Thursday, October 18, 2012

Ferrari Ki Sawaari -2012- ஹிந்தி சினிமா விமர்சனம்

சிறுவர் வாழ்க்கையை பின்னணியாக வைத்த படங்கள் எப்போதுமே நம்மை கவர கூடியவை. அதிலும் பலருக்கும் பிடித்த கிரிக்கெட் பின்னணியில் அமைந்த கதை எனும்போது நம் ஆர்வம் இன்னும் கூடும் தானே?

*********
கிரிக்கெட் விளையாடுவதையே லட்சியமாக கொண்ட ஒரு சிறுவன் கயோ. அவனது தந்தை ரூசி (ஷார்மன் ஜோஷி) மற்றும் தாத்தா (போமி இராணி ) ஆகியோருடன் வசிக்கிறான். தாயார் இறந்து விட, வீட்டில் இருப்பது இந்த மூன்று ஆண்கள் மட்டுமே. மிக அருமையாக கிரிகெட் ஆடும் கயோ இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் பயிற்சி வகுப்புக்கு செல்ல விரும்புகிறான். அதற்கு ஒண்ணரை லட்சம் பணம் தேவைப்பட, அதை திரட்ட அவன் தந்தை பல இடங்களிலும் முயன்று தோற்கிறார்.


பெராரி காரை ஒரு நாள் கல்யாண ஊர்வலத்துக்கு பெற்று தந்தால் ஒண்ணரை லட்சம் பணம் தருவதாக ஒருவர் சொல்ல, கிரிக்கெட் வீரர் சச்சினிடம் மட்டுமே அந்த கார் உள்ளது என தெரிந்து அதனை நைசாக எடுத்து வருகிறார் ரூசி. கிடைக்கிற ஒண்ணரை லட்சத்தை மறந்து போய் காரில் வைத்து விட்டு வந்து விடுகிறார்.

பணம் மறுபடி கிடைத்ததா? கயோ லார்ட்ஸ் சென்று கிரிக்கெட் ஆடினானா என்பது படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் என்னை ஆச்சரியப்பட வைத்த முதல் விஷயம் ஹீரோயினே இல்லாமல் ஒரு முழு படம் எடுத்திருப்பது தான். தமிழில் இப்படி ஹீரோயின் இல்லாமல் ஒரு படம் பார்த்த நினைவு இல்லை ! (உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் ). வித்யா பாலன் ஒரு குத்து பாட்டுக்கு மட்டும் வந்து போகிறார்.

அடுத்து சிறுவனின் தந்தையாக வரும் ஷார்மன் ஜோஷி நடிப்பில் பெரிதும் கவர்கிறார். அவரது சிரிப்பு அந்த பாத்திரத்துக்கு பெரிதும் பொருந்துகிறது. ஒரு தந்தையின் ஏக்கம், நேர்மையான அரசு ஊழியர் என்கிற பெருமிதம், வயதான தந்தை மீது காட்டும் மரியாதை என பலவித உணர்ச்சிகள் காட்டும் அட்டகாசமான பாத்திரம். மிக அருமையாக நடித்துள்ளார் ஷார்மன் ஜோஷி. த்ரீ இடியட்சில் (தமிழில் ஜீவா செய்த ரோலில்) நடித்தவர் இவர். தனி ஹீரோவாக இது முதல் படம் என்று நினைக்கிறேன். வெரி வெல் டன்.

தாத்தாவாக வரும் போமன் இராணி இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் எவ்வளவு வித்யாசம் காட்டுகிறார். துவக்கத்தில் கிரிக்கெட் ஆடாதே என்று சொல்வதில் துவங்கி கிளைமாக்சில் பேரனுக்காக மக்கள் பேசும்போது பெருமையாக தலை அசைப்பது வரை அவர் வரும் காட்சிகளில் எல்லாம் அசத்தலான நடிப்பை தருகிறார் !

கிரிக்கெட் வீரனாக வரும் சிறுவன், விளம்பரங்களில் நடிக்கும் ஒரு மாடல் என்று அறிகிறேன். கிரிக்கெட் நன்கு ஆடும் பையனாக பார்த்து எடுத்துள்ளனர். கடைசி காட்சியில் அப்பாவிடம் " லார்ட்ஸ் போனாதான் கிரிக்கெட்டர் ஆவேனா? " என்று பேசும் போது மனதில் நிற்கிறான்.

சில சின்னச் சின்ன பாத்திரங்கள் செம சுவாரஸ்யமாக உள்ளது. சச்சின் வீட்டு செக்யூரிட்டி ஆக வரும் குண்டு மனிதர் வெள்ளந்தி பேச்சில் கலக்குகிறார். " ஸ்கூட்டருக்கும் ரெண்டு சீட் தான். பெராரிக்கும் ரெண்டு சீட் தான்" என்று இவர் அப்பாவி ஆக பேசும்போது சிரிக்காமல் இருக்க முடியாது.

கிரிக்கெட் சங்க தலைவர் பாத்திரம் மூலம் கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலை செமையாக காட்டி உள்ளனர்.

ஒரே நேரத்தில் இருநூறு கல்யாணம் செய்து வைக்கும் அரசியல் வாதி, அவரது Eccentric  மகன் கதையை நகர்த்த உதவுகின்றனர்.

படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை.

சச்சின் காரை இரண்டு முறை எடுத்து வருவது முழுக்க காதில் பூ ரகம் தான். இதுவே ரியலிஸ்டிக் படம் என்ற நிலையில் இருந்து பான்ட்டசி (fantasy ) என்ற தளத்துக்கு எடுத்து போய் விடுகிறது.

மிக நேர்மையான ஹீரோ அந்த நேர்மையால் தனக்கு கிடைத்த நல்ல பெயரை அடிப்படையாய் வைத்தே அடுத்தடுத்து தவறு செய்யும் போது உறுத்துகிறது

இந்த வருடம் ஜூன் மாதம் வெளியான இப்படம் தயாரிப்பாளர் கையை கடிக்காத அளவில் போட்ட காசை எடுத்து தந்ததாக தெரிகிறது.

நேரம் இருந்தால் இந்த ஜாலியான ஹிந்தி படத்தை ஒரு முறை பாருங்கள் !

16 comments:

  1. ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைச்சிட்டிருந்த படம். மறந்தே போச்சு. இப்பத் தான் BRRIP வந்திருப்பதை பார்க்கிறேன். இன்னிக்கு நாளைக்குள் பார்க்கலாம்னு நினைக்கிறேன். :)

    வழக்கம் போல அழகான விமர்சனம். :)

    ReplyDelete
  2. படம் வந்த போதே இதற்கு நல்ல விமர்சனம் இருந்தது....

    எப்போதும் போல படம் பார்க்கவில்லை!

    த.ம. 3

    ReplyDelete
  3. என்ன அடிக்கடி ஹிந்திப் பக்கம் ஒதுங்கறீங்க?

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம்...

    நன்றி...

    ReplyDelete
  5. இந்தப்படம் ஒரு தோல்விப் படம்

    ReplyDelete
  6. அப்படியா கேபிள்? வசூல் விஷயம் விக்கிபீடியாவில் பார்த்தேன். போட்ட பணம் கிடைத்த மாதிரி தான் அங்கு சொல்லியிருந்தார்கள்; அதான் எழுதி இருந்தேன்

    ReplyDelete
  7. Anonymous5:50:00 PM

    ஹிந்தி நஹி மாலும்...தோடா தோடா ஆத்தாஹே...


    //படத்தில் என்னை ஆச்சரியப்பட வைத்த முதல் விஷயம் ஹீரோயினே இல்லாமல் ஒரு முழு படம் எடுத்திருப்பது தான்.//

    வாவ்...பாலிவூட் முன்னேறிருச்சு...

    //வித்யா பாலன் ஒரு குத்து பாட்டுக்கு மட்டும் வந்து போகிறார்.//


    அதுக்குள்ளே தொபுக்கடீர்ன்னு அதல பாதாளத்துல...ஒரு நிமிஷம் கூட காலரை தூக்கி விட முடியலையே...

    ReplyDelete
  8. //படத்தில் என்னை ஆச்சரியப்பட வைத்த முதல் விஷயம் ஹீரோயினே இல்லாமல் ஒரு முழு படம் எடுத்திருப்பது தான். தமிழில் இப்படி ஹீரோயின் இல்லாமல் ஒரு படம் பார்த்த நினைவு இல்லை ! (உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் )??

    90களில் வெளியான பாலம் என்னும் படத்தில் ஹீரோயினே இல்லை. முரளி நடித்த ஒரு வெற்றிப்படம். கார்வண்ணன் இயக்கம். பா.ம.க. தலைவர் ராமதாஸ் ஒரு காட்சில் வருவார். ஹாக்கி அணி காப்டன் பாஸ்கரன் வில்லன். முழுப்படமும் ஒரு பாலத்திலேயே நடைபெறும். ஆங்கிலப் படங்களுக்கு நிகரானது. நம்புங்கள் அந்தக் காலத்திலேயே ஹீரோயினே இல்லாமல் வந்த ஒர் வெற்றிப்படம்

    -மீண்டும் ஒருவாசகன்

    ReplyDelete
  9. நான் மிகவும் ரசித்து பார்த்த படம், உங்கள் அளவுக்கு இல்லை என்றாலும் நானும் விமர்சித்துள்ளேன்.

    http://kathirrath.blogspot.com/2012/09/ferrari-ki-sawaari.html

    ReplyDelete
  10. நன்றி ஹாலிவுட் ரசிகன். பாருங்க

    ReplyDelete
  11. வாங்க வெங்கட் நன்றி

    ReplyDelete
  12. ஸ்ரீராம்: ஹிந்தி மட்டுமல்ல மலையாள படங்களிலும் நல்ல படங்கள் டீ. வீ . டி யில் பார்க்கிறேன். நல்ல படம் என்றால் சப் டைட்டிலுடன் பார்ப்பது அருமையா இருக்கு

    ReplyDelete

  13. நன்றி தனபாலன்

    ReplyDelete
  14. வாங்க ரெவரி. ஒரு பாட்டு அப்படி என்றாலும் கூட மற்றபடி நல்ல படமே

    ReplyDelete
  15. வாங்க ஒரு வாசகன். ரொம்ப நாளாச்சு நீங்க வந்து. பாலம் படம் நினைவிருக்கு நன்றி

    ReplyDelete
  16. வாங்க கதிர் ராத். நீங்கள் எழுதிய விமர்சனம் வாசித்தேன். நல்லாருக்கு

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...