ரோடங் பாஸ் குளிர் காலத்தில் மூடி விடுவார்கள். ரோடு முழுதும் பனி இருப்பதால். கோடையில் தான் திறப்பார்கள். அப்போதும் சில நேரம் பனி அதிகம் இருந்தால் ரோடங் பாஸ்க்கு சற்று முன் வரை தான் அனுமதிப்பார்கள் எங்களுக்கும் அப்படி தான் நிகழ்ந்தது
மடி என்கிற இடத்துடன் எங்களை நிறுத்தி விட்டனர். அதன் பின் ஐஸ் கட்டிகள் தரையில் இருக்கும் என்பதால் வாகனங்கள் வழுக்கி பள்ள தாக்கில் விழும் அபாயம் உண்டு. சில வாகன ஓட்டிகள் அதிக பணம் வாங்கி கொண்டு செல்ல தயார் எனினும் ரிஸ்க் வேண்டாம் என நாங்கள் ரோடங் பாஸ் வரை செல்ல வில்லை.அதனால் என்ன அங்கு சென்றும் ஐஸ் கட்டி தானே பார்க்க போகிறோம்? அதை இங்கேயே பார்த்தோம்
செல்லும் முன்னரே சென்னையில் இருந்து சென்று வந்த நண்பர்கள் அதிகாலை எழுந்து சென்று விடுங்கள் இல்லா விடில் கூட்டம் ஆகிடும் என்றனர். போலவே எங்கள் டிரைவர்களும் அதுவே கூறினர்.
நாங்கள் ஐந்து மணிக்கு காரில் கிளம்பினோம் அடுத்த ஒன்னரை மணி நேர பயணத்துக்கு பின் பனி கட்டிகள் இருக்கும் மடி & ஸ்னோ பாயிண்ட்டை அடைந்தோம்
ஹவுஸ் பாஸ்/ பூக்கள் கார்னர்
மடி என்கிற இடம் முதலில் அடைந்தோம் செம குளிர். சிகெரெட் குடிக்காதோர் கூட சிகரெட் அடிக்கலாமா என நினைக்க வைக்கும் அளவு குளிர் (எப்படியோ கொஞ்சம் சூடு கிடைத்தால் போதும் என்று இருக்கிறது)
மடியில் எடுத்த வீடியோ இது :
பின் அங்கிருந்து இறங்கி ஸ்னோ பாயின்ட் வந்தோம். இங்கு தான் பனிக்கட்டி சார்ந்த விளையாட்டுகள் உண்டு. உங்களை அமர்த்தி அவர்கள் இழுத்து செல்லும் Sledging , டியூபில் நாம் வழுக்கி கொண்டு வந்து விழும் விளையாட்டு இப்படி நிறைய விளையாட்டுகள் !
மணாலி போக எண்ணுவோரும், பனிக்கட்டி விளையாட்டு பற்றி கொஞ்சம் அறியவும் அவசியம் காண வேண்டிய வீடியோ இது:
இங்கு ஒன்னரை மணி நேரம் செமையாக விளையாடினோம். உயரத்தில் இருப்பதால் மூச்சு விட சற்று சிரமம் ஆக உள்ளது. ஆனால் சிறு குழந்தைகள் உட்பட யாருக்கும் ஜலதோஷம் பிடிக்க வில்லை.
ஸ்னோ பாயிண்டில் மிக குளிர்கிறதே என சோளம் விற்பவரிடம் கையை காட்டி குளிர் காய்கிறோம்
|
இறங்க காத்திருக்கும் வண்டிகள்
|
நெடு நேரம் காத்திருக்க நேரிட்டால் நேரமாகிறதே என வருந்தாமல் பனி படர்ந்த அந்த மலைகளையும் அந்த சூழலையும் ரசிப்பதே நலம்
மணாலி செல்வோர் கண்டிப்பாக, கண்டிப்பாக செல்லவேண்டிய இடம் இது. இங்கு செல்லா விடில் மணாலி சென்றது வேஸ்ட்.
பனிக்கட்டியில் விளையாட்டு
|
பனிக்கட்டி விளையாட்டை காண, மீண்டும் அனுபவிக்க எழும் ஏக்கத்தோடு இப்பதிவை நிறைவு செய்கிறேன் !
வணக்கம்...குளு குளு குல்லா பயணம்...
ReplyDeleteநானும் ஓசியில் குளு, மனாலி போய்ட்டு வந்துட்டேன் :-) நன்றி!
ReplyDeleteபடங்கள் ரசித்தேன் :-)))
ReplyDeleteஆமினா said...
ReplyDeleteநானும் ஓசியில் குளு, மனாலி போய்ட்டு வந்துட்டேன் :-) நன்றி!
>>
ஆமி, உனக்கு கமெண்ட் போடவே தெரியலை. ஐ இந்த இடத்துக்குலாம் எங்க மோகன் அண்ணா ஓசில டூர் கூட்டி போகப் போறார், அதுக்கு அண்ணனுக்கு நன்றின்னு சொல்லனும்ப்பா
அண்ணே! நீங்க தெலுங்கு ஆக்டர்சுக்கு ட்ரெஸ் வடிவமைக்க போகலாம்ண்ணே
ReplyDeleteஅருமையான காட்சிகள்.சுவாரஸ்யமான வீட்டீயோபடங்கள்.நேரில் பார்த்து விட்டு வந்தது போல் உணர்வை ஏற்படுத்தி விட்டன.
ReplyDeleteஅருமையான படங்கள், உங்கள் மகிழ்ச்சி எங்களுக்கும் ஒட்டி கொண்டது....போக வேண்டும் ஒரு நாள் !!
ReplyDeleteஸ்ஸ்.. அப்ப்பா.. குளிரடிக்குது!!!!!!!!
ReplyDeleteஅருமையான பகிர்வு...நல்ல தகவல்கள்.
ReplyDeleteஇங்கே அடிக்கும் வெயிலுக்கு படங்கள் இதமாக உள்ளது... தகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteபடங்கள் எல்லாம் நல்லாருக்கு மோகன் சார் முதல் படத்தை பார்க்கும் போது வெள்ளி பனி மலையின் மீதுலவுவோம் என்று சொல்ல தோன்றுகிறது
ReplyDeleteரொம்ப அருமையா இருக்கு.. எங்கும் வெள்ளை நிழல் படிந்தது போல பார்க்க பார்க்க தெவிட்டவில்லை... படங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார்
ReplyDeleteபார்த்தலே குளிருது!சுற்ரிக்காட்டியமைக்கு நன்றி
ReplyDeleteபடங்களைப் பார்த்தாலே நல்லா எஞ்சாய் செஞ்சுருப்பீங்கன்னு தோணுது :-))
ReplyDeleteSSShhhh.... ஜில்லுனு இருக்கு,,,
ReplyDeleteஅருமையான இடம். பார்க்கக் கிடைத்தது. நன்றி.
ReplyDeleteகுளுமனாளிக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கு. ஐஸ் ஏன் பழுப்பு கலர்ல இருக்கு? ரோஜா படத்துல காட்டினா மாதிரி உஜாலா வெள்ளை எங்கே இருக்கும்?
ReplyDeleteகுளு மணாலி செல்ல எங்களுக்கும் ஆசை வந்துவிட்டது.
ReplyDeleteபனி (snow) யாருக்குதான் பிடிக்காது?
ReplyDeleteஎல்லோரும் அஞ்சி நடுங்கும், அமெரிக்காவின் Refrigerator என்று சொல்லப்படும் மினசோட்டா மாகாணத்தில் மூன்று ஆண்டுகள் முழுதும் பணியுடனே(snow) வாழ்ந்திருந்தும் தங்கள் பதிவு மீண்டும் அங்கு செல்ல மாட்டோமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
ஓசியிலே குளுமணாலி போய் வந்தாச்சு
ReplyDeleteஎங்களை எல்லாம் வீட்டில் இருந்து கொண்டே குளு மனாலி போய் வந்த அனுபவம் தந்தமைக்கு நன்றி.
இந்த இடங்களைக் காணும்போது சிலபல இந்திபடப் பாடல் காட்சிகளின் லொகேஷன்கள் நினைவுக்கு வருகின்றன!
ReplyDeleteஅருமையான வீடியோ காட்சிகள்! தங்கள் பதிவு என்னையும் பார்கத்தூண்டின! ஆனால் இயலுமா ? என்பதுதான் கேள்வி!
ReplyDeleteகோவை நேரம்: உலகம் சுற்றும் வாலிபரே: நீங்க இந்த இடம் நிச்சயம் போவீங்க என நினைக்கிறேன்
ReplyDeleteஆமினா: நன்றிங்க. ராஜி கூட சேராதீங்க :)
ReplyDelete
ReplyDeleteநன்றி ஜெய்
ReplyDeleteராஜி said...
அண்ணே! நீங்க தெலுங்கு ஆக்டர்சுக்கு ட்ரெஸ் வடிவமைக்க போகலாம்ண்ணே
****
அலோ ! இப்படி வித்தியாச கலர் போட்டதால தான் எங்க குருப் ஆளுங்க எல்லாரும் கூட்டத்தில் நம்ம டிரஸ் கலர் வச்சு ஈசியா தேடி வந்துட்டாங்க தெரிமா?
நன்றிங்க ஸாதிகா
ReplyDeleteசுரேஷ் குமார்: வாங்க நன்றி
ReplyDelete
ReplyDeleteஉமா: வீடியோ பார்த்தீங்க போல :)
நன்றி கோவை டு தில்லி
ReplyDelete
ReplyDeleteதனபாலன் : நன்றி
ReplyDeleteசரவணன் சார் நன்றி
ReplyDeleteவாங்க சமீரா நன்றி
ReplyDeleteகுட்டன்: வணக்கம் நன்றி
அமைதி சாரல்: ஆமாங்க. மிக என்ஜாய் செய்த சில இடங்களில் இந்த ஸ்னோ பாயின்ட்டும் ஒன்று
ReplyDeleteதொழிற்களம் : மிக நன்றி நண்பா
ReplyDeleteமாதேவி: நன்றிங்க
ReplyDeleteJayadev Das said...
ReplyDeleteஐஸ் ஏன் பழுப்பு கலர்ல இருக்கு?
**
இதுக்கு எதோ ஒரு காரணம் சொன்னாங்க. மறந்துட்டேன். போயிட்டு வந்து ரெண்டு மூணு மாசம் ஆகிடுச்சு இல்ல?
ரைட்டு முரளி சார்; பிளான் பண்ணி போயிட்டு வாங்க
ReplyDeleteநல்ல பின்னூட்டம் நன்றி ஆதிமனிதன்
ReplyDeleteவாங்க அசீம் பாஷா நன்றி
ReplyDeleteஸ்ரீராம்: சரியா சொன்னீங்க. காஷ்மீர் என்று சொல்லிவிட்டு காட்டும் பல படங்கள் இங்கு எடுப்பவை தான். ரோஜா உட்பட
ReplyDeleteராமானுசம் ஐயா : நன்றி. நல்ல துணை இருந்தால் சென்று வரலாம் ஐயா
ReplyDeleteநல்ல படங்கள்/காணொளிகள்....
ReplyDeleteவிவரங்களும் அருமை....
தொடரட்டும் பயணக் கட்டுரைகள்.