Friday, October 12, 2012

குளு மணாலி- வெந்நீர் ஊற்று -நேரடி அனுபவம்

ணாலியிலிருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மணிக்கரன் என்கிற இடம். மணாலியில் இருந்து குளு வந்து,  பின் இந்த ஊருக்கு செல்ல வேண்டும். ரிவர் ராப்டிங் குளு வில்தான் செய்ய முடியும். எனவே காலை கிளம்பி ரிவர் ராப்டிங் (River Rafting) முடித்து விட்டு பின் மணிக்கரன் வந்தோம்.



இக்கோவிலை சீக்கியர்கள் நிர்வகிக்கிறார்கள். நிறையவே கூட்டம் உள்ளது. ஆனால் செக்கிங் போன்ற கெடுபிடிகள் துளியும் இல்லை.டில்லி போன்ற பல இடங்களில் நிறைய கெடுபிடி பார்த்து விட்டு இங்கு அவை எதுவும் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது

Main Entrance to the temple
இங்கு எடுத்த வீடியோ :




பொதுவாய் சாமி பார்க்கும் இடத்தில் படம் எடுக்க மாட்டார்கள் இங்கு. " போட்டோ எடுப்பதானால் எடுத்து கொள்ளுங்கள்" என அவர்களே கூறியதால் எடுத்தோம்.


ஒரு இடத்தில் கடவுள் படம் உள்ளது. அதன் அருகே மூன்று சீக்கியர்கள் அமர்ந்து அவர்கள் புனித நூலை வாசிக்கிறார்கள். பலரும் இங்கு வணங்கி விட்டு, அவர்கள் பேசுவதை அமர்ந்து கேட்கிறார்கள்


இந்த கோயிலில் மிக நெகிழ்த்தியது, ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கும் ஐநூறுக்கும் அதிகமானோர் அமர்ந்து இலவசமாய் சாப்பிடுவதும், அவர்களுக்கு பரிமாறும் வாலண்டியர்களும் தான்.


இங்கு வணங்கி விட்டு வந்ததும் அனைவருக்கும் இலவச உணவு வழங்குகிறார்கள். ஏழை பணக்காரன் என்ற பாகு பாடு இன்றி அனைவரும் இங்கு அமர்ந்து சாப்பிடுகிறார்கள் ஆயிரக்கணக்கில் வரும் கூட்டம் முழுதுக்கும் பரிமாறுவது, பின் அந்த தட்டை கழுவவது இதற்கு நிறைய வாலண்டியர்கள் உள்ளனர். அவர்கள் மிக அன்புடன் நடந்து கொள்கிறார்கள்.

உணவு உண்ணும் இடத்தில் எடுத்த இரு வீடியோ இங்கு காணலாம்  







இங்கு பரிமாறப்படும் உணவு தயாரிக்கபடுவதே தனி கதை. கோவிலின் கீழ் தளத்தில் சுடுநீர் தானாகவே உருவாகிறது. இங்கு அரிசி மூட்டை மற்றும் பருப்பு ஆகியவை வேக வைக்க படுகின்றன. இப்படி தான் இங்கு செய்யும் அன்ன தானத்துக்கு உணவு தயார் ஆகிறது.



கோயிலுக்குள் செல்லும் போது அவர்கள் சொல்லும் ஒரே கண்டிஷன் தலையில் துணி போட்டு கொள்ள வேண்டும் என்பது தான். கர்சீப் அல்லது வேறு ஏதேனும் துணி போட்டு கொள்ள வேண்டும். உங்களிடம் துணி இல்லா விடில் அவர்களே தருகிறார்கள். (வெளியே வரும் போது திருப்பி தர வேண்டும். ம்ம் !)

வெந்நீர் உள்ள இடத்தில் மக்கள் மிகசிறிய அரிசி மூட்டை வாங்கி தாங்களும் வேக வைக்கிறார்கள். பாதி வெந்த பின் அதை வீட்டுக்கு எடுத்து சென்று வீட்டில் வேக வைத்து பிரசாதமாக சாப்பிடுகிறார்கள்



கீழே உள்ள படத்தில் உள்ள கடவுள் இந்த வெந்நீர் ஊற்று அருகே எடுத்தது. சுயம்பு லிங்கம் என்று சொல்லப்படுகிறது




வெந்நீர் ஊற்று துவங்கும் இடம் இந்த வீடியோவில் காணலாம் :




ஹவுஸ்பாஸ் / பூக்கள் கார்னர்

வீட்டு வாசல்களில் சாதாரணமாய் இப்படி பூக்கள் பூத்து குலுங்குகிறது 

சிறு குகை போல் ஒரு இடம் இருக்கிறது. உள்ளே போனால் செம ஹீட் ஆக இருக்கிறது. அருகில் தானே வெந்நீர் ஊற்று இருக்கிறது அதனால் தான். ஆனால் இந்த சிறு குகை உள்ளே, அவ்வளவு உஷ்ணத்துக்கு நடுவே படுத்து உறங்குவோரும் இருக்கவே செய்கிறார்கள் !
குகைக்கு உள்ளே அமர்ந்த படி செல்கிறார் ஒருவர் 


குகைக்கு உள்ளே சிறு வழிபாடு 


மணிக்கரன் கோவில் வெளியே நான் 
மணிக்கரன் அருகே உள்ள பெரும் காட்டை காண்பித்து டிரைவர் " இது சரஸ் என்கிற செடி. இது கஞ்சா போன்றது. இதை புகைத்தால் மிக அதிக போதை வரும். வெளிநாட்டவர் இதை தேடி வந்து புகைப்பார்கள்" என்றார் !

3 நண்பர்களையும் 3 இடியட்ஸ்  என்று எங்க பசங்க கிண்டல் அடித்தனர்  :)
மணாலியில் தங்கி உள்ளீர்கள் எனில், அங்கிருந்து மணிக்கரன் சென்று திரும்ப முழுசாய் ஒரு நாள் ஆகும். நாங்கள் ஒரே நாளில் சீக்கிரம் கிளம்பியதால் ரிவர் ராப்டிங் முடித்து கொண்டு பின் மணிக்கரனும் பார்த்து திரும்பினோம்.

வெந்நீர் ஊற்று இருக்கும் மணிக்கரன் ஒரு வித்தியாச அனுபவமே. மணாலி சென்றால் அவசியம் செல்லுங்கள் !

22 comments:

  1. 3 நண்பர்களையும் 3 இடியட்ஸ் என்று எங்க பசங்க கிண்டல் அடித்தனர் :)
    >>
    எபக்கு மட்டும் ஒரு இடியட் தான் தெரியுது:(

    ReplyDelete
  2. படங்களும் தகவல்களும் அருமை.

    ReplyDelete
  3. arumai.........arumai..........

    ReplyDelete
  4. superb மோகன்ஜி அருமையாக இருந்தது உங்கள் பதிவு நாங்களே போய் வந்தாலும் இவ்வளவு எல்லாம் விவரமா விசாரிச்சு பார்த்து விட்டு வருவோமா என்பது சந்தேகமே.

    ReplyDelete
  5. அருமை.

    போக நினைத்த இடம்.

    கொடுத்து வைக்கலை :(

    //செக்கிங் போன்ற கெடுபிடிகள் துளியும் இல்லை.டில்லி போன்ற பல இடங்களில் நிறைய கெடுபிடி பார்த்து விட்டு இங்கு அவை எதுவும் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது //

    சீக்கியர்களின் பொற்கோவிலில் கூட பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லை.

    ReplyDelete
  6. ஏங்க இந்த மாதிரி பதிவெல்லாம் போட்டு எஙக் வயித்தெரிச்சலை கொட்டிக்குறீங்க... ம்ம்ம்ம்ம் எப்பத்தான் இப்படி போவோமோ.. ஊர்கோலம்??

    நட்புடன் மணிகண்டவேல்

    ReplyDelete
  7. சுவாரஸ்யமான அனுபவங்கள் வெந்நீர் ஆறும் அதில் வடிக்கும் சோறும் அதிசயத் தகவல்கள். 'சரஸ்' என்று பழைய இந்திப் படம் ஒன்று உண்டு! தர்மேந்தர்-ஹேமா நடித்தது! இரண்டு நல்ல பாடல்களும் அதிலுண்டு! :))

    ReplyDelete
  8. படங்களும் தகவல்களும் அருமை... நன்றி...

    ReplyDelete
  9. வெந்நீர் ஊற்று இப்பொழுதுதான் பார்க்கின்றேன்.
    இப்படி வெப்பமாக சீறிப்பாய்கின்றதே.
    அருமையான காட்சி. நன்றி.

    இலங்கையில் கன்னியாவில் ஏழு வெந்நீர்க் கிணறுகள் இருக்கின்றன. இராவணன் தனது தாயாரின் ஈமக்கிரியைகளைச் செய்வதற்காக அமைத்த கிணறு என்கிறார்கள்.

    இங்கு மக்கள் குளிக்கலாம்.
    அருகருகே கிணறுகள் இருந்தாலும் ஒவ்வொன்றும் வித்தியாசமான சுடு நீராக இருக்கும்.

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு.

    சீக்கியர்களின் எல்லா கோவில்களிலும் இது போன்று உணவு தருவார்கள்.... சப்பாத்தி கையால் செய்து தர நேரமாகுமென மெஷின்களே இங்கு! தில்லியின் ரகாப்கஞ் குருத்வாராவில் இரண்டொரு முறை சாப்பிட்டு இருக்கிறேன் - ஒரு சீக்கிய நண்பருடன்....

    ReplyDelete
  11. ராஜி: ரைட்டு

    ReplyDelete
  12. நன்றி ராமலட்சுமி மேடம்

    ReplyDelete
  13. நன்றி தாஸ்

    ReplyDelete
  14. அஜீம்பாசா : மிக நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  15. நிச்சயம் போகலாம் மணி.

    ReplyDelete

  16. வாங்க ஸ்ரீராம் சார் நன்றி

    ReplyDelete

  17. நன்றி தனபாலன்

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. மகிழ்ச்சி மாதேவி

    ReplyDelete

  20. நன்றி வெங்கட் உங்கள் அனுபவம் சொன்னமைக்கு

    ReplyDelete
  21. துளசி டீச்சர். அடடா இங்கு சென்றதில்லையா? மணாலியில் வேறு சில இடங்களில் வெந்நீர் ஊற்று இருக்கு; அவை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...