Wednesday, October 3, 2012

வானவில்-கத்ரினா கைப்- இளங்காத்து வீசுதே- சாருலதா

பார்த்த படம் : சாருலதா 


ஒட்டி பிறந்த இரட்டையர் கதை என்பதை யார் முதலில் எடுத்து வெளியிடுவது என பெரும் போட்டியே நிலவியது. தமிழில் சாருலதா சற்று முந்தியது. நன்கு செய்திருக்க வேண்டிய ஒரு கதை திரைக்கதையால் சொதப்பலாகி விட்டது. ப்ரியா மணி பார்க்க அழகு; நடிப்பும் ஓகே. ஹீரோ தெரியாத முகம் என்பதே ஒட்டுதல் இல்லாமல் போயிடுது. கடைசி 20 நிமிடம் தவிர மற்ற நேரம் கதை ஒரே இடத்தில் நிற்கிறது. அவர்கள் ஒளித்து வைத்த சஸ்பென்ஸ் இல்லாவிடில் படம் இன்னும் வெறுக்கடித்திருக்கும். கூடிய சீக்கிரம் டிவியில் போடும் போது, நேரமிருந்தால் பாருங்கள் !

போஸ்டர் கார்னர்


Dot Com ஆன வீடுதிரும்பல்

நமது ப்ளாகில் சிறு மாறுதல் கவனித்தீர்களா ? நமது தளம் டாட். காம் ஆகி உள்ளது ( www . com அல்ல ; ப்லாகரிலேயே . com ) இப்படி செய்வது பல நன்மைகள் தரும் என்று பதிவு எழுதிய நண்பர் T .N முரளிதரன் தான் நமக்கு இதை செய்து தந்தார். அவரது பதிவையும் மேலதிக தகவலுக்கு அவசியம் வாசியுங்கள்

அழகு கார்னர்

இந்த படத்துக்கு விளக்கம் தேவையில்லை :)



நீங்கள் செல்லும் இடத்துக்கு வழி சொல்லும் ரூட்ஸ்

வெளியில் செல்கிறீர்கள்.... உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு எந்த பஸ் என தெரியலை. அல்லது வாகனத்தில் எந்த ரூட் வழியே போவது என புரியலை. யார் யாரிடமோ கேட்டு அவர்கள் தங்களுக்கு தெரிந்த அளவில் சொல்லி எப்படியோ கஷ்டப்பட்டு போவோம் இல்லையா? இந்த சங்கடம் தவிர்க்க வந்துள்ளது ரூட்ஸ் என்கிற கம்பனி.

8695959595 என்கிற எண்ணுக்கு போன் செய்தால் உங்களுக்கு தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரைன் ரூட், நேர அட்டவணை, எல்லா விஷயமும் சொல்கிறார்கள். போலவே வெளியூர் சென்றால் அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்கா, ரயிலில் நீங்கள் விரும்பும் நாளுக்கு இடம் இருக்கா என்றும் சொல்கிறார்கள். நல்ல விஷயம் இது ! பயன்படுத்தி கொள்ளுங்கள் !

பிடித்த பாட்டு - இளங்காத்து வீசுதே 

எனக்கு மிக மிக பிடித்த தமிழ் பாட்டில் இதுவும் ஒன்று. கேட்பதை விட பார்க்க தான் ரொம்பவே பிடிக்கும் இப்பாடலை.

சின்ன சின்ன சம்பவங்களால் மிக அழகாக காட்சி படுத்தியிருப்பார் பாலா. சங்கீதா சைக்கிள் ஓட்ட, விக்ரம் தலை அசைப்பதாகட்டும், ரயிலில் லைலா நடித்து காட்டுவதாகட்டும், விக்ரம் சலூனில் ஷேவ் செய்வது, குச்சியில் பல் துலக்குவது என பல குட்டி குட்டி சம்பவங்கள் எப்போது பார்த்தாலும் சிரிக்க வைக்கும்.




ஆனந்த் கார்னர்

When cyclone strikes huge trees get uprooted, but the simple grass survives. So better be humble like the grass to grow strong.

ஏமாற்றம் தந்த இந்திய அணி

நேற்று நடந்த இருபது ஓவர் உலக கோப்பையில் இந்தியா தென் ஆப்ரிக்காவை வென்றும் கூட செமி பைனல் நுழைய முடியாமல் போனது பெரும் ஏமாற்றமே. இந்தியா டாஸ் வென்று பீல்டிங் செய்திருந்தால்,  சரியாக எத்தனை ஓவரில் ஜெயிக்கணும் என்பது புரிந்திருக்கும் என்று நாம் புலம்பி கொண்டிருக்க வேண்டியது தான் !

ஐ. பி எல் வந்ததால் நமது வீரர்கள் ஆட்டம் சிறப்பாக இருக்கும் என நினைத்தால், மாறாக எதிர் அணி வீரர்கள் வீடியோ வைத்து நம் மக்கள் ஆட்டத்தை நன்கு அலசி வீக்னஸ்சை கண்டுபிடித்து விடுகிறார்கள் போலும் !

29 comments:

  1. அழகு கார்னர் ...ஹும்ம்ம்.....வர வர பயம் குறைஞ்சுகிட்டிருக்கு :))

    ReplyDelete
  2. பிடித்த பாட்டு...

    பெர்னாட்ஷா - உண்மை வரிகள்...

    வழி சொல்லும் ரூட்ஸ் - நன்றி...

    ReplyDelete
  3. வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் செமி பைனலில்..வெரி ஹாப்பி!!

    ReplyDelete
  4. வானவில் அழகாய் மின்னியது. அனைத்துப் பகுதிகளும் அருமை.

    ReplyDelete
  5. இளங்காத்து வீசுதே- செம மெலடி. எனக்கும் பிடித்த பாட்டு.

    ReplyDelete
  6. /கூடிய சீக்கிரம் டிவியில் போடும் போது, நேரமிருந்தால் பாருங்கள் ! /

    நல்லாயிருக்கு விமர்சனம்:)!

    போஸ்டர் கார்னர், பாடல் (கார்னர்) அருமை.

    ReplyDelete
  7. /கூடிய சீக்கிரம் டிவியில் போடும் போது, நேரமிருந்தால் பாருங்கள் ! /
    இதிலிருந்தே படம் எப்படி என்று புரிந்துவிட்டது.

    எனக்கு தமிழ்மணத்தில் பதிவுகளை இணைப்பதில் பிரச்சனை இருந்த சரியான நேரத்தில் முரளி அந்த .com மாற்றுவது பற்றியப் பதிவை இட்டிருந்தார். அவருக்கு மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. Anonymous2:26:00 PM

    ஐ. பி எல்: நமது வீரர்களின் தோல்விக்கு காரணம் ஐ.பி. எல்லும் நமது கிரிக்கெட் போர்டின் ஆதிக்க வெறியும் மட்டுமே...

    ReplyDelete
  9. கூடிய சீக்கிரம் டிவி யிலா ஹா....ஹா....

    ReplyDelete
  10. சாருலதா டிவியில் போடும்போதே பார்த்துக் கொள்கிறேன்....

    ரூட்ஸ் நல்ல தகவல்.....

    இளங்காத்து வீசுதே பாடல் எங்களுக்கும் பிடித்த பாடல்.

    வானவில் எப்போதும் போல் அருமை.

    ReplyDelete
  11. Anonymous8:23:00 PM

    அன்புள்ள மோகன் குமார்,

    அருமையான வானவில். இளங்காத்து அருமையான பாடல். இதைப் பாடிய ஸ்ரீராம் பார்த்தசாரதி (நெய்வேலி சந்தான கோபாலனின் சிஷ்யர்) தனது ஈமெயில் id - யையே இளங்காத்து@yahoo.com என்று வைத்துக் கொண்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...

    இவரது தந்தை திரு. பார்த்தசாரதி இளையராஜாவின் இசைக் குழுவில் பல வருடங்களாக வீணை வாசிப்பவர்.

    சூப்பர் ஸ்டார் முத்து படத்தில் வீணைக்குப் பதிலாக மீனாவை வாசிப்பாரே அந்தப் பின்னணி இசையும் பார்த்தசாரதி அவர்கள் வாசித்தது தான்...

    ReplyDelete
  12. வானவில் கலர்ஃபுல்லா இருந்துச்சுங்கோ.

    ReplyDelete
  13. இந்த படத்துக்கு விளக்கம் தேவையில்லை :)
    >>
    உங்களால விளக்கம் சொல்லவும் முடியாது. எங்க மானிட்டர்ல கூட ஈரம்...,

    ReplyDelete
  14. நீங்கள் செல்லும் இடத்துக்கு வழி சொல்லும் ரூட்ஸ்
    >>
    இதை நானும் தான் படிசேன். ஆனா பதிவா போடனும்ன்னு தோனலியே. இன்னும் வளரனுமோ?!

    ReplyDelete

  15. தனபாலன்: நன்றி

    ReplyDelete
  16. சிவகுமார்: நாங்களே இந்தியா செமி பைனல் போகலைன்னு நொந்து போய் உட்கார்ந்திருக்கோம் :(

    ReplyDelete
  17. நன்றி பாலகணேஷ்

    ReplyDelete

  18. ராஜ்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete

  19. வாங்க ராமலட்சுமி நன்றி

    ReplyDelete

  20. சீனி: அப்படியா? நன்றி

    ReplyDelete
  21. வாங்க மொக்கராசு : ப்ளாகை தொடர்வதற்கும் மிக நன்றி :)

    ReplyDelete

  22. சரவணன் : நன்றி

    ReplyDelete

  23. கோவை டு தில்லி: நன்றிங்க

    ReplyDelete
  24. ராஜி:
    //இதை நானும் தான் படிசேன். ஆனா பதிவா போடனும்ன்னு தோனலியே. இன்னும் வளரனுமோ?!//

    :)))

    ReplyDelete
  25. ரொம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சாருலதா கூடிய சீக்கிரம் டிவியிலா?.. நாங்களும் டிவியிலேயே பார்த்துக்கறோம் :-)

    ReplyDelete
  26. சுவாரஸ்யமான வானவில்.

    ReplyDelete
  27. இளங்காத்து வீசுதே எனக்கும் பிடித்த பாடல்....

    வழமை போல வானவில் அசத்தல்....

    ReplyDelete
  28. வானவில்லில் என்னைக் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி மோகன்குமார். இது தங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...