விஜய் டிவி யும் புது படங்களும்
ஒரு புது படம் டிவி யில் போட்டால் எவ்வளவு நாள் கழித்து மறுபடி அதே படத்தை போடலாம்? ஆறு மாசம்? ஒரு மாசம்? ஒரு வாரம்? போட்ட மறு நாளே போடுறாங்க சார் விஜய் டிவி யில் ! மெரீனா படம் இந்த ஆயுத பூஜை அன்று போட்டனர். மறுபடி அடுத்த நாளே வேறு புரோகிராம் இல்லாமல் மீண்டும் மெரினாவை ஓட விட்டார்கள் ! அம்மா - ஐயா இருவர் சார்பின்றி இருக்கு என விஜய் டிவி பக்கம் ஒதுங்கினால் அங்கும் இப்படி ஒரு கொடுமை நடக்குது !!
இதே விஜய் டிவியில் போட்ட இன்னொரு புது படம்: தோனி ! இதுக்கு என் பெண்ணோட கமன்ட்: விஜய தசமி அன்னிக்கு படிக்கணும்ன்னு சொல்லுவாங்க. இவங்க என்னா படிக்க வேண்டாம்னு மெசேஜ் சொல்ற படத்தை இன்னிக்கு போடுறாங்க !"
"ஆஹா ! வா பெண்ணே வா.. வருங்கால ப்ளாகர் ஆகி சமூக பங்காற்று ! அந்த கெப்பாசிட்டி உன்கிட்டே இருக்கு" என்று சொல்லி, வாங்கி கட்டி கொண்டேன் !
ஜெயா டிவியில் மின் பற்றாக்குறை"
முதல்வர் அம்மா ஜெயா டிவியில் வந்து "மின் பற்றாக்குறை" (மின்வெட்டு இல்லிங்களாம்;மின் பற்றாக்குறையாம் ) பற்றி நிறைய பேசினார். இதற்கு முந்தைய தி.மு.க மற்றும் இப்போதைய மத்திய அரசு தான் காரணம். மேலும் தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சியும் பலிக்காமல் போக என்னென்ன காரணம், etc, etc
சென்னை தாண்டி மற்ற ஊர்களில் இதை பார்த்திருப்பார்களா என்றே தெரியலை (கரண்ட் இருந்தால் தானே பார்க்க? இருக்கும் நேரம் மற்ற உருப்படியான வேலை பார்ப்பார்களா? ஜெயா டிவி போடுவார்களா)
நிற்க அம்மா பேசிய விஷயத்துக்கு வருவோம்
" பிரசவ வலி எவ்ளோ கஷ்டம் என்பதை கேட்க யாரும் தயாராய் இல்லை. குழந்தை எப்படி இருக்கு; அதை சொல்லுங்கள்" என்று ஒரு பழமொழி உண்டு.
மக்களுக்கு தேவை மின்சாரம். விளக்கங்கள் கேட்க, நம்ப யாரும் தயாராய் இல்லை.
சீரியல் பக்கம் - ஜான்சி ராணி
ஜீ (Zee ) டிவி மிக பாப்புலர் ஆகா விட்டால் கூட, அதில் வந்த நல்லதொரு சீரியல் ஜான்சி ராணி.
ஜெயா டிவியில் " மனதோடு மனோ " நிகழ்ச்சி பாடகர் அல்லது இசை அமைப்பாளர் ஒருவரின் திரை உலக அனுபவங்கள் பற்றி ஜாலியாய் பேசுகிறது.
இதில் சமீபத்தில் LR ஈஸ்வரி வந்து பேசினார்/ பாடினார். "மாலை நேரத்து மயக்கம் " " பட்டத்து ராணி பார்க்கும் பார்வை" போன்ற சில மறக்க முடியாத பாடல்கள் பாடினாலும் ஆடி மாதம் ஸ்பீக்கரில் இவர் பாட்டுகளை கேட்டு கேட்டே மிரண்டு போன தலைமுறையை சேர்ந்தவர்கள் நாங்கள். என் நண்பன் வழக்கறிஞர் பாலா இவர் பாட்டு கேட்டாலே டென்ஷன் ஆகி " பாட்டை நிறுத்து; நிறுத்து" என கத்த துவங்கி விடுவான். இப்படி இவரை முழுசாய் வெறுப்போரும் உண்டு.
குறிப்பிட்ட நிகழ்ச்சியில் தெரிய வந்த ஆச்சரிய விஷயம்: பல மகமாயி பாட்டுகள் பாடி பெரும் புகழடைந்த, எப்போதும் பெரிய அளவு குங்குமம் வைக்கும் ஈஸ்வரி நிஜத்தில் ஒரு கிருத்துவர் ! ஈஸ்வரி என்கிற பெயரே சினிமாவிற்கு மட்டும் தான் போலும் !
மாற்றான் பற்றி KV ஆனந்தும் சூர்யாவும்
KV ஆனந்தும் சூர்யாவும் வெவ்வேறு சானல்களில் மாற்றான் பற்றி மாய்ந்து மாய்ந்து பேசினார்கள். (நம்ம பதிவர்கள் பார்த்தா போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆகுது என கமன்ட் அடித்திருப்பர்)
படம் மிக சுமார் என்றாலும், அதனை எடுக்க எவ்ளோ கஷ்டப்பட்டுள்ளனர் என்று பார்க்க பாவமாய் தான் உள்ளது. ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை (வெவ்வேறு தினங்களில்) நடிக்கும் சூர்யா, லொகேஷன் சிரமங்கள், சண்டையில் உள்ள பிரச்சனை என ரொம்ப உருக்கமாய் பேசினார்கள். திரைக்கதையிலும் அதே மாதிரி மெனக்கேட்டிருக்கலாமே சார் !
நீயா நானாவில் ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர்கள்
செம சுவாரஸ்ய தலைப்பு ம் விவாதமும் இந்த வாரம் நடந்தது. " ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர்களின் கல்லூரி வாழ்க்கை" தான் தலைப்பு.
அட்டக்கத்தி படம் போல சுவாரஸ்ய கானா பாட்டு சிலர் பாடி முதல் ரவுண்டில் அசத்தி விட்டனர். சென்னை கல்லூரிகள் அனைத்தின் பெயரையும் சேர்த்து பாட்டு, பின் ஸ்டாபிங் வைத்து பாட்டு என செம காமெடியாய் இருந்தது.
அடுத்தடுத்த ரவுண்ட்களில் மாணவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் பற்றி பொது மக்கள் பேச, அதற்கு மாணவர்கள் தங்கள் பக்கத்தை பேசினர். தமிழருவி மணியன் பேச்சு மிக அருமையாய் இருந்தது. ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல நீயா நானா நிகழ்ச்சி இது. நீங்கள் பார்க்காவிடில் இணையத்தில் பார்க்க முயலுங்கள் !
****
வல்லமை அக்டோபர் 29, 2012 இதழில் வெளியானது

ஜான்சி என்கிற ஊருக்கு ராணியாக இருந்தவர் கதையை சற்று மசாலா தூவி எடுத்துள்ளனர். ஹிந்தி டப்பிங் சீரியலான இது, முன்பு தமிழில் ஒளிபரப்பாகி முடிந்தது. அதன் பெரும் வெற்றியை அடுத்து மீண்டும் மாலை ஐந்தரை மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பல கஷ்டங்களை தாண்டி, எடுத்த குறிக்கோளில் உறுதியாய் நிற்கும் ஜான்சிராணியின் இந்த நிஜ கதை நிச்சயம் inspitrational story !
மனதோடு மனோ
மனதோடு மனோ
ஜெயா டிவியில் " மனதோடு மனோ " நிகழ்ச்சி பாடகர் அல்லது இசை அமைப்பாளர் ஒருவரின் திரை உலக அனுபவங்கள் பற்றி ஜாலியாய் பேசுகிறது.
இதில் சமீபத்தில் LR ஈஸ்வரி வந்து பேசினார்/ பாடினார். "மாலை நேரத்து மயக்கம் " " பட்டத்து ராணி பார்க்கும் பார்வை" போன்ற சில மறக்க முடியாத பாடல்கள் பாடினாலும் ஆடி மாதம் ஸ்பீக்கரில் இவர் பாட்டுகளை கேட்டு கேட்டே மிரண்டு போன தலைமுறையை சேர்ந்தவர்கள் நாங்கள். என் நண்பன் வழக்கறிஞர் பாலா இவர் பாட்டு கேட்டாலே டென்ஷன் ஆகி " பாட்டை நிறுத்து; நிறுத்து" என கத்த துவங்கி விடுவான். இப்படி இவரை முழுசாய் வெறுப்போரும் உண்டு.
குறிப்பிட்ட நிகழ்ச்சியில் தெரிய வந்த ஆச்சரிய விஷயம்: பல மகமாயி பாட்டுகள் பாடி பெரும் புகழடைந்த, எப்போதும் பெரிய அளவு குங்குமம் வைக்கும் ஈஸ்வரி நிஜத்தில் ஒரு கிருத்துவர் ! ஈஸ்வரி என்கிற பெயரே சினிமாவிற்கு மட்டும் தான் போலும் !
மாற்றான் பற்றி KV ஆனந்தும் சூர்யாவும்
KV ஆனந்தும் சூர்யாவும் வெவ்வேறு சானல்களில் மாற்றான் பற்றி மாய்ந்து மாய்ந்து பேசினார்கள். (நம்ம பதிவர்கள் பார்த்தா போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆகுது என கமன்ட் அடித்திருப்பர்)
படம் மிக சுமார் என்றாலும், அதனை எடுக்க எவ்ளோ கஷ்டப்பட்டுள்ளனர் என்று பார்க்க பாவமாய் தான் உள்ளது. ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை (வெவ்வேறு தினங்களில்) நடிக்கும் சூர்யா, லொகேஷன் சிரமங்கள், சண்டையில் உள்ள பிரச்சனை என ரொம்ப உருக்கமாய் பேசினார்கள். திரைக்கதையிலும் அதே மாதிரி மெனக்கேட்டிருக்கலாமே சார் !
நீயா நானாவில் ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர்கள்
செம சுவாரஸ்ய தலைப்பு ம் விவாதமும் இந்த வாரம் நடந்தது. " ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர்களின் கல்லூரி வாழ்க்கை" தான் தலைப்பு.
அட்டக்கத்தி படம் போல சுவாரஸ்ய கானா பாட்டு சிலர் பாடி முதல் ரவுண்டில் அசத்தி விட்டனர். சென்னை கல்லூரிகள் அனைத்தின் பெயரையும் சேர்த்து பாட்டு, பின் ஸ்டாபிங் வைத்து பாட்டு என செம காமெடியாய் இருந்தது.
அடுத்தடுத்த ரவுண்ட்களில் மாணவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் பற்றி பொது மக்கள் பேச, அதற்கு மாணவர்கள் தங்கள் பக்கத்தை பேசினர். தமிழருவி மணியன் பேச்சு மிக அருமையாய் இருந்தது. ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல நீயா நானா நிகழ்ச்சி இது. நீங்கள் பார்க்காவிடில் இணையத்தில் பார்க்க முயலுங்கள் !
****
வல்லமை அக்டோபர் 29, 2012 இதழில் வெளியானது
தங்களின் அற்புதமான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் (www.tamiln.org) இணையுங்கள்.
ReplyDeleteகலகலப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteநன்றி ராஜராஜேஸ்வரி
Deleteஅருமையானதோர் பகிர்வு.
ReplyDelete
Deleteநன்றி அமைதி சாரல்
வா பெண்ணே வா.. வருங்கால ப்ளாகர் ஆகி சமூக பங்காற்று ! அந்த கெப்பாசிட்டி உன்கிட்டே இருக்கு என்று சொல்லி, வாங்கி கட்டி கொண்டேன் !
ReplyDelete>>
தூயாக்கு போட்டியா ஒரு குட்டி பதிவரா?! வர சொல்லுங்க பார்த்துக்கலாம்.
ஹா ஹா அவள் ப்ளாகை தனக்கு போட்டியா ( நான் இணையத்தில் அதிகம் நேரம் செலவிடுகிறேன் என) நினைக்கிறாள். நான் தான் அப்படி சொல்லி சீண்டி, அடி வாங்கினேன். அவள் ப்ளாக் எழுதுவது சந்தேகமே. தூயாவுக்கு எங்கள் வீட்டிலிருந்து போட்டியில்லை
Deleteஇவ்வளவு டிவி புரோகிராம் பார்க்குறீங்களே! உங்களுக்கும்.., உங்க ஹவுஸ் பாஸுக்கும் எதாவது போட்டியா?
ReplyDeleteநல்ல அலசல்.
ReplyDelete//ஈஸ்வரி நிஜத்தில் ஒரு கிருத்துவர்//
எனக்கு தெரியாத விஷயம்.
நீயா நானா நானும் பார்த்தேன் நன்றாக இருந்தது.
ராம்வி நீங்களும் பார்த்தீர்களா? நன்றிங்க
Deleteபிளாகர் வாரிசின் கமெண்ட் அருமை:)!
ReplyDeleteஅப்படிங்களா ராமலட்சுமி ? நன்றிங்க
Deleteமனதோடு மனோ நீண்ட நாட்களாக வரும் நிகழ்ச்சி. இதைப் போலவே அப்துல் ஹமீத் நடத்தும் நிகழ்ச்சி (இன்னிசை மழை) கலைஞர் தொ.கா.வில் வருகிறது. பல முக்கிய கலைஞர்கள் வந்தாலும், சில நேரங்களில் ஓரிரு பாடலே பாடிய/இசைக் கோர்த்தக் கத்துக்குட்டிகளும் வருவதுண்டு. அவர்கள் செய்யும் அலம்பல்கள் சொல்லி மாளமுடியாமல் இருக்கும். ஆனால், இது போன்ற நிகழ்ச்சிகளில் பாடல்களை விடத் தகவல்கள் நம்மை அதிகமாக ஈர்க்கும் (ஒரு வேளை கிசுகிசு படிப்பதின் நீட்சியோ?)
ReplyDeleteஇன்னிசை மழை பற்றி ஒரு பாரா எழுதி வைத்துள்ளேன் பப்ளிஷ் பண்ணனும் சீனி நன்றி
Delete//இது போன்ற நிகழ்ச்சிகளில் பாடல்களை விடத் தகவல்கள் நம்மை அதிகமாக ஈர்க்கும் (ஒரு வேளை கிசுகிசு படிப்பதின் நீட்சியோ?)//
Yes Thanks
இந்த வாரம் புதிதாய் ஆரம்பிக்கப்பட்ட கோலிவுட் கிங் பற்றி எதுவும் சொல்லவில்லையே!!!
ReplyDeleteநான் நேற்று பார்க்கலை ரவி. பார்த்துட்டு எழுதுறேன் நன்றி
Deleteபல்சுவை பகிர்வு ,அருமை
ReplyDeleteநன்றி கண்ணதாசன் சார்
Deleteஉங்களுக்கு ரொம்ப பொறுமை சார்.. விளம்பரங்களுக்கு இடைல இவ்ளோ நிகழ்ச்சி பாத்து இருக்கீங்க...
ReplyDeleteநீயா நானா - ஆர்ட்ஸ் காலேஜ் அட்டகாசம் தாங்க முடியாது சார். பஸ்-ல சீக்கிரம் ஒட்டையவதருக்கு முக்கிய காரணம் இவங்க தான்...
நன்றி சார்
Deleteவாங்க சமீரா நன்றி நிகழ்ச்சியில் பலரும் நீங்கள் சொன்ன கருத்தை சொன்னார்கள்
என்ன சாக்கு சொன்னாலும் நான் ஆட்சியில் அமர்ந்தால் மூன்றே மாதத்தில் மின் வெட்டு தீரும் என்று பொய் வாக்குறுதி கொடுத்தார்.அதை எந்த மீடியாவும் அவரிடம் ஏன் இப்படி வாக்குறிதி கொடுத்தீர்கள் என்று கேட்க்க ஆண்மை இல்லை.இப்போது விஜயகாந்திடம் சீரும் மீடியா போன கலைஞர் ஆட்சியில் வரிசையாய் அ .தி.மு.க ஆட்கள் தி.மு.க.வில் சேர்ந்த போது காரணம் கேட்க்க ஜெயலலிதாவை துரத்தவில்லை.கீவரை கோபப்படும்படி கேட்டால் உள்ளே போட்டுவிடுவார் என்ற பயம்.என்னவோ சொல்லவந்து எதற்கோ போய் விட்டேன் மோகன் சார்.
ReplyDeleteநேற்று நீயா நானா கொஞ்ச நேரம் தான் பார்க்கக் கிடைத்தது..அந்தக் குற்றச்சாட்டு விடயங்கள் விஜய் டிவி யுடியுபில் போடும் போது தான் பார்த்துக் கொள்ளவேண்டும்.
ReplyDeleteஆமா ... இவ்வளவு டிவி ப்ரோக்ராம் பார்க்க உங்களுக்கு ஏது டைம்?? அவ்ளோ பிஸியானவரா நீங்க?
நான் வார நாளில் மாலை நேரம் ஒன்று அல்லது ஒன்னரை மணி நேரம் டிவி பார்ப்பேன். வார இறுதியில் நான்கைந்து மணி நேரம் பார்ப்பேன். வார இறுதி நிகழ்சிகளே அதிகம் இருக்கும் பாருங்கள்
Deleteமனதோடு மனோ நானும் ரசிக்கும் நிகழ்ச்சி. ஆனால் எல் ஆர் ஈஸ்வரி நிகழ்ச்சி ரொம்பப் பழசு. மறு மறு ஒளிபரப்பு!
ReplyDelete//எல் ஆர் ஈஸ்வரி நிகழ்ச்சி ரொம்பப் பழசு. மறு மறு ஒளிபரப்பு!//
Deleteஅப்படியா? !! நன்றி !
//"ஆஹா ! வா பெண்ணே வா.. வருங்கால ப்ளாகர் ஆகி சமூக பங்காற்று ! அந்த கெப்பாசிட்டி உன்கிட்டே இருக்கு" என்று சொல்லி, வாங்கி கட்டி கொண்டேன் !//
ReplyDeleteஅதானே - நிச்சயம் வாங்கிக் கட்டிக் கொண்டு இருப்பீங்க! :)
இனிய பகிர்வு!
நீங்க நேரிலேயே பாத்திருக்கீங்களே .. :))
Deleteநம்ம தேவயானியின் முத்தாரம் சீரியல் பற்றி ஒன்றும் சொல்லுவதே இல்லையே :(
ReplyDeleteநான் அந்த சீரியல் பாக்கலை நண்பா ; அந்த சீரியல் பற்றி ஒரு பாரா எழுதி தாங்க. அடுத்த முறை உங்கள் பெயருடன் அதை ஷேர் பண்ணிடலாம் !
Deleteஉங்கள் சுட்டிப் பெண்ணிடம் வாங்கிக் கட்டிக்கொண்டீர்களா :)) அருமை. பெண்ணுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஒரு மனுஷன் அடி வாங்குறதில் இம்புட்டு சந்தோஷமா :))
Deleteமகள் உங்களின் பதிவுகளை வாசிப்பாரா? முதலில் தொடர்ந்து வாசிக்கச் சொல்லுங்கள், பிறகாவது, ”அழகு கார்னர்”கள் குறைகிறதாவெனப் பார்க்கலாம். :-)))))
ReplyDelete//பிரசவ வலி எவ்ளோ கஷ்டம் என்பதை கேட்க யாரும் தயாராய் இல்ல//
உண்மைதான்... (மின்சாரத்தைச் சொல்லவில்லை, ப்ரசவத்தைத்தான் சொல்கிறேன்) :-((((((
எல்.ஆர்.ஈஸ்வரி என்பது லூர்து மேரி ஈஸ்வரி என்று எனக்கு சின்ன வயதிலேயே தெரியுமே. இவரும், குமாரி சச்சுவைப் போல திருமணம் செய்யாதவர்.
பக்திப் பாடல்களுக்கு ஏற்ற உணர்ச்சிமிகு உச்சஸ்தாயிக் குரல் வளம் இருப்பதால் அந்தத் துறையில் பிரபலமாகிவிட்டார் என்று நினைக்கிறேன். இவர் பெயராவது ஈஸ்வரி; யேசுதாஸ்?? இங்கே எல்லார் ஈஸ்வரிபோல, கேரளாவில் ”யேசு”தாஸ்!!!! :-)))))
ஹுசைனம்மா: ஒய் திஸ் கொல வெறி ? என் பொண்ணு கிளி பற்றி எழுதினா மட்டும் தான் படிப்பா :))
Delete