Tuesday, October 30, 2012

டிவி மெக்கானிக் வாழ்க்கை : அறியாத தகவல்கள்

ங்கள் வீட்டு டிவி திடீரென ஒரு நாள் உடல்நலமின்றி போனது . தானாகவே சரியாகும் என சில நாள் பொறுத்திருந்து பார்த்தால் , அப்படி ஒன்றும் நடக்கலை. டிவி பார்க்காமல் இருப்பது நல்லது தான் எனினும், வேறு வித பின் விளைவுகள் வரும்போல் இருந்தது. வாரக் கடைசிகளில் பெண் " ரொம்ப போர் அடிக்குது; எங்காவது ஷாப்பிங் போகலாம்" என்று சொல்ல, "ஆஹா; டிவி இல்லாததால் வந்த வினையா? இதுக்கு டிவியை சீக்கிரம் சரி பண்ணிடலாம் என மெக்கானிக் ஒருவரை வரவழைத்தேன்.



மாசிலாமணி என்கிற அந்த மெக்கானிக் வந்து சேர்ந்தார். மிக பருமனான உருவம். கட கட கடவென பேசுகிறார். இவரிடம் இந்த பேட்டி எடுக்கும் எண்ணமே இல்லை. அவர் பாட்டுக்கு டிவி சரி செய்ய, நான் வழக்கம் போல் புத்தகம் படித்துக் கொண்டு அரை தூக்கத்தில் தான் இருந்தேன். விடாமல் அவர் பேசியதில் கொஞ்சமாய் அவரிடம் பேசலானேன். பாதி தூரம் தாண்டியதும் " பேட்டிக்கான பொறி தட்ட" எழுந்து உட்கார்ந்து விட்டேன்.

இனி அவர் பேசியதில் இருந்து:

" நமக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை. சென்னைக்கு வந்து முப்பது வருஷம் ஆகுது. என்னை பாத்தா என்ன வயசு தெரியுது? "

" நாப்பது இருக்குமா சார்?"

மகிழ்ச்சியாகி " அம்பத்தி மூணு ஆச்சு. ப்ளஸ் டூ முடிச்சிட்டு டிவி மெக்கானிசம் டிப்ளமோ படிச்சேன். கல்கத்தாவில் இருக்கும் ஒரு டிவி கம்பனி அப்போ வேலைக்கு ஆள் எடுத்துது. அதோட சென்னை பிரானச்சில் நான் வேலைக்கு சேர்ந்தேன். இருபது வருஷம் அதே கம்பனியில் வேலை. அந்த கம்பனி மூடிட்டாங்க. அப்புறம் நானே சொந்தமா வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டேன். "

" எனக்கு ஒரே பொண்ணு. அதுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு தம்பி இருக்கான். எனக்கு பதினேழு வருஷம் கழிச்சு பிறந்தவன். அவனை மூணாவதில் இருந்து நான் தான் வீட்டில் வச்சி படிக்க வைக்கிறேன். அவன் எனக்கு பையன் மாதிரி தான். நிறைய பேர் அவனை என் தம்பின்னு நினைக்க மாட்டாங்க. பையன்னு தான் நினைப்பாங்க. அவனிடமே " உங்க அப்பா எங்கன்னு என்னை பத்தி கேட்பாங்க . இப்போ அவன் பெங்களூரில் இருக்கான்"

தன் மகளுடன் சேர்த்து தன் தம்பியையும் மகன் போல சொல்கிறாரே என ஆச்சரியமாய் இருந்தது !

" இப்போல்லாம் எல்லாரும் LCD டிவி தான் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க; LCD தவிர மற்ற டிவி எல்லாம் இனிமே படுத்துடும். இப்போ முப்பதாயிரத்துக்கு நல்ல LCD டிவி கிடைக்குது. போக போக இன்னும் விலை குறையும். லாஸ்ட் ரெண்டு வருஷத்தில் LCD டிவி விலை செமையா குறைஞ்சிருக்கு "

அவர் முதலில் டிவி ரிப்பேர் பார்த்த காலம் பற்றி கேட்க, " அப்போல்லாம் எங்களுக்கு ரொம்ப நல்ல மரியாதை இருந்தது. டிவின்னாலே மக்களுக்கு புதுசு இல்லையா? அப்படி புது விஷயம் சரி பண்ற ஆளுங்களை மரியாதையோடு பார்த்தாங்க. இப்போ அந்த மரியாதை எல்லாம் குறைஞ்சு போச்சு. இப்போ எல்லாரும் ஐ. டி கம்பனியில் சாப்ட்வேர் வேலை பார்க்க தான் விரும்புறாங்க. இப்போ TV-க்கள் ரொம்ப ரொம்ப அதிகமாகிடுச்சு. ஆனா மெக்கானிக்குங்க முன்பு இருந்த அளவு கூட இல்லை".

" முத முதல்லே டிவி வந்தப்போ தூர்தர்ஷன்லே ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் நிகழ்ச்சி இருக்கும். அப்புறம் டில்லி டிவி வந்துச்சு ; தமிழ் நிகழ்ச்சி முடிந்தவுடனே ஹிந்தி நிகழ்ச்சின்னு சொல்லி அதை காட்டுவாங்க. இப்போ எவ்ளோ சேனல். எவ்ளோ நிகழ்ச்சி ! ஆனா மக்கள் ஏன் தான் இவ்ளோ நேரம் டிவி பாக்குறாங்களோ தெரியலை ! ஏதோ டிஸ்கவரி சேனல் மாதிரி நமக்கு தெரியாத, நாம நேர்ல பார்க்காத விஷயம்னாலும் பரவாயில்லை. ஆனால் அதை எங்கே பாக்குறாங்க. வேற எதை எதையோ பாக்குறாங்க "

இந்த வேலைக்கு என்ன படிக்கணும் என்று கேட்டதற்கு " பிளஸ் டூ முடிச்சவுடன் இதுக்குன்னு டிப்ளமோ கோர்ஸ் இருக்கும். அதை படிக்கணும். அப்புறம் ஒரு டிவி கம்பனியிலோ அல்லது டிவி ரிப்பேர் கடையிலோ சேர்ந்து வேலை பார்த்து தொழில் கத்துக்கணும். அப்புறம் தான் தனியா கடை போடவோ அல்லது தானே தனியா வீடுகளுக்கு போய் ரிப்பேர் செய்வதோ முடியும்.

இந்த தொழிலுக்கு ரொம்ப முக்கிய விஷயம் பொறுமை. சில வேலைகள் சீக்கிரம் முடியும். சில விஷயம் ரொம்ப லேட் ஆகும். நாங்களும் டாக்டர் மாதிரி தான் சார். டாக்டர் எப்படி உடம்புக்கு என்னன்னு பார்த்து மருந்து தர்ராறோ அது மாதிரி நாங்க டிவிக்கு என்ன பிரச்சனைன்னு பார்த்து சரி செய்யணும். டாக்டர் கிட்டே நோயாளி வாய் திறந்தாவது என்ன பிரச்சனைன்னு சொல்லுவான். எங்களுக்கு அதுவும் கிடையாது. நாங்களே என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிக்கணும். அதான் நிறைய பொறுமை வேணும்னு சொன்னேன். பொறுமை இல்லாதவங்க இந்த தொழிலில் இருக்க முடியாது. கொஞ்ச நாளில் இது நமக்கு சரி படாதுன்னு ஓடிடுவாங்க "

கம்பனியில் இருந்து வரும் டிவி மெக்கானிக்குகள் பற்றி கேட்க, " இப்போல்லாம் கம்பனிகளில் பாலிடெக்னிக் அல்லது டிகிரி முடிச்ச ஆட்களை தான் எடுக்குறாங்க. அதுக்கு மேலே டிவி ரிப்பேர் படிப்பும் படிச்சிருக்கணும். முன்னே எல்லாம் வெறும் டிவி பற்றி டிப்ளமோ படிச்சால் போதும். இப்போ அப்படி இல்லை. நிறைய பேர் படிச்சு முடிச்சிடுறதால், டிப்ளோமா படிச்ச ஆட்களை தான் எடுக்குறாங்க. அவங்க எல்லாருக்கும் டிரெயினிங் தர்றாங்க. ஆனா எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஸ்கூலில் படிக்கிற எல்லாரும் நல்லா படிச்சிடுறாங்களா என்ன ? அங்கேயும் நல்லா படிக்காதவங்க இருப்பாங்க இல்லை? அப்படி தான். பெரிய கம்பனியில் இருந்து வரும் மெக்காநிக்கில் சில பேர் நல்லா இருப்பாங்க. சில பேர் ஒழுங்கா பாக்க மாட்டாங்க. நல்லா பாக்குற மெக்கானிக்கா இருந்தா கம்பனியில் டிவி ரிப்பேர் பண்ணுவது நல்லது தான் "

நீங்கள் ஏன் தனி கடை வைக்க வில்லை என்று கேட்க " மக்கள் தனி கடை வச்சிருந்தா படுத்தி எடுத்துடுவாங்க. எல்லாருக்கும் உடனே டிவி வேணும். எல்லாரும் அவசர படுத்துவாங்க. அதையெல்லாம் நான் நேரில் பார்த்துட்டு தான் கடை வைக்க கூடாதுன்னு விட்டுட்டேன். இப்போ பாருங்க. உங்க வீட்டுக்கே வந்து டிவியை நான் பாக்குறேன். இதே கடைன்னா, டிவி எடுத்துட்டு போக ஒரு செலவு, கொண்டு வர ஒரு செலவு. வீட்டில் வந்து ரிப்பேர் பார்த்தா இந்த செலவு மிச்சம் !"

"மெக்காநிக்குகளே குறைவு என்றால் உங்களுக்கு நிறைய டிமாண்ட் இருக்கும் இல்லையா? " என்று கேட்க, "அப்படி சொல்ல முடியாதுங்க; சில நேரம் வேலை இருக்கும். சில நேரம் இருக்காது. இதை ஒண்ணும் பண்ண முடியாது " என்றார்.

டிவி ரிப்பேர் செய்பவர்கள் வேறு என்ன ரிப்பேர் பார்ப்பார்கள் என்று கேட்டால் " முன்பு ரேடியோவும் சேர்த்து பார்த்தனர். இப்போ FM ரேடியோ 150 ரூபாய்க்கு கிடைக்குது. வாங்கி யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்டுடுறாங்க. யாரும் மறுபடி ரிப்பேர் செய்வதில்லை. டிவி தவிர இப்போ சி. டி பிளேயர் ஓரளவுக்கு ரிப்பேருக்கு வருது; அவ்வளவு தான்" என்றார்.

கலைஞர் தந்த டிவியை மக்கள் எப்படி உபயோகிக்கிறார்கள் என்று கேட்டதும் சிரித்து கொண்டே சொன்னார். " டிவி இல்லாதவங்க யாருமே இல்லீங்க. அதை ரெண்டாவது டிவின்னு யூஸ் பண்றாங்க. சில நேரம் இது மாதிரி டிவி ரிப்பேர் ஆகிட்டா அது சரி ஆகும் வரை மட்டும் அதை யூஸ் பண்றாங்க" என்றார்.

டிவி மெக்கானிக்குகள் குடும்பத்தை எப்படி சமாளிக்கிறார்கள் என்று கேட்டதும் " கம்பனியில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏழு அல்லது எட்டாயிரம் சம்பளம் இருக்கும். தனி கடை வைப்பவர்களும் சரி, என்னை மாதிரி வீட்டுக்கு போய் டிவி ரிப்பேர் செய்பவர்களும் சரி அதே அளவு தான் சம்பாதிப்பார்கள். எப்படியோ வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான் "

அவர் இருப்பது வாடகை வீடா என்று கேட்க, " இல்லை. வாடகை கொடுத்து எனக்கு கட்டுப்படி ஆகாது. என் தம்பி வாங்கின வீடு. அவன் பெங்களூரில் இருக்கான். அவன் வீட்டில் நான் இங்கே இருக்கேன்" என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

அவரை சந்தித்ததில் தம்பியை மகனை போல் எண்ணும் அண்ணன் - அண்ணனுக்கு குடியிருக்க தன் வீட்டை தந்துள்ள தம்பி என வித்தியாச மனிதர்களை அறிந்து கொள்ள எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது !
****
தொடர்புடைய பதிவுகள்:


சலவை தொழிலாளி வாழ்க்கை: அறியாத தகவல்கள்: இங்கு

கூர்க்கா வாழ்க்கை அறியாத தகவல்கள் : இங்கு

பெங்களூர் ஆட்டோ காரர் பேட்டி : இங்கு

38 comments:

  1. சார் எனக்கு ஒரு டவுட்டு.பத்திரிக்கையில் வந்ததை நீங்கள் எடுத்து வலைதளத்தில்போடுகிர்களா அல்லது உங்கள் சொந்த அனுபவத்தை பத்திரிக்கயிலும் வெளியிட்டு வலைதளத்திலும் பதிவு ஏற்றுகீர்களா? நீண்ட நாளாகவே இந்த சந்தேகம்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு சாதாரண மனிதர்களிடமும் நான் எடுக்கும் பேட்டி முதலில் அதீததிலும் பின் நம் ப்ளாகிலும் வெளியாகிறது. நன்றி ஆரிப்

      Delete
  2. மாசிலாமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  3. Anonymous8:46:00 AM

    உங்களுக்குள்ளே ஒரு சுவாரஸ்யமான நிருபர் ஒளிந்திருக்கிறார் :-)

    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. நிருபர் மீ? நன்றிங்கண்ணா (உங்களை பார்த்தப்ப, நான் பேட்டி ஏதும் எடுக்கலை பாத்தீங்களா? )

      Delete
  4. வித்யாசமான மனிதர்களை நீங்கள் அறிந்து கொண்டதுடன் எங்களையும் அறிய வைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. வித்தியாசமான மனிதரை அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி அமைதி சாரல் . நன்றி

      Delete
  6. //அவரை சந்தித்ததில் தம்பியை மகனை போல் எண்ணும் அண்ணன் - அண்ணனுக்கு குடியிருக்க தன் வீட்டை தந்துள்ள தம்பி என வித்தியாச மனிதர்களை அறிந்து கொள்ள எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது !//

    எங்களுக்கும் தான்!

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமைதி அப்பா

      Delete
  7. பேட்டி நிறைவாக இருந்தது.சுஜாதா அடிக்கடி டி.வி இல்லாத நாட்களை பற்றி சொல்லுவார் ,அது நினைவுக்கு வந்தது.நிறைய விஷயம் செய்யலாம்,முக்கியமாக குடும்பத்தோடு இன்னும் நிறைய பேசலாம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சீன கிரியேட்டர் நன்றி

      Delete
  8. டிவி வந்த புதுசுலே நாம் புக் பண்ணி வச்சுட்டுக் காத்திருக்கணும். ஆறுமாசமோ எட்டு மாசமோ கழிச்சு நமக்கு கடிதம் வரும் இன்ன இடத்துலே இவ்வளவு பணம் கட்டி சலான் எடுத்துக்கிட்டுப்போய் இன்ன இடத்துலே டிவி வாங்கிக்கோன்னு!!!!!1

    அதை வீட்டுலே கொண்டாந்து வச்சு ஆண்டெனா எல்லாம் போட்டுக் கனெக்‌ஷன் கொடுக்க மெக்கானிக் வருவார். ராஜ உபசாரம் அவருக்கு!!!!!!

    உங்க டிவி ரிப்பேர்காரர் சொன்னது அத்தனையும் உண்மை!!! பேட்டி அருமை!!!!

    ReplyDelete
    Replies
    1. அருமை டீச்சர் நன்றி

      Delete
  9. சூப்பர் பேட்டி.அந்த மெக்கானிக் நம்பரை கொடுங்க. வீட்டில ரிப்பேரான ஒனிடா டிவி ஒன்று ஒரு வருடமாக இருக்கிறது. கடைக்கு கொண்டு வந்து கொடுங்க சரி செய்கிறோம் என்று ஒரு மெக்கானிக் சொன்னதால் நீ கொண்டு போ நான் கொண்டு போ என்று அப்படியே இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நம்பர் உங்களுக்கு அனுப்பிட்டேன் பேசுங்க அமுதா

      Delete
  10. உஙுகள் பேட்டி மூலம் நாங்களும் நல்ல சகோதரர்களைப் பற்றி தெரிந்து கொண்டோம் நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நன்றி தொழிற் களம் குழு

      Delete
  11. //தானாகவே சரியாகும் என சில நாள் பொறுத்திருந்து //
    இதென்ன புத்ஸா இர்க்கு.... சொல்லவேயில்ல

    //டிவி பார்க்காமல் இருப்பது நல்லது தான் எனினும்//
    Yes, we can't use this for browsing Internet.. then y reparing...

    //அவர் பாட்டுக்கு டிவி சரி செய்ய, நான் வழக்கம் போல் புத்தகம் படித்துக் கொண்டு அரை தூக்கத்தில் தான் இருந்தேன். விடாமல் அவர் பேசியதில் கொஞ்சமாய் அவரிடம் பேசலானேன். பாதி தூரம் தாண்டியதும்//
    பாதி தூரம் = டிவி மெக்கானிக் வீட்டுக்கு வந்த ரெண்டாவது நிமிஷம்தான இது ?

    //ஏதோ டிஸ்கவரி சேனல் மாதிரி நமக்கு தெரியாத, நாம நேர்ல பார்க்காத விஷயம்னாலும் பரவாயில்லை. ஆனால் அதை எங்கே பாக்குறாங்க. //
    Nach..

    //அவரை சந்தித்ததில் தம்பியை மகனை போல் எண்ணும் அண்ணன் - அண்ணனுக்கு குடியிருக்க தன் வீட்டை தந்துள்ள தம்பி என வித்தியாச மனிதர்களை அறிந்து கொள்ள எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது !//
    For me too..

    ReplyDelete
    Replies
    1. //தானாகவே சரியாகும் என சில நாள் பொறுத்திருந்து //
      இதென்ன புத்ஸா இர்க்கு.... சொல்லவேயில்ல
      **
      சில நேரம் டிவி போட்டா வராது; பின் தானாவே சரியாகி வருமே. உங்களுக்கு இப்படி ஆனதில்லையா சார்?

      Delete
  12. நல்லதொரு பதிவு சார்... ஒருவரின் துறை சார்ந்த வாழ்க்கையை கொண்ஜெமே ஆயினும் நிறைவாகப் பகிர்ந்து உளீர்கள் மகிழ்ச்சி தொடருங்கள்

    ReplyDelete
  13. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    தினபதிவு திரட்டியின் சிறப்பு தினமும் பதிவர் பேட்டி
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
  14. டிவி மெக்கானிக் கொடி கட்டிப் பறந்த காலம் ஒன்று இருந்தது. என் உறவினர்/நண்பர் ஒருவருடன் பற்பல இடங்களுக்கு நானும் அவர் டூ வீலரில் சென்றுள்ளேன். அப்போது கிடைக்கும் மரியாதை...!

    ReplyDelete
    Replies
    1. //என் உறவினர்/நண்பர் ஒருவருடன் பற்பல இடங்களுக்கு நானும் அவர் டூ வீலரில் சென்றுள்ளேன்.//

      அப்படியா? நிறைய சுவாரஸ்ய அனுபவம் கிடைச்சிருக்கும் போல

      Delete
  15. உங்க வீட்டுக்கே வந்து டிவியை நான் பாக்குறேன். இதே கடைன்னா, டிவி எடுத்துட்டு போக ஒரு செலவு, கொண்டு வர ஒரு செலவு. வீட்டில் வந்து ரிப்பேர் பார்த்தா இந்த செலவு மிச்சம் !"
    >>
    எல்லாருமே இப்படி நினைச்சு நேர்மையா நடந்துக்கிட்டா பரவாயில்ல. அந்த நேர்மையான நபருக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்..,

    ReplyDelete
    Replies
    1. உங்க கிட்டேருந்து அதிசயமா சீரியஸ் கமன்ட் நன்றி

      Delete
  16. நீங்க பேட்டி ஸ்பெசலிஸ்ட் ஆகிட்டீங்கண்ணே........ எல்லாமே சுவராஸ்யமா வந்திடுது. பேட்டிகளை தொகுத்தே ஒரு புத்தகம் போட்டுடலாமே?

    ReplyDelete
    Replies
    1. அண்ணே நெசமாத்தான் சொல்றீங்களா? கலாய்க்கிறீங்களா ? நிசமா இருந்தா டேங்க்ஸ் அண்ணே

      Delete
  17. மிக அருமையான பேட்டி! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  18. நல்லதொரு பேட்டி. இவர்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரோஷினி அம்மா

      Delete
  19. சிறப்பான பேட்டி மோகன். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்

      Delete
  20. anna really superb interview. article padikirapa lakshmanan annan article padikira feeling vandudhu. yeliya manithargalin vaazhkaiyai potrum ungal manasuku vandhanam. thanks anna. manasa yennamo pannudhu unga writing style.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அன்பு. லட்சுமணனை நினைவு கூர்வது நெகிழ்த்துகிறது

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...