பார்த்த படம்: கிராண்ட் மாஸ்டர் ( மலையாளம்)
மோகன்லால், ப்ரியா மணி, நரேன், பாபு ஆண்டனி, சீதா உள்ளிட்டோர் நடித்த த்ரில்லர் இந்த மலையாள படம். போலிஸ் அதிகாரியான மோகன்லால் குற்றம் நடக்காமல் தடுக்கும் குழுவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவர் மனைவி ப்ரியாமணி அவரிடமிருந்து பிரிந்து தனது பன்னிரண்டு வயது மகளுடன் வாழ்கிறார். ஒரு கிரிமினல் மோகன்லாலுக்கு சாலன்ஜ் செய்து விட்டு தொடர் கொலைகளை செய்கிறார். மூன்று பெண்களை கொலை செய்து முடித்த பின் நான்காவது ப்ரியாமணியை கொல்ல போகிறார் என தெரிகிறது. கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார், ப்ரியாமணியை எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை.
மசாலா, த்ரில்லர் படத்தை அதிக செலவின்றியே மிக சுவாரஸ்யமாக எடுத்துள்ளனர். மோகன்லால் எப்பவும் போல் நடிப்பதே தெரியாத ஸ்டைலில் அசத்தியுள்ளார். ப்ரியாமணி அழகு.. ஆனால் பன்னிரண்டு வயது பெண்ணுக்கு தாயாக அவரை நினைக்க முடியலை.
பாபு ஆண்டனி தான் கொலையாளி என பார்வையாளருக்கு காட்டி சென்றாலும் இறுதில் அதிலும் உள்ள டுவிஸ்ட் செம ! வாய்ப்பு கிடைத்தால் இந்த படம் பாருங்கள் !
QUOTE CORNER
The greatest mistake we humans make in our relationships: "we listen half, understand quarter, think zero and react double...!
ஸ்கேலால் அடிப்பது முட்டி போட வைப்பது உள்ளிட்ட உடல் ரீதியான தண்டனைகள் ஆசிரியர் தந்தால் 044-28273591 என்கிற எண்ணுக்கு நீங்கள் கால் செய்யலாம். சம்பந்தப்பட்ட மாணவர் தான் பேசணும் என்றில்லை. அவர் பெற்றோரான நீங்களும் கூட பேசலாம். மாநில கல்வி துறையின் கீழ் செயல்படும் இந்த புகார் பிரிவுக்கு தொலை பேசி வழியே புகார் வந்ததும் சம்பந்தப்பட்ட மாவட்ட திகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்துள்ளனர் .
அழகு கார்னர்
கண்கள் மற்றும் சிரிப்பால் கவர்கிறார் ப்ரியா ஆனந்த். இங்க்லீஷ் விங்க்லீஷ் மூலம் ஹிந்திக்கும் சென்ற இவரை வாழ்த்தி, ரசித்து வரவேற்கிறோம் :)
பதிவர் பக்கம்
மதுரையை சேர்ந்த ஸ்ரீ எனும் பதிவர், தான் காணும் பல்வேறு இடங்கள் பற்றியும் விரிவாய் தன் தளத்தில் பகிர்ந்து வருகிறார். காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளார். மதுரை திருமலை நாயக்கர் குறித்த இவரின் பதிவை இங்கு வாசியுங்கள் !
வாழ்த்துகள் ஸ்ரீ ! தொடர்ந்து எழுதி அசத்துங்க !
காமெடி கலாட்டா : சந்தானம் இன் ஓகே ஓகே
ஓகே ஓகே -யில் சந்தானத்தின் காமெடி கலக்கலாய் இருக்கும். அதிலும் விமானத்தில் ஏறிக்கொண்டு அடிக்கும் லூட்டிகள் தியேட்டரில் செமையாய் சிரிக்க வைத்தன. இதில் ஸ்னேஹா இருப்பது கூடுதல் அழகு.
போத்தீஸில் சமீபத்தில் பன்னிரண்டு அடுக்கு மாடி திறந்துள்ளனராம். டிவியில் சுருதி கமல் வந்து சொல்லி கொண்டே இருக்கிறார். விகடன் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் பின் அட்டை விளம்பரங்கள் வேறு வருகின்றன. இந்த பன்னிரண்டு மாடியில் ஆண்களுக்கு எத்தனை மாடி இருக்கும் என நினைக்கிறீகள்? வெறும் இரண்டே மாடி தான் ! மற்ற அனைத்தும் பெண்களுக்கு தான் ! விற்கும் நிறுவனங்களுக்கு மிக தெளிவாக யார் யார் துணி வாங்குவார்கள் என்பது தெரிந்தே இருக்கிறது. அதிலும் நமது மாடி இருப்பதிலேயே கட்ட கடைசி புளோர். லிப்ட் பிடித்து ஏறி போவதற்கு பதிலா, " வாங்க அப்புறம் பாத்துக்கலாம்" என ஹவுஸ் பாஸ்கள் நம்மை கிளப்பி போக நிறைய வாய்ப்பு இருக்கு. இதற்கெல்லாம் தமிழ் நாட்டில் யாரும் போராட மாட்டேங்குறாங்களே ? ஏன் சார்?

பகிர விரும்பும் தகவல் (விகடனில் வாசித்தது)

போத்தீஸ் பன்னிரண்டு அடுக்கு மாடி .. ஆண்களுக்கு எத்தனை மாடி?
போத்தீஸில் சமீபத்தில் பன்னிரண்டு அடுக்கு மாடி திறந்துள்ளனராம். டிவியில் சுருதி கமல் வந்து சொல்லி கொண்டே இருக்கிறார். விகடன் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் பின் அட்டை விளம்பரங்கள் வேறு வருகின்றன. இந்த பன்னிரண்டு மாடியில் ஆண்களுக்கு எத்தனை மாடி இருக்கும் என நினைக்கிறீகள்? வெறும் இரண்டே மாடி தான் ! மற்ற அனைத்தும் பெண்களுக்கு தான் ! விற்கும் நிறுவனங்களுக்கு மிக தெளிவாக யார் யார் துணி வாங்குவார்கள் என்பது தெரிந்தே இருக்கிறது. அதிலும் நமது மாடி இருப்பதிலேயே கட்ட கடைசி புளோர். லிப்ட் பிடித்து ஏறி போவதற்கு பதிலா, " வாங்க அப்புறம் பாத்துக்கலாம்" என ஹவுஸ் பாஸ்கள் நம்மை கிளப்பி போக நிறைய வாய்ப்பு இருக்கு. இதற்கெல்லாம் தமிழ் நாட்டில் யாரும் போராட மாட்டேங்குறாங்களே ? ஏன் சார்?
QUOTE CORNER - அருமை...
ReplyDeleteஸ்ரீ-தளம் : பல கோவில்கள் வலம் வரலாம்...
/மதுரை திருமலை நாயக்கர் குறித்த இவரின் பதிவை/
ReplyDeleteகுறிப்பிட்ட பதிவு மிக அருமை. படங்களும் தகவல்களும். மற்றவையும் வாசிக்க வேண்டும்.
நண்பரே,
ReplyDeleteஎனது வலைப்பக்கத்தைக் குறிப்பிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள்.
ஸ்ரீ....
வானவில் கொஞ்சம் கலர் குறைவா இருக்கே..
ReplyDeleteபோத்தீஸ்.... ஆண்களுக்கு இன்னும் கொஞ்ச நாளில் 'மொட்டை' மாடிதான்!!
ReplyDeleteஸ்ரீயின் கட்டுரைகளை படித்துக் கொண்டுள்ளேன் சார் , அவரை அறிமுகம் செய்தது மகிழ்ச்சி
ReplyDeleteபோராட்டம் தானே... சங்கத் தலைவர் அய்யாசாமி தலைமையில அணிதிரண்டு கிளம்பிரலாம். என்ன மக்காஸ்... ரெடியா?
ReplyDelete\\பகிர விரும்பும் தகவல் (விகடனில் வாசித்தது) \\ அடியாத மாடு படியாது, கொலேடுத்தால் தான் குரங்காடும். மாணவரின் நமையைக் கருதி வழங்கப் படும் மெல்லிய தணடனைகள் வரவேற்க்கப் பட வேண்டியவையே. வீட்டுப் பாடம் ஏன் ஒழுங்காகச் செய்யவில்லை என்று கேட்கும் ஆசிரியரை, என்னை அடித்தீர்கள் என்று போலீசில் புகார் குடுத்துவிடுவேன் என்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் மிரட்டும் நிலை வந்துவிட்டது, இது உருப்படுவதற்க்கில்லை. ஹிந்தி வேண்டாம், தமிழிலேயே என்ஜினீயரிங் மருத்துவப் படிப்பு என்று தமிழக மாணவர்கள் உருப்படாமல் செய்வதற்கான வழிகளின் வரிசையில் மாணவர்களை தண்டிக்கவும் கூடாது என்பது சேர்வதாகவே எனக்குப் படுகிறது. அதே சமயம், மாணவன் மீதான தனிப்பட்ட காழ்புணர்ச்சி, வீட்டில் சண்டை போட்டு வந்த கோபத்தில் மாணவனை அடிப்பது, அளவுக்கு மீறிய வழங்குவது தண்டனையை ஆகியவையும் தவிர்க்கப் பட வேண்டியவையே.
ReplyDeleteபுரட்சி ! போராட்டம் ! நடத்துவோர் வீடு திரும்பல் .
ReplyDeleteபோத்திசை கண்டித்து கருஞ்சட்டை அணிந்து போராட போகிறேன் அண்ணே
ReplyDeleteலிப்ட் பிடித்து ஏறி போவதற்கு பதிலா, " வாங்க அப்புறம் பாத்துக்கலாம்" என ஹவுஸ் பாஸ்கள் நம்மை கிளப்பி போக நிறைய வாய்ப்பு இருக்கு. இதற்கெல்லாம் தமிழ் நாட்டில் யாரும் போராட மாட்டேங்குறாங்களே ? ஏன் சார்?
ReplyDeleterepeat
சங்கத் தலைவர் அய்யாசாமி தலைமையில அணிதிரண்டு கிளம்பிரலாம். என்ன மக்காஸ்... ரெடியா?
ரெடி
நல்ல கலவை.
ReplyDelete//போத்திசை கண்டித்து கருஞ்சட்டை அணிந்து போராட போகிறேன் அண்ணே //
அதற்குச் சட்டை வாங்கவும் மேல் மாடிக்குத் தான் போகவேண்டும் என்பதால் போராட்டம் தள்ளிப்....... போடப்பட்டுள்ளது.
பட விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது. QUOTE CORNER அருமை.
ReplyDeleteபோத்தீஸ் விட்டால் வேறு கடையே ஆண்களுக்கென்று கிடையாதா..ஏன் பொறாமை....:)
இரண்டு மாடி எல்லாம் ஓவர்.ஒரு மாடியில் பாதி போதாதா?ஒரே கலர் பேண்ட்,கோடு,கட்டம் போட்ட அல்லது லைட் கலர் சட்டை எடுக்க அது போதும்.
ReplyDeleteலாலேட்டன், மம்மூட்டி நடிப்புக்கெல்லாம் சொல்லவும் வேண்டுமா என்ன!
ReplyDeletequote முற்றிலும் உண்மை!
முன்பெல்லாம் ஆசிரியர்கள் இருந்த தரத்துக்கு அவர்கள் அடித்தாலும் பெற்றோர்கள் ஒன்றும் சொல்வதில். இப்போதோ...?
'ஸ்ரீ'யின் தளத்தில் புகைப்படங்களுக்கு முதலிடம். ரசித்து ரசித்து அங்குலம் அங்குலமாய் எடுத்து நம்மையும் ரசிக்க வைக்கிறார்.
சந்தானம் காமெடி இங்கு பார்க்கவில்லை என்றாலும் ஏற்கெனவே பார்த்தது, ரசித்தது.
போத்தீஸை விடுங்கள்... பொதுவாகவே ஆண்களுக்கு ஆடைகள் விஷயத்தில் ஆப்ஷன்ஸ் கம்மிதானே!
கலர்ஃபுல் வானவில்.
ReplyDeleteபோத்தீஸ்க்கு தாராள மனசு. ரெண்டு மாடி ஒதுக்கியிருக்காங்களேன்னு சந்தோஷப்படுங்க :-)))))
ரசித்து
ReplyDelete>>>
கீபோர்டுல “தண்ணி”லாம் படக்கூடாதாம். பார்த்துக்கோங்க சகோ
வேட்டில பட்டு, காட்டன், நாலு முழம், 8 முழம், ஜரிகை வெச்சது, ஜரிகை வெக்காதது, ஃபேண்ட், ஜீன்ஸ் ஃபேண்ட், ஷர்ட், டி ஷர்ட், குர்தா,ஷெர்வாணி அப்புறம் உள்ளாடைகள் மொத்தமே மொத்தம் 10 தினுசு உடைக்கு 2 மாடியே அதிகம் சகோ. என்னை கேட்டிருந்தா 2 ரூம் போதும்ன்னு சொல்லியிருப்பேன்
ReplyDeleteபகிர விரும்பும் தகவல் (விகடனில் வாசித்தது)
ReplyDelete>>
நான் சின்ன பிள்ளைல ரொம்ப மூர்க்கம் யார்கிட்டயும் அதிகம் ஒட்ட மாட்டேன். பக்கத்துல் இருந்த பயனோட சில்லு மூக்கை பதம் பார்த்ததுக்கு....,கண், காது, தலை தவிர்த்து பொளந்து கட்டுங்கன்னு எங்கப்பா ஹெட்மாஸ்டர்கிட்ட சொன்னது இன்னமும் நினைவிருக்கு. அதற்கப்புறம் ரொம்ப சாதுவாகி இப்பவும் எல்லார்கிட்டயும் ஓரளவுக்கு மரியாதையா பழகுறேன்னா ஹெட்மாஸ்டரும், அவர் கையிலிருந்த பிரம்பும் ஒரு காரணம்.இன்னிக்கும் எனக்கு சொல்லி தந்த ஆசிரையர்கள்லாம் வந்தால் மரியாதை எழுந்துக்குவேன்.
ஆனா, என் பிள்ளைகள் தூள் சொர்ணாக்கா, குச்சி குமாருன்னு ஆசிரியருக்கு பேர் வைக்குறாங்க. இந்த பயமின்மைக்கு காரணம் இதுப்போன்ற சட்டங்கள்தான்னு நினைக்குறென்.
வெகு சுமாரான வானவில், கவனத்தில் கொள்ளவும் அண்ணே.
ReplyDeleteசும்மா சால்ஜாப்புக்கு எல்லோரும் ஆகா ஓகோ என்று சொல்லலாம். ஆனால் கொஞ்சம் கவனம் தேவை. நீண்ட நாட்களாக உங்களது வானவில்லை விரும்பி படித்து பின்னூட்டம் போடாமல் இருக்கும் வீடு திரும்பல் வாசகன்.
QUOTE CORNER - அருமை...
ReplyDeleteஅதே!!
மாணவர்களுக்குத் தண்டனை எனும் விடயத்தில் இன்னும் விரிவாக யோசிக்கவேண்டும்.
இதை மாணவர்களும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு நிறைய உண்டு. இப்போ மாணவர்கள் குசும்பு அதிகம்.
தவறு செய்யும் மாணவர்களின் பெற்றோரை அழைத்துக் கூறுதல் , அளவான தண்டனை பற்றிச் சிந்திப்பது
நன்று.
Quote Corner - Excellent quote....
ReplyDeletePothy's: மோகன், சின்ன வயதிலிருந்தே இப்பிரச்சனை தான். பெண் குழந்தைகளுக்குக் கிடைக்கும் உடைகள் போல ஆண் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது....
போராட்டத்திற்கு சங்கத்தின் தில்லி கிளை ஆதரவுண்டு.... :)))
ஆசிரியர்களும் அடிக்கக்கூடாது. வீட்டில் பெற்றோர்களும் அடிக்கக்கூடாது என்றால், எப்படித்தான் பிள்ளைகளை ஒழுங்குபடுத்துவது? எப்போதுமே அடிக்கச் சொல்லவில்லை. சில சமயங்களில் மட்டுமே. மூர்க்கத்தனமாக அடிப்பதையும் ஆதரிக்கவில்லை.
ReplyDeleteசென்ற தலைமுறைவரை (நம் காலத்தில்) அடிப்பது நல்லதுக்காகவே என்று இருந்தது, இப்போது மட்டும் ஏன் தவறாகப் போய்விட்டது. அடி வாங்கிய நாமெல்லாம் அடித்தவர்களை வெறுத்தா விட்டோம் இப்போது?
இப்படிக் கண்டிப்பதைத் தடுக்கப் போய்த்தான், மாணவர்களால் ஒரு சிறு கடுஞ்சொல்லைக்கூட பொறுத்துக் கொள்ளமுடியாமல், தற்கொலை செய்கிறார்கள்.
//விற்கும் நிறுவனங்களுக்கு மிக தெளிவாக யார் யார் துணி வாங்குவார்கள் என்பது தெரிந்தே இருக்கிறது. //
இது தந்திரமான மார்க்கெட்டிங் strategy. ஒரு உடை வாங்கப்போகிறவர்களையும், ஆசைகாட்டி பல உடைகள் வாங்க வைக்கும். பெண்களும் இதற்குப் பலியாவதுதான் வேதனை. பல பெண்கள் உடைக்கும், accessoriesக்கும் செலவழிக்கும் தொகையைப் பார்த்தால்.. பார்க்கும் நமக்கே நெஞ்சு நின்றுவிடும்!!
//ஒரே கலர் பேண்ட்,கோடு,கட்டம் போட்ட அல்லது லைட் கலர் சட்டை//
இதுவும் உண்மைதான். எப்பப்பாரு நேவி ப்ளூ பேண்ட், ப்ளூ கலர் சட்டை... :-)))))
நன்றி தனபாலன். ஆம் ஸ்ரீ பல கோவில்கள் பற்றி எழுதி உள்ளார்
ReplyDeleteநன்றி ராமலட்சுமி மேடம்
ReplyDeleteவாங்க ஸ்ரீ வணக்கம்
ReplyDelete
ReplyDeleteகோவை நேரம்: அப்படியா? என்னான்னு பார்க்கிறேன்
சிவகுமார் ! said...போத்தீஸ்.... ஆண்களுக்கு இன்னும் கொஞ்ச நாளில் 'மொட்டை' மாடிதான்!!
ReplyDeleteமே பீ.. அப்டி தான் ஆயிடும் போல :))
நன்றி சீனு
ReplyDeleteபாலகணேஷ்: ஏன்ன்ன்ன் ? :))
ReplyDeleteதாஸ்: உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி
ReplyDeletescenecreator said...
ReplyDeleteபுரட்சி ! போராட்டம் ! நடத்துவோர் வீடு திரும்பல் .
******
ஏங்க? நல்லா தானே போய்கிட்டு இருக்கு :))
அரசன்: அப்படிங்களா தம்பி? ரைட்டு :))
ReplyDeleteசரவணன்: நீங்களுமா?
ReplyDeleteசீனிவாசன்: ஹா ஹா ரைட்டு
ReplyDelete
ReplyDeleteநன்றி கோவை டு தில்லி
அமுதா கிருஷ்ணா said...
ReplyDeleteஇரண்டு மாடி எல்லாம் ஓவர்.ஒரு மாடியில் பாதி போதாதா?ஒரே கலர் பேண்ட்,கோடு,கட்டம் போட்ட அல்லது லைட் கலர் சட்டை எடுக்க அது போதும்.
**
நீங்க ஆரம்பிச்சது அப்புறம் மத்த எல்லாரும் அமோகமா ஓட்டிட்டாங்க :)
ஸ்ரீராம்: நீங்க ரொம்ப நல்லவர். எப்பவும் போல விரிவா கருத்து சொல்லிருக்கீங்க
ReplyDeleteஅமைதி சாரல்: வாங்க மேடம்
ReplyDeleteராஜி: அவ்ளோ பெரிய ரவுடியா இருந்தீங்களா நீங்க? :))
ReplyDelete
ReplyDeleteஆரூர் மூனா : நாம என்னா வச்சிகிட்டா வஞ்சனை பண்றோம்? இருக்கிறதை தானே தம்பி கொடுக்க முடியும்? இருந்தாலும் எப்படி மாற்றலாம்னு தின்க் பண்றேன் நன்றி
யோகன்: விரிவான கருத்துக்கு நன்றி
ReplyDelete
ReplyDeleteவெங்கட்: டில்லி கிளையா? ரைட்டு
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி ஹுசைனம்மா
ரொம்ப நாட்களுக்கு பிறகு உங்க வானவில்லை படிக்கிறேன்.நல்ல தகவல்கள்தான். ஆனால் சற்று சுவாரசியம் குறைவாக இருப்பதுபோல தொன்றுகிறது.
ReplyDelete