Sunday, October 14, 2012

தஞ்சை - சரஸ்வதி மஹால் + அரண்மனை - ஒரு பார்வை

ஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து நிமிட நடையில் சரபோஜி அரண்மனையையும், சரஸ்வதி மகாலையும் அடையலாம். இந்த இடத்தின் உள்ளே இரு அரண்மனைகளும், சரஸ்வதி மஹால் என்கிற நூல் நிலையமும் உள்ளது.



சரஸ்வதி மஹால்

ஆங்கிலேயர் காலத்தில், தஞ்சையில் மாவட்ட நீதிபதியாக இருந்த Dr A .C பர்னெல் என்பவர் தான் தஞ்சையில் உள்ள சம்ஸ்கிருத மொழி புத்தகங்களை எல்லாம் ஒரே இடத்தில் வைக்கலாம் என இந்த நூலகத்தை துவங்கியதாக வெளியே உள்ள சிறு கல்வெட்டு சொல்கிறது

தஞ்சையில் உள்ள அரசு கல்லூரி பெர்யர் "சரபோஜி கல்லூரி". தஞ்சையை ஆண்ட மன்னர் இவர். இவரை நினைவு கொள்ள தஞ்சை மக்களுக்கு இந்த கல்லூரி தான் பெரிதும் உதவுகிறது. அவரது உருவத்தை முதன் முறையாக சரஸ்வதி மகாலில் பார்த்தேன். அவர் படம் மட்டுமல்லாது இரண்டாம் சரபோஜி, துளஜாஜி, சிவாஜி என தஞ்சையை ஆண்ட மன்னர்கள் அனைவரின் ஓவியங்களும் இங்கு உள்ளது

கங்கையில் உள்ள 64 படித்துறைகள் , காசியில் உள்ள 64 படித்துறைகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது. பழங்கால துணி வகைகள் சில சாம்பிள்கள் வைக்கப்பட்டுள்ளது.

நாயக்க மராத்திய மன்னர்களின் கலை பொருட்கள் மற்றும் கண்ணாடியில் வரைந்த பல்வேறு ஓவியங்களும் இங்கு காண முடிந்தது.

சரஸ்வதி மகாலில் மற்றொரு விசேஷம் இங்குள்ள பழங்கால புத்தகங்கள். வெவ்வேறு மொழிகளில் உள்ள 4500 புத்தகங்கள் இங்கு உண்டு . இவை ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு தான் பயன்படுகின்றன. நாம் அவற்றை பார்க்க அனுமதி இல்லை. புத்தகங்கள் பார்க்க வேண்டும் எனில் என்ன காரணம், எது குறித்து ஆராய்ச்சி செய்கிறீர்கள் என கேள்விகள் கேட்டு, அதில் திருப்தி ஆனால் மட்டுமே புத்தகத்தை எடுத்து பார்க்க அனுமதிக்கின்றனர்.

படித்து விட்டு அங்கேயே வைத்து விட்டு செல்ல வேண்டுமே ஒழிய, எடுத்து செல்ல அனுமதி இல்லை.

சரபோஜி மன்னர் வாசித்த, அவர் சேகரித்த புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மனித முகத்திற்கும், விலங்கு முகத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் என பிரான்சை சேர்ந்த ஒருவர் வரைந்த படங்கள் விலங்கிலிருந்து மனிதன் எப்படி உருமாறி வந்தான் என்பதை காட்டுகிறது


சரஸ்வதி மகாலில் கோடை காலத்தில் ஓலை சுவடி வாசிப்பது எப்படி என கற்று தரும் சில கோர்சுகள் நடக்கிறது. 15 நாள் கோர்ஸ் ஆன இதற்கு ஆராய்ச்சி மாணவர்கள் நிறைய பேர் வந்து கலந்து கொள்வதாக தெரிவித்தனர்.

**********
சரஸ்வதி மகால் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால் அருகில் உள்ள அரண்மனையில் காமிரா டிக்கெட் வாங்கி விட்டு படம் எடுக்கலாம்.


நூற்றாண்டில் நாயக்கர்களால் தர்பாராக பயன்படுத்தப்பட்ட இடம் இது. தற்போதுள்ள வடிவத்தில் 1951 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. பழனிப்பன் என்கிற மாவட்ட ஆட்சி தலைவர் ஒருங்கிணைந்த தஞ்சையின் பல இடங்களில் இருந்து சோழர், மராட்டியர், நாயக்கர் பயன்படுத்திய பல்வேறு சிலைகளையும், செப்பு படிமங்களையும் கொண்டு வந்து இங்கே அமைத்துள்ளார். ஏழாம் நூற்றாண்டு காலம் முதல் பயன்படுத்திய பல்வேறு கலை பொருட்களும் இங்கு காண முடிகிறது



நுழைந்தவுடன் இரண்டாம் ராசராசன் தன் மனைவியுடன் இருக்கும் சிலையை காண முடிகிறது. ஒவ்வொரு சிலைக்கு கீழும் சிலை எந்த இதலிருந்து கிடைத்தது என்கிற தகவல் உள்ளது.

நுழைந்த கொஞ்ச தூரத்திலேயே அழகிய புல்வெளி நம்மை வரவேற்கிறது.




நடுவே முழுதும் ஓபன் ஆக இருக்கும் இந்த இடமும் அங்குள்ள தூண்களும் மதுரை நாயக்கர் மகாலை சற்று நினைவு படுத்துகின்றன.


முதல் மாடியில் மிக பெரும் திமிங்கிலம் ஒன்றின் எலும்பு கூடு உள்ளது. இதன் அருகில் உயிர் வாழும் உயிரினங்களில் மிக பெரியது திமிங்கிலம் தான் எனவும், இந்த திமிங்கிலத்துக்கு 400 வயது என்றும், இது 92 அடி நீளம் உடையது என்றும் தகவல்கள் பார்த்து வியந்து போனேன். இந்த திமிங்கிலம் எலும்பு கூடு மீன் இலாக்காவால் இனாமாக அளிக்கப்பட்டதாம்



மொத்தம் ஐந்து மாடிகள் உள்ள கட்டிடம் இந்த அரண்மனை. படிகள் செங்குத்தாக, சற்று ஏற சிரமம் ஆக தான் உள்ளது. வயதானவர்கள் ஏறுவது மிக சிரமம். வெவ்வேறு தளங்களில் பெரும் தூண்களை தவிர வேறொன்றும் இல்லை. அந்த தூண்களில் எல்லாம் மனிதர்கள் தங்கள் பெயரோ தம் காதலி பெயரோ அவளை குறித்த கவிதையோ எழுதி வைத்துள்ளனர். ஆங்காங்கு தஞ்சையின் காதல் ஜோடிகள் முகத்தை கட்டாமல் மறைந்து உட்கார்ந்து பேசுகிறார்கள்.

ஐந்து மாடியும் ஏறி விட்டு பார்த்தால் தஞ்சை நகரின் அழகை நன்கு ரசிக்க முடிகிறது.


இனிமையான காற்று உடலை நிறைக்கிறது. இறங்கி வந்த பின் தான் கால் கிடு கிடுவென நடுங்குகிறது !

தஞ்சை அரசு மருத்துவ மனையில் பிறந்து, அருகில் உள்ள நீடாமங்கலத்தில் வளர்ந்த, பிற்காலத்தில் தஞ்சையில் சில வருடங்கள் தங்கிய நான் முதல் முறை இந்த இரு இடங்களை பார்த்தேன் என்றால் நம்ப முடிகிறதா? என்ன செய்வது? அருகே இருக்கும் போது எதன் அருமையும் புரிவதில்லை.

தஞ்சை செல்ல வாய்ப்பு கிடைத்தால் அவசியம் இந்த இரு இடத்தை பாருங்கள் !
******
டிஸ்கி: தற்சமயம் தஞ்சையில் உள்ளேன். இப்பதிவு சென்ற முறை தஞ்சை வந்த போது எழுதப்பட்டது. :))

18 comments:

  1. வாய்ப்புக் கிடைத்தால், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருகே இருக்கும் ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கும் ஒரு முறை சென்று பார்த்து வாருங்கள். இங்கும் புத்தகங்களை வெளியில் எடுத்துச் செல்ல முடியாது, ஆனால் ஆராய்ச்சிக் குறிப்புக்களை அங்கேயே தங்கி எடுத்துக் கொள்ளலாம், பிரதி எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் தனியார், அரசு நூலகங்களில் மிகவும் அதிகமாகப் பயன்பட்டுக் கொண்டிருப்பது ஞானாலயா ஆய்வு நூலகம் ஒன்று தான்! மேலதிக விவரங்களுக்கு

    http://www.gnanalaya-tamil.com/

    ReplyDelete
  2. நண்பரே,

    நான்கு வருடங்களுக்கு முன்பு சென்ற இடம். அற்புதமான இடங்களில் ஒன்று. தங்கள் பதிவு சிறப்பு. வாய்ப்பிருந்தால் தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளையும் பார்த்துவிடவும்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  3. படங்களுடன் தந்திருக்கும் தகவல்கள் அனைத்தும் நன்று.

    ReplyDelete
  4. நானும் தஞ்சையில் அத்தனை வருடங்கள் இருந்துள்ளேன். ஆனாலும் இந்த இடம் பார்த்ததில்லை. (என்ன பெருமை!) சரபோஜி கல்லூரி அருகிலிருந்த (பழைய) ஹவுசிங் யூனிட்டில்தான் குடியிருந்தோம்!

    ReplyDelete
  5. பெரிய கோவில் மட்டுமே பார்த்தது. புத்தகங்களில் படிக்கும்போது சரஸ்வதி மகாலுக்கு போகனும்ன்னு ஆவல் வரும். மீண்டும் வந்திருக்கு. பார்ப்போம்... கால ஓட்டத்தில் போக முடியுதான்னு

    ReplyDelete
  6. அருமை! அப்ப நான் எழுதவேணாமுன்னு சொல்லுங்க:-))))

    ReplyDelete
  7. வாவ், அந்த கடைசி ஃபோட்டோ சூப்பர் மோகன்...தூரத்தில் தெரிவதுதான் பெரிய கோயில் என்று நினைக்கிறேன், சரியா?

    ReplyDelete
  8. Ragu: Yes. That is Big temple at Tanjore.

    ReplyDelete
  9. போட்டோக்களும் அதன் தகவல்களும் அருமை மக்கா...! நன்றி...!

    ReplyDelete
  10. நானும் சென்றிருக்கேன்.. அரசர் கோட்டை. எல்லோரும் அசர, நான் மட்டும் மேல் வரை சென்று காற்று வாங்கிவந்தேன். அற்புதமான அனுபவம்.

    ReplyDelete
  11. Histry nower forget .good news.

    ReplyDelete
  12. நல்ல தகவல்கள். வாய்ப்பு கிடைக்கும் போது செல்ல வேண்டும்.

    ReplyDelete
  13. நான் சுமார் நானூறு முறைக்கு மேல் இந்த இடங்களை சுற்றி இருக்கிறேன்.

    நான் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் தான் படித்தேனாக்கும். ஹி ஹி ஹி ...

    படங்களும் பதிவும் அருமை.

    ReplyDelete
  14. தஞ்சை சரஸ்வதி மஹால் பற்றிய அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  15. படங்களும் தகவல்களும் அருமை. தேசிங்கு ராஜன் அரண்மனையும் அருகில்தானே இருக்கு.

    ReplyDelete
  16. \\முதல் மாடியில் மிக பெரும் திமிங்கிலம் ஒன்றின் எலும்பு கூடு உள்ளது. இதன் அருகில் உயிர் வாழும் உயிரினங்களில் மிக பெரியது திமிங்கிலம் தான் எனவும், இந்த திமிங்கிலத்துக்கு 400 வயது என்றும், இது 92 அடி நீளம் உடையது என்றும் தகவல்கள் பார்த்து வியந்து போனேன். இந்த திமிங்கிலம் எலும்பு கூடு மீன் இலாக்காவால் இனாமாக அளிக்கப்பட்டதாம்\\ Everything is fine, but where is the photo of this whale skeleton??

    ReplyDelete
  17. படங்களும் பதிவும் பாராட்டுக்குரியன எப்போதோ பார்த்து நினைவு கூர்ந்தேன் நன்றி!

    ReplyDelete

  18. தஞ்சை - சரஸ்வதி மஹால் + அரண்மனை - ஒரு பார்வை
    திரு மோகன் குமார் அவர்களின் பதிவு மிகவும் பயனுள்ளது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பரே, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வருகை தர வேண்டுகிறேன்.
    இந்த பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு மோகன் குமார்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...