ஜெயா டிவியில் ஆட்டோகிராப்
ஜெயா டிவி நிகழ்ச்சியின் ஆட்டோகிராபில் மிக பெரும் வெற்றி இயக்குனரான எஸ். பி.முத்துராமன் வந்து பேசினார். ரஜினி, கமலின் பல ஹிட் படங்களின் இயக்குனர். ஏ. வி. எம் முக்கு ஆஸ்தான இயக்குனர். இவரை பல வருடம் முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சந்தித்து பேசினோம். மிக எளிமையானவர். நாங்கள் கேட்டே கேள்விகளுக்கு பொறுமையாய் பதில் தந்தார்.
இந்த நிகழ்ச்சியில் சில படங்களை அவர் ஒரு மாசத்தில் எடுத்து முடித்ததும், மனைவி இறந்த செய்தி வந்த பின் கூட ஷூட்டிங் முடித்து விட்டே வீட்டுக்கு சென்றார் போன்ற தகவல்களும் தெரிய வந்தன.
ரோடு இருக்கு; பார்க்கு இருக்கு
தினமும் காலையில் விஜய் டிவியிலும் அப்புறம் ராஜ் உள்ளிட்ட பிற டிவிக்களிலும் ரியல் எஸ்டேட் காரர்கள் நிலத்தை விற்க விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் போடுறாங்க. பாத்துருக்கீங்களா? ஊரில உள்ள பல சின்னத்திரை நட்சத்திரங்களையும் கூட்டி வந்து " இதை விட சிறந்த இடம்; சீப்பான இடம் உலகிலேயே இல்லை" என பேச வைப்பாங்க. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் பார்த்தா அடுத்து இன்னொரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும். அதிலும் அதே ஆட்கள் வந்து " இது தான் சிறந்த இடம்; மறக்காம வாங்குங்க" அப்படின்னு சொல்லுவாங்க !
ரோடு இருக்கு; பார்க்கு இருக்கு என சொன்னாலும் அவையெல்லாம் ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட செட்டிங் என்பது நன்கு தெரிகிறது. இது தெரியாமல் எத்தனை பேர் நம்பி வாங்கி ஏமாறுகிறார்களோ !!
சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலை
ராஜ் டிஜிடல் பிளஸ் மற்றும் வின் டிவி உள்ளிட்ட பல சானல்களில் "சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலை " என்று சொல்லி ஒருவர் வந்து பேசோ பேசுன்னு பேசிக்கிட்டிருப்பார். ஒரு முறை என்ன தான் அப்படி சொல்றார்னு பார்த்தேன்.
"இளைஞர்களுக்கு கெட்ட பழக்கம் சொல்லி தருவதே நண்பர்கள் தான். அதனால் நண்பர்களே வச்சிக்காதீங்க (!!!??). உங்களுக்கு 'முடியாம போகும்போது' நண்பர்கள் வந்து உதவி செய்ய போவதில்லை" என்றார் ! மேலும் ஆண்மை குறைவுக்கு ஒரே தீர்வு இந்தியாவிலேயே தங்கள் நிறுவனத்தில் தான் கிடைப்பதாகவும், இளைஞர்கள் நண்பர்களிடம் இது பற்றி பேசாமல் தங்களை வந்து நாடுங்கள் என்றும் சொல்லி கொண்டிருந்தார்.
இளைஞர்கள் மனதில் பயத்தை விதைத்து, அதை வைத்து வியாபாரம் செய்றாங்க ! ஹும் :((
புது நிகழ்ச்சி : ராஜ் டிவியில் கோல்ட் கேசினோ
சுகாசினி நடத்தும் புது நிகழ்ச்சி இது. கவுன் பனேகா க்ரோர்பதி ஸ்டைல் தான். வேறொண்ணும் இல்லை ! பத்து கேள்விகள்.. ஒவ்வொன்றுக்கும் நான்கு ஆப்ஷன்ஸ் தந்து, சரியான விடை தேர்ந்தெடுக்கணும். என்ன ஒன்று தப்பாய் சொன்னாலும் தொடர்ந்து ஆட விடுகிறார்கள். தருமி சொல்ற மாதிரி " எவ்வளவு பிழை இருக்கோ அதற்கு தகுந்த மாதிரி பரிசில் குறைத்து கொள்ளுங்களேன்" தான் !
ஆனால் அதிகப்படியான ரூல்ஸ் சொல்லி குழப்பி தள்றாங்க. முதல்லே தங்க காயின் தருகிறார்கள். கடைசியில் ஜெயித்த பின் கடனை திருப்பி தாங்க என்கிறார்கள். ஒரே குஷ்டமப்பா சே கஷ்டமப்பா !
முரசு, சன் லைப் டிவிக்கள்
சன் மியூசிக் வகை சானல்கள் அநேகமாய் புது பாடல்களையே ஒளிபரப்பும் நிலையில் பழைய பாடல்களுக்கென்றே " முரசு" என ஒரு சானலை துவக்கியது கலைஞர் டிவி குழுமம். பழைய பாடல் விரும்பிகள் அதனை இரு கரம் நீட்டி வரவேற்க, இப்போது சன் டிவியும் சன் லைப் என ஒரு சானலை துவக்கி விட்டது. பழைய பாடல் விரும்பிகளுக்கு இப்போதெல்லாம் கொண்டாட்டம் தான் !
சீரியல் பக்கம் – மண்வாசனை
ராஜ் டிவியில் வெளிவரும் டப் ஆன சீரியல் ! பத்து வயசுக்குள்ளயே கல்யாணம் ஆன ஒரு சிறுமியின் கதை. பெயர் தான் ஆனந்தி. ஆனால் அவள் காண்பதோ அனைத்தும் கஷ்டங்களே ! எல்லாருக்கும் மாமியார் கொடுமை என்றால் இவருக்கு கணவரின் பாட்டி கொடுமை !
நம் வீட்டில் இதை பார்க்கிறாங்க. வீட்டுக்கு வரும்போது இந்த சீரியல் நடந்துகிட்டு இருக்கும். ஒரே அழுகை சத்தமா இருக்கும் ! நான் அங்கிருந்து ஓடிடுவேன்
சூப்பர் சிங்கர் இறுதி போட்டி
ஒய்ல்ட் கார்ட் சென்று சொல்லியே இரண்டு வாரம் இழு இழு என இழுத்து ஆஜித் மற்றும் யாழினி இருவரும் பைனல் செல்வதாக அறிவித்தனர்.
இந்த வாரத்தின் ஹை லைட் அனு என்கிற சிறுமி மற்றும் அவள் தாயுடன் அவர்கள் பாட்டி போனில் பேசியது தான். அனு தாய் காதல் திருமணம் செய்ததால் 19 வருடமாய் பேசாமல் இருந்தவர், விஜய் டிவி முயற்சியால் பேசினார். அப்புறமென்ன ஒரே அழுகை மயம் தான் !
ரக்சிதா பைனல் செல்லாததில் சிறு வருத்தமே. இருப்பினும் எப்படியும் அவள் ஒரு நல்ல பாடகியாக நிச்சயம் வருவாள் என நினைக்கிறேன்.

முரசு - இப்போது தில்லியில் தெரிகிறது.... நிச்சயம் ரசிக்க முடிகிற ஒரு சேனல்....
ReplyDeleteசூப்பர் சிங்கர் அழுகாச்சி.... - நானும் ஒரு சில நிமிடங்கள் பார்த்தேன்....
நல்ல பகிர்வு. த.ம. 2
//அப்புறமென்ன ஒரே அழுகை மயம் தான் !//
ReplyDeleteச்சை...இந்த சேனல் திருந்தவே திருந்தாதா?
//முரசு, சன் லைப் டிவிக்கள்//
எனக்கும் பழைய பாடல்கள் ரொம்ப பிடிக்கும். இரவு தூங்கப்போகும்முன் பி.சுசீலா பாடிய "உன்னை ஒன்று கேட்பேன்" கேட்டு பாருங்கள். தாலாட்டு போல பாடி தூங்கவைப்பார். Unfortunately, Aitelல் இன்னும் இந்த சேனல்கள் வரவில்லை :((
முரசு இப்போ மூன்று நான்கு நாட்களாகத் தான் videocon இல் வருகிறது. நமக்கு அவ்வளவு இன்ட்ரஸ்ட் இல்லாட்டியும், வீட்டுல பார்க்கும்போது அப்பப்போ பாத்துக்கிறது தான்.
ReplyDeleteவிஜய் டீவியில் அந்த அழுகாச்சி எபிசோடை கொஞ்ச நேரம் பார்த்தேன். அப்புறம் வேறு ஆங்கிலச் சேனலுக்கு மாற்றி விட்டேன். டிவி பாக்குறதே சந்தோஷமா ரிலாக்ஸாகத் தான்...அதுலயும் மத்தவங்க அழுறதைப் பார்க்கணுமா? :)
உங்க பக்கம் அப்பப்ப்ப வந்தா டிவி நிகழ்ச்சிகள் அப்டேட் பண்ணிக்கலாம் போல அண்ணே. :-)))
ReplyDelete//19 வருடமாய் பேசாமல் இருந்தவர், விஜய் டிவி முயற்சியால் பேசினார். அப்புறமென்ன ஒரே அழுகை மயம் தான் !//
ReplyDeleteஇத வச்சிதான ஊர எமாத்தரானுங்க. நம்ம ஜனங்களும் அழுதுகிட்டே பாக்குது. கொடுமை!!
//பழைய பாடல் விரும்பிகளுக்கு இப்போதெல்லாம் கொண்டாட்டம் தான் !//
ReplyDeleteஎன் மனைவி கூறுவதென்னவென்றால் பகலில் (குறிப்பாக 10-1) ஒன்று பழைய (pre-75) அல்லது புதிய பாடல்கள் வருகின்றன. 80-களின் பாடல் எதிலுமே வருவதில்லை என்பது தான். சீரியல் பார்பதில்லை என்பதால் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்யலாம் என்றால் முடிவதில்லையாம்.
[சீடிகளில் அந்த surprise element, என்னதான் assorted தேர்வு செய்தாலும், கிடைப்பதில்லை.]
[ம்ம்.. மனித மனத்தைப் பொறுத்தவரை என்ன வசதி வந்தாலும் ஏதாவது குறைத் தெரியத்தான் செய்யுமோ?]
//இந்த வாரத்தின் ஹை லைட்//
ஓ! ஆக அழுகாச்சிதான் விஜயின் ஹைலைட்டா?
நல்லா காட்டுறாங்கப்பா விளக்கு!!!
அட, சன் டிவி தவிர மற்ற சேனல்களில் வரும் சீரியல்களைக் கூட மக்கள் பார்க்கிறார்களா?!
ReplyDeleteகோல்ட் கேசினோ நடத்தும் சுகாசினிக்கே ரூல்ஸ் எல்லாம் தெரியுமா என்ன? மண்வாசனை பாலிக்கா வது என்று கலர்ஸில் வந்து கொண்டு இருக்கும் வடக்கே உள்ள பெண்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு சீரியலின் தமிழாக்கம்.ரொம்ம்ம்ம்ப ஸ்லோவா போகும்.
ReplyDeleteதொல்லைக் காட்சிகள் தான்..
ReplyDeleteமுரசு சன் லைவ் நெரம் கிடைக்கும் போது பார்பேன் சார்..
ReplyDeleteமண் வாசனை அவ்வப்போது நானும் பார்ப்பது உண்டு.
ReplyDeleteதொ(ல்)லைக் காட்சிகள் - அறிந்து கொண்டேன்...
ReplyDelete(மின்சாரம் இருந்தால் தானே...?)
நன்றி வெங்கட்
ReplyDelete
ReplyDeleteஅட ரகு உன்னை ஒன்று கேட்பேன் எனக்கும் ரொம்ப பிடித்த பாட்டு. இரவில் மட்டுமல்ல எப்போதும் கேட்க பிடிக்கும்
ஹாலிவுட் ரசிகன்
ReplyDelete//சந்தோஷமா ரிலாக்ஸாகத் தான்...அதுலயும் மத்தவங்க அழுறதைப் பார்க்கணுமா? :)
கரீட்டு !
ஜெய் : ஹீ ஹீ வேறு யாரும் ப்ளாகில் எழுதுற மாதிரி தெரியலை. நாமாவது எழுதுவோமே !
ReplyDelete
ReplyDeleteசிவர் : ம்ம் ரைட்டு
சீனி:
ReplyDelete//80-களின் பாடல் எதிலுமே வருவதில்லை //
ஆம். உண்மை தான். மிக மிக அரிதாகவே வருகின்றன
ஸ்ரீராம்: ராஜ் டிவியில் ரெண்டு டப்பிங் சீரியல் போடு போடுன்னு போடுது
ReplyDelete
ReplyDeleteஅமுதா கிருஷ்ணா: மண்வாசனை பற்றிய புது தகவலுக்கு நன்றி வீட்டம்மா படித்தால் மகிழ்வார்
ReplyDeleteஇந்திரா: ஆம்
ReplyDeleteசமீரா: நன்றி
முரளி சார்: அப்படியா? நன்றி
ReplyDelete
ReplyDeleteதனபாலன்: நன்றி . இவ்வாரம் தஞ்சை சென்றபோது மின்வெட்டை நேரடியே அனுபவித்து உணர்ந்தேன்
\\"சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலை "\\
ReplyDeleteஇவர் விடும் பீலாக்கள்:
இந்தியாவில் தமிழக இளைஞர்கள் மட்டும் தான் 'அந்தப்' பழக்கத்தில் ஈடுபட்டு 'அதற்க்கு' லாயக்கில்லாமல் போய் விட்டார்களாம்.
தற்போது இவர்கள் எண்ணிக்கை ஆபத்தான அளவிற்கு அதிகமாய்ப் போய்விட்டதாம், விட்டால் ஒருத்தருக்கும் குழந்தையே பிறக்காத அளவுக்குப் போய்விடுமாம்.
கன்னம் ஒட்டி கண்கள் உள்ளே போய் ஒல்லியாய் இருப்பவன் 'அந்தப்' பழக்கத்தால் தான் அப்படி ஆனானாம், அவனுக்கு குழந்தையே பிறக்காதாம். [இதையெல்லாம் கேட்டுட்டு நான் எத்தனை நாள் விசனம் புடிச்சி இருந்தேன் தெரியுமா!!].
இவருக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்களாம், [maybe married now], அவர்கள் ஒருத்தர் கூட 'அந்த சுகம்' கிடைக்காமல் தவிக்கக் கூடாது என்றுதான் இவர் ராத்திரி பகலாய் கஷ்டப் படுகிறாராம். இவருக்குப் பின்னர் தமிழ்நாடே அம்போதானாம்.
இந்த ஆசாமியை ஏன் இன்னமும் கேசு போட்டு உள்ளே தள்ளாமல் இருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை சிலர் இவர் விடும் புளுகைத் தாங்க முடியாமல், "கேஸ் போடுவேன்" என்று மிரட்டவும் தற்போது கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.
correction:
ReplyDeleteஇவருக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்களாம், [maybe married now], ஆகையால் தமிழ் பெண்கள் எல்லோரும் இவரது மகள்கள் மாதிரியாம், அவர்கள் ஒருத்தர் கூட 'அந்த சுகம்' கிடைக்காமல் தவிக்கக் கூடாது என்றுதான் இவர் ராத்திரி பகலாய் கஷ்டப் படுகிறாராம். இவருக்குப் பின்னர் தமிழ்நாடே அம்போதானாம்.
Sivaraj sivakumar solvathu unmai ellorum nambuga nanum kaipalakathitku adimaiyagi athanal paathikapattu pin avaridam senren avar ithai padi padiyaga kunamadaiya seithar so yarume kai palakam seiyatheergal aanmai irrukum pothu athan arumai theriyathu athu illamal irrukumpothu than athan arumai theriyum
ReplyDelete