Monday, October 22, 2012

தொல்லை காட்சி : 7 C -யும், ஹவுஸ்புல்லும்

ஜெயா தொலை காட்சியில் புதிய நிகழ்ச்சி ஹவுஸ்புல் 

ஒரு கோடி ரூபாய் பரிசு என அறிவிப்புடன் பரபரப்பாய் வருகிறது ஜெயா டிவியில் ஹவுஸ்புல் என்கிற புது நிகழ்ச்சி. அலுவலகம் மற்றும் கல்லூரியில் " தம்போலா " என்கிற பெயரில் விளையாடுவோமே அதே விளையாட்டு தான் இது ! தம்போலா ஒரே அறையில் அமர்ந்து ஆடுவோம். இங்கு நடத்துவோர் டிவியிலும், கலந்து கொள்வோர் வீட்டிலும் இருக்கிறோம் அவ்வளவு தான் வித்யாசம் !

அவர்கள் சொல்கிற தொலைபேசி எண்ணுக்கு நாம் போன் செய்ய வேண்டும். அவர்கள் " விஸ்வநாதன் ஆனந்த் எந்த விளையாட்டில் புகழ் பெற்றவர் " போன்ற மிக கடின கேள்விகள் கேட்கிறார்கள். போன் செய்யும் அனைவருமே அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி விடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஆயிரக்கணக்கில் பரிசு தருகிறார்கள்.

பார்க்கிற என் பெண்ணே " என்னப்பா இது கால் பண்ற எல்லாருக்கும், ஒவ்வொரு நிமிஷத்துக்கும் பல ஆயிரம் ரூபாய் தர்றாங்க. நிஜமா குடுப்பாங்களா? " என்கிறாள்

பார்க்கலாம் நிகழ்ச்சி மக்களிடம் எடுபடுகிறதா என !

டிவியில் பார்த்த படம் - சேது

கே டிவியில் சேது படம் பார்த்தோம். பொதுவாய் கே டிவி பக்கம் போவதே இல்லை. ஒரு படம் பார்க்க ஆரம்பித்தால் விளம்பரத்துடன் சேர்த்து மூன்று மணி நேரம் வீணாகி விடும் என்பதால். அதுவும் பெரும்பாலும் பார்த்த படங்களாக வேறு இருக்கும் ! வார இறுதியில் வேறு நல்ல படம் இல்லாததால் கே டிவி பக்கம் செல்ல வேண்டியதாயிற்று.

சேது - இரண்டாம் பகுதி -ஒவ்வொரு முறை பார்க்கிற போதும் மனதை பிசைந்து விடும். விக்ரமுக்கு இந்த படத்துக்கு சிறந்த நடிகர் விருது மத்திய அரசு எப்படி தராமல் போனது என்று புரிய வில்லை !

பி. ஆர். பந்துலு குறித்த நிகழ்ச்சி

பி. ஆர். பந்துலு ! மாபெரும் இயக்குனர். சிவாஜி மற்றும் எம். ஜி . ஆரை வைத்து பல ஹிட் படங்கள் தந்தவர். இவரை பற்றி இவரது மகள் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி மற்றும் மகன் ஜெயா டிவியின் "திரும்பி பார்க்கிறேன்" நிகழ்ச்சியில் பேசினர்.

சுதந்திர போராட்டம் குறித்த நல்ல படங்கள் என இந்தியாவில் பத்து படங்கள் தான் உண்டு என்றும் அதில் மூன்றை இயக்கியவர் தங்கள் தந்தை என்றும் கூறியவர்கள், கப்பலோட்டிய தமிழன் பெரும் தோல்வி என்றும் அதில் தங்கள் தந்தைக்கு பெரும் நஷ்டம் என்றும் கூறினர். மேலும் இன்று 125 நாளுக்கு மேல் ஓடும் கர்ணன் படம் வெளிவந்த காலத்தில் பெரும் தோல்வி படமாய் இருந்ததை சற்று வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் சிவாஜியோடு தொடர்ந்து பணியாற்றிய பந்துலு ஏனோ தனது கடைசி பத்து வருடங்களில் எந்த சிவாஜி படமும் இயக்க வில்லை. 1964 - ல் பந்துலு -சிவாஜி காம்பினேஷனில் வெளியான கர்ணன் மற்றும் முரடன் முத்து தான் இந்த ஹிட் காம்பினேஷன் இணைந்து பணியாற்றிய கடைசி படங்கள் !

சீரியல் பக்கம்: 7 C

சமீபத்தில் வந்த சாட்டை படத்தின் கதையும் இந்த தொடரின் அவுட்லைனும் ஏறக்குறைய ஒன்று தான் என நினைக்கிறேன். அவ்வப்போது விஜய் டிவி யில் காட்டும் டிரைலரிலேயே இந்த சீரியலின் கதை மற்றும் போக்கை ஊகிக்க முடிகிறது. வழக்கமாய் சீரியல் பார்க்கும் குடும்ப தலைவிகள் மற்றும் வயதானவர்களை தவிர்த்து விட்டு பள்ளி செல்லும் சிறு வயது மக்கள் பார்த்தால் மற்றவர்களும் பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சூப்பர் சிங்கர் அப்டேட்

அதென்னவோ தெரியலை .. ஜுனியரோ , சீனியரோ எந்த சீசன் நடந்தாலும் சூப்பர் சிங்கரில் இறுதி போட்டிக்கு முன் சென்னை சிட்டி செண்டர் சென்று மாடியில் நின்று கொண்டு பாடி தீத்துடுவாங்க. இம்முறையும் அது தொடர்ந்தது.அதன்பின் ப்ரீ பைனல் என்று சொல்லி இரண்டு ரவுண்ட் பாடினார்கள்

இறுதி போட்டியில் சுகன்யா அல்லது பிரகதி வெல்ல வாய்ப்புகள் மிக மிக அதிகம் என தோன்றுகிறது. இப்போது பாடுபவர்களை வைத்து பார்த்தால் சுகன்யா தான் வரவேண்டும். அவர் மலையாளி என்பதே அவருக்கு ஒரே மைனஸ். இந்த வாரம் ஐந்து பைனலிஸ்ட்டுகளும் பாடகர் ஹரிஹரனுடன் பாடுகிறார்கள். இதனை தொடர்ந்து வருகிற வெள்ளிகிழமை (அக்டோபர் 26 அன்று) இறுதி போட்டி நேரடி ஒளிபரப்பாகிறது. 

ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள்

பல டிவிக்களும் ஆயுத பூஜைக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் காத்திருக்கின்றன. விஜய்யில் சிறப்பு படம் தோனி இதுவரை பார்க்கா விடில் பார்க்கலாம். சன் டிவியில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் திரையிட உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படம் என்பதால் கலைஞர் டிவியில் தானே வரும்? எப்படி சன் டிவி போனது என தெரியவில்லை. மற்றபடி ஏற்கனவே போட்ட பல படங்கள் தான் போடுகிறார்கள். விஷால் மற்றும் சமீரா ரெட்டி என்கிற இரு ஹீரோக்கள் நடித்த வெடி படம் போடும்போது அந்த படம் போடும் சானல் பக்கமே போகாமல் இருக்கவும் என எச்சரிக்கை தருகிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம் !

35 comments:

  1. சீயான் - இப்போது தான் பார்த்தீர்களா..?!

    தொலைக்காட்சி தகவல்களுக்கு நன்றி...

    சிறப்பு நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  2. எனக்கென்னவோ இந்தமுறை பிரகதி வென்றால் சந்தோஷம். சுகன்யா கொஞ்சம் ஈகோ பிடிச்ச பொண்ணு போலத் தெரியுது. :P

    ஒருகல் ஒருகண்ணாடியை மட்டும் மீண்டும் ஒருமுறை பார்க்கணும் என்று நினைக்கிறேன். :)

    ReplyDelete
  3. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பு பற்றிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. //விஷால் மற்றும் சமீரா ரெட்டி என்கிற இரு ஹீரோக்கள் நடித்த//

    அது எப்படி கெளதமுக்கும், லிங்குசாமிக்கும் இவங்க அப்படி ஒரு அழகியா தெரிஞ்சாங்கன்னே தெரியல!

    ReplyDelete
  5. //விஷால் மற்றும் சமீரா ரெட்டி என்கிற இரு ஹீரோக்கள்//

    சமீரா வை அழகாக காட்டிய படம் என்னகு தெரிந்து RACE -ஹிந்தி படம் மட்டுமே. முடிந்தால் பார்க்கவும்.

    ReplyDelete
  6. சேது-- எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு சீயானுக்கு விருது கிடைக்காததில்.ஆனா நாம்தான் பெரிய விருதாகிய மக்களின் அங்கீகாரம் என்ற விருதைக்கொடுத்து உயரத்தில் ஏற்றி வைத்துவிட்டோமே..
    வேறு எந்த நிகழ்ச்சிகளும் பார்க்கவில்லை.. ஒரு கல் ஒரு கண்ணாடி பார்க்கவேண்டும்
    அந்த வெடி ஹீரோக்கள் ரசித்தேன் கொஞசம் குறும்புதான் மோகன்!


    ReplyDelete
  7. சிவாஜி அணியில் இருந்த பலர் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரிடம் அடைக்கலம் அடைந்தனர்.அதில் பந்துலு,எ.பி.நாகராஜன் உட்பட பலர் அடக்கம்.சிவாஜியை வைத்து கப்பலோட்டிய தமிழன்,கர்ணன் போன்ற தோல்விகளால் எம்.ஜி.ஆரிடம் அடைக்கலம் அடைந்த பந்துலு அவரோடு ஆயிரத்தில் ஒருவன்,பறக்கும் பாவை என ஹிட்கள் கொடுத்தார்.
    spectrum வழக்கு நடக்கும் போது கலைஞர் டி.வி மூடக்கப்படும் என்று ஒரு பேச்சு .அதனால் அந்த நேரத்தில் அவர்கள்(கலைஞர் குடும்ப) படங்கள் ஓகே.ஓகே,மௌன குரு,அழ்கர்சாமியின் குதிரை,வானம் போன்ற படங்கள் சன் வசம் வழங்கபட்டது.7ஆம் அறிவு கூட அங்கேதான் என்று ஒரு பேச்சு.பார்க்கலாம்.

    ReplyDelete
  8. அந்தக் காலத்தில் கர்ணனோடு போட்டியிட்ட எம் ஜி ஆர் படம் நாடோடி மன்னன். ஒரே சமயம் ரிலீஸ். கர்ணன் என்ன செய்யும் பாவம். கப்பலோட்டிய தமிழன் அன்றைய தோல்விப் படமாக இருக்கலாம் ஆனாலும் காலத்தை வென்று நிற்கும் படங்களில் ஒன்று.

    ReplyDelete
  9. //ஆரம்பத்தில் சிவாஜியோடு தொடர்ந்து பணியாற்றிய பந்துலு ஏனோ தனது கடைசி பத்து வருடங்களில் எந்த சிவாஜி படமும் இயக்க வில்லை. 1964 - ல் பந்துலு -சிவாஜி காம்பினேஷனில் வெளியான கர்ணன் மற்றும் முரடன் முத்து தான் இந்த ஹிட் காம்பினேஷன் இணைந்து பணியாற்றிய கடைசி படங்கள் !//

    http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_06.html

    ReplyDelete
  10. 7-C இன் டார்கெட் நீங்கள் கூறியது போல் பள்ளிச் செல்லும் குழந்தைகள் தான். எங்கள் வீட்டிலேயே கார்டூனிலிருந்து இதற்கு மாற்ற மகனுக்கும் மகளுக்கும் சண்டை நடக்கிறது. அதனால் சில சமயம் நாங்களும் பார்க்க நேரிடுகிறது.

    குழந்தைகளின் லூட்டி என்பது சற்று மிகைப்படுத்தவும் படுகிறது. [ஒருவேளை இப்பொழுதெல்லாம் பள்ளிகளில் அப்படிதான் நடக்கிறதோ?]

    ஒ.க.ஒ.க பார்த்துவிட்டோம். ஆனால் எங்களுக்கு ஏனோ அது பிடிக்கவில்லை. தோனி கூட ஹிட் படம் இல்லை ஆனால் இன்னமும் பார்க்கவில்லை. வெடி பயத்தில் தோனியில் ஏற வேண்டியது தான்.

    ReplyDelete
  11. டிவி நிகழ்ச்ச்சியா?! இந்த வாரமாவது பார்க்க முயற்சி பண்ணுறேன்.

    ReplyDelete
  12. தொலைக்காட்சி அலசல்கள் அருமை! எச்சரிக்கைக்கு மிக்க நன்றி! நானும் தோனி பார்க்கலாம் என்று நினைக்கிறேன் மின்சாரம் பார்க்கவிடுமா என்று தெரிய வில்லை! நன்றி!

    ReplyDelete
  13. புதன் அன்று மட்டுமே இங்கே விடுமுறை... அன்று சில நிகழ்ச்சிகள் பார்க்கலாம்! :)

    த.ம. 11

    ReplyDelete
  14. வெடி படம் பற்றி நானும் அதை தான் நினைச்சேன் சார்... எல்லாரையும் அலெர்ட் பணிடீங்க.... tomorrow working day so escape .....

    ReplyDelete
  15. வெடி படம் பற்றி நானும் அதை தான் நினைச்சேன் சார்... எல்லாரையும் அலெர்ட் பணிடீங்க.... tomorrow working day so escape .....

    ReplyDelete
  16. எனது கணிப்பு ஆஜீத்... Cute boy... ரசிகர்களில் வாக்குகளை அள்ளி விடுவான்.....

    எ.பி.நாகராஜன்... எம்ஜிஆரை வைத்து நவரத்தினம் என்னும் தோல்விப் படத்தினைத் தந்தார். இப்படம் எடுக்கும் போது எ.பி.நாகராஜன் சிவாஜியின் ஆஸ்தான இயக்குனர் என்றபடியால் எ.பி.நாகராஜனை எம்ஜிஆர் படுத்தியபாடு ........ உலகமே அறியும்

    ReplyDelete
  17. என்னது வெடி போடுறாங்களா??? ஆவ்வ்வ்வ்........ வாணாம்... :))

    ReplyDelete
  18. தனபாலன் சார்: சேது நீண்ட காலத்துக்கு பின் மறுபடி இப்போது பார்த்தேன் நன்றி

    ReplyDelete
  19. ஹாலிவுட் ரசிகன்: என்ன நண்பா சூப்பர் சிங்கர் பற்றி இப்படி சொல்லிட்டீங்க ?

    ReplyDelete

  20. நன்றி ராஜராஜேஸ்வரி

    ReplyDelete
  21. ரகு: ரசனை ஆளுக்கு ஆள் நிறையவே மாறுபடுகிறது. என் நண்பன் தேவாவிற்கு சமீராவை பிடிக்கும். :)

    ReplyDelete
  22. ராஜ்: RACE பரிந்துரைக்கு நன்றி

    ReplyDelete
  23. உமா: நன்றிங்க. விக்ரம் பற்றி நீங்கள் சொல்வது சரியே

    ReplyDelete
  24. சீன் கிரியேட்டர் : நீங்கள் சொன்னதில் சிறு திருத்தம். அழகர்சாமியின் குதிரை கலைஞரில் தான் வந்தது

    ReplyDelete
  25. ஸ்ரீராம்: நாடோடி மன்னனுடன் கர்ணன் வந்ததா? எனக்கு தெரிந்து நாடோடி மன்னன் ஒரு சில வருடம் முன்னர் வந்திருக்கலாம். தமிழில் முதல் கலர் படம் நாடோடி மன்னன் . கடைசி கால் வாசி படம் மட்டும் கலரில் இருக்கும் ! கர்ணன் முழுதுமே கலர். எனவே தான் இந்த சந்தேகம்

    ReplyDelete
  26. இந்தியன்: கையை குடுங்க சார். ராஜநாயகம் எழுத்து சான்சே இல்லை. அற்புதம் ! அவசியம் அவர் பற்றி குறிப்பிட்டு நம் ப்ளாகில் எழுத வேண்டும்

    ReplyDelete
  27. நன்றி சீனி. புதன் லீவ் என்றால் தோனி பார்க்க முயலுங்கள்

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete

  29. நன்றி ராஜி

    ReplyDelete
  30. வாங்க சுரேஷ் நன்றி

    ReplyDelete
  31. Venkat: எங்களுக்கு செவ்வாய் மட்டுமே விடுமுறை

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. சமீரா: நன்றி செவ்வாய் பலருக்கும் சென்னையில் லீவ் ஆச்சே ? உங்களுக்கு மறுநாள் லீவ் போலும்

    ReplyDelete
  34. ஒரு வாசகன்: இருப்பதிலேயே மிக சிறுவன் டைட்டில் வெல்வது சற்று கடினம் என்று நினைக்கிறேன். மற்றபடி ஆஜித் எனக்கு மிக பிடிக்கும்

    ReplyDelete

  35. துஷ்யந்தான்: ஆமாங்கோ :))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...