Friday, October 19, 2012

மணாலி-வசிஷ்டர் கோவிலும் நாங்கள் தங்கிய ஹோட்டலும்

வஷிஸ்ட் கோயில்

Add caption
 மணாலியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வஷிஸ்ட் கோயில். கோயிலுக்கு நூறு மீட்டர் தூரத்தில் நம் கார் நிறுத்தப்பட்டு விடுகிறது. பின் நடக்க வேண்டும். கொஞ்சம் மலையாக உள்ளதால் வயதானவர்கள் நடக்க சற்று சிரம படுவர்.



நடக்கும் வழியில் நிறைய கடைகள் இருந்தன. பெரிய ஷால் எல்லாம் விற்கின்றனர். வெளியே நின்று உங்களை வற்புறுத்தி அழைத்து சென்று "பணமே தர வேண்டாம்; வி.பி. பி முறையில் அனுப்பி வைப்போம். கொஞ்சம் அட்வான்ஸ் மட்டும் தந்து விட்டு போங்க" என்கிறார்கள். மெத்தைக்கு போட துணி, போத்தி கொள்ள எல்லாம் சேர்த்து நாலாயிரம் என்கிறார்கள். நம்மை மாதிரி வெய்யில் தேசத்துக்கு தேவையே இல்லை. விசாரித்து விட்டு எஸ் ஆனோம்



சுடு நீர் உள்ள குளம் மிக புகழ் பெற்றது. 33000 கோடி கடவுள்களும் வந்து குளித்ததாக ஐதீகம். இங்குள்ள கடவுள் சிவன். இவரை வணங்கி விட்டு குளத்தில் ஒரு சிலர் குளித்தோம்.


பெண்களுக்கு தனி இடம். பிரைவசி உடன் ஆண்கள் காண முடியாத படி தனியாக உள்ளது.

ரோடாங் மணால்சு ஹோட்டல்


நாங்கள் தங்கிய ரோடாங் மணால்சு ஹிமாச்சல் டூரிசத்தின் ஹோட்டல். மணாலியில் ஒரே ஒரு முக்கிய கடை தெரு தான் உள்ளது. இதை மால் ரோடு என்பர். இதற்கு அருகிலும் நிறைய லாட்ஜுகள் உள்ளன. ஆனால் இந்த ரோடாங் மணால்சு அந்த இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஒவ்வொரு முறையும் வெளியே வர கார் அல்லது ஆட்டோ தேவை. இது மட்டுமே பிரச்சனை. மற்ற படி அருமையான உணவு. பனி படர்ந்த மலை அறையில் இருந்து தெரிகிறது. மிக மிக அற்புத கார்டன். பெண்கள் மிக மிக ரசித்து என்ஜாய் செய்கிறார்கள். ஹோட்டலில் இருக்கும் போதெல்லாம் என் பெண் , அறையில் இருக்காமல் கார்டனுக்கு சென்று விடுவாள். மனைவியும் கூட தான் !

ஹவுஸ்பாஸ் / பூக்கள் கார்னர்



காலை மற்றும் இரவு இரு வேளை நல்ல உணவு சாப்பிட்டோம். மதிய சாப்பாட்டுக்கும் சேர்த்து அவர்கள் பணம் வாங்குவதால், நீங்கள் கேட்டால், மதியத்துக்கு பிரேட் போல ஏதாவது பேக் செய்து காலையிலேயே தருகிறார்கள்.
ஹோட்டலில் உள்ள கார்டன் (நடப்பது யாரோ அறியேன்)
Details about the hotel:


Website: http://www.himachalhotels.in/Hotel-Rohtang-Manalsu/

Hotel Rohtang Manalsu

Tel. No. +91 177 2860601, 2860630, 2661073

email:booking@himachalhotels.in
****
மணாலியில் எல்லா கடைகளும் செம கூட்டமாய் உள்ளது. டூரிஸ்ட் கூட்டம். மருந்து கடை முதல் பெட்டி கடை வரை சரி கூட்டம் ! எந்த பொருள் வாங்கவும் கடையில் சற்று நின்று தான் வாங்கி வரணும்

அங்கு மரங்கள் நிறைய உள்ளதால் மரத்தில் நம் பெயர் அல்லது நாம் சொல்லும் மற்றவர்கள் பெயர் எழுதி தருகிறார்கள். நல்ல தரமுள்ள மரத்தில் எழுத நூறு ரூபாய் போல் தான் வாங்குகிறார்கள்.

ரூமுக்கு வெளியே கார்டன்; உள்ளே பெயர் பலகை இரண்டும் உங்கள் கவனத்திற்கு

அதில் சில கலை வேலைப்பாடு வேறு செய்து தருகிறார்கள். மச்சான் குடும்பத்துக்கு ஓரிரண்டு வாங்கி வந்தோம். அவர்கள் வேலை பாடுகளை பார்த்து மிக மகிழ்ந்தார்கள்

ரோஜா படத்தின் ஷூட்டிங் நிறைய இங்கு எடுத்துள்ளார்கள். காஷ்மீர் என்று சொன்னாலும் கூட பல காட்சிகள் இங்கு எடுத்தது தான். நாங்கள் போன போது எந்த ஷூட்டிங்கும் நடக்கலை. டூரிஸ்ட் அதிகம் உள்ள இந்த நேரம் ஷூட்டிங் விட மாட்டார்களாம். குளிர் காலத்தில் தான் ஷூட்டிங் விடுவார்களாம்

HPTC - பஸ் மூலம் லோக்கல் இடங்களுக்கு செல்லலாம் எனினும் அவர்கள் சுற்றி பார்க்க 45 நிமிடம் மட்டுமே தருவார்கள். அதற்குள் நாம் எல்லாம் இடமும் பார்த்து விட்டு வரவேண்டும். சற்று காஸ்ட்லி என்றாலும் ஒரு கார் எடுத்து கொண்டால், நம் விருப்ப படி பார்த்து வர சௌகரியம் ஆக இருக்கும். கூட இன்னும் ஓரிரு குடும்பங்கள் சேர்ந்து விட்டால் நன்கு என்ஜாய் செய்யலாம்.

39 comments:

  1. படங்கள் சூப்பர்ப்...

    ReplyDelete
  2. பனி படர்ந்த மலை அறையில் இருந்து தெரிகிறது. மிக மிக அற்புத கார்டன்.

    அருமையான பயணப்பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. நன்கு எஞ்சாய் செய்யக்கூடிய இடம்...

    சிறப்பான பகிர்வுக்கு நன்றி.

    த.ம. 3

    ReplyDelete
  4. இயற்கையின் எழிலை ரசிக்க ஏற்ற இடம். பகிர்வு அருமை.

    ReplyDelete
  5. வாவ்! அந்த பூக்கள் கார்னர் முதல் ஃபோட்டோ சூப்பர்ப்!

    ReplyDelete
  6. அட பெயர் பலகை புதுமையாகவும் நன்றாகவும் இருக்கிறதே..
    படங்கள் அசத்தலாக இருக்கு. நல்லதொரு சுற்றுலா அனுபவமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. படங்கள் அற்புதமா இருக்கு மோகன் சார் தங்கள் பயண குறிப்புகள் அனைத்துமே மற்றவங்க போறப்ப நல்லா பயனுள்ளதா இருக்கும் நன்றி

    ReplyDelete
  8. கண்ணுக்கு குளிச்சியா இருக்கு... புகைபடங்களுன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார்..
    ஹோட்டல் பற்றிய விபரங்கள் அங்கே செல்வோருக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்...

    ReplyDelete
  9. காஃபி குடிப்பவரை தவிர்த்து படங்கள் அருமை.

    ReplyDelete
  10. மிகவும் அருமையாக இருக்கின்றது. நன்கு ரசித்தேன்.

    ReplyDelete
  11. வாவ்.. ஜூப்பர். மகளிடம் படங்களைக் காட்டினேன். மணாலியை ஞாபகப்படுத்திட்டீங்களேன்னு கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சுருச்சு :-)

    ReplyDelete
  12. Anonymous8:12:00 PM

    நமீதா ரேஞ்சுக்கு உங்க புகைப்படம் குளத்தில இல்லையே மோகன்...-:)

    ReplyDelete
  13. அழகான இடம். அருமையான பகிர்வு!

    ReplyDelete
  14. படங்கள் அந்த இடத்தின் அழகைச் சொல்கின்றன. ஒரு ஷாலை எடுத்து தோளில் சுற்றிக் கொண்டு ஒன்று 'ஏ ஜமீன் கா ரஹீ ஹை' என்றோ, 'கித்னே கூப் சூரத் எ காஷ்மீர் ஹை' என்றோ பாடத் தோன்றும் காட்சிகள். அல்லது கிளிப் போட்ட நோட்பேடில் 'கபீ கபீ' கவிதை எழுதிக் கொண்டு கார்டனில் உட்க்காரத் தோன்றுமோ... !

    ReplyDelete
  15. நன்றி தனபாலன்

    ReplyDelete
  16. வாங்க துளசி டீச்சர் நன்றி

    ReplyDelete
  17. நன்றி ராஜராஜேஸ்வரி

    ReplyDelete
  18. வெங்கட்: நன்றி

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. ராமலட்சுமி மேடம்: நன்றி உண்மைதான்

    ReplyDelete
  21. ரகு: இதிலுள்ள பெரும்பாலான படங்கள் ஹவுஸ் பாஸ் எடுத்தது

    ReplyDelete
  22. ராம்வி: ஆம் அருமையான பயணம் நன்றி

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. சரவணன் : வாங்க நன்றி

    ReplyDelete
  25. நன்றி சமீரா

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete

  27. Sasi Kala said...
    காஃபி குடிப்பவரை தவிர்த்து படங்கள் அருமை.

    ******
    பொறாமை ??

    :))

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete

  29. நன்றி மாதேவி

    ReplyDelete

  30. அமைதி சாரல்: உங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி தந்தது ; கொசுவர்த்தி சுற்ற வைத்து விட்டோமே என

    ReplyDelete
  31. துரை டேனியல் : நன்றி

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. ரெவரி : ஹி ஹி

    ReplyDelete
  34. உமா : நன்றிங்க

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete

  36. ஸ்ரீராம் : ஆம் நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete
  37. அருமையான பயணம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...