Wednesday, January 2, 2013

வானவில்+ தொல்லைகாட்சி - சாரு Vs எஸ். ரா, நீயாநானா, பியா இன்னபிற

வீடுதிரும்பலில் திங்கள் தொல்லை காட்சி நிகழ்ச்சி பற்றிய விமர்சனமும், புதன் வானவில்லும் வெளிவரும். டிசம்பரில் நிறையவே பயணம் செய்வதால் புது பதிவுகள் எழுதுவது கடினமாகி விட்டது. (இம்மாதம் முழுதும் ஒரு weekend கூட சென்னையில் இல்லை; பயணம் எப்போதும் பிடிக்கும் என்றாலும் இம்மாத கோட்டா மிக அதிகம் தான் ! )

தொல்லை காட்சி மற்றும் வானவில் கலந்த பதிவாக இது வெளிவருகிறது. பொறுத்தருள்க !

நீயா நானா முகங்கள்

புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி -  நீயா நானாவில் முகங்கள் 2012 ஒளிபரப்பானது. நீயா நானா மீது சில வருத்தங்கள் இருந்தாலும் (பின்னர் பகிர்கிறேன்) இந்த நிகழ்ச்சி நிச்சயம் அருமையாய் இருந்தது.

எஸ். ரா, சீனு ராமசாமி, சிவகாமி ஐ. ஏ. எஸ், சாரு நிவேதிதா உள்ளிட்ட பிரபலங்கள் ஒன்றாய் கூடி பள்ளி கல்வி, சமூக சேவை, திரைப்படம் உள்ளிட்ட விஷயங்களில் இந்த வருடம் குறிப்பிடத்தக்க சேவை செய்தது யார் என்று விவாதித்து, பின் அந்த துறையில் ஒருவரை தேர்ந்தெடுத்தனர்.

சிறந்த என். ஜி. ஓ வாக - எவிடன்ஸ் கதிர், சிறந்த நாவல் என பூமணி எழுதிய "அஞ்ஞாடி", சிறந்த புதுமுக இயக்குனராக பாலாஜி தரணிதரன் (நடுவுல கொஞ்சம் ) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

நிகழ்ச்சியில் எஸ். ரா மற்றும் சாரு என்ற தற்சமயம் தமிழில் பிரபலமான இரு எழுத்தாளர்கள் கலந்து கொண்டாலும் இருவரின் அறிவும் (knowledge ) தெளிவாக தெரிய வந்தது. பள்ளிக்கல்வி, என். ஜி. ஓ, சமகால நாவல் பற்றியெல்லாம் எஸ். ரா ஆர்வமாக பேச, சாருவிடம் அவை பற்றி பேச எந்த கருத்தும் இல்லை ! நான் பார்த்த ஒரு மணி நேரத்தில் (அப்புறம் கரண்ட் கட்) சினிமா பற்றி மட்டுமே சாரு சற்று திருவாய் மலர்ந்தார்

முகங்கள் 2012-ல் நிச்சயம் தமிழகத்தின் பல நல்ல முகங்களை அறிய முடிந்தது. நீங்கள் நிகழ்ச்சி பார்க்கா விடில் அவசியம் யூ டியூபில் பாருங்கள் !

சானல்களின் டாப் 10 படங்கள்

வருட கடைசி என்பதால் பல சானல்களும் சிறந்த 10 படங்கள் என்று பட்டியலிட்டன. இவற்றை பார்த்ததில் தலை சுற்றி விட்டது . ஒவ்வொரு சானலும், தான் எந்த படத்தின் ஒளிபரப்பு உரிமை வைத்திருக்கிறார்களோ, அதை தான் முன்னணியில் காட்டுகிறார்கள் !

என்னமோ இவர்களின் டாப் 10 பொறுத்து தான் அப்படம் டிவியில் காட்டப்படும் போது வியூர்ஷிப்பும் TRP -யும் இருக்கும் என்கிற ரீதியில் சானல்கள் போடும் டிராமா கொடுமை ! குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல் வாரந்திர டாப் 10 -லும் இதையே தான் சானல்கள் செய்கின்றன இது புரிந்ததாலேயே பலரும் இத்தகைய நிகழ்ச்சிகளை தவிர்த்து விடுகிறார்கள் ! சானல்கள் சீக்கிரம் விழித்து கொண்டு சற்றேனும் நேர்மையாய் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது !

ஒரு வார்த்தை ஒரு லட்சம் - அசத்தும் பள்ளி மாணவர்கள்

ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியில் தற்போது பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்கள். மூன்று அணிகள் கலந்து கொள்ள, அதில் ஒரே ஒரு அணி மட்டும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது. மாணவ - மாணவிகளுக்குள் இருக்கும் புரிந்துணர்வால் மிக எளிதாய் கண்டுபிடித்தாலும், தமிழில் குறிப்பாய் ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தை கண்டுபிடிக்கத்தான் சற்று தடுமாறி விடுகிறார்கள். வாய்ப்பிருந்தால் நிகழ்ச்சியை பாருங்கள் !

************
தஞ்சையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

புத்தாண்டை தஞ்சையில் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் குடும்பங்களுடன் கொண்டாடினோம். அனைவரும் சேர்ந்திருக்கும் நேரங்கள் ஒரே கேலியும் கிண்டலுமாய் உற்சாகமாய் இருக்கும். மனைவியை நேரில் கிண்டல் செய்ய தைரியம் இல்லாத அய்யாசாமி இது மாதிரி நேரங்களில் நம்மை காப்பாற்ற ஆள் இருக்கு என ஓரிரண்டு கமண்ட் விடுவார். (விளைவு அப்போ தெரியாது: சென்னை வந்ததும் தான் தெரியும்)

தஞ்சையில் ஒரு ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டு விட்டு அங்கு நடந்த சில போட்டிகளில் கலந்து கொண்டு செம ஜாலியாக போனது புத்தாண்டு இரவு. வார்த்தை விளையாட்டில் எங்கள் குடும்பத்தில் கலந்து கொண்ட மூவரும் வென்றோம். (அண்ணன், அத்தான் மற்றும் நான்). ஒவ்வொரு வருடமும் இதே போன்று புத்தாண்டன்று அனைவரும் ஒன்றாய் இருக்கலாம் என இப்போதைக்கு பேசினாலும், அது கடினம் என்பதை உள்ளுக்குள் அனைவரும் அறிவோம்.

தீபாவளி, பொங்கல், தமிழ் வருட பிறப்பு இவை மூன்றுக்கும் அம்மா- அப்பா மற்றும் உடன்பிறந்தோர் குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒரு காலத்தில் கூடி வந்தோம். எங்களுக்குள்ளேயே அப்போது பல போட்டிகள் நடக்கும். ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலம் எப்படா வரும் என்றிருக்கும்.

"ம்ம் அதெல்லாம் ஒரு காலம் " என்று மட்டும் தான் இப்போது சொல்ல முடிகிறது ! காலம் அனைத்தையும் புரட்டி போட்டு விடுகிறது !

அழகு கார்னர் - பியா பாஜ்பாய்

பல படங்களில் ஹீரோயினை சற்று லூசு மாதிரி தான் தமிழ் சினிமாவில் காட்டுவார்கள். (நிஜத்தில் ஒரு பெண் கூட அப்படி இருப்பதில்லை; செம விவரம் !)

லூசு பெண் பாத்திரத்துக்கு ஏற்றவராய் இருந்தாலும் , இந்த பெண்ணிடம் இருக்கும் துறுதுறுப்பு + bubbliness ரொம்ப அழகு. என்ன ஒண்ணு ....அந்த பாஜ்பாய் மட்டும் தான் ரொம்பவே அந்நியமாய் இருக்கு :)

சென்னை ஸ்பெஷல்

வேளச்சேரியில் ஒரு பிரபல கிட்சன் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பெயர்: கில்மா !

பப்பி ஷேம்: குழந்தைகளுக்கு துணிகள் விற்பனை செய்யும் மடிப்பாக்கம் கடையின் பெயர் இது !

அடையாரில் ஒரு சிக்னல் அருகே இருக்கும் ஹோட்டல் பெயர் : டிராபிக் ஜாம் !

தினுசு தினுசா யோசிக்கிறாங்கப்பா !

(உங்களுக்கு இது போல கடை பெயர்கள் தெரிந்தால் சொல்லலாம் !)

அய்யாசாமியும் ஞாயிற்று கிழமைகளும்

ஞாயித்து கிழமை வந்தாலே அய்யாசாமி மகா சோம்பேறியாகிடுவார். என்னத்த கன்னையா போல " என்னத்த மீனு வாங்கி, என்னத்த சமையல் செஞ்சு " என்று வீட்டை விட்டு நகரவே மாட்டார். அடுத்த வாரத்துக்கு பதிவு எழுதுவதும், பெரிய சைஸ் புக் வச்சுக்கிட்டு படிப்பதும், டிவி பார்ப்பதுக்கும் மட்டும் அன்னிக்கு எங்கிருந்து எனர்ஜி வருமோ தெரியவில்லை.

வீட்டம்மா, அவரை " நான் வெஜ் வாங்கிட்டு வாங்க" என சொல்லிக்கொண்டே இருப்பார் நம்ம ஆள் நகரணுமே ஊஹூம்.

சில வாரம் மெதுவா வீட்டை விட்டு நகர்ந்து பதினோரு மணி போல் போய் நான் வெஜ் வாங்குவார். சில நேரம் " ஒரு நாள் தானேம்மா லீவு; நீ எதுக்கு கஷ்டப்படனும்? வெறும் ரசம் வச்சிடு" என்று சோம்பேறித்தனத்துக்கு காரணம் கண்டுபிடிச்சிடுவார்.

" ஏன்யா இப்படி இருக்கீர்? " என்று நான் கேட்டதுக்கு " என்ன செய்றது; அந்த ரெண்டு நாள் நான் படைப்பாளியாகிடுறேன்; கறி, மீனுன்னு சாதாரண சமாசாரதுக்கெல்லாம் என்னை தொந்தரவு செய்யக் கூடாது .." ..சொல்லிவிட்டு, அவசரமாய் சுற்று முற்றும் பார்த்து மனைவி கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டார் :)

*****
அண்மை பதிவு:


உணவகம் அறிமுகம்: சுக் நிவாஸ், லஸ் கார்னர்

22 comments:

  1. Gilma oru brand sir. http://gilmaindia.com/

    ReplyDelete
    Replies
    1. அட .. அப்படியா ? நன்றி !

      Delete
    2. சார்வாகன் மாமா கில்மா என்ற வார்த்தைக்கு ஒரு விளக்கம் பின்னூட்டத்தில் தருகிறார் பாருங்க!!

      http://jayadevdas.blogspot.com/2012/12/blog-post_24.html

      Delete
    3. Gilma is a very famous company making Chimneys, modular kitchens, Gas stoves and solar products.

      Delete
  2. டீவீ நிகழ்ச்சிகளில் ஒரு வார்த்தைஒரு லட்சம் நானும் பார்த்தேன்! அருமையாக இருக்கிறது! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  3. அருமை ............

    ReplyDelete
  4. ஒரே பதிவில் இவ்வளவு விஷயங்களா? நல்லாதான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. //சானல்கள் சீக்கிரம் விழித்து கொண்டு சற்றேனும் நேர்மையாய் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது !//

    என்னாது காந்தி செத்துட்டாரா?

    ReplyDelete
  6. a shop name in virugambaakam is 2idly oru vadai.

    ReplyDelete
    Replies
    1. சீன் கிரியேட்டர்: அப்படியா ? அந்த பக்கம் போது நிச்சயம் பார்க்கிறேன்

      Delete
  7. உங்க வீட்டம்மாகிட்ட சொல்லி அந்த டிவி பொட்டியை தூக்கி போட சொல்லனும்

    ReplyDelete
    Replies
    1. பொறாமை ! பொறாமை !

      :)

      Delete
  8. தஞ்சையை அடிக்கடிச் சொல்லி என் நினைவுகளையும் கிளறி விட்டு விடுகிறீர்கள்! எல்லாமே சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார் நீங்களும் தஞ்சை சொல்லுங்கள் இருந்தால் சேர்ந்தே இடங்களுக்கு செல்லலாம்

      Delete
  9. தினம் பதிவு போட்டாலும் சுவாரசியம் குறைவதில்லை. நல்ல எழுத்து திறமை.

    (அய்யாசாமியும் ஞாயிற்று கிழமைகளும்) சுயநக்கல் இன்னும் அருமை.

    ReplyDelete
  10. ஞாயிற்றுகிழமைகளில் அய்யாசாமி மட்டுமல்லா எல்லா சாமிகளும் ஐயோசாமிகள்தான்! எல்லா கிறிஸ்துமஸ் , புத்தாண்டு விடுமுறைகளையும் கூட்டுக்குடும்பமாக கொண்டாடும் நாங்கள் இம்முறை வேறுவழியில்லாமல் நெல்லூரில் தனியாக போரடித்துக்கொண்டிருந்தோம் .உங்கள் புத்தாண்டை நினைத்து கொஞ்சம் பொறாமைப்படுகிறேன்.

    ReplyDelete
  11. ஸ்ரீராம் சார் : உங்களுக்கு எழுதிய முதல் பின்னூட்டத்தில், அய்யாசாமி தூக்க கலக்கத்தில் என்னமோ தப்பா டைப் பண்ணிட்டார். அவர் சொல்ல விரும்பியது இது தான் :

    நன்றி ஸ்ரீராம் சார் நீங்களும் தஞ்சை செல்லும்போது சொல்லுங்கள்; அப்போது நானும் அங்கு இருந்தால் சேர்ந்தே சில முக்கிய இடங்களுக்கு செல்லலாம் :)

    ReplyDelete
  12. Near Kodambakkam there is a hotel called midnight Masala.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...