Monday, January 21, 2013

அலெக்ஸ் பாண்டியன் எனும் காவியம் - விமர்சனம்

ன்ன தான் நண்பர்கள் அலெக்ஸ் பாண்டியனை நாசம் செய்தாலும், ரெண்டு படத்துக்கு முன் வரை பிடித்த கார்த்தி, இன்னமும் பிடிக்கும் சந்தானம் மற்றும் அனுஷ்கா இருப்பதால் படத்தை பார்க்காமல் இருக்க முடியலை.

பழைய படங்களில் எடுத்தவுடனே பாட்டு போடுவார்கள். இந்த படத்தில் எடுத்தவுடனே சண்டை...அதுக்கு நடுவிலேயே டைட்டில் போடுகிறார்கள். சண்டைன்னா சண்டை உங்க வீட்டு சண்டை, எங்க வீட்டு சண்டை இல்ல... உலக சண்டை ! நூறு கிலோ மீட்டர் வேகத்தில் போகும் ரயிலில் பாலம் மேலிருந்து குதிப்பது, ரயில்வே டிராக்கில் அஞ்சு நிமிஷம் சண்டை போட்டு விட்டு, பின் பறக்கும் ரயிலில் ஓடி வந்து ஏறி கொள்வது, காற்றில் அரை கிலோ மீட்டர் பறந்து போய் வில்லன்களை அடிப்பது என மயிர் கூச்செறிய வைக்கிறார்கள்.


நிற்க. கார்த்தியை பார்த்த அடுத்த நொடியே உலக பெண்கள் அனைவரும் அவர் பின் ஹிப்னாடிசம் ஆன மாதிரி அலைகிறார்கள் என சகுனியில் காட்டியதை இங்கும் தொடர்கிறார்கள். இதை விரைவில் நிறுத்தி கொள்வது கார்த்திக்கு நல்லது !

3 அக்கா தங்கச்சிகளாம் ..அவங்க கார்த்தியை தங்கள் வீட்டிலேயே வச்சிக்கிட்டு 24 மணி நேரமும் வச்ச கண் வாங்காம பாப்பாங்களாம்; வரிசையில் நின்னு கார்த்தியோடு நெஞ்சோடு நெஞ்சு மோதிப்பாங்களாம்.  கார்த்தி வாயில் வாய் வச்சு ஊதுவாங்களாம்.... எந்த ஊரிலேயா பொண்ணுங்க இப்படி நடந்துக்குறாங்க.. இதையெல்லாம் பெண்கள் அமைப்பு எதிர்க்க மாட்டாங்களா?

ரேணிகுண்டா படத்தில் அழகான ஹீரோயினாக வலம் வந்த சனுஷாவை தங்கைகளில் ஒருவராக்கி ஜொள்ளு விட வைத்திருக்கிறார்கள். கொடுமையான ரோல் செய்ய, ஏன் தான் சனுஷா ஒப்பு கொண்டாரோ தெரியலை.

படத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என பத்து வயது சிறுவன் கூட சொல்லலாம். அப்படியிருக்கு திரைக்கதை ! ஓடும் காரை கார்த்தி, ஒரு அரிவாள் வைத்து தூக்கி எறிவது காமெடியின் உச்சம்.

தொடர்ந்து எப்பவும் ஜெயிலில் இருக்கிறார் ஹீரோ. நடு நடுவே தான் வெளியில் வருகிறார்; இப்படிப்பட்டவர், முதல்வரின் மகளான தன்னை கடத்தும் போது, அவரையே லவ் பண்ணிடுறார் அனுஷ்கா. நல்லா இருங்கடே !

தலைவி கூட சில கிளு கிளுப்பான காட்சியில் மனோபாலா நடிக்கும்போது நமக்கு ஸ்டமக் - பர்ன் ஆகிறது.

மனோபாலா காமெடி பார்ட் சிறு ஆறுதல். போலவே சந்தானம் சற்று டபிள் மீனிங்கில் ஆங்காங்கு பேசினாலும் ஓரளவு சிரிக்க வைக்கிறார்

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் தக்க தையா பாட்டு கேட்க ஜாலியாக இருந்தது (இடை இடையே சந்தானம் காமெடி வசனம் வரும் பாட்டு இது) ஆனால் படத்தோடு பார்க்கும்போது ஏற்கனவே சிக்கி சின்னாபின்னமான நிலையில்  எந்த பாட்டும் ரசிக்க முடியாமல் போகிறது.

இயக்குனர் சுராஜ் இதுவரை எடுத்த படங்களில் மருதமலை தான் வடிவேலுவின் போலிஸ் காமெடியால் இன்றும் நினைவில் நிற்கிறது. மற்றபடி மாப்பிள்ளை போன்ற படங்களில் மரண மொக்கை போட்டவர் அவர். கார்த்தி எப்படித்தான் தனது சொந்த படத்தை நம்பி கொடுத்தாரோ !

படம் ஜனவரி 11- பொங்கலுக்கு முன் ரிலீஸ் ஆனபோது அடுத்த 4 நாளில் செமையா கல்லா கட்டிடுவாங்க என நினைத்தேன். ஆனால் நம்ம மக்கள் எவ்வளவு விவரம் பாருங்க. முதல் 2 நாளிலேயே இணையம் மற்றும் மவுத் டாக் மூலம் படம் பற்றிய விபரம் தெரிந்துவிட, மூன்றாவது - நாள் டிக்கெட்டுகள் அனைத்து தியேட்டரிலும் காலியாக இருந்தது !

கார்த்தி - நீங்க ஆக்ஷன் ஹீரோ கனவை மூட்டை கட்டி விட்டு நல்ல ஸ்க்ரிப்ட்டை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது.

இந்த படத்தை முழுமையா பார்த்தவர்கள் தமிழகத்தில் அனேகமா இல்லை என சொல்லப்படுகிறது. படம் போட்ட 10 நிமிடத்திலிருந்து, இடைவேளை என பல நேரங்களில் எகிறி ஓடியவர்களே அதிகமாம் ! படம் முடிந்த பின் வரும் பேட் பாய் பாட்டு வரை விடாமல் பார்த்தவன் என்கிற முறையில் - எனது மன தைரியத்தை பாராட்டி ஏதாவது பரிசு குடுக்க முடியுமா டைரக்டர் சார்?

29 comments:

  1. ரொம்ப லேட்டான விமர்சனம்.முன்பே போட்டிருந்தா இன்னும் கொஞ்சம் பேரை காப்பாத்தியிருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. நான் பாத்தது லேட்டு தோஸ்த்து !

      Delete
  2. உங்களை கையெடுத்து kகும்பிடிடேன் சாமியோவ் ஹா haaஹா haaஹா haaஹா

    ReplyDelete
    Replies
    1. ம்ம் சொல்லுங்கண்ணே சொல்லுங்க :)

      Delete
  3. நீங்க ரொம்ப நல்லவரு... மரண மொக்கைனு தெரிஞ்சும் படம் பார்த்து விமர்சனம் எழுதுறீங்களே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. சரி சரி விடுங்க ராசா.

      Delete
  4. //இதையெல்லாம் பெண்கள் அமைப்பு எதிர்க்க மாட்டாங்களா?//ஏன் பாஸ் ஏ‌ன் நீங்களே படத்த பிரபலமாக்க முயலுறீங்கலே

    ReplyDelete
    Replies
    1. :))

      வாங்க நண்பரே

      Delete
  5. எனக்கு ஏதாவது பரிசு குடுக்க முடியுமா டைரக்டர் சார்?

    If you want, you can watch one more time with free pass.

    ReplyDelete
    Replies
    1. ஏங்க ? ஏன்? எதுக்கு இவ்ளோ கோபம் என் மேலே?

      Delete
  6. // 3 அக்கா தங்கச்சிகளாம் ..அவங்க கார்த்தியை தங்கள் வீட்டிலேயே வச்சிக்கிட்டு 24 மணி நேரமும் வச்ச கண் வாங்காம பாப்பாங்களாம்; வரிசையில் நின்னு கார்த்தியோடு நெஞ்சோடு நெஞ்சு மோதிப்பாங்களாம். வரிசையில் நின்னு கார்த்தி வாயில் வாய் வச்சு ஊதுவாங்களாம்.... எந்த ஊரிலேயா பொண்ணுங்க இப்படி நடந்துக்குறாங்க.. இதையெல்லாம் பெண்கள் அமைப்பு எதிர்க்க மாட்டாங்களா?//

    அப்படி ஒரு போடு போடுங்க...

    //இருந்தாலும், படம் முடிந்த பின் வரும் பேட் பாய் பாட்டு வரை விடாமல் பார்த்தவன் என்கிற முறையில் - எனக்கு ஏதாவது பரிசு குடுக்க முடியுமா டைரக்டர் சார்?//

    . உங்களுக்கு ஒரு அம்பது டிக்கட்டு ஃப்ரீ பாஸு அனுப்பிச்சு வச்சு இருப்பதா செய்தி வருதே !!. உங்க ஃபாலோயர்ஸோட‌
    சேந்து வந்து ரசிக்கணுமாமே !!


    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. சார் வேண்டாம் சார் ஐயம் பாவம் :)

      Delete
  7. // ரெண்டு படத்துக்கு முன் வரை பிடித்த கார்த்தி, இன்னமும் பிடிக்கும் சந்தானம் மற்றும் அனுஷ்கா இருப்பதால் படத்தை பார்க்காமல் இருக்க முடியலை.//

    விதி வலியது மோகன் :-)

    ReplyDelete
    Replies
    1. ம். தானா தானே மாட்டிக்கிட்டேன்

      Delete
  8. சார் உண்மையைச் சொல்லுங்க... டவுன்லோட் பண்ணி தானே பார்த்தீங்க...

    ReplyDelete
    Replies
    1. இணையத்தில் டவுன்லோடு பண்ணி பார்க்கும் வழக்கம் இல்லை; சில நேரம் DVD -ல் நல்ல காப்பி வந்தபின் பார்ப்பது உண்டு

      Delete
  9. விஜய் திருந்திவிட்டார். கார்த்தி எப்ப திருந்துவாரோ ???

    ReplyDelete
  10. நல்ல விமர்சனம் ....

    நன்றி.

    www.padugai.com

    Thanks

    ReplyDelete
  11. evada sonnathu "sura", "villu" ellam mokai padam enru...
    Alex Paandiyan paatha terium..

    ReplyDelete
    Replies
    1. சுராவில் ஜோக் அதிகம் சிரிக்க முடியலை. இங்கு அப்பப்போ சிரிக்க முடிஞ்சுது. மற்றபடி சுராவுக்கு இப்படம் செம போட்டி தான் :)

      Delete
  12. காவியம்' என்று தலைப்பைப் பார்த்தவுடன் உங்கள் ரசனையைச் சந்தேகித்து விட்டேன். சொறி (Sorry )

    ReplyDelete
    Replies
    1. ரைட்டுங்க சக்தி :)

      Delete
  13. //ஓடும் காரை கார்த்தி, ஒரு அரிவாள் வைத்து தூக்கி எறிவது காமெடியின் உச்சம்//

    இந்த கொசு (அரிவாள்) தொல்லை தாங்கலப்பா...இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இப்படி சினிமா எடுப்பார்களோ...நம்மால் உருண்டு உருண்டு ஓடும் பல்லவன் பஸ்ஸையே ஓடி பிடிக்க முடியவில்லை.

    //இந்த படத்தை முழுமையா பார்த்தவர்கள் தமிழகத்தில் அனேகமா இல்லை என சொல்லப்படுகிறது//

    அய்யா ...நான் பார்க்கவேயில்லையே!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆதி. எப்பவோ படத்துக்கு போற ஆள் நீங்க. தப்பி தவறி பசங்களுடன் போயிடாதீங்க !

      Delete
  14. அப்பாடி.... தில்லியில் வெளி வரலை... [வந்தாலும் பார்த்துடற மாதிரி!]

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட் நன்றி

      Delete
  15. உங்களுக்கு ரொம்பவே மனதைரியம் சார் .. நீங்க அஞ்சா சிங்கம்!!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...