இப்பதிவு வெளியிடப்படும் நேரம் சென்னையில் மழை பொத்து கொண்டு ஊற்றுகிறது. நீலம் புயல் எந்நேரமும் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் நம்ம "சமூக கடமை"யை ஆற்றாமல் இருக்கமுடியுமா? இதோ வானவில் ..
வாசித்ததில் பிடித்த செய்தி
தூத்துக்குடி நகரத்தின் நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனங்கள் இருந்தால், காவல் துறை அதிகாரிகள் வித்யாசமான முறையில் அதை கையாளுகிறார்கள். வாகனங்களில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறார்கள். அதில் " பண்பாளர்களே ! போக்குவரத்துக்கு இடையூறாய் இப்படி வாகனம் நிறுத்துவது சரியா? என்று எழுதப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஒட்டப்படும் ஸ்டிக்கர் மீண்டும் எளிதில் அகற்ற முடியாத படி இருப்பதால், அந்த வாகனங்கள் ஒரு முறை போக்குவரத்து விதிகளை மீறியவை என்பதும் தெளிவாக தெரிகிறது.
இந்த நடவடிக்கையால் அந்த வாகனங்கள் மட்டுமல்ல, பிற வாகனங்களும் விதிகளை மீறுவது குறைகிறதாம். மாற்றி யோசி என்பதை நிஜமாவே செஞ்சுருக்காங்கப்பா ! பாராட்டுகளும் வாழ்த்துகளும் !
அழகு கார்னர்
பொண்ணு மூக்கும் முழியுமா இருக்குன்னு சொல்லுவாங்களே... அது இது தான்...
வருடத்துக்கு ஒரு அட்டகாசமான தமிழ் படத்தில் நடித்திடுறார் இந்த அம்மணி. சென்ற வருடம் இவர் நடித்த குள்ள நரி கூட்டம் பார்த்த போதே அய்யாசாமி கிளீன் போல்ட். இவரது இந்த வருட ஹிட் பிட்சா ! இன்னும் பார்க்கலை.. இவருக்காகவே பார்க்கணும் !
சம்பவம்
வேளச்சேரி விஜயநகர் பஸ் ஸ்டாண்ட் தாண்டி என் அலுவலகம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருக்கிறேன். முன்னே வேகமாக ஓடும் பஸ்ஸிலிருந்து திடீரென ஒருவன் மல்லாக்க விழுந்தான். என் பைக்கிற்கு சற்று முன்னே ஒருவன் இப்படி திடீரென விழுந்து மிரள மிரள விழிக்க வண்டியை ஓரம் கட்டினேன். அதற்குள் சைக்கிளில் சென்ற ஒருவர் ஓடி போய் தூக்கினார். பின் மண்டையில் ரத்தம் வருதா என உற்று பார்த்து விட்டு மிக வேகமாக அந்த இடத்தை தேய்த்து விட்டார். அருகிலிருந்த கையேந்தி பவன் கடைக்காரர் ஓடி வந்து தண்ணீர் கொடுத்தார். அவன் சென்ற பஸ் அவன் விழுந்ததும் நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு நண்பன் மட்டும் இறங்கி இவனருகே வந்து விட்டான். பெரிய அடி இல்லை என தெரிந்ததும் பஸ் இவர்களை விட்டு விட்டு சென்று விட்டது.
எந்த கல்லூரி என்றால் ஒரு கிலோ மீட்டரிலிருக்கும் குருநானக் என்றனர். " மண்டை உடைஞ்சா என்ன ஆறது? உள்ளே போனாதான் என்ன?படிக்கட்டில் தான் தொங்கணுமா?" என ஆள் ஆளுக்கு அட்வைஸ் செய்ய, இரு மாணவர்களும் ஏதும் பேசாமல் கல்லூரி நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
எனக்கு ஆச்சரியமாய் இருந்த விஷயம் ஒருவன் ரோடில் விழுந்ததும் உதவ பலர் ஓடி வந்தது தான். இன்னும் மனிதகளிடம் இரக்கம் எங்கோ ஓரத்தில் இருக்கிறது போலும் !
கிரிக்கெட் கார்னர்
சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் போட்டி அதிக வரவேற்பின்றி நடந்து முடிந்துள்ளது. சென்னை, மும்பை, டில்லி, கல்கத்தா ஆகிய ஐ. பில் எல் அணிகள் சென்றாலும் டில்லி மட்டும் தான் செமி பைனல் வரைக்குமாவது வந்தது. நம்ம ஐ. பி. எல் கிங்குகள் எல்லாம் இந்திய மண்ணில் தான் வெளுப்பார்கள் போலும் ! ஆஸ்திரேலிய அணியான சிட்னி சிக்சர் இந்த கோப்பையை வென்றது. இத்தனைக்கும் பாட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் படி அங்கு யாரும் இல்லை !
அடுத்து இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகள் தொடங்குகிறது. சச்சின் இதிலாவது ஏதாவது உருப்படியாய் contribute செய்கிறாரா என பார்ப்போம் !
கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு நோ திருமணம் !
" கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு எந்த பெண்ணும் மணமகளாக செல்ல கூடாது" என்று திருவாய் மலர்ந்துள்ளார் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ். இது எந்த அளவு சாத்தியம், நாட்டில் கழிப்பறை இல்லாத வீடுகள் எத்தனை கோடி, கிராமத்து மண பெண்ணுக்கு இதை சொல்லுமளவு உரிமை தரப்பட்டுள்ளதா என பல கேள்விகள் எழுகிறது.
நிற்க. வீடுகளை விடுங்கள். நம் நாட்டில் போதுமான அளவு பொது கழிப்பிடங்கள் உள்ளனவா? அவை ஒழுங்காய் பரமாரிக்கப்படுகிறதா? சமீபத்தில் வெளியில் சென்ற போது, பொதுகழிப்பிடம் தேடி நெடு நேரம் அலைந்து திரிந்து கடைசியில் ஒரு மருத்துவ மனையில் நைசாய் உள்ளே போய் வேலையை முடித்து விட்டு வர வேண்டியதாயிற்று.
பொது சுகாதாரம் என்கிற விஷயத்தில் இந்தியா செல்ல வேண்டிய தூரம் ஏஏஏஏஏஏராளம் !
பதிவர் பக்கம்
இருவர் உள்ளம் என்கிற தலைப்பில் ப்ளாக் எழுதுகிறார் ஒரு நண்பர். ப்ளாகின் லிங்க் இதோ
உடல் நலம் குறித்த தகவல்கள் இவர் ப்ளாக் முழுதும் கொட்டி கிடக்கிறது. பல்வேறு காய்கள், பழங்கள் இவற்றின் பலன்கள் மற்றும் சிறு சிறு வியாதிகள் போக என்ன செய்யலாம் என்பது போன்ற தகவல்களுக்காகவே இந்த ப்ளாக் இயங்குவது நல்ல விஷயம். வாசித்து பாருங்கள் !

போஸ்டர் / QUOTE கார்னர்

தூத்துக்குடி போக்குவரத்து போலீசார் உத்தி புதுமை அருமை.. வானவில் அழகு சார்
ReplyDeleteநன்றி சீனு
Deleteவானவில் - சிறப்பாக இருக்கிறது.
ReplyDeleteதூத்துக்குடி போக்குவரத்து போலீசார் பாராட்டுக்குரியவர்கள்.
போஸ்டர் கார்னர் - நல்ல Quote....
மொத்தத்தில் சிறப்பான வானவில்.
நன்றி வெங்கட்
Delete//நம் நாட்டில் போதுமான அளவு பொது கழிப்பிடங்கள் உள்ளனவா? அவை ஒழுங்காய் பரமாரிக்கப்படுகிறதா? //
ReplyDeleteஇதைவிட கொடுமை, நாம் வல்லரசு என்ற கனவில் இருப்பது தான்! முதல்ல இத பாருங்கப்பா. இதெல்லாம் இருந்தா தானா நல்லரசாயிடலாம்.
ஆம் பந்து :((
Deleteநன்றாகவே மாற்றி யோசித்திருக்கிறார்கள் காவல்துறையினர்.
ReplyDelete
Deleteராமலட்சுமி மேடம்: உங்க ஊர் பக்கம் ஆயிற்றே :)
//பொது சுகாதாரம் என்கிற விஷயத்தில் இந்தியா செல்ல வேண்டிய தூரம் ஏஏஏஏஏஏராளம் !//
ReplyDeleteசத்தியமான உண்மை!
சுருக்கமாச் சொன்னால் வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம்.
டீச்சர்: மிக சரியாய் சொன்னீர்கள்
Deleteவீட்டுக்கொரு கழிப்பறை அவசியம்தான்
ReplyDelete
Deleteநன்றி கண்ணதாசன்
ஒ இது தான் மூக்கும் முழியுமா ?
ReplyDelete//. நீலம் புயல் எந்நேரமும் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் நம்ம சமூக கடமையை ஆற்றாமல் இருக்கமுடியுமா? இதோ வானவில் .. //
மழை வந்தால் வானவில் வரத் தானே செய்யும் கலக்குங்க
//ஒ இது தான் மூக்கும் முழியுமா ?// Prem, இல்லியா பின்னே :))
Delete//வாகனங்களில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறார்கள்.//
ReplyDeleteநானும் இந்த செய்தியை வாசித்தேன். காவல் துறையினர் இந்த அளவுக்கு நாகரிகமா நடந்துப்பாங்களான்னு ஆச்சரியமா இருந்தது. ஹாட்ஸ் ஆஃப்!
//அழகு கார்னர் //
ஆரவாரமில்லாத சிம்பிள் ப்யுட்டி..
//சச்சின் இதிலாவது ஏதாவது உருப்படியாய் contribute செய்கிறாரா என பார்ப்போம் !//
அணியிலிருந்து கெளரவமாக வெளியேறவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு...பார்ப்போம்..
//நம் நாட்டில் போதுமான அளவு பொது கழிப்பிடங்கள் உள்ளனவா?//
என்றைக்காவது நேரம் கிடைத்தால், ஒரு காலை வேளையில் (5:30 AM - 6:30 AM), தாம்பரம் to பீச் ரயிலில் போய் பாருங்க மோகன்....ரயில் கடக்கும்போது சில இடங்களில், கடைசி ட்ராக் ஓரத்தில், ஒரு சிலர் நின்று கொண்டிருப்பார்கள்....பெண்கள், குழந்தைகள் உட்பட....:-(
//ஆரவாரமில்லாத சிம்பிள் ப்யுட்டி..//
Deleteஎப்ப பார்த்தாலும் போட்டிக்கு வந்துருவாரு ரகு :)
சாம்பியன்ஸ் லீக் படு போர் சார் .சுத்தமாக இந்த ஆண்டு அது ஒரு தோல்வி தான்.மற்றபடி நம்ம ஐபி.எல் அணிகள் ஆடும்போது மழை ஒரு பெரிய விஷயமாக இருந்து சம புள்ளிகள் பகிர்ந்து அளிக்க பட்டது.எனினும் எந்த ஐ.பில் அணியும் சரியாக ஆடவில்லை என்பதும் உண்மைதான்.கொல்கத்தா மட்டுமே மோசமாக ஆடியது .சென்னை பரவாயில்லை .
ReplyDeleteஆம் சீன் கிரியேட்டர். நல்ல அனாலிசிஸ் !
Deleteவானவில் சுவாரசியம்.
ReplyDeleteதுத்துகுடி போலீஸ்காரர்களின் யோசனை பாராட்டுக்குறியது.
போஸ்டர் கார்னர் சிறப்பாக இருக்கு.
நன்றி ராம்வி
Deleteவானவில் மிகவும் அருமை.
ReplyDeleteபோலீஸ்காரர்களின் யோசனை பாராட்டப்பட வேண்டியது.
அழகு கார்னர் மிகவும் அழகாகவே உள்ளது.
வாங்க தொழிற் களம் நன்றி
Deleteபோக்குவரத்து போலீசார் பாராட்டுக்குரியவர்கள்.
ReplyDelete
Deleteஆம் சரவணன் நன்றி
கழிவறை இல்லாத வீடுகளுக்கு மருமகளாப்போக வேண்டாம்.. இந்த அளவிற்கு வந்தாச்சா.? நல்ல விஷயம்தான்
ReplyDeleteநாடு மாறினாலும் மக்கள் மாறவேண்டுமே.. ! அங்கே உள்ள ஒருவர் (தெரிந்தவர்) சொல்கிறார் இப்படி, குடும்பம், சாமியறை, சமையலறை, குழந்தைகள் இருக்கும் வீட்டில் கழிப்பறையா!? அசிங்கமா இல்லை. அதுக்கு காத்தால வயல் பக்கம் போனா ஆச்சு, என்கிறார்கள் சாதரணமாக ... எனக்கு மயக்கமே வந்தது. நம் வீடு தூய்மையாக இருந்தால் போதும், நாடு நாட்டு மக்கள் எப்படியாவது போகட்டும் என்கிற சிந்தனை இருக்கும் வரை எதுவும் சரிபட்டு வராது.
தமிழ்நாடு வந்தால், நிறைய தலங்களுக்குச் செல்வது வழக்கம். அப்ப்டிச்செல்லுகையில் எங்களின் பிராத்தனை என்னவாகும் இருக்கும் தெரியுமா? ஹோட்டல் சென்று சேரும் வரை, கலக்காமல் இருக்கவேண்டும் என்பதுதான் காரணம் பொது கழிப்பிடங்களின் கோர நிலை. கட்டன கழிப்பிடங்களும் மோசமே.
உண்மை தான் விஜி நன்றி
Deleteவானவில் அருமை.
ReplyDeleteதூத்துக்குடி போலீசாரின் மாத்தி யோசி நடவடிக்கை பிரமாதம்.
கோட் கார்னர் நல்லா இருக்கு.
கழிப்பறைகள் பற்றிய விழிப்புணர்வு எல்லா இடத்திலும் வர வேண்டும்...
விரிவான கருத்துக்கு நன்றி ரோஷினி அம்மா
Deleteமும்பையில் ‘காந்திகிரி’ என்று போக்குவரத்து மீறல் செய்பவர்களுக்கு பூச்செண்டு கொடுத்து வெட்கப்பட வைத்தார்கள். அதைவிட இது நல்ல வழிமுறையாகத் தோன்றுகிறது.
ReplyDeleteபொதுக் கழிப்பிடங்களை மக்கள் சரியாக உபயோகிப்பதும் இல்லையே. (பொது) கழிவறைகளுக்கு வெளியிலேயே அசிங்கம் செய்கிறார்கள். ஜெயராம் ரமேஷ் ‘நாட்டில் ஆலயங்கள் கட்டுவதை விட கழிவறைகள் கட்டுவது முக்கியம்’ என்று கூறினார். இதன் முக்கியத்துவத்தைக் கூட புரிந்து கொள்ளாத பா.ஜா.க. செய்தி தொடர்பாளர் அவர் மக்களின் மனதைப் புண்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். இதில் மக்களின் அத்யாவசியத் தேவையை விட அரசியல் செய்வதில் எதிர்கட்சி முனையும் அளவிற்கு அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
ரம்யா நம்பீசன் ’ராமன் தேடிய சீதை’ படத்திலேயே வந்தாரே. ஆனால், அதில் நடித்த நான்கு கதாநாயகிகளில் முக்கிய கதாநாயகி விமலா ராமன் தான் அழகாக இருந்தார் (!).
வானவில் நல்ல கலவை...
//மக்களின் அத்யாவசியத் தேவையை விட அரசியல் செய்வதில் எதிர்கட்சி முனையும் அளவிற்கு அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.//
Deleteஆம் :((
விமலா ராமன்?
!!!
ரம்யா ஒரு பாட்டில் பீட்சாவில் அசத்தலாக உள்ளார். அதிகம் இந்த படத்தில் வரவில்லை. இருவர் உள்ளம் நல்ல உபயோகமான பதிவுகள் உள்ளன.
ReplyDeleteநன்றி ; படம் பாக்கணும்
Deleteவானவில் சுகம்.
ReplyDelete