பில் 500 யூனிட்டுக்கு மேல் போகாத படி பார்த்து கொள்ளுங்கள். எப்படி என கேட்காதீர்கள். சிரமம் தான் ! இல்லை எனில் உங்கள் பட்ஜெட்டில் சில ஆயிரங்களை எக்ஸ்ட்ராவாக மின் கட்டணத்துக்கு தயார் செய்து வைத்து கொள்ளுங்கள் !

33 comments:

  1. எனக்கு தெரிந்து நண்பர்கள் பலரின் வீட்டில் (குறைந்தது பத்துக்கு இருவர்!) ஈ. பி மீட்டர் வேலை செய்வதில்லை. அவர்கள் மினிமம் பில் தான் எப்போதும் கட்டுகிறார்கள். இவர்கள் இதனால் ஏ. சி போன்றவற்றை நிறுத்தாமல் ஓட்டுகிறார்கள். இரு மாதத்துக்கு ஒரு முறை கரண்ட் பில் எழுத வருபவர் இந்த மீட்டர்களை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    Good suggestion

    ReplyDelete
  2. இப்படி ஓடாத ஈ. பி மீட்டரை சரி செய்து, மின் திருட்டையும் சரி செய்தாலே அரசுக்கு ஏராளமாய் வருமானம் வரும். ஆனால் அரசு இவ்விஷயத்தில் திருடர்களை விட்டு விட்டு, ஒழுங்காய் பில் கட்டுவோரை தான் தண்டிக்கும் !

    Good suggestion !

    ReplyDelete
  3. பயமுறுத்திப் போகும் பதிவானாலும்
    அனைவரும் அவசிய்ம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
    முழுமையாக அடங்கிய பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. //இந்நிலையில் எப்படி தான் முதல்வர் வெறும் 30 % தான் மின்கட்டண உயர்வு என்கிறாரோ?//

    அவருக்கு என்னங்க? அவர் ஒரு ருபாய் சம்பளம் வாங்கி 100 கோடிக்கு வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்து வைத்தவர். அவருக்கு எங்கே ஏழைங்க (நம்மை போல பணக்காரவுங்க - ஆமா, மாசத்துக்கு மூவாயிரம் ரூபா E . B . பில் கட்டுனா நம்ம எல்லோரும் பணக்காரவங்க தானே) கஷ்டம் தெரிய போவுது.

    ஆமா, போயஸ் கார்டனுக்கு யாரு E . B . பில் கட்டுறா? அவுங்க வீட்டுக்கு எவ்வளவு கரண்ட்டு பில்லு வருதுன்னு யாராவது RTI போட்டு கேட்டா நல்லா இருக்கும்.

    இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் 10-15 % கரண்ட் ட்ரான்ஸ்மிஷன் ஆகும் போது கசிவினால் வீணாகிறது. இது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகம். கரண்ட் ட்ரான்ஸ்மிஷனில் லேடஸ்ட் தொழில் நுட்பம் கொண்டு வந்து வீணாக போகும் அந்த சதிவிகதத்தை குறைத்தாலே போதும். தற்போதுள்ள மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற்று விடலாம்.

    ReplyDelete
  5. I found some fundamental errors in your calculations..

    I am sure, if they say the tariff rate unit-range(eg. Rs.2 for 0-200 units) / month .. then in bi-monthly bill the range of the units will also get doubled ie up to 400 units Rs. 2 will be charged.

    This kind of calculation I have seen in Gujarat, AP.

    Secondly I do not understand how for a customer using 490 units and 501 units will have a huge difference in bill. At the most the 501 unit consumer will pay for the prescribed 500+ slab only for the excess 1 unit.

    clarification please..!!

    ReplyDelete
  6. Can anyone ready to accept that the reason this power tariff hike looks very steep because the rates were not hiked in spite of rocketing other commodities price in the past several years.

    If they had levied reasonable hike at appropriate times, we may not feel this as a huge burden now.

    Say for Eg. when I was in GJ (till 2009) I paid almost an average of Rs.4/ unit. ie my consumption / month was nearly 150 units and I paid almost Rs.600 a month. Compare this rate with TN rates in 2009.
    (So GJ rate --Rs.1200 for nearly 300 units in a bi-monthly bill which is really higher compared to the new tariff in TN which is almost Rs.700 only -- here one to one comparison)

    Now I am in Andhara. (last 3 years.) Here I am paying almost Rs.450 to 500 per month for an average 150 to 160 units of consumption per month. (monthly bill)
    This means bi-monthly nearly 320 units and Rs 900 to 1000 I pay.. compared to the NEW tariff in TN which amounts to Rs.700 only)

    Still TN has cheaper power tariff.

    In GJ.. they pay more -- even farmers do not get FREE POWER -- but they get uninterrupted service.

    Here in TN.. everything if FREE... due to political vote bank reasons.

    I believe if Govt. removes all Freebies including FREE power to farmers.. will majority accept that? Then I am sure they also should get uninterrupted power supply....

    My point is to attack the problem at the core.. which is FREEbees in this most cases.


    --- You have good and bad everywhere ---

    ReplyDelete
  7. //இப்படி ஓடாத ஈ. பி மீட்டரை சரி செய்து, மின் திருட்டையும் சரி செய்தாலே அரசுக்கு ஏராளமாய் வருமானம் வரும். ஆனால் அரசு இவ்விஷயத்தில் திருடர்களை விட்டு விட்டு, ஒழுங்காய் பில் கட்டுவோரை தான் தண்டிக்கும் ! //

    Rightly said.. I agree with the author that huge amount of power is wasted in terms of 'power theft' -- 'temple/political functions' etc but putting the burden on genuine consumers ( who pay promptly)

    ReplyDelete
  8. I read this comment from this news item

    -- quotes text begins --
    Common man can spend money on flashy cell phones, multiplexes..etc and when it comes to bus, milk and electricity, they would expect it to be given free of cost.

    This is utter rubbish. People are paying taxes not for others to have a free lunch but to improve on the facilities offered. If somebody has the luxury to buy to fridge, mixie, fan, grinder, AC, washing machine..etc by spending close to 1 lakh, they should not suffer spending 1000 or 2000 on electricity.

    we can spend 10 lakh to buy a premier car but will yell when there is 2 or 3 rupees hike in petrol prices.

    If you cannot afford, why do you need the luxury. Go in city bus, stick to electric fan and washing clothes yourself.
    from: vijay
    Posted on: Apr 3, 2012 at 14:11 IST
    -- quotes text ends ----

    ReplyDelete
  9. ஹ்ம்ம்...வருங்கால அ.தி.மு.க.கொ.ப.செ. மாதவனுக்கு ஒரு 'ஒ' போடுங்க....

    ReplyDelete
  10. மாதவா, இன்கம் டேக்சுக்கு உள்ள மாதிரி ஸ்லாப் அல்ல இது. நீங்கள் எந்த ஸ்லாபில் வருகிறீர்கள் என்பதை
    பொறுத்து முதல் யூனிட்டில் இருந்தே உங்களுக்கான சார்ஜ் முழுவதும் மாறும்.

    500 யூனிட் வரை ஸ்லாப் இது :

    பிரிவு :3 : up to 500 - 0 to 200 Rs.Rs.2 and 201 to 500 Rs.3
    இதன்படி 500 யூனிட்டுக்கு

    First 200 units: 200 * 2 = 400
    Next 300 units: 300 * 3 = 900

    Total Rs. 1,300

    501 யூனிட்டுக்கான ஸ்லாப் இது :

    பிரிவு :4 : Above 500 - 0 to 200 Rs.3 and 201 to 500 Rs.4 and 501 and above Rs.5.75

    இதன்படி 501 யூனிட்டுக்கு

    First 200 units: 200 * 3 = 600
    Next 300 units: 300 * 4 = 1200
    Next 1 unit 5.75
    Total Rs. 1,805.75

    ஆக 500-லிருந்து 501 ஆனதும் குறைந்தது ஐநூறு ரூபாய் உயர்கிறது என்று சொன்ன கணக்கு சரி தானே?

    ஸ்லாபை பார்த்து விட்டு நான் சொல்லிய கணக்குகளை பார்க்கவும் ! அதில் தவறிருந்தால் சொல்க !

    ReplyDelete
  11. Firstly I am sorry Mohan for my misinterpretation.

    It's not fair to have different set of slabs for diff. total unit consumption.. that too for two months. (unlike IT slab)

    Obviously 90 % of the consumers will consume not less than 400 units in a two-months (with the kind of machinery life we live in) ---

    @ Athimanithan...ஒருவேளை நா தேர்தல்ல கலந்திகிட்டா... (49)ஓ போட்டுடாதீங்க.. ஒட்டு போடுங்க..

    இருந்தாலும்.. குஜராத் மாதிரி 'இலவசங்கள்' இல்லாம ஒரு ஆட்சிய நா சப்போர்ட் பண்ணதப் படிச்சும் என்னை அ.தி.மு.க கொ.ப.செ. சொன்னீங்க பாருங்க.. உங்களுக்கு எம்மேல எவ்ளோ அக்கறை... :-)

    ReplyDelete
  12. தகவல்கள் நிறைய தந்திருக்கீங்க.

    இங்கெல்லாம் நிறையவே பில் கட்டிக் கொண்டு இருக்கிறோம். திருட்டுக் கரண்ட் நிறைய பேர் எடுப்பாங்க. குடிசையில் கூட எல்லா வித வசதிகளும் வைத்திருப்பாங்க. மீட்டரே கிடையாது அவங்களுக்கு. நாம பில் கட்டணும்.

    ReplyDelete
  13. பகலில் தேவை இல்லாமல் எரியும் வீதி மின் விளக்குகள் .மின் திருட்டு, இலவசங்கள்... இப்படி பல அநாவசிய இழப்பீடுகளுக்கு அப்பாவி தமிழர்களின் சம்பளத்தை பிடுங்குகிறார்கள்.

    ReplyDelete
  14. ரிஷபன் சார்: நன்றி

    ReplyDelete
  15. ரமணி : மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  16. விரிவான தங்கள் அனுபவ பகிர்வுக்கு நன்றி ஆதி மனிதன். கரண்ட் லீக்கேஜ் பற்றி நீங்கள் சொன்னது valid பாயின்ட்

    ReplyDelete
  17. மாதவா: ஆம் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை எனும்போது அதிகமான ஸ்லாபில் பணம் கட்ட வேண்டி வரும். மற்ற மாநிலங்களில் மாதா மாதம் கட்டும் முறை உள்ளது

    ReplyDelete
  18. கோவை2தில்லி நன்றி மேடம்

    ReplyDelete
  19. கலகுமரன் : உண்மை தான் நன்றி

    ReplyDelete
  20. நல்ல ஆலோசனையுடன் கூடிய தகவல்கள்.

    கர்நாடகத்தில் எப்போதும் அதிகம்தான்.

    ReplyDelete
  21. நிஜம் தான்.
    மின்சார செலவை குறைத்துக் கொண்டோம்.
    நன்றி.

    ReplyDelete
  22. மின்சார கட்டணம் பற்றிய திரு மோகன் குமார் அவர்களின் அருமையான பதிவு. ஆழ்ந்து படித்துப் பாருங்கள். இன்றேல் இரண்டு மாதங்கள் கழித்து ஷாக் அடிக்கும்.

    ReplyDelete
  23. //எனக்கு தெரிந்த வரை இதுவரை யாரும் தங்களுக்கு என்ன அளவு பில் வரும் என தீவிரமாய் கணக்கு பார்க்க வில்லை ! //

    //எனக்கு தெரிந்து நண்பர்கள் பலரின் வீட்டில் (குறைந்தது பத்துக்கு இருவர்!) ஈ. பி மீட்டர் வேலை செய்வதில்லை. அவர்கள் மினிமம் பில் தான் எப்போதும் கட்டுகிறார்கள்.//

    இரண்டும் யதார்த்தம்.

    ஷாக்கிலிருந்து தப்பிக்க மின்சார சிக்கனம் மட்டுமே சரியான தீர்வு.

    நல்ல பதிவு!

    ReplyDelete
  24. மின்தட்டுப்பாடு நீங்கும் வரை வெளிமாநிலங்களில் தரப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் உயர்‌த்தக்கூடாது என முதல்வர் ஜெ. பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். வெளிமாநிலங்களிலிருந்து பெறப்படும் மின்சாரம் அவசர காலத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கு கட்டணம் கூடுதலாக யூனிட்டிற்கு 27 பைசா வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.இது ‌குறித்து முதல்வர் ஜெயலலிதா , பிரதமருக்கு எழுதியுள்ள கடித்தத்தில், வெளிமாநிலங்களிலிருந்து பெறப்படும் மி்ன்சாரத்திற்கு மினகட்டண உயர்வு கூடாது என கூறியுள்ளார். ஜெவுக்கு நம்ம மேல எவ்வளவு அக்கறை பார்த்தீங்களா ?
    இதே கடந்த இல் திமுக ஆட்சியில் யூனிட்களுக்கு மேல் பயன் படுத்துவோருக்கு ஒரு ரூபாய் அதிகரித்ததுக்கு
    கொக்கரித்தவர் இந்த ஜெ . மின் சாரமே இல்லை மின் கட்டண உயர்வா என்று ? அப்போ மின்தடை இரண்டு மணி நேரம் மட்டுமே ... இப்போ பன்னிரண்டு மணி நேர மின்தடை ... அதாவது ஒரு மாதம் கரண்ட் தருவார்கள் இரண்டு மாதத்திற்கான கட்டணத்தை செலுத்தவேண்டும் !

    ReplyDelete
  25. இது எப்படி discrimination ஆகும் என்று தெரியவில்லையே? உபயோகப்படிக்கேற்றவாறு பணம் கட்டச்சொல்வதில் தவறில்லையே? கட்டணம் அதிகமா என்பது சர்ச்சைக்குரியதாக இருக்கலாம்.

    //ரெண்டு பெட்ரூம், ஒரு பிரிட்ஜ், ஒரு டிவி, ஒரு ஏ.சி இருந்தால் உங்கள் வீட்டில் யூனிட்டுகள் 500-க்கு மேல்// - இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்றாலும் மிக அதிகம் போல் தோன்றுகிறது.

    //500 யூனிட்டுக்கு மேல் போகாத படி பார்த்து கொள்ளுங்கள். எப்படி என கேட்காதீர்கள்// வீட்டில் இருக்கும் மின் பொருட்களின் மின்சார intake வைத்து இதை சுலபமாக (?) கணக்கிட முடியும். இதற்கான கருவிகள் ritchie streetல் கிடைக்கும் (தெரு இன்னும் இருக்கிறதோ?).

    விவரங்களுடன் கூடிய பதிவு. smart.

    ReplyDelete
  26. வீட்டில் இருக்கும் மின் பொருட்களின் மின்சார intake வைத்து தினம்/வாரம்/மாதம் எத்தனை யூனிட் பிடிக்கும் என்று கணக்கிட RVS மாதிரி "படிச்ச" ஆசாமிங்க ஒரு software program எழுதி ப்லாக்ல போடலாம்.

    ReplyDelete
  27. இல்லே இங்கேயும் தெரிஞ்சுக்கலாம்.


    url: http://www.consumerspower.org/home_energy/billestimator.php

    ReplyDelete
  28. ஷாக் அடித்தாலும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  29. நல்ல தகவல்..... சாதாரண மக்கள் எப்படி வாழ்வது என்பதுதான் தெரியவில்லை. அதற்
    கு எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete
  30. நல்ல தகவல்..... சாதாரண மக்கள் எப்படி வாழ்வது என்பதுதான் தெரியவில்லை. அதற்
    கு எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete
  31. இப்போதுதான் போய் எழுதிக் கொண்டு வந்தோம். 2789க்கு வந்திருக்கிறது.
    இது ஏப்ரில். மே, ஜூனை நினைத்தால் பயம் அதிகரிக்கிறது. விருந்தாளிகளும் வந்துவிட்டால் கொண்டாட்டம் தான்.
    மிக மிக நன்றி .நல்ல பகிர்வு. எங்கள் மீட்டரைச் சரி செய்து விட்டார்கள்.
    அதற்கும் 1500 செலவு.

    ReplyDelete
  32. //எனக்கு தெரிந்து நண்பர்கள் பலரின் வீட்டில் (குறைந்தது பத்துக்கு இருவர்!) ஈ. பி மீட்டர் வேலை செய்வதில்லை.//

    சமீபத்தில் கேள்விப்பட்டேன். சிலர் வீடுகளில் ஈ.பி. மீட்டரை நிறுத்த என்று ஒரு ஸ்விட்ச் வீட்டினுள் ஏதோ ஒரு அறையில் வைத்திருப்பார்களாம். ஆஃப் செய்தால் மீட்டர் ஓடாதாம்!! ரீடிங் எடுக்க வரும் நாட்களின்போது மட்டும் அதை ஆன் செய்வார்களாம். பல எலெக்ட்ரீஷியன்கள் இதைச் (ஸ்விட்ச்) செய்து தருவதில் வல்லவர்களாம். எப்பிடிலாம் ஏமாத்துறாங்கப்பா...

    இது இன்று நேற்று உருவான டெக்னாலஜி இல்லியாம்... பல்லாண்டுகளுக்கு முன்பே உண்டாம்!! :-((((

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...